Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthuvisai
Puthuvisai Logo
ஜூலை - செப்டம்பர் 2008

மரங்களிடமிருந்து கற்றுக்கொள்வது

வாங்கிரி மத்தாய் - 2004 அமைதிக்கான் நோபல் பரிசு ஏற்புரை
தமிழில்: மலைவாசி
.

நாங்கள் மனமார உண்மையைச் சொல்ல முடியும். இந்தப் பரிசு, அடிப்படை மக்களாகிய எங்களின் கூட்டு உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று. ஈடுபாடுடையவர்களாக இருப்பதால் நாங்கள் உழைக்கிறோம். எங்களது வேலையை நாங்கள் நம்புகிறோம்.

பலபேர் கேட்கிறார்கள் மக்களாட்சிக்கும், சுற்றுச் சூழலுக்கும், அமைதிக்கும் என்ன தொடர்பு? என்று. அவர்கள், இந்த மூன்று கருதுகோள்களையும் தனித்தனியே சிந்திக்க பழகிவிட்டார்கள். அவர்கள் வளர்ச்சியைப்பற்றி பேசினால், வளர்ச்சியைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அவர்கள் அமைதியைப் பற்றி பேசினால், அமைதியைப் பற்றி மட்டுமே பேசுகிறார்களேயன்றி வளர்ச்சியைப்பற்றி பேசுவதில்லை. வளர்ச்சியை பற்றி பேசும்போது, வளர்ச்சியைப் பற்றி மட்டும் பேசுகிறார்கள், அப்போது அவர்கள் சுற்றுச்சூழலைப் பற்றியோ, மக்களாட்சியைப் பற்றியோ பேசுவதில்லை. ஆனால் நாங்கள் களத்தில் சென்று பணிபுரியும்போது, நாம் செய்யும் வேலை, உண்மையிலே நீண்ட கால நிலைத்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால், எங்களுக்கு ஓர் ஒருங்கிணைந்த முழுமையான அணுகுமுறை வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறோம்.

ஆரம்பத்தில், என்னிடம் இந்த அணுகுமுறை இல்லை. 1973க்கும் 76க்கும் இடையில் நான் தேசிய பெண்கள் ஆணையத்தில் உறுப்பினராக இருந்தேன்.கென்யப்பெண்களின் பற்றுணர்வைக் கேட்டேன்: எங்களுக்கு தூய்மையான குடிநீர் வேண்டும், எங்களுக்கு விறகு வேண்டும், எங்களுக்கு உணவு வேண்டும், எங்களுக்கு கட்டுமானப் பொருட்கள், வேலிக்கான பொருட்கள் வேண்டும் எங்கள் மண்ணைப் பாதுகாக்க வேண்டும் இந்தப்பிரச்னைகளை மேலும் மேலும் கேட்க கேட்க அவற்றை நிலத்துடன் இணைத்துப் பார்க்க ஆரம்பித்தேன். பிறகு அப்பெண்களைப் பார்த்து ஏன் நாம் மரங்களை நடக்கூடாது? எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் எங்களுக்கு மரத்தை எப்படி நடுவது என்று தெரியாது என்று சொன்னார்கள். வனத்துறை அலுவலர்களின் உதவியைக் கேட்க முடிவு செய்தேன். வனப்பாதுகாவலரிடம் சென்றபோது, அவர் எங்களுக்குத் தேவையான அனைத்து மரங்களையும் தர முன்வந்தார். பின்னால் அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டார். ஏனென்றால், அவரால் இலவசமாக தரக்கூடிய மரக்கன்றுகளைவிட மேலதிகமாக நாங்கள் மரக்கன்றுகளை நட ஆரம்பித்தோம். மேலதிகமான மரக்கன்றுகளுக்கு விலை கொடுத்துவிடுமாறு அவர் எங்களை கேட்டுக்கொண்டார்.

கடைசியில், வனத்துறை அலுவலர்களிடமிருந்து மரக்கன்றுகளை பெறுவதற்காக அதிகளவு நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பதற்கு பதிலாக, நாங்களே எங்களின் மரக்கன்று பண்ணையை உருவாக்குவது எப்படி எனக்கேட்க முடிவு செய்தோம். பெண்கள் படைப்பார்வம் உடையவர்கள். மரக்கன்றுப் பண்ணைகளை தங்களால் முடிந்தளவிற்கு சிறப்பாக அவர்கள் அமைத்தார்கள். மரக்கன்றுகள், இரண்டு மூன்று அடி வளரும்வரை அவற்றை பராமரித்து அதன்பின் தங்களது நிலத்திலே அவற்றை நட்டார்கள்.

