கீற்றில் தேட...

குழந்தைகளும் தெய்வமும் ஒன்று என்று பெரியவர்கள் கூறுகின்றார்கள். ஒவ்வொரு குழந்தையும் தனித்தனித் தன்மைகள் உள்ளன. ஹோமியோவில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு மருந்துகள் உண்டு.

AETHUSA  BABY :

இக்குழந்தைகளுக்கு பால் ஒத்துக்கொள்ளாது.

பால் எந்த வடிவில் கொடுத்தாலும் பெரிய தயிர் கட்டிகளாக வாந்தியெடுக்கும்.

குழந்தை நிற்க முடியாமை.

தலை தொங்குதல்.

தலையை நேராக நிறுத்த முடியாமை.

மந்த நிலையில், குழம்பிய குழந்தை.

பல் முளைக்கும் காலத்தில் வரும் வயிறு உபாதை.

ANACARDIUM CHILD :

ஞாபக மறதி உள்ள சிறுவர்கள்.

திடீரென்று ஞாபக சக்தியை இழந்துவிடுவார்கள்.

தன்தோளில் ராட்சதன், தேவதை உட்கார்ந்திருப்பது போல் எண்ணம்.

குழந்தைகள் வயதானவர்கள் போல் தோற்றமளிக்கும்.

கால்கள் மெலிந்து காணப்படும்.

இச்சிறுவர்கள் சர்க்கரையை விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.

எல்லாம் வியாதியும் சக்கரை அல்லது இனிப்பு தின்ற பின்புதான் ஏற்படும்.

மூத்திரம் தன்னையறியாமல் வெளியாகும்.

BARYTA CARB BABY :

புத்தி வளராத குழந்தை.

இக்குழந்தை பேசவும், நடக்கவும், தாமதமாகக் கற்றுக்கொள்ளுதல்.

புத்தியின்மை, ஞாபகமின்மை குழந்தைகள்.

புதிய மனிதர்கள் யாராவது வீட்டுக்கு வந்தால் குழந்தை கைகளால் முகத்தை மூடிக்கொள்ளுதல்.

நாற்காலி மேசைக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளும் விளையாட விருப்பமில்லாது.

BELLADONNA BABY:

குழந்தையின் முகம்சிவந்து காணப்படும்.

சிறுவர்கள் பேய் பிசாசுகளை பார்ப்பதாகச் சொல்லுவார்கள்.

கருவிழி அகன்று இருக்கும்.

BOBAX-CHILD

குழந்தையைத் தூக்கி வைத்திருந்துவிட்டு கீழே இறக்கும் போது அலறும்.

கீழ் நோக்கும் எந்த அசைவும் பயத்தை கொடுக்கும்.

குழந்தையின் வாயில் புண் காணப்படும்.

எது சாப்பிட்டாலும் வாயில் இருந்து இரத்தம் வரும்.

குழந்தை மூத்திரம் போய்க்கொண்டே இருக்கும்.

CALCAREA CARB -  BABY :

எலும்புகளில் பலமில்லாததால் சீக்கிரமாக நடக்காது.

குழந்தை மந்தமாய் உட்கார்ந்து கொண்டிருக்கும்.

புத்தியிருக்காது, சுறுசுறுப்பிருக்காது.

மிகப்பெரிய தலை மற்றும் உப்பிய வயிறு.

குழந்தையின் எலும்பு சரிவராமல் வளராது.

தலையில் எலும்பு சரிவராமல் வளராது.

தலையில் வியர்வை வரும்.

பல் முளைக்க கால தாமதம்.

குழந்தை செரிக்காத உணவை விரும்பி திங்கும்.

ALUMINA-BABY

குழந்தைகள் சாம்பல், கரி, கிராம்பு, மாவு, காபி, டீ, கொட்டை,போன்ற செரிக்காத உணவை விரும்பி சாப்பிடும்.

புட்டிப்பால் சாப்பிடும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படும்.

AMBRA GRISEA - BABY:

குழந்தைகள் யாராவது இருந்தால் மூத்திரம் போகாது.

