Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
டிசம்பர் 2008
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

- மனோ கணேசன் செவ்வி

தென்னிலங்கைத் தமிழர்களின் அரசியல் இயக்கமாகிய "மேலக மக்கள் முன்னணி'யின் தலைவர் கொழும்பு மாவட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் செவ்வி
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

சென்ற இதழ் தொடர்ச்சி...

இலங்கையில் உள்ள வர்க்க முரண்பாடுகள், போராட்டங்கள் பற்றிச் சொல்லுங்கள்...

ஒருபுறம் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் தமிழராய் இருக்கும் அதே வேளையில் மறுபுறம் தொழிலாளர்களாக, வர்க்க குணாம்சம் கொண்டவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். முதல் இலங்கை நாடாளு மன்றத்திலே ஏறக்குறைய எட்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள் என்று சொன்னேன். எட்டுத் தொகுதியில் நமது மக்கள் பெரும்பான்மையினராக இருந்த காரணத்தினாலே தெவு செய்யப்பட்டார்கள். மற்ற தொகுதிகளிலே சிறுபான்மையினராக வாழ்ந்தாலும் கூட கணிசமானவர்கள் இருக்கிறார்கள் என்ற காரணத்தினாலே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் தகுதி நம்மவர்களுக்கு இருந்தது.

அந்த இடங்களிலெல்லாம் இலங்கையின் இடதுசாத் தலைவர்களுக்குத்தான் வாக்களித்தோம். அதாவது இடதுசாரித் தன்மை கொண்ட வர்க்க உணர்வு எங்களுக்கு இருந்தது. இதையும் கண்டு இலங்கை அரசாங்கம் அஞ்சியது. பித்தானியர்கள் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளை விட்டுப் போகும்போது அவர்களுக்கு ஆதரவானவர்களைத்தான் பதவியில் வைத்துவிட்டுச் சென்றார்கள். ஆகவே அப்படியான, ஆங்கிலேயர்களின் வாரிசாக புதிய ஆட்சியை ஏற்றுக் கொண்டவர்கள், முதலாளித்துவச் சிந்தனை கொண்டவர்களாக, தொழிலாளர்களுக்கு எதிரான சிந்தனை கொண்டவர்களாகத்தான் இருந்தார்கள். முதலில் ஆட்சிக்கு வந்தது ஐக்கிய தேசியக் கட்சி. தலைமையமைச்சராக சேனநாயக்கா இருந்தார்.
தமிழர்கள் என்ற முறையிலே மட்டுமல்லாமல் தொழிலாளர்கள் என்ற முறையிலேயும் எங்கள் மக்களுக்கு வாக்குரிமை பறிப்பு போன்றவை இருந்தது. ஆனாலும் கூட இலங்கையிலே இன்று இருக்கக்கூடிய பல்வேறு இடதுசாரி, மார்க்சிய, தொழிலாளி வர்க்கமாக அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய ஆற்றல்கள் கூட, மிகப் பெரிய தொழிலாளர் சமூகமாக இருக்கக்கூடிய மலையகத் தோட்டத்தொழிலாளர்கள் சிக்கலிலே பாரிய அக்கறை கொண்டு செயல்படுவதாகத் தெயவில்லை.

அனைவருமே சிங்களப் பேனவாத, பௌத்தவாத வெள்ளத்திலே மூழ்கிவிட்டார்கள். ஜே.வி.பி. என்ற கட்சி தன்னை இடதுசாச் சிந்தனை யுள்ள கட்சியாகச் சொல்லிக் கொள்கிறது. ஆனால் அது ஒரு அப்பட்டமான இனவாதக் கட்சி. அந்தக் கட்சி உருவாக்கத்தின் போது, நான்கு வகுப்புகள், அதாவது பாடங்களை நடத்தி னார்கள். நான்காவது பாடத் தலைப்பு என்னவென்றால் "இந்திய ஏகாதிபத்தியம்' என்பது தான். இந்திய ஏகாதிபத்தியத்தின் முகவர்களாகத் தமிழ்த் தோட் டத் தொழிலாளர்களைத்தான் அவர்கள் அடையாளம் காட்டி னார்கள். எனவே தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களை விரட்டிவிட வேண்டும் என்பது தான் அவர்கள் கட்சியில் போதிக்கப்பட்டப் பாடமாக இருந்தது. அந்தளவுக்கு நாங்கள் இந்திய ஏகாதிபத்தியத்தின் முகவர்களாக இருந்ததுமில்லை, இருக்கவுமில்லை. இந்தியா இதில் தலையிடாததுதான் மிச்சம்.