அந்த மரங்களை, அவர்கள்தான் காப்பாற்றிப் பேண வேண்டும். மரங்கள் பிழைத்த பிறகு, பசுமைப்பட்டை இயக்கம், தான் சேகரித்த நிதியிலிருந்து சிறிது பணத்தை அவர்களுக்கு ஈடாக கொடுக்கும். இது ஒரு மாற்றத்தை அப்பெண்களிடம் கொண்டுவந்தது. ஏனென்றால் மரம் நடுதல் அவர்களுக்கு பணம் சம்பாதிக்கும் செயலாக மாறிவிட்டது. பல ஆயிரம் மரங்களை உருவாக்கியதால், பெண்கள் கையில் பணம் புழங்கியது. ஒரு மரத்திற்கு கொடுக்கப்படும் பணம் மிகக் குறைவென்றாலும், அதை பல ஆயிரத்தால் பெருக்கும்போது கிடைக்கும் தொகை பள்ளிக்கட்டணம் கட்டுவதற்கும், உடை வாங்குவதற்கும், வீட்டுச் செலவை கவனிப்பதற்கும் உதவியது. அது அற்புதமானது. மரங்களை நடுவதற்கு அதுவே மிக முக்கியமான காரணமாகவும், உற்சாகமாகவும் ஆனது. அவர்கள் தமது பண்ணையில் மரங்களை நட்டு முடித்தபின்பு நாங்கள் அவர்களிடம் சொன்னோம்: சரி இப்பொழுது உங்களுடைய அண்டை அயலாரிடம் பேசுங்கள். ஏன் அவர்களும் மரங்கள் நட வேண்டும் என்று சொல்லுங்கள். அவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளைக் கொடுங்கள். அவர்கள் அவற்றை நட்டு காப்பாற்றிய பிறகு அவர்கள் செய்த பணிக்காக, ஈட்டுத்தொகை அவர்களுக்கு கொடுக்கப்படும்.

அதிர்ஷ்டவசமாக வெப்பமண்டலத்தில் மரங்கள் மிக வேகமாக வளர்கின்றன. எனவே, மிக குறுகிய காலத்திற்குள் மரங்கள் வளர்கின்றன. உயர்ந்து விடுகின்றன. அவற்றை நடுகிறவர்களுடன் மரங்கள் பேசுகின்றன. அதனால் அவர்களுக்கு மிக ஆர்வமான அனுபவமாக இருந்தது. அவர்கள் எங்களின் தூதர்களாக ஆகிவிட்டார்கள். மரங்கள் வளரவளர, அவை நம்பிக்கையை - தன்னம்பிக்கையைத் தருகின்றன, நிலப்பரப்பையே மாற்றி விடுகின்றன. நிலப்பரப்பு மாற்றமடைந்தவுடன் பறவைகள் திரும்ப வருகின்றன. சிறு விலங்குகள் திரும்ப வருகின்றன. புழுதியின் அளவு குறையத் தொடங்குகிறது. பாதையில் நடந்து செல்லும்போது நிழல் இருக்கிறது. மேலும், திடீரென்று சமூகத்தில் ஒரு சமூகச் சூழல் உருவாகிறது. அதன் பிறகு, மரங்கள் நடச்சொல்லி மக்களை வற்புறுத்த வேண்டிய அவசியமே இல்லை. அவர்களுக்கு மரங்களின் மதிப்பு தெரிந்துவிட்டது. அவற்றை மட்டும் நாங்கள் செய்திருந்தால், அது நல்லதொரு அனுபவமாக இருந்திருக்கும். பெண்கள் மரம் நடுகிறார்கள். பார்க்கும் பலரும் பலவகைகளில் அப்படித்தான் நினைத்திருப்பர். மரங்களை நட்டதற்காக, ஏன் ஒரு பெண்ணை கைது செய்ய வேண்டும்? அவளை அடிக்க வேண்டும்? சிறையில் அடைக்க வேண்டும்? என்று மக்கள் கேட்கிறார்கள். நான் எந்த காரணத்துக்காக இந்தப் பிரச்சினையில் இறங்கினேன் என்று இப்பொழுது சொல்கிறேன். பெண்களையும் ஆண்களையும், குழந்தைகளையும் பெருமளவு திரட்ட வேண்டும் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். மிகப் பெருமளவில் மக்களை ஈடுபடுத்தினாலொழிய, நீங்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது.