CHAMOMILLA -  BABY

குழந்தைக்கு பல் முளைக்கும் காலத்தில் ஏற்படும் வயிற்றுப்போக்கு.

குழந்தைகள் வலி பொருக்காது.

குழந்தைகளை தூக்கி வைத்துக்கொண்டால் சமாதானடையும்.

குழந்தைகளை கீழே போட்டால் அழும்.

தன்னை பிறர் பார்ப்பதற்கோ அல்லது தொடுவதற்கோ விரும்பாது.

தூங்குவது போன்று நடிக்கும். ஆனால் தூங்காது.

CINA-BABY

நாக்குப்பூச்சி அதிகம் உள்ள குழந்தை.

மூக்கையும், ஆசனத்தையும் விரல்களால் நோண்டும்.

தூக்கத்தில் பற்களை நறநறவென்று கடிக்கும்.

கொடுக்கும் பொருட்களை தூக்கி எறியும்.

குழந்தை அழும்போது தூக்கி வைத்துக் கொண்டால் சமாதானம் அடையாது.

SULPHUR - BABY

குழந்தை கை, கால், கழுவ மற்றும் குளிக்க விரும்பாமை

குழந்தை அழுக்கடைந்து காணப்படும்.

உடல் மெலிந்து, வயிறு உப்பி காணப்படும்.

தண்ணீரைக் கண்டால் பயம்.

இரவு நேரங்களில் துணிகளை அவிழ்த்துப் போட்டுவிடும்.

(மேலே குறிப்பிட்டது போல் தங்கள் குழந்தையிருந்தால் அம்மருந்தை தக்க வீரியத்தில் கொடுக்கலாம்.)

 குழந்தைகளின் குணநலன்களை மேம்படுத்தும் மலர் மருத்துகள்

“எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான்

மண்ணில் பிறக்கையிலே பின்

நல்லவராவதும் தீயவராவதும்

அன்னை வளர்ப்பதிலே”

இன்றைய குழந்தையே நாளைய மனிதன். குழந்தைகள் வளரும்போது மனங்களில் மாசுபடிந்தால், அறிவுரைகளும், ஆலோசனைகளும் கூறி அவற்றை நீக்க முடியாவிட்டால் டாக்டர் பாச் மலர் மருந்துகள் மூலம் சிறந்த பலன்பெற முடியும். குழந்தையிடம் காணப்படும் இயற்கைக்குப் புறம்பான, எதிர்மறையான உணர்வுகளை, தீயபழக்கங்களை... ஆரம்ப நிலையிலேயே மலர் மருந்துகள் சிகிச்சை மூலம் எளிதில் திருத்த முடியும். ஒவ்வொரு குழந்தையும் சமுதாயத்திற்குப் பயனுள்ள பிரஜையாக மலர்ச்சி அடைய, சிறந்த ஆளுமைத் திறன்களைப் பெற கீழ்க்கண்ட மலர்மருந்துகள் பயன்படும்.

1.     குழந்தை தூங்கி எழும் போது கோபத்துடன் எழுதல், தலையணை போர்வை மற்றவற்றை உதைத்தல், அழுதல் -செர்ரிப்ளம்

2.     காலையில் நீண்ட நேரம் கழித்து விழிக்கும் குழந்தை - ஸ்கிளரான்தஸ்

3.     எப்பொழுதும் தூங்கிக் கொண்டு இருத்தல். அதிக தூக்கம்  - கிளமெடிஸ்

4.     தூங்காமல் புரண்டு புரண்டு படுததல், அமைதியின்மையுடன் இருத்தல் -     வொயிட்செஸ்ட்நட் + ரெஸ்கியூரெமடி

5.     இரவு தூக்கத்தில் எழுந்து பயந்து வீறிட்டு அலறுதல் -    Rock Rose, Aspen

6.     தனியாக இருக்க தனியாக எங்கும் செல்ல பயம், பள்ளி செல்ல பயம் -     மிமுலஸ்

7.     பள்ளி செல்வதற்கு முன் வயிறு வலி, தலைவலி என ஏதோ ஒரு (பொய்) காரணம் சொல்லி பள்ளி செல்ல மறுக்கும் குழந்தை    - செஸ்ட்நட்பட்