எப்போதெல்லாம் இந்தியா சிங்களக் கட்சிகளுக்கு நட்புறவு பாராட்ட வேண்டுமோ அப் பொழுது எங்களையும் மிஞ்சிச் சென்று நட்புறவு பாராட்டுவார் கள். நாங்களும் முன்னொரு காலத்தில் இந்தியாவிலிருந்து தானே சென்றோம். எங்களது முன்னோருக்கும் இந்தியா தானே.
இலங்கையில் இருக்கும் எல்லோருமே இந்தியாவிலிருந்து சென்றவர்கள்தான். ஆனால் காலகட்டம் வேறுபடுகிறது. நாங்கள் சமீபத்தில் சென்றிருக் கிறோம். எங்களையும் மிஞ்சி சிங்களர்கள் தங்களை இந்தியாவுடன் நெருக்கமானவர் களாகக் காட்டிக் கொள்கிறார் கள். குறிப்பாக, வட இந்தியர் களுக்கு நெருக்க மானவர்களாகக் காட்டிக்கொள்கிறார்கள். ஆனால் இந்தியா தங்களுக்கு விரோதமாக வருகிறது என்றால் உடனே இந்திய வம்சாவழித் தமிழர்கள் என்று எங்களை அடித்துத் துன்புறுத்திப் பாகுபாடு காட்டுவார்கள். இதன் மூலம் இந்தியாவிடம் உள்ள கோபத்தை எங்களிடம் தீர்த்துக் கொள்வார் கள். ஆகவே எங்கே போனாலும் படிக்கல்லாக இருந்து வரு கிறோம்.

தென் இலங்கைத் தமிழர் களின் இன்றைய அரசியல் தகுநிலை, வாழ்க்கை முறை, இலங்கையின் பொருளாதாரத்திற்கு அவர்களின் பங்கு போன்றவை பற்றிக் கூறுங்கள்?

இலங்கையிலே பல்வேறு பொருள்கள் ஏற்றுமதி செய்யப் படுகின்றன என்று சொன்னேன். தேயிலை, ரப்பர், காப்பி (குளம்பி), தைத்த ஆடைகள் மற்றும் சுற்றுலா - இந்தத் தொழில் துறைகள் மூலமாகத் தான் இலங்கைக்கு மிக அதிக மான அந்நியச் செலாவணி வருகிறது. சுற்றுலாத் துறையைப் பொறுத்த வரையில் இப்பொழுது அந்நியச் செலாவணி குறைந்து விட்டது. மத்திய கிழக்கு நாடு களில் சென்று தொழில் செய்பவர்களை பொறுத்தவரையில் அவர்களது வருமானம் வறிய நிலையிலே இருந்தாலும் கூட மத்திய கிழக்கிலே யுத்தம் ஏற்பட்டால் அவர்கள் மீண்டும் பாதியிலே திரும்ப வேண்டிய நிலை. ஆக பாய ஒரு நிலை யான வருமானம் இல்லை.

இலங்கையிலே நிலையான வருமானம் தருவது தேயிலைத் தோட்டம் மட்டுமே. ஆடைத் தொழிற்சாலை வருமானம் கூட பாய அளவில் இருந்தாலும் 100 ரூபாய் உங்களுக்கு அதில் கிடைக்குமானால் 75 ரூபாய் அதன் மூலப்பொருள் வாங்க செலவு செய்ய வேண்டும். அது உண்மையான வருமானமல்ல. முழுக்க முழுக்க இலங்கையில் உருவாக்கப்பட்டுத் தேசிய ஆக்கமாகக் கருதப்பட்டு, விலை பொருளாக ஏற்றுமதி செய்யப் படும் பொருள் என்றால் ஒன்று தேயிலை, இரண்டாவது ரப்பர். நினைத்துப் பாருங்கள், இன்று நேற்றல்ல, கடந்த இருநூறு ஆண்டுகளாக அப்படித்தான் இருக்கிறது. இன்னும் இருநூறு ஆண்டுகளுக்கு அப்படித்தான் இருக்கப் போகிறது என்று நினைக்கிறேன்.