எனவே, மக்களுக்கு கற்பிக்க முடிவெடுத்தோம். சமூக, சுற்றுச்சூழல் கல்வித்திட்டம் ஒன்றை அமைத்தோம். ஏன் மரங்கள் நமக்கு அவசியம் ஏன் அவை சூழலைக் காப்பாற்றவும் நமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும் அவசியமாக இருக்கின்றன என்பதை மக்கள் உளப்பூர்வமாக உணரச் செய்ய நினைத்தோம். அப்போதுதான், நான் மனித உரிமை மீறலை சந்தித்தேன். அரசு சொன்னது, நீங்கள் கூடிப்பேசலாம், ஆனால் 9 பேருக்கு மேல் கூடினால் உங்களிடம் அனுமதிச்சீட்டு இருக்க வேண்டும். அப்போது நான் இன்னொரு மனிதரிடம் பேசி ஒரு குழிதோண்டி மரம் ஒன்றை நட அவரை வற்புறுத்துவதற்கு நான் ஏன் அனுமதி பெறவேண்டும்? அதற்கு அரசாங்கம் சொன்னது ஏனென்றால், அதுதான் சட்டம். ஒன்பது பேருக்கு மேல் கூடுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை.

அதுதான் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் அல்லது அழிப்பதற்கும் மக்களாட்சி எத்தகைய பங்கை ஆற்றுகிறது என்பதை நான் புரிந்து கொள்வதற்கான ஆரம்பம். நாங்கள் சட்டத்தை எதிர்க்க முடிவு செய்தோம். எங்களுக்கு கூடிப்பேச, ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்ல, அமைப்பாக திரள சுதந்திரம் இருக்கிறது எனச்சொல்ல நாங்கள் முடிவெடுத்தோம். ஆனால், அதைப்பற்றி பேசிக் கொண்டில்லாமல் செயலில் இறங்கினோம். நாங்கள் மரக்கன்றுகள் வளர்த்த இடத்தில் கூடி, எங்களுக்கு ஒன்றுகூடவும், எங்கள் சூழலை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான சாத்தியங்களைப் பற்றி பேசவும் உரிமை இருக்கிறது என நாங்கள் வலியுறுத்தினோம். சமயங்களில் நாங்கள் அடிபட்டோம். எங்கள் கூட்டம் இடையில் கலைக்கப்பட்டது. அனுமதி மறுக்கப்பட்டது. பெண்களுக்கு உதவுவதற்காகவும் இந்தத் தொல்லைகளால் அவர்கள் உரிமை இழப்பதை தடுப்பதற்காகவும் அவர்களை குழுக்களாக அல்லது மன்றங்களாக பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தினோம். (அரசாங்கம், குழுக்களுக்கு கூட்டம் கூட அனுமதி அளிக்கிறது.)

ஆட்சி புரிதல் குறித்த கல்வியை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தோம். ஏன் அரசியல்வாதிகள் நாங்கள் ஒன்று கூடி விஷயங்களை பகிர்ந்துகொள்ள அனுமதி மறுக்கிறார்கள் என்று ஆராய்ந்தபோது, அரசியல்வாதிகள்தான் சமூகத்தின் மிக மோசமான அழிவுசக்திகள் என்பது எங்களுக்கு புரிந்தது. அவர்கள் காட்டிலிருந்து திருட்டுத்தனமாக மரங்களை வெட்டுகிறார்கள், காடுகளை தனியார் மயமாக்குகிறார்கள், அரசாங்கக் கருவூலத்திலிருந்து திருடுகிறார்கள், கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் ஊழல் செய்கிறார்கள். எப்படி அவர்கள் எங்களை ஆள்கிறார்கள். நாங்கள் ஏன் இப்படி ஆளப்படுகிறோம் ஆகியவை குறித்து நாங்கள் புரிந்து கொள்ளக்கூடாது என்பதே அவர்களது நோக்கமாக இருந்தது. இதை நாங்கள் அறிந்துகொண்டோம்.

