Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
அக்டோபர் - டிசம்பர் 2008

என்னுடனே பிறக்கும் என் பிள்ளைகள்
த.அரவிந்தன்
.

தன்னையே தனங்களுக்குள் குழைத்தூட்டி
எனக்குள்ளே அம்மாதன்
உயிர்க்கோட்டை நீட்டி வரைந்தபோது
கண்விழிக்காத நாய்க்குட்டிகளைப் போல
உணர்ச்சி விழிக்காத உடல் விழிக்காத
இதயம் விழிக்காத என் பிள்ளைகள்
உதிரம் பருகி வெளுத்தன
விதைப்பையிலிருந்தவாறே

பரிசோதிக்கப்படும் புதுக்குழாயாக
பொழுதெல்லாம் விழும் வேப்பம்பழங்களைப்போல
அடிக்கடி நான் வெளியேற்றிய
கழிவுகளை வெறுக்காது
அம்மா தூய்மையித்தது பேரன், பேத்திகளதையும் சேர்த்து

பல்வண்ணப் பந்தொன்று
மைதானத்து மகிழ்வை ஒட்டியோடி வந்து
கபடமற்றதாயிருந்த என் மென் பாதங்களில் பதுக்கினபோது
உள்வெளி நிழலின் நிழலில்
சுருள் பிரிந்து விரிந்த மைதானம்
முழுதும் நிரம்பிப் பிள்ளைகள் என் பால்யத்தைப் பிரதியெடுத்து விளையாடின

குறுக்கிட்டு தலைகீறி கடந்த காகம்போல
மேற்கில் மறையத் தொடங்கிட்ட
என் வளரிளம் பருவத்தென்னை வடுவரை
கணந்தோறும் இயங்கும் உன்னத பயிலகங்களில்
இடித்து அமர்ந்திருக்கும் வாரிசுகளுக்கு
தேர்ந்த ஆசிரியனாகிக் கற்பித்தன
என் வாழ்வின் நிரல்களிலிருந்து பிழிந்துகொண்ட உணர்ச்சிகள்

வெப்ப வீர்யத்தால் வெளியேறி வீழ்ந்திறந்த
துருதுரு பிள்ளைகளைத் தவிர்த்திருந்தவர்களில்
தேர்ந்த ஒரு பிள்ளையின் நச்சரிப்பால் இருபத்தெட்டு வருட இரவுகளைக் கடந்து
ஒரு பகலாகிப்போன நிசியில்
அவளகத்துக்கு மேற்படிப்புக்கு அனுப்பி வைத்தேன்

அறிவு விருத்திக்காக
அங்கு காத்திருந்த பிள்ளையொன்றை
என் பிள்ளை கவர்ந்து கலந்துலாவி
வெட்கத்தால் அப்படியே வெளிப்படாமல்
பத்துமாதங்களாய் எழுப்பிய வசதியான உருவத்துள்
கற்றவற்றை அவசியமாய் மறைத்து அடிவயிற்றை உந்தி உதைத்து
தலைநீட்டுகிறது எங்களைக் கடந்து
காலத்தைத் தொடர்ந்து போக...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com