Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
ஜூலை 2009


இனப் பகை காங்கிரசை எதிர்த்துப் பரப்புரை: களப் பதிவுகள்
கலைவேலு

தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை வென்றெடுப்பதற்கு இந்தியத் தேர்தல்கள் எள்ளளவும் பயன்பட மாட்டா. தமிழ்த் தேசிய அரசியல் நோக்கங்களை யும் அவை சிதைத்துவிடும். அதனால்தான் தமிழ்த் தேசிய இயக்கங்கள் தேர்தலைத் தொடர்ந்து புறக்கணித்து வரு கின்றன. தமிழ்த் தேசிய விடு தலை இயக்கம் இந்நிலைப் பாட்டை உறுதியாய்ப் பற்றி நிற்கிறது.

ஆனால் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்த் தேசிய இயக்கங்களுக்கு ஓர் அறைகூவலாய் அமைந்தது. ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்களப் பேரினவாத அரசுக்குத் துணை நிற்கும் சோனியா காங்கிரசுக்கு இத்தேர்தலைப் பயன்படுத்தி ஏன் பாடம் புகட்டக் கூடாது என்ற கேள்வி எல்லார் மனத்திலும் எழுந்தது. காங்கிரசைப் படுதோல்வி அடையச் செய்வது மற்ற கட்சிகளுக்கும் எச்சரிக்கை யாய் அமையும். இனப்பகை காங்கிரசை வீழ்த்துவது தமிழ்த் தேசத்திற்கு வலுச் சேர்க்கும் என்ற நம்பிக்கையோடு தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் இத்தேர்தலை எதிர்கொண்டது. ‘காங்கிரசுக்கு வாக்கு தமிழினத் துக்குத் தூக்கு!’ என்ற முழக்கத் தோடு தேர்தல் களத்திலே குதித் தது. இயக்கத்தின் தேர்தல் நிலைப்பாட்டை விளக்கும் துண்டறிக்கையைக் கையிலேந்தி காங்கிரசு போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோழர்கள் பரப்புரை மேற் கொண்டார்.

இப்பரப்புரை அவ்வளவு எளிதானதாக அமைந்திருக்க வில்லை. காவல்துறையின் அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டி இருந்தது; திமுக குண்டர்களின் தாக்குதலையும் சந்திக்க நேரிட்டது. ஆனால் எதிர்பார்த்ததிலும் கூடுதலாகக் கிடைத்த மக்களின் பேராதரவு அனைத்து அடக்குமுறைகளை யும் தாக்குதல்களையும் முறியடித் துப் பரப்புரையை வெற்றியுடன் நிறைவு செய்ய உதவியது.

காங்கிரசு போட்டியிட்ட ஈரோடு, திருப்பூர் தொகுதிகளில் இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு உரையாற்றிய பொதுக் கூட்டங்களோடு பரப்புரை தொடங்கியது. ஈரோடு, குமாரபாளையம், திருப்பூர் ஆகிய நகரங்களில் நடைபெற்ற தேர்தல் நிலை விளக்கப் பொதுக் கூட்டங்களில் பெருவாரியான மக்கள் கலந்து கொண்டு தோழரின் பேச்சைச் செவிமடுத்தனர். திருப்பூர் கூட்டத்தில் தோழர் பேச்சின் இடையே மழை குறுக்கிட்ட போதும் கூட்டம் கலையாமல் கடைகளில் ஒதுங்கி நின்று இறுதிவரை பேச்சைக் கேட்டது. பொதுக்கூட்ட மேடைக்கு நேரெதிரில் அமைந்திருந்த காங்கிரசுத் தேர்தல் பணிமனை யில் அமர்ந்திருந்தோரும் தோழரின் பேச்சைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர். எந்தச் சலசலப்பும் இன்றி அவர்கள் அமைதியாகக் கேட்டது பேச்சில் தெறித்த உண்மையின் சூட்டை உணர்ந்து கொண்ட தையே காட்டியது.

இம்மூன்று கூட்டங்களுக்கும் காவல்துறை தொடக்கத்தில் இசைவளிக்கவில்லை என்பதை இங்குக் குறிப்பிட்டாக வேண் டும். தொடர்ந்து தோழர்கள் இடைவிடாது போராடிய தின் விளைவாகவே இக்கூட்டங் களை நடத்த முடிந்தது. அதிலும் குறிப்பாகக் குமார பாளையம் கூட்டத்திற்கு இறுதி வரை இசைவு மறுக்கப்பட்டது. தோழர் ஆறுமுகம் சளைக்காமல் நாமக்கல் மாவட்ட ஆட்சியரை யும் குமாரபாளையம் காவல் துறை துணைக் கண்காணிப்பாள ரையும் மாறி மாறிச் சந்தித்துப் போராடிக் கூட்டத்தை நடத்திக் காட்டினார்.