அரசு அமைப்பை பற்றி படித்தறிந்த போது நாங்கள் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று, அதனமைப்பை மாற்ற வேண்டும் என்பதுதான். ஆனால் அப்போதைய அரசாங்கம் இருக்கும்வரை எம்மால் அமைப்பை மாற்றமுடியாது என உணர்ந்தோம். அந்த அரசை எப்படி மாற்றுவது என்பது குறித்து நாங்கள் வேலை செய்ய ஆரம்பித்தோம். இருக்கும் அரசை மாற்றுவதற்கு ஒருவழி தேர்தலில் பங்கேற்பது. எனவே எப்படி தேர்தலில் பங்கேற்பதென்றும், நம்பிக்கைக்குரிய மக்களிடம் அதிகாரத்தை எப்படி வழங்குவது என்பது குறித்தும் விவாதித்தோம். அத்தகைய மக்களிடம், நேர்மை கண்டிப்பாக இருக்க வேண்டும். ஏனென்றால், அதிகாரம் செய்யும் இடத்தில் இருப்பவர்களிடம் நேர்மை இல்லாவிட்டால், அவர்கள் சுற்றுச் சூழலை அழிக்கிறார்கள் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். மரம் நடுவது மட்டுமே எங்களது குறிக்கோள் எனத் தோற்றமளிப்பது போல இவை அனைத்தையும் நாங்கள் செய்தோம். அடிக்கடி அரசாங்கம் நாங்கள் கூடியிருக்கும் இடத்திற்கு வந்து, கூட்டம் போடுவதற்கு உங்களிடம் அனுமதி இருக்கிறது என்று தெரியும். ஆனால் நீங்கள் எதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கும். நாங்கள் சொல்வோம். மரங்களை எப்படி நேர்த்தியாக நடவேண்டும் என்பது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்று. இப்படித்தான் நாங்கள் கென்யாவின் மக்களாட்சி ஆதரவு இயக்கத்தில் பங்குதாரர்கள் ஆனோம்.

சுற்றுச்சூழலை நல்லமுறையில் பராமரிப்பது மக்களாட்சியுடன் தொடர்புடையது. மோசமான அரசு மக்களிடையே பிரிவினையை வளர்த்து அதன் மூலம் நீடிக்கிறது...

ஆப்பிரிக்காவில், ஒரு இனக்குழு சமூகத்தை மற்றொரு இனக்குழு சமூகத்திற்கு எதிராக நிறுத்துகிறது. உதாரணமாக, விவசாயக் குழுக்களுக்கும் நாடோடிக் குழுக்களுக்குமிடையே பேதங்களை வளர்ப்பது சுலபம். உலகம் முழுக்கவும் ஆப்பிரிக்காவிலும் பிற இடங்களிலும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் பல இடங்களில் மக்கள் இயற்கை வளங்களுக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். வளங்களுக்காக மக்கள் சண்டை போட்டுக்கொண்டிருந்தால் வளர்ச்சி என்பதே இருக்காது.

அமைதி இல்லாத ஒரு நாட்டில் வளர்ச்சி இருக்காது. மக்களாட்சி மாண்புகளை மதிக்காத ஒரு நாட்டை நீங்கள் முன்னேற்ற முடியாது. மேலும் இயற்கை வளங்களை சரியாக கையாளாத ஒருநாட்டை - வளங்கள் சுரண்டப்படுகிற, பெரும்பான்மையை ஏமாற்றி சிறுபான்மையிடம் வளங்கள் ஒப்படைக்கப்படுகின்ற - ஒரு நாட்டை முன்னேற்றமுடியாது.

நோபல் பரிசுக்குழு, சுற்றுச்சூழல், மக்களாட்சி மற்றும் அமைதி குறித்து எங்களது எண்ணங்களை மாற்றும் ஒரு மிகப்பெரிய சவாலை எங்கள் முன் வைத்துள்ளது. இவை அனைத்தும் பின்னிப் பிணைந்துள்ளவை, ஒன்றை விட்டுவிட்டு மற்றொன்றை அணுக முடியாது என்பதை உணர ஆரம்பித்துள்ளோம்.

இந்தப் பரிசு ஒரு சவால். குறிப்பாக ஆப்பிரிக்கத் தலைமை தனது பணி குறித்து மறுபரீசிலனை செய்து கொள்ள வேண்டியதும், ஆப்பிரிக்க மக்களுக்கு சரியான தலைமையைக் கொடுப்பதன் மூலம் ஆப்பிரிக்காவுக்கு ஓர் வாய்ப்பு தரவேண்டியதும் தேவையானதாகும். நல்லாட்சியை வளர்க்கக்கூடிய, இயற்கை வளங்களை திறம்பட பயன்படுத்தக்கூடிய, மோதல்களை தவிர்க்கக்கூடிய தலைமையை ஆப்ரிக்காவில் உருவாக்க வேண்டியது நமக்கு முக்கியமானதாகும். மேலும், குழந்தைகளை அவர்களுக்குப் புரியாத போர்களில் ஈடுபடுத்தி சாக விடுவதைவிட அவர்கள் பெரியவர்களாக வளர்ந்து, குடும்பங்களைப் பேண வழிவகுக்கக் கூடிய தலைமையை நாம் உருவாக்க வேண்டும்.