புதிய வணிக உருவாக்க வாய்ப்பு அங்கு கிடையாது. ஆகவே எமது மக்கள்தான் தேயிலைத் தோட்டத் தொழி லிலே முதுகெலும்பாக இருக் கிறார்கள். ஆனால், அந்த முதுகெலும்பு என்பது வளைந்து கேள்விக்குறியாக இருக்கிறது. உழைத்து உழைத்துக் குன்றிப் போய்விட்டார்கள். உழைக்கும் உழைப்புக்கு உய ஊதியம் கிடையாது. மிக அதிகமாக உழைத்துக் குறைவான ஊதியம் பெறும் அப்பாவிகளாக நமது மக்கள் அங்கு இருந்து கொண்டிருக்கிறார்கள். வர்த்தகத் துறையிலே நமது இனத்தவர்கள் பாரிய பங்களிப்பைப் பல்வேறு துன்ப துயரங்களுக்கு, அறைகூவல் களுக்கு நடுவிலே கூட முகம் கொடுத்துக் கொண்டு இருக் கிறார்கள்.

அங்கு துறைமுகம் போன்ற இடங்களுக்கு வந்து பார்த்தீர் களேயானால் எல்லாவற்றிலும் நமது கடைகளை நமது வியாபார நிலையங்களைத்தான் காண முடியும். அந்தளவுக்கு நமது மக்கள் உழைத்துக் கொண்டிருக் கிறார்கள். சிங்களவர்களைப் பொறுத்தவரையிலே அரசாங்கத் தொழிற்துறைகளில் அவர் களுக்குச் சலுகை காட்டப்படு கிறது. மிக அதிகமாக அரசாங் கத்தில் ஊழியர்களாக, தொழி லாளர்களாகப் பணியாற்றக் கூடியவர்கள் சிங்களவர்களாக இருக்கிறார்கள். தமிழர்கள் குறிப்பாக இந்திய வம்சாவழித் தமிழர்கள் கிடையாது. அந்தக் கதவு அம்மக்களுக்கு மூடப் பட்டிருக்கிறது. பல்கலைக் கழகங் களிலே, கல்வி நிலையங்களிலே எல்லாம் மூடப்பட்டிருக்கிறது. நமது மக்களுக்கு ஒரே ஒரு வழி தனியார் வணிகம்தான். அதில் நமது மக்கள் பாய அளவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

தமிழீழப் போராட்டம் தென்னிலங்கைத் தமிழர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் குறித்துச் சொல்லுங்கள்?

தமிழீழப் போராட்டம் இலங்கையிலே வாழ்ந்து கொண் டிருக்கும் அனைத்துத் தமிழர்கள் மீதும் தாக்கம் ஏற்படுத்தி யிருக்கிறது. அதில் மாற்றுக் கருத் தில்லை. நான் ஆரம்பத்திலேயே சொன்னேன், எல்லாத் தமிழர்களையும் பாகுபாட்டுடன் நடத்துவது, இன ஒடுக்கு முறைக்கு ஆளாக்குவதுதான் இலங்கை அரசாங்கத்தின் கொள்கை. இதில் வேறுபாடு கிடையாது. ஆகவே தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் என்பது அவர் களுக்கு உய தன்தீர்வு உரிமையை அடிப்படையாகக் கொண்ட உரிமையாகும். அதை நாங்கள் பிழை என்று கூற முடியாது. அதை விமர்சனம் செய்ய முடியாது. அது தவ றென்று சொல்வதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது.

ஒரு தேசிய இனம் இன்னொரு தேசிய இனத்துடன் இணைந்து கூட்டாக வாழ்வதா? இல்லையா? என்று தீர்மானிப்பது தான் தன் தீர்வுமை (சுயநிர்ணய உரிமை). நாங்கள் அதற்குத் தடைக் கற்களாக இருக்க முடியாது. அந்த அடிப்படையில் பார்க்கும்போது ஈழத்தில் விடுதலைப் போராட்டம் நடத்துவதில் முழு உரிமை அவர்களுக்கு இருக்கின்றது. இல்லை, ஒரே நாடாகத்தான் வாழ வேண்டும் என்று விரும்புவார்களேயானால் சிங்களத் தேசிய இனமும், தமிழ்த் தேசிய இனமும், அதைப் போல சிறுபான்மைத் தமிழ் முஸ்லீம் மக்களும் ஒரே இலங்கையாக வாழக்கூடிய சூழ்நிலையை, ஓர் இணக்கமான சூழ்நிலையை அதிகாரத்தைப் பரவலாக்கித் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்குவதன் மூலம் உருவாகிட வேண்டும். அப்படி உருவாகும் நேரத்தில் மட்டுமே அங்கே சமாதானம் தழைக்க முடியும், ஒரே நாடாக இலங்கை நீடிக்க முடியும். இல்லாவிட்டால் இலங்கை இராண்டாவதை எவராலும் தடுத்து விட முடியாது. இதற்கு நாளை வரலாறு பதில் சொல்லும் என்று நினைக்கின்றேன். உங்கள் வினாவிற்கு விடை என்ன வென்றால் அந்தப் போராட்டம் நிச்சயமாக எங்களது சிக்கலிலும் பாய விளைவுகளை ஏற்படுத்தி யிருக்கிறது.

