2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ மக்களைக் கொன்றொழித்த சிங்கள இனவெறி அரசுக்கு, முட்டுக் கொடுத்துப் போரை வழிநடத்திய இந்தியாவின் பங்கு குறித்து முனைவர் த.செய ராமன் அவர்கள் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து பன்மைவெளி வெளியீட்டகம் ‘ஈழம்: இந்தியமும் இனப்படுகொலையும்’ என்ற தலைப்பில் நூலாக ஆக்கியது.

ஈழப்போரில் இந்திய அரசு முனைப்புடன் ஈடுபடு வதற்கான காரணங்கள், சிங்கள அரசின் 13 ஆவது சட்டத்திருத்தம் தமிழீழ மக்களுக்கு எவ்வகையில் உரிமைகளை மறுக்கிறது, தேசியத் தன்னுரிமை குறித்த அனைத்துலகச் சட்ட விளக்கங்கள், தமிழக மீனவர் சிக்கலுக்கானத் தீர்வு எனப் பல்வேறு தலைப்பு களில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. இந்நூலுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட் ராமன் அணிந்துரை எழுதியுள்ளார்.

இந்நூலின் வெளியீட்டு விழா, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் கடந்த 07.07.2012 அன்று மாலை சென்னை திருவல்லிக்கேணி தமிழ் நாடு அரசு அலுவலர் ஒன்றிய அரங்கில் நடை பெற்றது.

தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செய லாளர் தோழர் நா.வைகறை விழாவிற்குத் தலைமை யேற்றார். த.க.இ.பே. செயலாளர் கவிஞர் கவிபாஸ்கர் வரவேற்புரையாற்றினார். உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் நூலை வெளியிட, எழுத்தாளர் அமரந்தா, புலவர் இரத்தினவேலவர், திரு இராமச்சந்திரன் (அனு ஃபைன் ஆர்ட்ஸ்), ஆகியோர் நூல்படி பெற்றனர். எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், இயக்குநர் புகழேந்தி தங்கராசு, இயக்குநர் வ.கௌதமன் ஆகியோர் கருத் துரை வழங்கினர்.

தனது தலைமையுரையில் தோழர் நா.வைகறை பேசியதாவது:

“முள்ளிவாய்க்கால் சோகம் தமிழினத்தின் ஆறாத காயம். தமிழீழ மக்களை அழித்தொழிக்க உதவிய இந்திய அரசு நம் இனத்தின் பகை அரசு. எனவே, இந்தியத்தை நாம் புரிந்து கொள்ளாத வரை தமிழீழ விடுதலையைப் பெற முடியாது. இத்தனை நடந்த பின்னரும் இந்தியாவை நாம் ஏன் நம்பவேண்டும்? இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராத வரை தமிழீழம் சாத்தியமில்லை. தமிழர்களுக்கு ஒரு நாடு அல்ல, தமிழீழம் - தனித் தமிழ்நாடு ஆகிய இரண்டு நாடுகளும் வேண்டும் என உலகத் தமிழர்கள் அணிதிரள வேண்டும்” என்று தோழர் நா.வைகறை பேசினார்.

எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், இயக்குநர் புகழேந்தி தங்கராசு, இயக்குநர் வ.கவுதமன் ஆகியோர் நூலின் சிறப்புகளை விளக்கிப் பேசினர். உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், இந்நூல் தமிழீழ விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் படைக் கருவியாக விளங்குவதாகவும், நூலாசிரியர் பேரா. த.செயராமன் இது போன்ற பல படைக்கருவிகளை தமிழீழ விடுதலைக்கு உருவாக்கித் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

நூலாசிரியர் முனைவர் த.செயராமன் ஏற்புரை வழங்கிய போது, " தமிழீழப் போராட்டத்தை ஆதரிக்கும் எவரும் அறிந்து கொள்ள வேண்டியது ‘இந்தியம்’ என்பது தமிழுக்கும், தமிழருக்கும் எதிர்க்கருத்தியல், அது தமிழ் தேசிய இனத்துக்கும் பகைசக்தி. இந்தி யத்தை எதிர்க்காமல் ஈழத்தைப் பெறமுடியாது" எனப் பேசினார்.

கவிஞர் முழுநிலவன் நன்றி நவின்றார். இக்கூட் டத்தில், திரளானோர் கலந்து கொண்டு இந்நூலை வாங்கிச் சென்றனர்.

Pin It