எனவே, நம் தலைவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன். கிழக்கு ஆப்பிரிக்காவிலும், மேற்கு ஆப்பிரிக்காவிலும் நடப்பவை நல்ல அறிகுறிகளைக் காட்டுகின்றன. ஆயுதங்களுக்கு பதிலாக வளர்ச்சிக்கு பணத்தை செலவழிப்பதில் தலைவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தப் பரிசு, ஆப்பிரிக்காவிலுள்ள நமக்கு உணர்வூட்டினால், நம் தலைவர்களுக்கு உணர்வூட்டினால், பலவீனமானவற்றை பாதுகாக்கும், தங்களை நம்பும் மக்களை பாதுகாக்கும், அவர்களை மேலும் சிறப்பான எதிர்காலத்திற்கு வழிநடத்தும் தலைவர்களைக் கொண்ட புதிய யுகத்தை நம்மால் தொடங்கமுடியும். மேலும், ஆப்ரிக்காவில் நாம் இதைச் செய்தால், முழு உலகும் இந்த புதிய பிரக்ஞையுடன் யோசிக்க ஆரம்பித்தால், வளர்ச் சிக்கான புதிய தளத்தை நம்மால் அமைக்கமுடியும் என்பத உறுதியாக எனக்குத் தெரியும், நம்மால் முன்னேற முடியும்.

ஆரம்பத்தில், என்னிடம் இந்த அணுகுமுறை இல்லை. 1973க்கும் 76க்கும் இடையில் நான் தேசிய பெண்கள் ஆணையத்தில் உறுப்பினராக இருந்தேன். கென்யப்பெண்களின் பற்றுணர்வைக் கேட்டேன்: எங்களுக்கு தூய்மையான குடிநீர் வேண்டும், எங்களுக்கு விறகு வேண்டும், எங்களுக்கு உணவு வேண்டும், எங்களுக்கு கட்டுமானப் பொருட்கள், வேலிக்கான பொருட்கள் வேண்டும் எங்கள் மண்ணைப் பாதுகாக்க வேண்டும் இந்தப்பிரச்னைகளை மேலும் மேலும் கேட்க கேட்க அவற்றை நிலத்துடன் இணைத்துப் பார்க்க ஆரம்பித்தேன். பிறகு அப்பெண்களைப் பார்த்து ஏன் நாம் மரங்களை நடக்கூடாது? எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் எங்களுக்கு மரத்தை எப்படி நடுவது என்று தெரியாது என்று சொன்னார்கள். வனத்துறைஅலுவலர்களின் உதவியைக் கேட்க முடிவு செய்தேன். வனப்பாதுகாவலரிடம் சென்றபோது, அவர் எங்களுக்குத் தேவையான அனைத்து மரங்களையும் தர முன் வந்தார். பின்னால் அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டார். ஏனென்றால், அவரால் இலவசமாக தரக்கூடிய மரக் கன்றுகளைவிட மேலதிகமாக நாங்கள் மரக்கன்றுகளை நட ஆரம்பித்தோம். மேலதிகமான மரக்கன்றுகளுக்கு விலை கொடுத்துவிடுமாறு அவர் எங்களை கேட்டுக்கொண்டார்.

கடைசியில், வனத்துறை அலுவலர்களிடமிருந்து மரக்கன்றுகளை பெறுவதற்காக அதிகளவு நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பதற்கு பதிலாக, நாங்களே எங்களின் மரக்கன்று பண்ணையை உருவாக்குவது எப்படி எனக் கேட்க முடிவு செய்தோம். பெண்கள் படைப்பார்வம் உடையவர்கள். மரக்கன்றுப் பண்ணைகளை தங்களால் முடிந்தளவிற்கு சிறப்பாக அவர்கள் அமைத்தார்கள். மரக்கன்றுகள், இரண்டு மூன்று அடி வளரும்வரை அவற்றை பராமரித்து அதன்பின் தங்களது நிலத்திலே அவற்றை நட்டார்கள்.

அந்த மரங்களை, அவர்கள்தான் காப்பாற்றிப் பேண வேண்டும். மரங்கள் பிழைத்த பிறகு, பசுமைப்பட்டை இயக்கம், தான் சேகரித்த நிதியிலிருந்து சிறிது பணத்தை அவர்களுக்கு ஈடாக கொடுக்கும். இது ஒரு மாற்றத்தை அப்பெண்களிடம் கொண்டு வந்தது. ஏனென்றால் மரம் நடுதல் அவர்களுக்கு பணம் சம்பாதிக்கும் செயலாக மாறிவிட்டது. பல ஆயிரம் மரங்களை உருவாக்கியதால், பெண்கள் கையில் பணம் புழங்கியது. ஒரு மரத்திற்கு கொடுக்கப்படும் பணம் மிகக் குறை வென்றாலும், அதை பல ஆயிரத்தால் பெருக்கும்போது கிடைக்கும் தொகை பள்ளிக்கட்டணம் கட்டுவதற்கும், உடை வாங்குவதற்கும், வீட்டுச் செலவை கவனிப்பதற்கும் உதவியது. அது அற்புதமானது. மரங்களை நடுவதற்கு அதுவே மிக முக்கியமான காரணமாகவும், உற்சாகமாகவும் ஆனது. அவர்கள் தமது பண்ணையில் மரங்களை நட்டு முடித்தபின்பு நாங்கள் அவர்களிடம் சொன்னோம்: சரி இப்பொழுது உங்களுடைய அண்டை அயலாரிடம் பேசுங்கள். ஏன் அவர்களும் மரங்கள் நட வேண்டும் என்று சொல்லுங்கள். அவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளைக் கொடுங்கள். அவர்கள் அவற்றை நட்டு காப்பாற்றிய பிறகு அவர்கள் செய்த பணிக்காக, ஈட்டுத்தொகை அவர்களுக்கு கொடுக்கப்படும்.

