®¾à®Ÿà¯ கொண்டு போவேன். அப்போது இருள் பயத்தைப் போக்கப் பாடுவேன். ஏர் ஓட்டும் சமயத்தில் சகதியில் மிதித்து, பல மணிநேரம் நடக்கும் போது கால் வலிக்கும். வலியை மறக்கப் பாடுவேன். அறுவடைக் காலங்களில் களத்தில் நெல்லைக் குடு போட்டுக் காவல் காக்கும் போது, இரவு நேரத்தில் மகிழ்ச்சியாகப் பாடவரும். வெளியூர் கண்மாய்களுக்கு மீன்பிடிக்க நடுஜாமத்தில் புறப்படுவோம். கண்மாய் போய்ச் சேரும் வரை, உடன் வருபவர்கள் என்னைப் பாடச் சொல்வார்கள். என் அத்தை மகள் குலமங்களம் பெத்தி, மாமன் மகன்கள் சூரக்குண்டு சுந்தரம், சித்தலூர் சமையன் ஆகியோர், எங்கள் குடும்ப விழாக்களின்போது என்னைப் பாடச் சொல்லி ரசிப்பார்கள்.

வேலை வாய்ப்பிற்காகத் தொண்டு நிறுவனம் ஒன்றில் நான் பணியாற்றியபோது, என்னுடைய களப் பணியில் பாடுவதும் ஒரு பணியாக அமைந்தது. அந்த நிறுவனத்தின் பணிகள், தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில் நடைபெற்று வந்த நிலையில், மாநிலத்தில் பரவலாகச் சென்று பாடுவதற்கான வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. இத்தகைய அடித்தளத்தைக் கொண்டுதான் பாடல் எழுதத் தொடங்கினேன். நான் எழுதிய முதல் தலித் விடுதலைப் பாடல், "இந்துமதச் சிறையினிலே' என்கிற பாடலாகும். நான் எழுதிய முதல் சமுதாய விழிப்புணர்வுப் பாடல் "சமுதாயம் மாறுகின்ற காலம் நெருங்குது' எனும் பாடலாகும். 120 க்கும் கூடுதலான பாடல்களை இதுவரை எழுதியுள்ளேன். இது குறித்த வரலாற்றைச் சுருக்கமாக சொல்ல இயலாது என்கிற நிலையில், பாடல் எழுதத் தொடங்கிய வரலாற்றைப் பிரிதொரு நேரத்தில் சொல்கிறேன். 


- நேர்காணல் : அன்பு செல்வம்

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.