ஈரோட்டுக் கூட்டம் தமிழகத் தொழிலாளர் முன்னணியின் மே நாள் கூட்டமாகத்தான் அறிவிக்கப்பட்டது. முதலில் பேரணிக்கு இசைவு மறுத்த காவல்துறை பின்னர் கூட்டத்திற் கும் இசைவு மறுத்தது. மூத்த வழக்குரைஞரும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தோழருமான ப.பா. மோகன் அவர்களின் துணையோடு காவல்துறையின் இசைவு மறுப்பை முறியடித்து ஈரோட்டுத் தோழர்கள் கூட்டத்தை வெற்றி யுடன் நடத்திக் காட்டினர்.

திருப்பூர்க் கூட்டத்திற்குத் தொடக்கத்தில் கேட்ட நாளும் (03.05.09) கேட்ட இடமும் (அரிசிக் கடை வீதி) மறுக்கப் பட்டது. ‘மாண்புமிகு’ அமைச் சர் வாசனின் வருகையும் சட்ட ஒழுங்கும் மறுப்பிற்கான காரணங்களாய்க் கூறப்பட்டன. பின்னர் கேட்ட நாளும் (04.05.09) இடமும் (அரிசி கடை வீதி) விடுதலைச் சிறுத்தைகளுக்கு வழங்கப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மாற்று இடம் (வெள்ளியங்காடு) கோரிய வுடன் ஈரோட்டுக் கூட்டத்திற்கு இசைவளிக்கப்பட்டால் திருப் பூரிலும் அளிக்கப்படும் என உறுதி கூறப்பட்டது. ஈரோட்டுக் கூட்ட இசைவு மடல் படியைக் கையளித்த பின்னர்தான் திருப்பூரில் இசைவு வழங்கப் பட்டது. திருப்பூர்க் கூட்ட வெற்றிக்கு ஈரோட்டுத் தோழர் களுக்கே நன்றி சொல்ல வேண்டும்.

துண்டறிக்கை பரப்புரையைத் தொடங்குவதற்கு முன்னர் திருப்பூரில் தோழர் தியாகுவின் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சியின் தமிழ்நாடு அமைப் பாளர் பழ. இரகுபதி தலைமை யில் அக்கட்சித் தோழர்களும், தென்மொழி அன்பர் தமிழப்பன் தலைமையில் தமிழின உணர் வாளர்களும் கலந்து கொண்ட னர். கூட்ட இறுதியில் தமிழப் பன் தலைமையில் ஒரு குழுவும், பழ. இரகுபதி தலைமையில் இன் னொரு குழுவும், வேலிறையன் தலைமையில் மற்றொரு குழுவும் அமைக்கப்பட்டன. ஒட்டு மொத்த ஒருங்கிணைப்பாளராக வேலிறையன் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

பழ. இரகுபதியின் தலைமை யிலான குழு திண்டுக்கல் தொகுதியில் பரப்புரை செய்வ தெனவும் தமிழப்பன் தலைமையி லான குழு கோவைத் தொகுதி யில் சிங்காநல்லூர், சூலூர், சோமனூர், கருமத்தம்பட்டி ஆகிய ஊர்களிலும், ஈரோட்டுத் தொகுதியில் நத்தக்கடையூர், அநிச்சலூர், சென்னிமலை ஆகிய இடங்களிலும், திருப்பூர்த் தொகுதியில் காங்கேயத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும் பரப்புரை மேற்கொள்வதெனவும் வேலிறையன் தலைமையிலான குழு தாராபுரம் சட்டமன்றத் தொகுதி முழுவதும் பொறுப் பேற்றுக் கொள்வதெனவும், தீர்மானிக்கப்பட்டது.

அடுத்த நாள் காலையில் (06.05.09) சென்னையிலிருந்து வந்த ஆறுமுகம், கொலைவாள் சசி, மன்னை முத்துக்குமார் ஆகிய தோழர்கள் எங்களுடன் இணைந்து கொண்டனர். இவர்கள் ‘உலகத் தமிழ் மக்கள் அரங்கம்’ என்ற இணைய வழி (ஆர்குட் - ஞழ்ந்ன்ற்) உருவான அமைப்பைச் சேர்ந்தவர்கள். பரப்புரையில் இவர்களின் பங்கு பாராட்டக் கூடியதாய் இருந்தது.