அதிர்ஷ்டவசமாக வெப்பமண்டலத்தில் மரங்கள் மிக வேகமாக வளர்கின்றன. எனவே, மிக குறுகிய காலத்திற்குள் மரங்கள் வளர்கின்றன. உயர்ந்து விடுகின்றன. அவற்றை நடுகிறவர்களுடன் மரங்கள் பேசுகின்றன. அதனால் அவர்களுக்கு மிக ஆர்வமான அனுபவமாக இருந்தது. அவர்கள் எங்களின் தூதர்களாக ஆகிவிட்டார்கள். மரங்கள் வளரவளர, அவை நம்பிக்கையை - தன்னம்பிக்கையைத் தருகின்றன, நிலப்பரப்பையே மாற்றி விடுகின்றன. நிலப்பரப்பு மாற்ற மடைந்தவுடன் பறவைகள் திரும்ப வருகின்றன. சிறு விலங்குகள் திரும்ப வருகின்றன. புழுதியின் அளவு குறையத் தொடங்குகிறது. பாதையில் நடந்து செல்லும்போது நிழல் இருக்கிறது. மேலும், திடீரென்று சமூகத்தில் ஒரு சமூகச் சூழல் உருவாகிறது. அதன் பிறகு, மரங்கள் நடச்சொல்லி மக்களை வற்புறுத்த வேண்டிய அவசியமே இல்லை. அவர்களுக்கு மரங்களின் மதிப்பு தெரிந்துவிட்டது. அவற்றை மட்டும் நாங்கள் செய்திருந்தால், அது நல்லதொரு அனுபவமாக இருந்திருக்கும். பெண்கள் மரம் நடுகிறார்கள். பார்க்கும் பலரும் பலவகைகளில் அப்படித்தான் நினைத்திருப்பர். மரங்களை நட்டதற்காக, ஏன் ஒரு பெண்ணை கைது செய்ய வேண்டும்? அவளை அடிக்க வேண்டும்? சிறையில் அடைக்க வேண்டும்? என்று மக்கள் கேட்கிறார்கள். நான் எந்த காரணத்துக்காக இந்தப் பிரச்சினையில் இறங்கினேன் என்று இப்பொழுது சொல்கிறேன். பெண்களையும் ஆண்களையும், குழந்தைகளையும் பெருமளவு திரட்ட வேண்டும் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். மிகப் பெருமளவில் மக்களை ஈடுபடுத்தினாலொழிய, நீங்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது.

எனவே, மக்களுக்கு கற்பிக்க முடிவெடுத்தோம். சமூக, சுற்றுச்சூழல் கல்வித்திட்டம் ஒன்றை அமைத்தோம். ஏன் மரங்கள் நமக்கு அவசியம் ஏன் அவை சூழலைக் காப்பாற்றவும் நமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும் அவசியமாக இருக்கின்றன என்பதை மக்கள் உளப்பூர்வமாக உணரச் செய்ய நினைத்தோம். அப்போதுதான், நான் மனித உரிமை மீறலை சந்தித்தேன். அரசு சொன்னது, நீங்கள் கூடிப்பேசலாம், ஆனால் 9 பேருக்கு மேல் கூடினால் உங்களிடம் அனுமதிச்சீட்டு இருக்க வேண்டும். அப்போது நான் இன்னொரு மனிதரிடம் பேசி ஒரு குழிதோண்டி மரம் ஒன்றை நட அவரை வற்புறுத்துவதற்கு நான் ஏன் அனுமதி பெறவேண்டும்? அதற்கு அரசாங்கம் சொன்னது ஏனென்றால், அதுதான் சட்டம். ஒன்பது பேருக்கு மேல் கூடுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை.