நினைத்துப் பாருங்கள். ஒரு வேளை இலங்கைக்கு நாங்கள் பித்தானியர்களால் அழைத்துச் செல்லப்படாமல் குஜராத்திலிருந்தோ, மகாராஷ்டிரத்திலிருந்தோ, அசாமிலிருந்தோ, பீகாலிருந்தோ அழைத்துச் செல்லப்பட்டிருந்தால் நாங்கள் தமிழ் பேசியிருக்க மாட்டோம். மராத்தியோ, குஜராத்தியோ, இந்தியோ பேசியிருப்போம். மற்றபடி அந்த ஈழத் தமிழர் களுக்கும் எங்களுக்கும் பண் பாட்டு உணர்வு ஏற்பட்டிருக் காது. அந்தப் போராட்டத்தின் விளைவு எங்கள் மீது விழுந்திருக்காது.

ஆனால் உலகத்தில் எங்கே யுமே இப்படிப்பட்ட ஒரு நிலை இல்லை. ஒரு மாறுபட்ட நிலைமை. அங்கே ஒரு தேசிய இனம் ஒன்று இருக்கிறது. அதே மொழியை, பண்பாட்டைக் கொண்ட இனத்தைச் சார்ந்த இன்னொரு பிவினர், வேறு நாட்டிலிருந்து சிறுபான்மையின ராக கொண்டு வரப்படுகிறார்கள். இது ஒரு விசித்திரமான நிலைமை. ஆனால் உண்மை. ஆகவே அக்காரணத்தினாலேயே அந்தப் போராட்டத்தின் விளைவு எங்கள் மீது விழுந்து கொண்டிருக்கிறது. நாங்கள் சகித்துக் கொண்டுதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.

நீங்கள் தமிழீழப் போராட்டத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

நான் முன்பே சொல்லியிருக்கின்றேன். அதைத் தன் தீர்வு உரிமைக்கான (சுயநிர்ணய உரிமை) போராட்டமாகப் பார்க்கிறேன் என்று. ஈழத் தமிழர்கள் தனித் தேசிய இனம் என்று சொல்லும்போது அவர்களது தாயகம் இருக்கிறது. பண்டைய வரலாறு இருக்கிறது. ஒரு நிலப்பகுதி பெய அளவில் இருந்திருக்கிறது. பொருளாதார அடிப்படை இருந்திருக்கிறது. கலை, பண்பாடு இருந்திருக்கிறது.

இந்தக் கூறுகளெல்லாம் ஒரு தேசிய இனம் என்பதற்கான வரையறை, இலக்கணம் என்று நினைக்கிறேன். அந்த வரையறை இலக்கணத்தைப் பூர்த்தி செய்யக்கூடிய இனத்துக்கு தன் தீர்வுமை இருக்கின்றது. அதைப் பயன்படுத்துவதற்கும் அவர்களுக்கு உரிமையிருக் கின்றது. அதற்கானப் போராட்ட மாகத்தான் நான் அதைப் பார்க்கிறேன். நிச்சயமாக அந்தப் போராட்டம் தனி நாட்டுக்குத் தான் கொண்டுபோய் விட வேண்டும் என்று நான் சொல்ல வில்லை. தனி நாட்டைக் கொண்டு வந்து விடலாம். கொண்டுவராமல் சிங்கள இனத்துடன் இணக்கத்துடன் வாழக்கூடிய நிலைமையை உருவாக்கலாம். அது அதில் சம்பந்தப்பட்ட தேசிய இனங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் தன் தீர்வு மையைக் கொண்டுவரத்தான் போராட்டம்.

அதற்காக ஆயுதப் போராட்ட மாக இருக்க வேண்டும் என்று பொருள் கிடையாது, சனநாயகப் போராட்டமாகவும் இருக்கலாம், வேறுவழியிலான போராட்ட மாகவும் இருக்கலாம். அந்தப் போராட்டத்தைக் கொண்டு செல்லும் உரிமை அவர்களுக்கு இருக்கின்றது என்பதாகத்தான் நான் பார்க்கின்றேன். எனது கட்சி பார்க்கிறது.