உ.த.ம.அ தோழர்கள் வருகை யாலும், பாரதிராசா, சீமான் குழு வினரின் பரப்புரைப் பயணத்தை ஒட்டியும் எங்கள் பரப்புரைத் திட்டத்தில் சிறு மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டோம். பழ. இரகுபதி தலைமையிலான குழுவும் (கார்த்திக், இலெனின்), வேலிறையன் தலைமையிலான குழுவும் (அருள்செல்வன், எழில்) ‘உ.த.ம.’அத் தோழர்களும் ஒரே அணியாக முதலில் தாராபுரத்தில் நடைபெறவுள்ள சீமான் கூட்டத் திற்குச் செல்வதெனத் தீர்மானித்து இரு மகிழுந்துகளில் புறப்பட்டு அங்கு சென்றோம்.

பெருந்திரளான மக்கள் கூட்டம் தாராபுரத்தில் எங்களை வரவேற்றது. தோழர்கள் உடனே துண்டறிக்கைகளை வழங்கத் தொடங்கினர். எழிலும், அரு ளும் ‘தமிழ்த்தேசம்’ இதழ்களை யும் கையிலேந்திச் சென்றனர். கூட்டத்தினரிடையே வழங்கிய துடன், சாலையின் இருபுறமும் அமைந் திருந்த கடைகளுக்கும் சென்று தோழர்கள் துண்டறிக்கை வழங்கினர்.

குறைந்த நேரத்தில் மூவாயிரத் திற்கு மேற்பட்ட துண்டறிக்கை கள் மக்கள் கைகளைச் சென்ற டைந்தன. அறுபது இதழ்கள் விற்பனையாயின. கூட்ட அமைப்பாளர்கள் பழ. இரகுபதி யையும் வேலிறையனையும் பேச அழைக்க, அவர்கள் பேச்சை மக்கள் கைதட்டி வரவேற்றனர்.

அங்கிருந்து ஓட்டன்சத்திரம் அருகிலுள்ள தேவத்தூரில் வாழ்ந்து வரும் பழம்பெரும் சுயமரியாதைப் போராளி நாச்சிமுத்து அய்யா அவர்களைச் சந்திக்கப் புறப்பட்டோம். திண்டுக்கல் மாவட்டத்தில் குறிப்பாக ஒட்டன்சத்திரம், பழனி வட்டங்களில் திராவிட இயக்கத்தைக் கட்டி எழுப்பியவர் அய்யா அவர்களே. அப்பகுதியி லிருந்து சென்று இன்று அரசியலி லும் அரசுப் பதவிகளிலும் உயர் நிலையில் இருக்கும் பலர் அவர் நிழலிலும் வழிகாட்டுதலிலும் வளர்ந்தவர்களே! மாற்றாரும் மதித்து வணங்கும் பண்பாளர் பெரியார் அண்ணா ஆகிய இரு வரின் அன்புக்கும் அரவணைப் பிற்கும் உரியவராகத் திகழ்ந்தவர். அப்பகுதியில் அவரை அறியாத வர் யாரும் இலர்.

இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த அய்யா, கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு பதவிப் பித்தில் பண வெறி கொண்டு திமுக அலையத் தொடங்கியவுடன் அதனை விட்டு விலகி, தாம் உருவாக்கிய மணிமேகலை இளங்கோ உயர்நிலைப் பள்ளி யுடன் (இப்பொழுது மேனிலைப் பள்ளி) தம்மை முழுமையாகப் பிணைத்துக் கொண்டு, பள்ளி வளாகத்திற்குள்ளேயே மாணவர் விடுதி அருகில் தம் சிறு இல்லத்தில் வசித்து வருகிறார்.

இத்தனை ஆண்டுகளாக அரசியலிலிருந்து விலகி இருந்த அய்யாவை ஈழச் சிக்கல் மீண்டும் அரசியலுக்குக் கொண்டு வந்தது. மொழி இன உணர்வு மிக்க அவரால் ஈழத்தில் சொந்தத் தமிழ் உறவுகள் கொல்லப்படுவதையும் அவ்வினப் படுகொலைக்குக் காரணமான கருணாநிதியின் இரண்டகத்தையும் பார்த்துக் கொண்டு வாளாவிருக்க முடியவில்லை.