அதுதான் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் அல்லது அழிப்பதற்கும் மக்களாட்சி எத்தகைய பங்கை ஆற்றுகிறது என்பதை நான் புரிந்து கொள்வதற்கான ஆரம்பம். நாங்கள் சட்டத்தை எதிர்க்க முடிவு செய்தோம். எங்களுக்கு கூடிப்பேச, ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்ல, அமைப்பாக திரள சுதந்திரம் இருக்கிறது எனச்சொல்ல நாங்கள் முடிவெடுத்தோம். ஆனால், அதைப்பற்றி பேசிக் கொண்டில்லாமல் செயலில் இறங்கினோம். நாங்கள் மரக்கன்றுகள் வளர்த்த இடத்தில் கூடி, எங்களுக்கு ஒன்றுகூடவும், எங்கள் சூழலை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான சாத்தியங்களைப் பற்றி பேசவும் உரிமை இருக்கிறது என நாங்கள் வலியுறுத்தினோம். சமயங்களில் நாங்கள் அடிபட்டோம். எங்கள் கூட்டம் இடையில் கலைக்கப்பட்டது.அனுமதி மறுக்கப்பட்டது. களுக்கு உதவுவதற்காகவும் இந்தத் தொல்லைகளால் அவர்கள் உரிமை இழப்பதை தடுப்பதற்காகவும் அவர்களை குழுக்களாக அல்லது மன்றங்களாக பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தினோம். (அரசாங்கம், குழுக்களுக்கு கூட்டம் கூட அனுமதி அளிக்கிறது.)

ஆட்சி புரிதல் குறித்த கல்வியை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தோம். ஏன் அரசியல்வாதிகள் நாங்கள் ஒன்று கூடி விஷயங்களை பகிர்ந்துகொள்ள அனுமதி மறுக்கிறார்கள் என்று ஆராய்ந்தபோது, அரசியல்வாதிகள்தான் சமூகத்தின் மிக மோசமான அழிவுசக்திகள் என்பது எங்களுக்கு புரிந்தது. அவர்கள் காட்டிலிருந்து திருட்டுத்தனமாக மரங்களை வெட்டுகிறார்கள், காடுகளை தனியார் மயமாக்குகிறார்கள், அரசாங்கக் கருவூலத்திலிருந்து திருடுகிறார்கள், கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் ஊழல் செய்கிறார்கள். எப்படி அவர்கள் எங்களை ஆள்கிறார்கள். நாங்கள் ஏன் இப்படி ஆளப்படுகிறோம் ஆகியவை குறித்து நாங்கள் புரிந்து கொள்ளக்கூடாது என்பதே அவர்களது நோக்கமாக இருந்தது. இதை நாங்கள் அறிந்துகொண்டோம்.

அரசு அமைப்பை பற்றி படித்தறிந்த போது நாங்கள் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று, அதனமைப்பை மாற்ற வேண்டும் என்பதுதான். ஆனால் அப்போதைய அரசாங்கம் இருக்கும்வரை எம்மால் அமைப்பை மாற்றமுடியாது என உணர்ந்தோம். அந்த அரசை எப்படி மாற்றுவது என்பது குறித்து நாங்கள் வேலை செய்ய ஆரம்பித்தோம். இருக்கும் அரசை மாற்றுவதற்கு ஒருவழி தேர்தலில் பங்கேற்பது. எனவே எப்படி தேர்தலில் பங்கேற்பதென்றும், நம்பிக்கைக் குரிய மக்களிடம் அதிகாரத்தை எப்படி வழங்குவது என்பது குறித்தும் விவா தித்தோம். அத்தகைய மக்களிடம் , நேர்மை கண்டிப்பாக இருக்க வேண் டும். ஏனென்றால், அதிகாரம் செய்யும் இடத்தில் இருப்பவர்களிடம் நேர்மை இல்லாவிட்டால், அவர்கள் சுற்றுச் சூழலை அழிக்கிறார்கள் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். மரம் நடுவது மட்டுமே எங்களது குறிக் கோள் எனத் தோற்றமளிப்பது போல இவை அனைத்தையும் நாங்கள் செய் தோம். அடிக்கடி அரசாங்கம் நாங்கள் கூடியிருக்கும் இடத்திற்கு வந்து, கூட்டம் போடுவதற்கு உங்களிடம் அனுமதி இருக்கிறது என்று தெரியும். ஆனால் நீங்கள் எதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கும். நாங்கள் சொல்வோம். மரங்களை எப்படி நேர்த்தியாக நடவேண்டும் என் பது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கி றோம் என்று. இப்படித்தான் நாங்கள் கென்யாவின் மக்களாட்சி ஆதரவு இயக்கத்தில் பங்குதாரர்கள் ஆனோம்.