8.     எல்லா நேரமும் விளையாட்டு விளையாட்டு என பொழுதை கழிக்கும் குழந்தைகள் ஓரிடத்தில் சிறிது நேரம் கூட அமைதி   யாக உட்கார இயலாத குழந்தைகள் (Hyeractive children))     - வெர்வைன்

9.     பேசுவதில், எழுதுவதில், சாப்பிடுவதில், நடப்பதில் எந்த விஷயத்தில் ஈடுபட்டாலும், அதிவேகம், நிதானமின்மை  - இம்பேஷன்ஸ்

10.    எந்த விஷயத்திலும் ஈடுபடாமல் எங்கோ வெறித்தபடி மந்தமாக இருத்தல். படிப்பிலோ, வேலையிலோ ஈடுபடாமல் கனவுகளில், கற்பனைகளில் மிதத்தல் (Hypoactive) - கிளமேடிஸ்

11.    எல்லாரின் அக்கரையும் கவனமும் தன்மேல் செலுத்த விருப்பம் சுயநலமுள்ள குழந்தை - சிக்கரி

12.    எந்தவித காரணமுமில்லாமல் வெறுப்புணர்வு ஏற்படுதல்; எல்லாவற்றிக்கும் வெறுப்பு ஏற்படுதல் -  வில்லோ

13.    சாப்பிட வெறுப்பு - ஹால்லி

14.    அதிக பசி, எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்காமை - செர்ரிப்ளம்

15.    குச்சி, சாக்பீஸ், மண் தின்னும் பழக்கம் - செர்ரிப்ளம், வால்நட்

16.    பிறந்த குழந்தையின் மலச்சிக்கல் -    வால்நட்

17.    மலம் போன திருப்தியில்லாமல் திரும்ப மலங்கழிக்கும் உணர்வு (neffectual Urgin for stool) - ஸ்கிளரான்தஸ்

18.    கடுமையான இருமல், கக்குவான் இருமல் (Whooping Cough) - வொயிட்செஸ்ட்நட் + ரெஸ்கியூரெமடி

19.    அடிக்கடி சளி பிடித்தல் மற்றும் குழந்தை, அடிக்கடி காய்ச்சல் ஏற்படுதல் -     வொயிட்செஸ்ட்நட்

20.    தட்ப வெப்ப மாற்றங்களினால் ஏற்படும் சளி தொந்தரவுகள் அல்லது தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் - வால்நட்

21.    அழுகை வந்தாலும் அடக்குதல். அழுகையை வெளிக்காட்டாமை மனதுக்குள் அழுதல் -    அக்ரிமோனி

22.    அதிக வலி காரணமாக அழுதல், வலி தாங்காமல் கதறுதல் -செர்ரிப்ளம்

23.    அடுத்தவர்கள் அனுதாபப்படுமளவு அழுதல் -  சிக்கரி

24.    எந்த விஷயத்தையும் நினைவுக்கு கொண்டு வதுவதில் தாமதல் - ஸ்கிளரான்தஸ்

25.    வேடிக்கை பார்த்துக் கொண்டு எதையோ வெறித்தபடி கவனமில்லாமல் உட்கார்ந்திருக்கும் குழந்தை -     கிளமெடிஸ்

26.    வகுப்பறையில் ஒரு இடத்தில் அமராமல், இங்கும் அங்கும் விளையாடிக் கொண்டு இருத்தல் - இம்பேஷன்ஸ்

27.    தேர்வு நேரத்தில் பதட்டம் தணிய -ரெஸ்கியூரெமடி

28.    தேர்வுக்கு தன்னை தயார் செய்யும் மாணவர்களின் கடுமையான உடல் சோர்வு நீங்க -    ஆலிவ்

29.    தேர்வு நேரத்தில் ஏற்படும் மனச்சோர்விலிருந்து விடுபட்டு புத்துணர்வு பெற - ஹார்ன்பீம்

30.    எந்த ஒன்றையும் செய்ய தொடங்கும் முன் தன்னால் இயலாது என தயங்குதல் (தன்னம்பிக்கையின்மை)- லார்ச்