ஒட்டன்சத்திரத்தில் நெடு மாறன் அய்யா கூட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்ட போது தெருவில் இறங்கி அத்தடையை உடைத்தெறிந்தவர். அகவை 85 தாண்டிய நாச்சிமுத்து அய்யா, அன்று... தாம் வளர்த்த தி.மு.க.வின் இரண்டகத்தை விளக்கி ஒரு மணி நேரம் உணர்ச்சி உரை ஆற்றினாராம். நாங்கள் அவரைச் சந்தித்த பொழுதும் அதே உணர்வோடு தான் எங்களோடு உரை யாடினார். அவரும் ‘காங்கிரசைத் தோற்கடியுங்கள்’ என்ற முழக்கத்தோடு துண்டறிக்கை வெளியிட்டிருந்தார். அத் துண்டறிக்கையையும் நம் துண்டறிக்கையோடு சேர்த்து வழங்க அவரிடமிருந்து பெற்றுக் கொண்டோம். பள்ளியையும் சுற்றிப் பார்த்துவிட்டு அவருடன் சேர்ந்து ஒளிப்படமும் எடுத்துக் கொண்டு அவரிடம் விடை பெற்றுப் புறப்பட்டோம். அவருடைய சந்திப்பு எங்களுக்கு நல்ல ஊக்க மருந்தாக உற்சாகத் தையும் ஊக்கத்தையும் தந்தது.

தேவத்தூரிலிருந்து கிளம்பிய நாங்கள் இரு அணிகளாகப் பிரிந் தோம். பழ. இரகுபதி தலைமையி லான அணி பொருளூரை நோக்கிச் சென்றது. வேலிறை யன் தலைமையிலான அணி வாகரையில் பரப்புரை செய்து விட்டுத் தொப்பம்பட்டியைச் சென்றடைந்தது. அவ்வூரிலும் துண்டறிக்கைகள் வழங்கிவிட்டு, பழ. இரகுபதி அணிக்காக காத் திருந்த பொழுதுதான் அவ ருடைய மகிழுந்து பொருளூரில் தி.மு.க குண்டர்களால் வழி மறிக்கப்பட்டதாகச் செய்தி வந்தது. தி.மு.க. குண்டர்கள் நாச்சிமுத்து அய்யாவைப் பற்றி இழிவாகத் தூற்றியதோடு நில்லாமல், அவர் துண்டறிக்கை களைப் பறித்து தீயிட்டும் கொளுத்தியுள்ளனர். இரகுபதி யின் வண்டித் திறவைப் பிடுங்கிக் கொண்டு மகிழுந்தையும் தீயிட்டுக் கொளுத்துவதாக மிரட்டியிருக்கின்றனர். அதற்குள் இச்செய்தி ஒட்டன்சத்திரம் பகுதி முழுவதும் செல்பேசி வழியாக விரைந்து பரவியது. இந் நிகழ்வுக்குப் பின்னணியாக இருந்த ஒட்டன்சத்திரம் ச.ம. உறுப்பினரும் சட்டமன்றக் கொறடாவுமான சக்கரபாணி யின் கைத்தடியும் தொப்பம் பட்டி ஒன்றியத் தலைவருமான இராசாமாணிக்கு அழுத்தங்கள் மிகவே, குண்டர்களை உடனடி யாக அவ்விடத்திலிருந்து விலக்கிக் கொண்டார். பழ. இரகுபதியும் தோழர்களும் காப்பாகத் தொப்பம்பட்டி வந்து சேர்ந்தனர்.

அதன் பின்னர் தாராபுரத்தை அடுத்த ஓரிடத்தில் அனைவரும் கூடி, காவல்துறைக்கு செல்பேசி வழியாக முறையீடு செய்தோம். பழ. இரகுபதி ஏற்கெனவே வகுத்திருந்த திட்டத்தை மாற்றிக் கொண்டு இனி முழுமையாக ஒட்டன்சத்திரம் தொகுதி யிலேயே கவனம் செலுத்துவ தென உறுதி பூண்டார். இராசாமணியை ஒட்டன்சத்திரப் பகுதியில் எந்த ஊருக்குள்ளும் நுழையவிடப் போவதில்லை எனச் சூளுரைத்தார். சொன்ன வாரே அடுத்தநாள் விடியற் காலையிலேயே தம் ஊரான போலரப்பட்டிக்குத் தம் அணி யினருடன் புறப்பட்டுச் சென் றார்.

