KeetruRebelBharathi
பாரதியார் பாடல்கள்

             வெறிகொண்ட தாய்
Bharathi

பேயவள் காண் எங்கள் அன்னை - பெரும்
        பித்துடையாள் எங்கள் அன்னை
காய்தழல் ஏந்திய பித்தன்- தனைக்
        காதலிப்பாள் எங்கள் அன்னை.          (பேயவள்) 1

இன்னிசை யாம் இன்பக் கடலில் - எழுந்து
        எற்றும் அலைத்திரள் வெள்ளம்
தன்னிடை மூழ்கித் திளைப்பாள் - அங்குத்
        தாவிக் குதிப்பாள் எம் அ‎‎‎‎‎‎‎ன்னை.          (பேயவள்) 2

தீஞ்சொற் கவிதையஞ் சோலை - தனில்
        தெய்வீக நன்மணம் வீசும்
தேஞ்சொரி மாமலர் சூடி - மது
        தேக்கி நடிப்பாள் எம் அன்னை.          (பேயவள்) 3

வேதங்கள் பாடுவள் காணீர் - உண்மை
        வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்
ஓதருங் சாத்திரம் கோடி - உணர்ந்
        தோதி யுலகெங்கும் விதைப்பாள்.          (பேயவள்) 4

பாரதப் போரெனில் எளிதோ? - விறற்
        பார்த்தன்கை வில்லிடை ஒளிர்வாள்
மாரதர் கோடிவந் தாலும் - கணம்
        மாய்த்துக் குருதியில் திளைப்பாள்.          (பேயவள்) 5

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com