பிரித்தானிய அரசியலானது பழமைவாத கன்சர் வேட்டிவ் கட்சி, - தொழிலாளர் கட்சி ஆகிய இரண் டைச் சார்ந்ததாகவே நீண்டகாலமாக இருந்து வந்தது. இவ்விரண்டில் ஒன்றுதான் ஆட்சிக்கு வரமுடியும் என்ற நிலை இருந்து வந்துள்ளது. மற்ற சிறு கட்சிகள் இருந்தாலும் அவை மேற்படி இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக வளர முடியவில்லை.

ஆனால் இப்பொழுது அந்த நிலை மாறும் வகையில் புதிதாக ஒரு கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. ஒருங்கிணைந்த முடியரசின் விடுதலைக் கட்சி (United Kingdom Independence Party) என்ற அக்கட்சி கடந்த 10.10.2014 அன்று பிரித்தானிய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி (House of Commons) ஒன்றுக்கு நடந்த இடைத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியையும் தொழிலாளர் கட்சியையும் வீழ்த்திப் பெருவெற்றி பெற்றுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்து வெளி யேறி பிரித்தானிய விடுதலை கட்சியில் (UKIP) சேர்ந்த டக்ளஸ் கார்ஸ்வெல் என்பவர் கிளாக்டன் ஆன் சி என்ற அந்தத் தொகுதியில் வெற்றிப் பெற்றுள்ளார்.

அதே காலத்தில் நடந்த பிரித்தானிய மக்களவைக் கான கிரேட் மான்செஸ்டர் தொகுதி இடைத் தேர் தலில் தொழிலாளர் கட்சியிடம் மிகக் குறைந்த வாக்கு வேறுபாட்டில் பிரித்தானிய விடுதலைக் கட்சி வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.

இன்னும் ஏழு மாதங்களில் பிரித்தானிய மக்கள வைக்குப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந் நிலையில் இடைத் தேர்தல்களில் பிரித்தானிய விடுதலைக் கட்சி பெற்ற வெற்றியும் வாங்கிய வாக்கும் கன்சர்வேட் டிவ் கட்சியையும் தொழிலாளர் கட்சியை யும் கலக்கியுள்ளன என்கிறார்கள் அரசியல் பார்வை யாளர்கள்.

இந்த விடுதலைக் கட்சியும் பழைய கட்சிதான். ஆனால் இது முன்வைக்கும் தேசியவாத முழக்கங்கள் இப்போது மக்களின் பேராதரவைப் பெற்று வருகின் றன.

1. வரலாற்றுப் பெருமிதங்கள் பல படைத்துள்ள பிரித்தானியா பத்தோடு பதினொன்றாக ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பாக இணைந்திருக்கக் கூடாது. அதிலிருந்து விலக வேண்டும்.

2. வெளி நாட்டினர் பிரித்தானியாவில் குடியேறு வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து வெளியார் வருகையைத் தடுக்க வேண்டும். வெளியேற்ற வேண்டி யவர்களை வெளியேற்ற வேண்டும்.

இந்த இரு முழக்கங்களும் தான் பிரித்தானிய மக்களிடம் பிரித்தானிய விடுதலைக் கட்சிக்குப் புதிய செல்வாக்கை வளர்த்துள்ளன.

இந்த விடுதலைக் கட்சி இனப்பெருமை, தாயகப் பாதுகாப்பு என்ற முழக்கங்களை முதன்மைப்படுத்து கிறது.

முதலாளியம் முழு வளர்ச்சியடைந்து, நாடாளுமன்ற சனநாயகத்திற்கு உலகின் முன் எடுத்துக்காட்டாக உள்ள பிரித்தானியாவில் இனப்பெருமிதமும் வெளி யாரை வெளியேற்றும் முழக்கமும் மக்கள் திரளின் ஆதரவைப் பெற்று வருவதைத் தமிழர்கள் கவனிக்க வேண்டும்.

இவை போன்ற தமிழினப் பாதுகாப்பு முழக்கங்க ளைத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் முன்வைத்து 1956க்குப் பிறகு வந்த வெளி மாநிலத்தவர்களை தமிழகக்குடி மக்களாக கருதக் கூடாது என்றும் வெளியேற்ற வேண்டியவர்களை வெளியேற்ற வேண்டுமென்றும் போராடி வருகிறது.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தமிழினப் பாது காப்புப் போராட்டத்தை இனவெறியென்றும், பாசிச மென்றும் கூச்சல் போடும் தமிழினத் துரோகிகளை தமிழ் மக்கள் அடையாளம் காண வேண்டும்.