தமிழீழப் போராட்டம் குறித்த உங்கள் அணுகுமுறை எவ்வாறு உள்ளது?

வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 23 பேர், பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் அதில் 22 பேர் தமிழ்த் தேசியப் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்கள் புலி களின் புரிந்துணர்வுடன் புலிகளின் அரசியல் பிரதிநிதி களாக வெளிப்படையாகச் செயல்பட்டுக் கொண்டிருக் கிறார்கள். இன்னொருவர் டக்ளஸ் தேவானந்தா, அவர் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கிறார்.

3 கட்சிகளைச் சார்ந்த 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் தென் இலங்கையிலே இருக் கிறார்கள். எனது கட்சியைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள். என்னைத் தவிர அனைவருமே மகிந்த ராசபட்சே அரசை ஆதப்பவர்களாக இருக்கிறார் கள்.
நான் ஒருவன்தான் எனது கட்சி சார்பாக எதிரணியில் இருக்கும் ரணில் விக்ரமசிங்கே கூட்டணியிலே இணைந்து செயல்பட்டுக் கொண்டி ருக்கிறேன். ஆகவே எங்கள் கட்சியைப் பொறுத்தவரையில் நாங்கள், புலிகள் கட்டுப் பாட்டிலோ அல்லது புலிகளுடன் இணைந்து செயல்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலோ இல்லை. அதே போல் மகிந்த ராசபட்சே அரசின் கட்டுப்பாட்டிலும் நாங்களில்லை. தனித்து முடிவு எடுத்துச் செயல்படக்கூடிய வாய்ப்பு எங்களுக்கு இருக்கிறது. அதுதான் எங்களுக்குய சிறப்புத் தன்மை என்று நினைக்கிறேன்.

ஆகவே இந்த அடிப்படையில் இருந்துகொண்டு தமிழர்களுக்கு எதிரான அனைத்து அடக்கு முறை ஒடுக்குமுறைகளையும் நாங்கள் எதிர்த்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். பாராளு மன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பாய போராட் டங்களை நடத்திக் கொண்டிருக் கிறோம். தலைமறைவுப் போராட்டங்களையும் நடத்தி யிருக்கிறோம். இதனால் எனக்குத் தனிப்பட்ட முறை யிலே உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இலங்கை அரசாங்கத்திடமிருந்தும் பாய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருக்கிறது. அதையெல்லாம் மீறி செயல்பட்டுக் கொண்டிருக் கிறோம். எங்கள் மக்களுக்கு நியாயம், நீதி கிடைத்திட வேண்டும் என்பதற்காக. வடக்கு, கிழக்கு மக்களின் போராட்டத்தில் இருக்கக்கூடிய நியாயத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் காரணத்தினால் தான் அந்த மக்களுக்கு எங்களால் இயன்ற தார்மீக ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தினால் தென் இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்கிறார்களே... அது குறித்துச் சொல்லுங்கள்?

தமிழீழ விடுதலைப் போராட்டம் இல்லாதபோதும் தான் நமது மக்கள் பாதிக்கப் பட்டார்கள். குடியுமை, வாக்குமை எல்லாம் காணாமற் போனது. பிறகு 1958ஆம் ஆண்டிலே ஒரு கலவரம் ஏற்பட்டது. அதன் பிறகு 1977ஆம் ஆண்டிலே ஒரு கல வரம் ஏற்பட்டது. இரண்டிலும் நமது மக்கள் பாதிக்கப்பட்டார் கள். 1960-70 அந்தப் பத்தாண்டு களில் பல்வேறு கலவரங்களிலே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து அடிமைகளாகக் கொத்தடிமைகளாக நடத்தப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஈழத் தமிழருடைய போராட்டம் வருவதற்கு முன்பிருந்தே பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தோம். ஆகவே அந்தப் போராட்டத்தினால்தான் பாதிக்கப்பட் டோம் என்று சொல்வது தமிழீழத்தின் அந்த விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்துவதற்காகச் சில அறியாத சிறுவர்கள் அல்லது அறிந்தும் அரசாங்கத்தின் கைப்பாவையாக இருப்பவர்கள் எடுத்துவிடும் கதை என்று நினைக்கிறேன். அதில் எனக்கு உடன்பாடு கிடை யாது. அது அப்பட்டமான பொய்!

இன்றைய இராசபட்சே அரசின் அணுகுமுறை எவ்வாறு உள்ளது?