அன்றே நூற்றுக்கணக்கான தம் தோழர்களைத் திரட்டிக் கொண்டு அதே பொருளூருக்குச் சென்று ஒலி பெருக்கி வழியாக அறிவிப்புச் செய்து எந்த எதிர்ப் பும் இல்லாமல் துண்டறிக்கை வழங்கியுள்ளார் பழ. இரகுபதி. தி.மு.க. குண்டர்களின் தலைகள் தென்படவே இல்லையாம். அடுத்தநாள் தேவத்தூர் வழி யாகச் சென்ற இராசாமணியை வழிமறித்த போது அவரே முன்வந்து நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டாராம். திண்டுக்கல் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பொழுதும் வாக்கு எண்ணிக்கையின் பொழுது ஒட்டன்சத்திரம் தொகுதியில் காங்கிரஸ் பின்தங்கியே இருந்தது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். இதற்கு நாச்சிமுத்து அய்யாவின் பங்களிப்பும் பழ. இரகுபதி அணியினரின் உழைப் பும் ஒரு காரணம் எனில் மிகை யாகாது.

பரப்புரையில் தென்மொழி அன்பர் தமிழப்பன் குழுவினரின் பங்கு மிகவும் சிறப்பானது. இக் குழுவில் தமிழன்பர்கள் தமிழ்ச் செல்வன், நிலா வேங்கடவன், அரசமாணிக்கம், சேகர், நாகராசு, மோகன் ஆகியோர் இடம் பெற்ற னர். இக்குழுவினர் பரப்புரை தொடங்கிய முதல் நாளே (06.05.09) இத்தோழர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற் பட்ட துண்டறிக்கைகளைக் கோவைத் தொகுதி சோமனூர்ப் பகுதியில் வழங்கினர். அடுத்த நாள் திருப்பூர் தொடங்கி காங்கேயம், நத்தக்காடையூர், அரச்சலூர் ஆகிய ஊர்களில் துண்டறிக்கை வழங்கி விட்டு பெருமாநல்லூர் சந்தையில் பரப்புரை செய்தனர். அன்று மட்டும் நாலாயிரத்துக்கு மேற்பட்ட துண்டறிக்கைகளை வழங்கினர். அடுத்த நாள் சூலூர், சிங்காநல்லூர் பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற் பட்ட துண்டறிக்கைகள் வழங்கி யுள்ளனர். இவர்களின் பரப் புரை எந்த வகை இடையூறும் இன்றி நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு நாள் இறுதியிலும் தம் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட பொழுது அவர்களிடம் மகிழ்வூக்கம் நிறைந்து வழிந்ததைக் காண முடிந்தது. துண்டறிக்கைகளைப் பரப்பிய தோடு நில்லாமல் பரப்புரைச் செலவிற்காக இக்குழு உரூ.5,000/- மனம் உவந்து வழங்கியதையும் இங்கு நன்றியுடன் குறிப்பிட்டாக வேண்டும்.

08.05.09 அன்று மீண்டும் பரப்புரைத் தொடங்கிய வேலிறையன் தலைமையிலான குழுவுடன் ஈரோட்டிலிருந்து தோழர் சரவணனும், தம் மகிழுந்துடன் இராசு சாமிநாத னும் இணைந்து கொண்டனர். இக்குழுவின் பயணம் திருப்பூரி லிருந்து தொடங்கி பொங்கலூர், கொடுவாய், தாராபுரம் வழியாக வேலிறையன் சொந்த ஊரான வீரப்ப கவுண்டன்வலசை சென்றடைந்தது. வழிநெடுக உள்ள எல்லாச் சிற்றூர்களிலும் துண்டறிக்கை வழங்கப்பட்டது. தாராபுரத்தை அடுத்துள்ள கொளுஞ்சாவடி, கொளத்துப் பாளையம், கரையூர், சாளரப் பட்டி (காங்கிரஸ் வேட்பாளர் கார்வேந்தனின் சொந்த ஊர்), சின்னக்காம்பட்டி, போளரை, பேரணாய்க்கன்வலசு, வெள்ள வாவிப் புதூர் இப்படி வழிநெடுக இருந்த அனைத்துச் சிற்றூர் களிலும் ஆவலுடன் மக்கள் துண்டறிக்கையை வாங்கிப் படித்துப் பாராட்டினர். ஒரு சில இடங்களில் கூடுதலாகத் துண்டறிக்கைகளை வாங்கித் தாமே பரப்புரை செய்வதாகவும் கூறி வாழ்த்திச் சென்றனர். அலுப்பு சலிப்பின்றி அந்நாள் முழுவதும் வண்டி ஓட்டி வந்த இராசு அன்றிரவே திருப்பூர் திரும்பி விட்டார். இப்பயணத் தில் அவருடைய பங்கு பாராட்டுக்குரியது.