***

2004ஆம் ஆண்டு திசம்பர் மாதம் முன்புவரை, ஆழிப்பேரலை (சுனாமி) என்றால் என்ன என்பதை நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அவ்வாண்டு திசம்பர் மாதம், இந்தோனேசிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து எழுந்த ஆழிப்பேர லைகள், தெற்காசியாவில் ஏற்படுத்திய பாதிப்புகளை நாம் மறந்திருக்க மாட்டோம். கடலோரத் தமிழகமும், தமிழீழமும் கடும் சேதத்திற்குள்ளாகி ஆயிரக்கணக் கான சொந்தங்களை நாம் இழந்து தவித்த துயர நாட்கள் அவை!

இந்தோனேசியப் பகுதியில், 9.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட ஒரு நிலநடுக்கத்தின் காரணமாகவே ஆழிப் பேரலை பாதிப்புகளை நாம் சந்திக்க வேண்டியிருந்தது.

தற்போது, அந்த அளவைவிட மிக அதிகமான ரிக்டர் அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ள புதிய பகுதி ஒன்றை, தென் அமெரிக்காவிலுள்ள மியாமி பல்கலைக் கழகம் கண்டறிந்துள்ளது. அப்பகுதி வேறு ஏதுமில்லை, இலங்கைத் தீவு மற்றும் தமிழகத்திற்கு இடையிலுள்ள கடற்பகுதியே என அதிர வைக்கிறது அப்பல்கலைக் கழகம்.

மியாமி பல்கலைக் கழகத்தின் கடலியல் மற்றும் சூழல் அறிவியலாளர்களும், இலங்கையின் பெரடேனியா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்களும் இணைந்து இதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர். இவ் ஆராய்ச் சியின் போது, இதுவரை இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் குறித்து விரிவான ஆய்வை அவர்கள் மேற்கொண்ட னர்.

“ Holocene Indian Ocean Tsunami History in Sri Lanka” எனத் தலைப்பிடப்பட்ட இந்த ஆய்வு, ஆகத்து 15 அன்று, ஜியாலஜி இணைய இதழில் வெளியானது. இலங்கையின் தென்கிழக்கில் உள்ள லகோன் கடற்பகுதியில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப் பேரலைகளால் ஏற்பட்ட மணல் படிமங்களை ஆராய்ந்த பின்னர், பல்லாண்டு காலங்களுக்கு முன்னரே அதே போன்ற படிமங்கள் அப்பகுதிகளில் தென்படுவதை ஆய்வுக் குழுவினர் கண்டறிந்தனர்.

பெரும் ஆழிப்பேரலைகள் காரணமாக, இந்திய - ஆஸ்திரேலிய நிலத்தட்டுகள் சந்திக்கும் சுமத்ரா - அந்த மான் பகுதியில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கங்களால் இவை உருவாகியிருக்கக்கூடும் என அக்குழுவினர் கருதினர். 100 ஆண்டுகள் முதல் 1000 ஆண்டுகள் இடைவெளிகள் வரை இந்தியப் பெருங்கடல் பகுதி நிலநடுக்கம் மற்றும் பேரலைகளால் பாதிக்கப்பட்டி ருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் முடிவில், மியான்மரிலிருந்து இந்தோனேசியா வரையிலுள்ள இந்தியப் பெருங்கடல் எல்லைத் தட்டுகளிலேயே இதுவரை அதிக அளவிலான ஆழிப் பேரலைகள் ஏற்பட்டுள்ளன என்பதும் கண்டறியப் பட்டது.

நிலத்தட்டுகள் தொடர்ந்து ஒன்றுடன் ஒன்று இணைந்து அழுத்தம் ஏற்பட்டு வருவதால், சுமத்ராவில் ஏற்பட்டதைப் போல 9.2 ரிக்டர் அளவு நிலநடுக்கமும், 2004இல் ஏற்பட்ட (சுனாமி) ஆழிப்பேரலைகளும் மீண்டும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளதாகவும், இந்த ஆய்வுக்குழு முடிவுக்கு வந்தது.

‘இந்தப் பகுதிகளில் 5 அடிக்கு மேல் அலைகள் வர வாய்ப்பில்லை” என்று கண்மூடித்தனமாக சொல்லி, மக்களை ஏமாற்றிய கல்பாக்கம், -கூடங்குளம் அணு உலை நிர்வாகங்களும், இந்திய அரசும் இந்த ஆய்வு முடிவுக்கு என்ன பதில் வைத்திருக்கின்றனர்? மீண்டும் ஆழிப்பேரலை ஏற்பட்டால், மக்களைப் பாதுகாக்க அரசாங்கம் என்ன திட்டம் வைத்திருக்கிறது? நாம் என்ன செய்யப் போகிறோம்?

Pin It