Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1. குதர்க்கமும் நானே, குழப்பமும் நானே!

2. 1...2..3...ஷாக்! (அத்தியாயம்-1)

3. 1...2...3...ஷாக்! (அத்தியாயம்-2)

4. “நல்ல வேளை... என்னை இந்திய அரசு கைது செய்யவில்லை!”

5. அறுபது கொண்டாடுகிறது இந்தியா!

6. கனவு காணுங்கள்!

7. அறிந்தும் அறியாமலும்..! (16)

8. அறிந்தும் அறியாமலும்..! (17)

9. அறிந்தும் அறியாமலும்..! (18)

10. அறிந்தும் அறியாமலும்..! (19)

11. அறிந்தும் அறியாமலும்..! (20)

12. அறிந்தும் அறியாமலும்..! (21)

13. அறிந்தும் அறியாமலும்..! (22)

***********

தொலைந்து போனவன்: பாஸ்கர் சக்தி

ஏப்ரல் 06 இதழ்

மே 06 இதழ்

ஜூன் 06 இதழ்

ஜூலை 06 இதழ்

செப்டம்பர் 06 இதழ்

நவம்பர் 06 இதழ்

ஜனவரி 07 இதழ்

ஜூன் 07 இதழ்

ஜூலை 07 இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: [email protected]
hotmail.com
கட்டுரை
ஞாநி

1...2...3...ஷாக்!

பிரதமர் மன்மோகன் சிங் தேச பக்தரா... தேசத் துரோகியா?

ஒருவரை தேச பக்தர் என்றோ, தேசத் துரோகி என்றோ அழைக்க வேண்டுமானால், அதற்கான தகுதிகள் என்னவாக இருக்க முடியும்?

தேச பக்தர் யார் என்பதில்கூடச் சந்தேகங்கள் இருக்கலாம். யுத்த வெறியை உசுப்பிவிடுவது தேச பக்தியாகாது; அப்படிப்பட்ட வெறியை எதிர்ப்பது தேசத் துரோகமாகாது என்பது என் கருத்து. ஆனால், தேசத் துரோகிக்கான இலக்கணத்தை எளிதாக வரையறுத்துவிடலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், அதன் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பே உச்சமானது. அதன் செயல்பாட்டை, முடிவு-களை விமர்சிக்க-லாம். ஆனால், மக்களின் பிரதிநிதியாகிய அதன் அதிகாரமே, இந்திய அரசியல் சட்டப்படி உச்சமானது என்பதை மறுக்க முடியாது.

ஆனால், இந்திய நாடாளுமன்றத்தின் முடிவை மீறிச் செயல்படும் அதிகாரம் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு உண்டு என்று ஒரு இந்தியப் பிரதமர் அமெரிக்க அரசுடன் ஒப்பந்தம் போட்டால், அது தேச பக்தியா... தேசத் துரோகமா?

அப்படிப்பட்ட அதிர்ச்சியான ஓர் ஒப்பந்தத்தை, ஆட்சியே கவிழ்ந்தாலும் சரி, நிறைவேற்றியே தீருவேன் என்று மன்மோகன் சிங் பிடிவாதம் பிடிக்கிறார். எந்த விஷயத்திலும் எளிதில் முரண்படக்கூடிய இடதுசாரிகளும் பி.ஜே.பியும் இந்த ஒப்பந்த எதிர்ப்பில் மட்டும் ஒரே கருத்தில் இருக்கிறார்கள்!

என்னதான் இந்த ஒப்பந்தம்?

கடந்த 24 மாதங்களாக இந்திய - அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து-வந்தன. அமெரிக்காவின் அணு சக்திச் சட்டத்தின் 123வது பிரிவின் கீழ் இது போடப்படுவதால், இதைச் சுருக்கமாக ‘123 அக்ரிமென்ட்’ என்கிறார்கள்.