அடுத்த நாள் காலையில் ஏற் கெனவே உறுதி அளித்திருந்தபடி ஏரிசினம்பாளையம் அப்புக் குட்டி பழனிச்சாமி பரப்புரைக் கான ஊர்தியை அனுப்பியிருந் தார். அன்றைய பயணத்தில் வி.கு. செல்வராசு என்ற உள்ளூர்க்காரரும் இணைந்து கொண்டார். பரப்புரை கன்னி மாக்காட்டுப்புதூர், சேசையம் பாளையம், இளாங்குண்டல், புளியம்பட்டி, கன்னிவாடி, காதக்கோட்டை ஆகிய ஊர் களின் வழியாக மூலனூரைச் சென்றடைந்தது. மூலனூரிலும் பரவலாகத் துண்டறிக்கை வழங்கப்பட்டது. அங்கிருந்து புறப்பட்ட குழு அக்கரைப் பாளையம் இலக்கநாயக்கன் பட்டி, தாசநாயக்கன்பட்டி ஆகிய ஊர்களில் துண்டறிக்கை களை வழங்கியவாறு வெள்ளக் கோவிலைச் சென்றடைந்தது. வெள்ளக்கோவிலில் நண்பகல் உணவை முடித்துக் கொண்ட குழுவினர் சிறு ஓய்வும் எடுக்காமல் துண்டறிக்கை வழங்கத் தொடங்கினர். அன்று வெள்ளக்கோவில் சந்தை கூடும் நாளாக இருந்ததால் கூடுதலாகத் துண்டறிக்கை வழங்குவதற்கும் சுற்றியுள்ள ஊர் மக்களிடம் நம் வேண்டுகோள் சென்றடைவதற் கும் ஏதுவாக அமைந்தது.

வெள்ளக்கோவிலில் துண் டறிக்கை வழங்கிய பின்னரும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட துண்டறிக்கைகள் எஞ்சியிருந்த தால் காங்கேயத்தினை நோக்கிப் பயணம் மேற்கொண்டோம். காங்கேயம் பேருந்து நிலையத் திலும் அதனை ஒட்டியுள்ள தெருக்களிலும் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகத் தோழர்கள் துண்டறிக்கை வழங்கி விட்டு, ஏரசினம்பாளையம் நோக்கிப் பயணப்பட்டோம்.

ஏரசினம்பாளையத்துக்கு முன்பே அமராவதி ஆற்றை ஒட்டியவாறு புதுப்பை என்ற ஊர் அமைந்துள்ளது. அவ்வூர் சிற்றூர் என்றாலும் வெள்ளக் கோவில் மூலனூர் பாதையில் அமைந்திருப்பதால் வெளியூர் செல்வதற்காக அங்கு திரளாக மக்கள் கூடுவதுண்டு. எனவே அவ்வூரில் தோழர்கள் கீழே இறங்கித் துண்டறிக்கைகள் வழங்கினர். வழங்கி முடித்துத் தோழர் அருள் வண்டியை நோக்கி வந்து கொண்டிருந்த நிலையில் ஒருவர் அவரை வழிமறித்து வம்பிழுக்கத் தொடங்கினார். இதனைக் கண் ணுற்ற வேலிறையன் தோழரை உடனே வண்டிக்குத் திரும்பும் படி அழைத்தார். அருளும் சச் சரவை வளர்த்துக் கொள்ளாமல் வண்டிக்குத் திரும்பி விட்டார். சரவணனும் விரைந்து வண்டியை நோக்கி வந்து கொண்டிருந்தார். இதற்கிடையில் வண்டியருகே வந்த ஒருவர் வண்டிக்குள் இருந்த தமிழ்த்தேசம் இதழை எடுத்து படிக்கத் தொடங்கினார். குழு புறப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடனேயே அவர் படிப்பதைப் போல் பாவனை செய்தார் என்பதைப் பின்னரே புரிந்து கொள்ள முடிந்தது. சற்று நேரத்துக்குள் இருபதுக்கு மேற்பட்டோர் வண்டியைச் சூழ்ந்து கொண்டனர். ஒவ்வொருவரும் வாயில் வந்த படி வசவு மொழிகளை உதிர்க்கத் தொடங்கினர்.

