காட்ராக்ட் (cataract) என்று அழைக்கப்படும் கண் லென்சில் புரை ஏற்பட்டு பார்வையை மறைக்கும் கண்பார்வை நோய்க்கு அறுவை சிகிச்சை செய்யாமலே மருந்து மூலம் குணப்படுத்த முடியும் என்று ஆஸ்ட்ரேலிய ஆராய்ச்சியாளர்கள் சிலர் தங்கள் ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர். 

கால்பெயின் என்ற புரதம் உருவாகி அது நம் கண் லென்சை மறைத்து இதனால் பார்வை யிழப்பு ஏற்படுவது காடராக்ட் ஆகும். இந்தப் புரதம் ஏன் உருவாகிறது என்பதற்கு பல காரணங் கள் உள்ளன. வயதாவதால் இது பெரும்பாலும் ஏற்படுகிறது. 

இந்த கண்படல பார்வையிழப்பு நோய்க்கு நடைமுறையில் ஒரே சிகிச்சை அறுவை சிகிச்சை தான் உள்ளது. அதாவது பாதிக்கப்பட்ட அந்த லென்சை நீக்கி விட்டு செயற்கை லென்சைப் பொருத்துவர். 

தற்போது அடிலெய்ட் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் கண் லென்சை மறைக்கும் புரதத் தில் நேரடியாக வேலை செய்யும் மருந்தைக் கண்டு பிடித்துள்ளதாக கூறுகின்றனர். 

கண் திசுவில் உருவாகும் கால்பெயின் என்ற புரதத்தை இந்த மருந்து குறிவைக்கும். இது முதற்கட்ட பரிசோதனைகளில் வெற்றியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னமும் இது மனிதர்களில் சோதனை செய்யப்படவில்லை. 

அதாவது இது மருத்துவ கவுன்சிலால் ஒத்துக்கொள்ளப்பட்டு மனிதர்களுக்கு ஆபத்தில் லாமல் காட்ராக்டை போக்கும் என்றால் சொட்டு மருந்து அல்லது கிரீம் வடிவத்தில் தினமும் இரவு படுக்கச் செல்லும் முன் குறிப்பிடப்பட்ட கண் ணில் இதனை அப்ளை செய்தால் போதும் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள். 

ஒரு கண்ணில் காட்ராக்ட் இருக்கிறது. இதனால் மற்றொரு கண்ணிலும் காட்ராக்ட் வரும்என்று நினைத்தால் இரண்டு கண்களிலும் இந்த மருந்தை அப்ளை செய்யலாம். இதன் மூலம் காட் ராக்ட் உருவாவதை தடுக்கவோ அல்லது அதனை தாமதப்படுத்தவோ முடியும் என்று கூறுகின்றன இந்த ஆய்வாளர்கள். 

Pin It