ஜூலை 2005-ல் மன்மோகன் சிங் அமெரிக்கா சென்றபோது, அவரும் புஷ்ஷும் இதற்கான பேச்சு நடப்பதாக முதலில் அறிவித்தார்கள். பிறகு, மார்ச் 2006ல் புஷ் இந்தியா வந்த போது, ஒப்பந்தம் தயார் என்று அறிவித்தார். அந்த வாரம் இந்திய நாடாளுமன்றத்தில் இதுபற்றி மன்மோகன் சிங் அறிக்கை அளித் தார். இருதரப்பு அதிகாரிகளும் விவாதித்து, ஒப்பந்தம் தயாரித்துக்கொண்டு இருந்தார்கள். ஜூலையில் அமெரிக்க மக்களவையில் 123 ஒப்பந்த மசோதா தாக்கலானது. டிசம்பரில் அமெரிக்க அரசியல் விவகார அமைச்சர் நிக்கோலஸ் பர்ன்ஸ் டெல்லி வந்தார். அதே மாதம், அமெரிக்க நாடாளுமன்றம் இதுதொடர்பான ஹைட் சட்டத்தை நிறைவேற்றியது. தொடர்ந்து இருதரப்பு உயர் அதிகாரிகளும் ஒப்பந்தத்தைக் கடும் விவாதங்களுக்குப் பின் இறுதி செய்தார்கள். ஒப்பந்தம் முடிக்கப்பட்டுவிட்டதாக சென்ற மாதம் 20ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஒப்பந்த விவரங்கள் ஆகஸ்ட் 1ல் வெளியிடப்பட்டன. அதையடுத்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு கடுமையாகி இருக்கிறது.

இந்தியாவின் இறையாண்மையை, சுதந்திரத்தை, அமெரிக்க அரசிடம் அடகுவைத்துவிட்டதாகக் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன. இடது சாரிகள் ‘மன்மோகன் சிங் அரசுடன் தங்கள் தேன் நிலவு முடிந்துவிட்டது; எனினும், திருமணம் தொடர்கிறது’ என்று குழப்பமாக அறிவித்திருக் கிறார்கள். இந்தப் பிரச்னையில் காங்கிரஸ் அரசைத் தாங்கள் கவிழ்க்க விரும்பவில்லை என்றாலும், இடதுசாரிகளுடன் சேர்ந்து அரசை எதிர்க்க விரும்புவதாக பி.ஜே.பி. தலைவர் அத்வானி, மார்க்சிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத்தை நேரில் சந்தித்துச் சொன்னார்.

இனி, இந்தியாவுக்கு அமெரிக்காவிடமிருந்து அணு மின்சாரம் தயாரிக்கும் உலைகளுக்குத் தேவையான எல்லா எரிபொருளும், இயந்திரங்களும், தொழில்நுட்பமும் தரப்படும் என்பதுதான் இந்திய-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தம் என்கிற 123 அக்ரிமென்ட்.

இத்தனைக் காலமாக இதற்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது. இப்போது இந்தத் தடையை நீக்கு வதற்குச் சில நிபந்தனைகளை 123 ஒப்பந்தம் விதிக்கிறது.

அணு மின்சாரம் தயாரிக்கும் எல்லா உலைகளையும் சர்வதேச அணுசக்தி அமைப்பின் நேரடிக் கண்காணிப்-புக்கு உட்படுத்த வேண்டும். இதன்படி இந்தியாவின் மொத்த 22 உலைகளில் 14ஐ கண்காணிப்புக்கு உட்படுத்த இந்தியா சம்மதித்திருக்கிறது. அணு மின்சார உலைகளில் பயன்படுத்திய எரிபொருளை மறுபயன்பாட்டுக்குச் சுத்திகரிப்பதற்கு அதி நவீன தனி உலை ஏற்படுத்தி, அதை அமெரிக்க, சர்வதேச அணுசக்தி அமைப்புகளின் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். இதற்கும் இந்தியா சம்மதித்துவிட்டது.

அணு மின்சாரத் தயாரிப்புக்குப் பயன்படக்கூடிய இயந்திரங்கள் சில அணுகுண்டுத் தயாரிப்பிலும் பயன்படுமானால், அவற்றை அமெரிக்காவோ, இதர நாடுகளோ இந்தியாவுக்குத் தரக் கூடாது என்பது முக்கியமான ஷரத்து.

மறுபடியும் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தினால், ஒப்பந்தம் ரத்தாகி விடும். கொடுத்தவற்றையெல்லாம் அமெரிக்கா திரும்ப எடுத்துக்கொள்ளும். அதே சமயம், இந்தியா இந்த ஒப்பந்தத்தின் கீழ் தன் உலைகளைச் சர்வதேச அமைப்பின் கண்காணிப்புக்கு உட் படுத்தியது மட்டும் ரத்தாகாது. ஒப்பந்தம் ரத்தானாலும், கண்காணிப்பு என்றென்றும் தொடரும். இதற்கும் இந்தியா சார்பாக மன்மோகன் சிங் சம்மதித்திருக்கிறார்.

ஒப்பந்தம் ரத்தாவதற்கு என்ன என்ன காரணங்கள் இருக்கலாம்?