“கலைஞரைக் காட்டிலும் யாரடா தமிழரைக் காப்பாற்ற உள்ளனர்?” என்று கத்தியவாறு வேலிறையனைச் சூழ்ந்து கொண்டனர். இதைப் பார்த்த அருளும் சரவணனும் வண்டியை விட்டு இறங்கி விட்டனர். அப்பொழுது வேலிறையன் கழுத்தை நெறிப்பது போல் வந்த ஒருவன் அவரைப் பின்னே தள்ள, வேறு சிலர் அவரை முன்னே தள்ள, அவர் வண்டிக்குள் தொப்பென்று விழுந்தார்.

அதே சமயம் யாரோ ஒருவன் வண்டிக்குள் இருந்த தமிழ்த் தேசம் இதழ் மூட்டையை வெளியே இழுத்துப் போட்டு விட்டான். வண்டிக்குப் பின் னால் இருந்த ஒருவன் உருட்டுக் கம்பியால் தாக்க வண்டியின் பின் கண்ணாடி சுக்குநூறாய் உடைந் தது. ஓட்டுநர் கண்ணிமைக்கும் நேரத்தில் வண்டியைக் கிளப்பி அமராவதி ஆற்றுப் பாலத்தைக் கடந்து வண்டியை நிறுத்தினார். அருளும் சரவணனும் வண்டியில் இல்லை.

பதறிப்போன வேலிறையன் உடனே ஏரசினம்பாளையத்தி லிருந்த உறவினர்களுடன் தொடர்பு கொண்டார். அப்படியே ஈரோடு மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தியின் உதவியாளர் இரவிக்கும், பழ. இரகுபதிக்கும் செய்தி அனுப்பி னார். இதற்கிடையில் ஓட்டுநர் அச்சமடைந்து வண்டியைக் கிளப்பிக் கொண்டு சென்று விட்டார்.

தனியாக நின்றிருந்த வேலிறையனுக்குப் பதற்றமும் தவிப்புமாய் இருந்தது. சற்று நேரத்தில் தோழர் சரவணன் அவரை நோக்கி வந்தது, சிறிது மனத்தெம்பை அளித்தது. உறவினர்களும் மதிமுக. தொண் டர்களும் வந்து குவியத் தொடங் கினர். அருளும் சிபி என்ற மளிகைக் கடைக்குள் காப்பாக இருப்பதாக செல்பேசிச் செய்தி வந்தது. தனியாகத் தடுமாறிக் கொண்டிருந்த அருளைக் கடைக்குள் இருந்த பெண்மணி ஒருவர் உள்ளே அழைத்து அமரச் செய்திருக்கிறார். அவருக்கு நன்றி கூறவேண்டும்.

மதிமுக தொண்டர்களும் மற்றவர்களும் நிகழ்விடத்துக்கு வந்து சேருமுன்னரே தி.மு.க. குண்டர்கள் தமிழ்த் தேசம் இதழ் கட்டுக்குத் தீ வைத்து விட்டு ஓடி விட்டனர். பின்னர் வேலிறை யன் குழுவினரை மதிமுக தொண்டர்கள் அப்பகுதி மதிமுக தலைவர் மு. கந்தசாமி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். தி.மு.க.வைச் சேர்ந்த புதுப்பை ஊராட்சி ஒன்றியத் தலைவர் பாலசுப்ரமணியன்தான் தாக்கு தலை முன்னின்று நடத்தியவன் என்று தெரிய வந்தது. அவன் அப்பகுதி ஆற்று மணல் திருடன் என்றும், அமைச்சர் சாமிநாதனின் பினாமி என்றும், அவனுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் கூடியிருந்த மக்கள் கூறினர்.

அப்பொழுது நிகழ்விடத் திற்குக் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் வந்திருப்ப தாகவும் வேலிறையனை அழைத்துவரும்படி செய்தி வந்தது. உடனே அவரைப் பார்க்க அனைவரும் கிளம்பினர். அவர் முதலில் முரட்டுத்தன மாகப் பேசினாலும், வேலிறைய னின் உறுதியான மறுமொழிக்குப் பின் இறங்கி வரலானார். “கட்சிக்காரர்களுக்கு எப்படித் தங்கள் கட்சிக்கு வாக்குக் கேட்கும் உரிமை உள்ளதோ, அதே போல் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க வேண்டாம் என்றோ காங்கிரசைத் தோற்கடியுங்கள் என்றோ கேட்க எங்களுக்கு முழு உரிமை உண்டு” என்றும், “தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் துண்டறிக்கை முழுமையான தொடர்பு முகவரியுடன் சட்டப் படியானது” என்றும் வேலிறை யன் விளக்கிச் சொன்னார்.

தேர்தலுக்கு ஒரே நாள் இடை வெளி இருப்பதால் சிக்கலாக்க வேண்டாம் என்று துணைக் கண்காணிப்பாளர் கேட்டுக் கொண்டார்.