இராசபட்சே புதும (நவீன) ட்லராக தென்னாசியாவிலே உருவாகிக் கொண்டிருக்கிறார். அரசியல் விடுதலை, பத்திகை விடுதலை, பொருளாதார விடுதலை, மத விடுதலை, கட்சி விடுதலை, சமூக விடுதலை இவை அனைத்தையும் படிப்படியாக மட்டுப்படுத்தி வருகிறார். அவர் முதலாளி, தமிழர்கள் தொழிலாளி எனும் கருத்து இப் பொழுது ஏனைய எதிர்கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர் களிடமும் இருந்து கொண்டிருக் கிறது. ஆக, ஒட்டுமொத்தமான சர்வாதிகார ஆட்சிமுறை, அந்த நோக்கில் அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இலங்கை வரலாற்றிலே பல்வேறு சிங்களத் தலைவர்களை நாங்கள் பார்த்திருக்கின்றோம். சேனநாயக, பண்டாரநாயக, சிறிமா பண்டாரநாயக்க, ஜே.ஆர். செயவர்த்தனா, பிரேம தாசா, சந்திகா பண்டாரநாயகா, ரணில் விக்ரமசிங்கே ஆகிய பலர் இலங்கையை ஆண்டிருக்கிறார் கள். ஆனால் இவர்கள் எவரது ஆட்சியிலும் நாங்கள் நிம்மதியாக வாழ்ந்ததாகச் சொல்ல முடியாது. ஆனாலும் கூட இவர்கள் எவரது ஆட்சியிலும் அனுபவித்திராத சொல்லொண்ணாக் கொடுமை களைச் சந்தித்து வருகிறோம். மகிந்த ராசபட்சே ஆட்சி என்பது தமிழர்கள் அனைவருக்கும் ஒரு காட்டாட்சி, கொடுங்கோலன் ஆட்சியே.

இப்பொழுது அங்கு கள நிலவரம் என்ன?

கள நிலவரத்தைப் பொறுத்த வரையில் வடக்கு கிழக்குப் பகுதி யில் பத்திகையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சர்வ தேசச் சமூகத்தின் பிரதிநிதிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இலங்கை இராணுவம் அனுப்பும் செய்திகளைத்தான் அனைத்துச் செய்தி நிறுவனங்களும் உலகத்துக்கு அறிவித்துக் கொண்டிருக்கின்றன. ஆகவே இன்று பல நிலப்பரப்புகளை இராணுவம் பிடித்து விட்டதாக இலங்கை அரசாங்கம் சொல் கிறது. புலிகளை முடக்கி விட்ட தாகவும் சொல்கிறார்கள். எந்தளவுக்கு அது உண்மை என்று எங்களுக்குத் தெயாது. இருந்தாலும் கூட அதனைப் பற்றி பெதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. காரணம் புலிகள் அடிப்படையிலே ஒரு கெல்லா அணியினர். அவர்கள் பின் வாங்கி முன்வந்து தாக்குவது இயல்பாக நடக்கக் கூடியது. இதை உலகத்தின் பல இடங் களில் பார்த்திருக்கின்றோம். புலி களின் வரலாற்றிலேயே கடந்த காலங்களில் பார்த்துள்ளோம்.

ஆகவே நிலங்களைப் பிடிப்ப தென்பது சிங்கள அரசாங்கத்துக் கான மரபு வழி வேலை. பிடித்த நிலங்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இலங்கை அரசாங்கம் சொல்வது உண்மை யாக இருந்தாலும் கூட இதன் மூலமாகப் புலிகளை அடக்கி விட லாம் என்று நான் நினைக்க வில்லை.
இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை நிலங்களைப் பிடிக்கத்தான் அக்கறை காட்டுகிறதே தவிர தமிழ் மக்களின் மனங்களை வென்று அதன் மூலமாக ஐக்கிய இலங்கை உருவாக்கிட வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகத் தெயவில்லை. புலிகள் தோன்றுவதற்கும், விடுதலைப் போராட்டம், ஆயுதப் போராட்டம் தோன்றுவதற்கும் அடிப்படைக் காரணம், தொடர்ந்து இலங்கை அரசு இனவாதச் செயல்பாடுகளில் மூழ்கி இருப்பதே.

அந்தக் காரணம் தொடர்ந்து இருக்கத்தான் போகிறது. ஆகவே இலங்கையிலே சண்டை, சச்சரவு, போராட்டம் இருக்கத் தான் போகிறது. சமாதானம் வெகு தூரத்தில் இருக்கின்றது. இந்த நிலைமை தொடரத்தான் போகிறது என்று நினைக்கிறேன்.