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் முதல் காரணம், இந்தியா மறுபடியும் அணுகுண்டு வெடிப்பு சோதனை செய்தால், ஒப்பந்தம் ரத்தாகும். ஆனால், இது 123 அக்ரிமென்ட்டில் சொல்லப்படவில்லை. இது நிறைவேறு வதற்கு முன்பாக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர்கள் போட்ட ஹைட் சட்டத்தில் இருக்கிறது. அணுகுண்டு கிளப்பில் இருக்கும் வல்லரசு நாடுகள் தவிர, வேறு எந்த நாடு அணுகுண்டு சோதனை செய்தாலும், அத்துடன் அமெரிக்கா போட்டிருக்கும் அணுசக்தி ஒப்பந்தங்கள் ஆட்டோமேட்டிக்காக ரத்தாகும் என்பது ஹைட் சட்டம். அப்படி விதிவிலக்கு தர வேண்டுமானால், அதை அமெரிக்க நாடாளுமன்றம் பரிசீலிக்கலாம்.

ஒப்பந்தப்படி அமெரிக்கா அணு சக்திக்கான எரிபொருள், தொழில்நுட்பம், இயந்திரங்கள் தருவதில் பிசகினால், இந்திய ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியுமா? இந்திய நாடாளுமன்றம் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யச் சொல்ல முடியுமா? முடியாது. ஒப்பந்தத்தில் இதற்கு இடம் இல்லை!

அதுமட்டுமல்ல, அணு சக்தி பற்றிய இந்தியாவின் வெளி விவகாரக் கொள்கையே அமெரிக்கக் கொள்கையுடன் இசைவாக இருக்க வேண்டும் என்பது 123 அக்ரிமென்ட்டின் இன்னொரு ஷரத்து. குறிப்பாக, இரான் நாடு அணுகுண்டு தயாரிப்பதைத் தடுக்க அமெரிக்கா எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் இந்தியா ஆதரிக்க வேண்டும். இதற்கும் இந்தியா சம்மதித்திருக்கிறது.

மேற்படி ஒப்பந்த விவரங்களைப் படிக்கும் எவருக்கும் இந்த ஒப்பந்தம் ஒருதலைப்-பட்சமானது என்பது தெளிவாகப் புரியும். அவை பற்றிக் கேள்வி கேட்டால், “அவற்றையெல்லாம் அமெரிக்க காங்கிரஸிடம் சொல்லித் தளர்த்தச் செய்ய, தன் செல்வாக்கைப் பயன்படுத்துவதாக புஷ் என்னிடம் சொல்லியிருக்கிறார்” என்கிறார் மன்மோகன் சிங்.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக மன்மோகன் சிங் உதிர்த்திருக்கும் சில முத்துக்கள் அவர் மனநிலையைக் காட்டுகின்றன. “அமெரிக்க அதிபர் புஷ்ஷுடன் பேச்சுவார்த்தை நடத்து-வது சுலபமானது. நாம் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டுக்கொள்வார். என்னிடம் அன்பாக இருக்கிறார். இதுவரை இருந்த அமெரிக்க அதிபர்களிலேயே இவர்தான் இந்தியாவிடம் மிகவும் சிநேகமாக இருப்பவர். உலகத்தின் ஒரே ஒரு சூப்பர் பவராக அமெரிக்கா ஆகி 15 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், இதுவரை எந்த இந்திய அரசுக்கும் தன் அமெரிக்கக் கொள்கையை மாற்றிக் கொள்ளும் தைரியம் இருக்கவில்லை. நாங்கள் மாற்றி வருகிறோம்.”

‘நீங்கள் என் கன்னத்தில் முத்தமிடலாம். அல்லது, அறையலாம். அறைந்தாலும் தொடர்ந்து முத்தமிடவோ, அறையவோ உங்களுக்கு உரிமை உண்டு. ஏன் அறைந்தீர்கள் என்று கேட்கும் உரிமை எனக்கு இல்லை. ஏன் முத்தமிடவில்லை என்று கேட்கும் உரிமையும் எனக்கு இல்லை’ என்று கையெழுத்திட்டு, ஒரு பெண் திருமணம் செய்வது போன்றது இந்த ஒப்பந்தம்.

எதற்காக இந்தியா இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டும்?

மின்சார உற்பத்தியை அதிகரிப் பதற்காகவாம்! அணு மின்சாரத்தின் மூலம்தான் எதிர்கால மின் தேவையை ஈடுகட்ட முடியுமாம்!

இது நிஜம்தானா?

அடுத்த வாரம் பார்க்கலாம்!

இதுவரை ‘ஓ பக்கங்’களில் ஒரே விஷயத்துக்காக இரு வாரங்களை ஒதுக்கியதில்லை. இது ஒரு விதி விலக்கு!

(ஓ... போடுவோம்!)

நன்றி: ஆனந்த விகடன்
Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com