சுற்றுச்சூழலை நல்லமுறையில் பராமரிப்பது மக்களாட்சியுடன் தொடர்புடையது. மோசமான அரசு மக்களிடையே பிரிவினையை வளர்த்து அதன் மூலம் நீடிக்கிறது...

ஆப்பிரிக்காவில், ஒரு இனக்குழு சமூகத்தை மற்றொரு இனக்குழு சமூகத்திற்கு எதிராக நிறுத்துகிறது. உதாரணமாக, விவசாயக் குழுக்களுக்கும் நாடோடிக் குழுக்களுக்குமிடையே பேதங்களை வளர்ப்பது சுலபம். உலகம் முழுக்கவும் ஆப்பிரிக்காவிலும் பிற இடங்களிலும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் பல இடங்களில் மக்கள் இயற்கை வளங்களுக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். வளங்களுக்காக மக்கள் சண்டை போட்டுக்கொண்டிருந்தால் வளர்ச்சி என்பதே இருக்காது.

அமைதி இல்லாத ஒரு நாட்டில் வளர்ச்சி இருக்காது. மக்களாட்சி மாண்புகளை மதிக்காத ஒரு நாட்டை நீங்கள் முன்னேற்ற முடியாது. மேலும் இயற்கை வளங்களை சரியாக கையாளாத ஒருநாட்டை - வளங்கள் சுரண்டப்படுகிற, பெரும்பான்மையை ஏமாற்றி சிறுபான்மையிடம் வளங்கள் ஒப்படைக்கப்படுகின்ற - ஒரு நாட்டை முன்னேற்ற முடியாது.

நோபல் பரிசுக்குழு, சுற்றுச்சூழல், மக்களாட்சி மற்றும் அமைதி குறித்து எங்களது எண்ணங்களை மாற்றும் ஒரு மிகப்பெரிய சவாலை எங்கள் முன்வைத்துள்ளது. இவை அனைத்தும் பின்னிப் பிணைந்துள்ளவை, ஒன்றை விட்டுவிட்டு மற்றொன்றை அணுக முடியாது என்பதை உணர ஆரம்பித்துள்ளோம்.

இந்தப் பரிசு ஒரு சவால். குறிப்பாக ஆப்பிரிக்கத் தலைமை தனது பணி குறித்து மறுபரீசிலனை செய்து கொள்ள வேண்டியதும், ஆப்பிரிக்க மக்களுக்கு சரியான தலைமையைக் கொடுப்பதன் மூலம் ஆப்பிரிக்காவுக்கு ஓர் வாய்ப்பு தரவேண்டியதும் தேவையானதாகும். நல்லாட்சியை வளர்க்கக்கூடிய, இயற்கை வளங்களை திறம்பட பயன்படுத்தக்கூடிய, மோதல்களை தவிர்க்கக்கூடிய தலைமையை ஆப்ரிக்காவில் உருவாக்க வேண்டியது நமக்கு முக்கியமானதாகும். மேலும், குழந்தைகளை அவர்களுக்குப் புரியாத போர்களில் ஈடுபடுத்தி சாகவிடுவதைவிட அவர்கள் பெரியவர்களாக வளர்ந்து, குடும்பங்களைப் பேண வழிவகுக்கக் கூடிய தலைமையை நாம் உருவாக்க வேண்டும்.

எனவே, நம் தலைவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன். கிழக்கு ஆப்பிரிக்காவிலும், மேற்கு ஆப்பிரிக்காவிலும் நடப்பவை நல்ல அறிகுறிகளைக் காட்டுகின்றன. ஆயுதங்களுக்கு பதிலாக வளர்ச்சிக்கு பணத்தை செலவழிப்பதில் தலைவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தப் பரிசு, ஆப்பிரிக்காவிலுள்ள நமக்கு உணர்வூட்டினால், நம் தலைவர்களுக்கு உணர்வூட்டினால், பலவீனமானவற்றை பாதுகாக்கும், தங்களை நம்பும் மக்களை பாதுகாக்கும், அவர்களை மேலும் சிறப்பான எதிர்காலத்திற்கு வழிநடத்தும் தலைவர்களைக் கொண்ட புதிய யுகத்தை நம்மால் தொடங்கமுடியும். மேலும், ஆப்ரிக்காவில் நாம் இதைச் செய்தால், முழு உலகும் இந்த புதிய பிரக்ஞையுடன் யோசிக்க ஆரம்பித்தால், வளர்ச் சிக்கான புதிய தளத்தை நம்மால் அமைக்கமுடியும் என்பத உறுதியாக எனக்குத் தெரியும், நம்மால் முன்னேற முடியும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com