இந்நிலையில் தமிழக மக்களிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

தமிழக மக்களைப் பொறுத்த வரையில் ஒன்றைத் தெளிவாகச் சொல்லிவிட விரும்புகிறேன். ஆனால் அதைவிட இலங்கை யிலே நமது தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படு கிறார்கள், இனப்பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கே பாய போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்தப் போராட்டத்தில் ஏறத்தாழ 80 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 20 ஆயிரத்துக்கும் மேலான போராளிகள் கொல்லப்பட்டிருக் கிறார்கள். 10 இலட்சம் மக்கள் உலகளாவிய அளவில் ஏதிலி களாக வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள்.

தமிழகத்திலேயே கூடக் குறைய ஒன்றரை இலட்சம் மக்கள் இலங்கையிலேயே ஏதிலி களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பொதுச் சொத்துக் கள், தனியார் சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்கின்றன. ஆண்கள் பெண்கள் முதியோர் அனைவருமே மரநிழலில் தெருவோரம் வாழவேண்டிய நிலைமைதான் அங்கு நிலவு கின்றது. இதெல்லாம் சோகம். இந்தச் சோகங்களைப் பற்றித் தமிழக மக்களுக்கு நன்றாகத் தெயும். நான் சொல்ல வேண் டும் என்றில்லை. ஊடகங்கள் மூலமாகவும் நேல் சென்று வந்தும் தெந்து கொண்டுதான் இருக்கிறீர்கள். ஆகவே அந்தச் சோகத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முற்றுப் புள்ளி வைக்கக்கூடிய தலைமைத் தகுதி; கடமை இந்தியாவுக்கு இருக்கின்றது. அதுவும் இந்தியா விலுள்ள தமிழகத் தமிழர்களுக் குத்தான் அதிகம் இருக்கின்றது.

உலகளாவிய சர்வதேசச் சமூகம் அமெக்கா, நோர்வே, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தலையிட்டுவிட்டாலும் கூட சிக்கலைத் தீர்வுக்கு கொண்டு வரக் கூடிய அந்தத் திறவுகோல் தமிழகத்தில்தான் இருக்கின்றது. அதை மறந்து விடக்கூடாது.
ஏனென்றால் சிங்களர்கள் தமிழர்களை ஒடுக்குவதற்கு ஈழத் தமிழர்களை, இலங்கைத் தமிழர் களை ஒடுக்குவதற்கு முதன்மைக் காரணம் என்னவென்றால் வரலாற்று ரீதியாக நம்முடைய சோழர்கள், பாண்டியர்கள், சேரர்களெல்லாம் இலங்கைக்குக் காலம்காலமாகப் படை யெடுத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கே உள்ள நிலங்களையெல் லாம் கைப்பற்றி ஆண்டிருக்கிறார் கள். அது பழைய மன்னர்கால வரலாறு. அந்த வரலாறு சிங்களர் மனதிலே பதிந்திருக்கின்றன.

இலங்கையிலே சிங்களர்கள் பெரும்பான்மையினராகத் தமிழர்கள் சிறுபான்மையினராக வாழ்ந்தாலும் கூட இங்கே உள்ள ஆறு கோடித் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்ற அந்த இருப்பு, எப்போதுமே சிங்களர் மனங்களை உறுத்திக் கொண் டிருக்கின்றது. ஆகவே சிங்களர் களின் சிக்கலைப் பார்க்கும் போது ஒரு ஆய்வாளர் சொன்ன கருத்து நினைவுக்கு வருகின்றது. “சிறுபான்மை உணர்வு கொண்ட பெரும்பான்மைச் சமூகம்.''
ஏன் பெரும்பான்மை இடத்தில் சிறுபான்மை உணர்வு என்று சொன்னால் இங்கே உள்ள ஆறுகோடித் தமிழர்களின் இருப்புதான் அவர்களை பயமுறுத்துகின்றது. அந்த அடிப் படையில் தமிழர்களுக்குத் தார்மீகப் பொறுப்பு இருக்கின்றது.