இரவு ஏரசினம்பாளையத்தில் வேலிறையன் குழுவினரைச் சந்தித்த மதிமுக தொண்டர்கள் அடுத்த நாள் தாம் அதே ஊரில் வழங்குவதாகக் கூறித் துண் டறிக்கைகளைப் பெற்றுச் சென்றனர். அவ்வாறே அடுத்த நாள் வழங்கவும் செய்தனர்.

திருப்பூர் பரப்புரைக் குழுவைத் தவிர ஈரோடு தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தினரும், குமாரபாளையம் (நாமக்கல் மாவட்டம்) தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தினரும் துண்டறிக்கைப் பரப்புரையைச் சிறப்பாகச் செய்துள்ளனர். குமாரபாளையத்தில் தோழர் ஆறுமுகத்துடன் சென்னைத் தோழர்கள் இராஜி, சத்தீஸ்குமார் ஆகியோர் இணைந்து கொண்டனர். அவர்கள் பரப்புரை செய்த பொழுது ஆளும் கட்சியினரின் தூண்டுதலின் பேரில் காவல்துறையினர் அவர்களைத் தளைப் படுத்தியதை இங்கு குறிப்பிட வேண்டும். அந்தச் சமயத்தில் நூற்றுக்கணக்கான திமுக குண்டர்கள் காவல்நிலையத்துக்கு முன்னர் கூடி நின்று உள்ளிருந்த தோழர்களை மிரட்டவும் செய்தனர். உரிய நேரத்தில் வழக்கறிஞர் தோழர் ப.பா. மோகன் காவல்நிலையத்திற்கே வந்து சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொண்ட காவலர்களை எச்சரித்து தோழர்கள் விடுதலைக்கு துணை நின்றார். ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி அவர்களும் காவல் நிலையத்துக்கு நேரடியாக தொடர்பு கொண்டு எச்சரித்ததையும் குறிப்பிட வேண்டும். காவல்துறையின் மிரட்டலுக்கும் தி.மு.க. குண்டர்களின் அச்சுறுத்தலுக்கும் அஞ்சி ஒதுங் காமல் அடுத்த நாள் அனைத்து துண்டறிக்கை களையும் சனநாயக ஆற்றல்களுடன் இணைந்து வழங்கியது சிறப்புக்குரியது.

மேலே குறிப்பிட்ட ஒரு சில நிகழ்வுகளைத் தவிர ததேவிஇ துண்டறிக்கைக்கு மக்களிடையே பெரிய வரவேற்பு இருந்தது. தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் மக்களின் விருப்பத்தை முழுக்க எதிரொலித்ததாகக் கூறி விட முடியாது. ஆளும் கட்சியின் அதிகார வலிமை, பணவலிமை, அடியாள்களின் வலிமை எல்லாவற்றுக்கும் மேலான அரசு ஊழியர்களைப் பயன்படுத்தி செய்த முறைகேடுகள் ஆகியவை இத்தேர்தலின் முடிவை பெருமளவு தீர்மானித்து உள்ளன. இதற்கு இடையிலும் நாம் குறி வைத்து பணியாற்றிய இடங்களில் காங்கிரசை தோற்கடித்துள்ளோம். முத்துக்குமார் யார் என்று திமிரோடு கேட்ட இ.வி.கே.எஸ். இளங்கோவன் காணாமல் போயுள்ளார். தமிழின துரோகி தங்கபாலுவுக்கு தக்க பாடம் வழங்கப்பட்டுள்ளது. பெரும் முதலாளி பிரபு மண்ணைக் கவ்வியுள்ளார். சிதம்பரத்தின் வெற்றி சிதம்பர ரகசியமாகவே உள்ளது.

ஈழம் தமிழக மக்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களிட மும் இளைஞர்களிடமும் இதுவரை காணாத பேரெழுச்சி தோன்றியுள்ளது. தேர்தல் வெற்றிக் களிப்பில் மிதக்கும் ஆளும் கட்சிகளும் இவ் வுண்மையை உணர்ந்தே உள்ளன. அதனால் நம் மீது கடும் அடக்குமுறைகளை ஏவிவிடுகின்றன. தமிழ்த் தேசிய ஆற்றல்கள் இவ்வெழுச்சியை ஒருமுகப்படுத்தி சரியான திசை வழியை செலுத்தும் பொழுது இங்கே தமிழ்த்தேசம் மலரும். அங்கே தமிழீழமும் மலரும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com