“நாங்கள் இங்கே உள்ள ஆறுகோடி பேர் இருக்கின்றோம். எங்களை வைத்துக் கொண்டு எங்கள் உடன்பிறப்புகளை அடிக்கிறார்கள், ஒடுக்குகிறார் கள், அழிக்கின்றார்கள்'' என்ப தாகத் தமிழகத் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் காரணத்துக்காக வாவது அங்கே நிம்மதியை கொண்டுவர வேண்டிய கடப்பாடு, பொறுப்பு இங்கே உள்ள தமிழர்களுக்கு, தலைவர் களுக்கு இருக்கின்றது என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கடைசியாக ஒன்று - இலங்கைத் தமிழர்கள் சிக்கலை விடுதலைப் புலிகள் சிக்கலாகப் பார்க்க வேண்டாம். விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் அனைவரும் மறக்க வேண்டிய ஒரு கசப்பான வரலாறு இருக் கின்றது. அது இராசீவ் காந்தி மரணம். அது சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மாறிவிட்டது. ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதக்கிறார்கள் என்று சட்டம் நம் மீது பாய்ந்து விடும் என்ற அச்சம் கூட தமிழகத் தலைவர்கள் ஒருசிலருக்கு இருப்பதாக நான் பார்க்கிறேன். ஆகவே இதை அப்படிப் பார்க்காதீர்கள். அப்படிப் பார்ப்பதானது இலங்கையிலே தமிழர்களை அடக்கியாளும் கொடுங்கோலன் ஆட்சிக்கு சாதகமாக அமைந்து விடுகின்றது. அதைத்தான் அவர்கள் விரும்பு கிறார்கள். எதைச் செய்தாலும் விடுதலைப்புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம் என்ற போர்வையில் மூடிவிட நினைக் கிறார்கள். இதை மறந்துவிட வேண்டாம்.

தமிழகத்தில், சென்னையில் இலங்கையின் முகவர்கள் இருக் கிறார்கள். ஊடகத்திலே, அரசியலிலே, சமூகத்திலே இருக் கிறார்கள். இப்படி இருக்கக் கூடிய அந்த முகவர்கள் இலங்கை அரசாங்கத்தின் நோக்கத்தை செயல்படுத்திக் கொண்டிருக் கிறார்கள். அதை மறந்து விட வேண்டாம்.
விடுதலைப்புலிகளை ஆதப் பது, எதிர்ப்பது என்று இரண்டு பிவாகக் கருத்து மோதல்களை நடத்திக் கொண்டு நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கும் அதே வேலையில் சந்தடிச் சாக்கிலே சத்தமில்லாமல் மிக இயல்பாக தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றது இலங்கை அரசு.

ஆகவே தயவுசெய்து கருத்து மோதலிலிருந்து வெளியே வாருங்கள். கருத்து மோதலில் அப்பாவித் தமிழர்களின் சோகத்தை, மரண ஓலத்தை மூழ்கடித்து விடாதீர்கள். வெளியே வந்து ஈழத் தமிழர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நான் இங்கே வந்தது இலங்கையை இரண்டாக்கி ஈழத்தைப் பித்துக் கொடுங்கள் என்று கேட்பதற்காக அல்ல. இலங்கை இரண்டாக பியுமா? இல்லையா? என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும். ஆனால் அங்கே வடக்கு கிழக்கிலே வாழக் கூடிய தமிழ்ச் சகோதரர்கள் ஒரு சுயாட்சி பெற்று வாழ வேண்டும் என்ற தேவை இருக்கின்றது.

இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம் போன்ற மாநிலங்கள் இருக் கின்றன. அதுபோல இலங்கை யிலே வடக்கு கிழக்கில் தமிழர் கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் வாழும் பிரதேசம் ஒன்றுசேர்க்கப்பட்டு ஒரு தமிழ் மொழி மாநிலம் ஐக்கிய இலங்கைக்குள் அமைக்கப்பட வேண்டும். அதுதான் குறைந்த பட்சத் தீர்வு. இதன் மூலமாகத்தான் போரை நிறுத்த முடியும். சமாதானத்தைக் கொண்டுவர முடியும். அதைக் கொடுப்பதற்குக் கூட இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது. மூர்க்கத்தனமான போர் மூலமாகத் தீர்வைக் கண்டுவிட்டு, முழு இலங்கையையும் சிங்களத் தேசமாக ஆக்க வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம்.

அரசியல் தீர்வு பற்றிப் பேசுவ தெல்லாம் வெறும் வாய்ப்பேச்சு. உலக நாடுகளை ஏமாற்ற அப்படிப் பேசுகிறார்களே தவிர வேறொன்றுமில்லை.
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, எதிர்க்கட்சித் தலைவி செயலலிதா, பாமக தலைவர் இராமதாசு, வைகோ, திருமாவளவன், விசயகாந்த் அதுபோல தேசியத் தலைவர்கள், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கின்றன. இந்தியாவை ஆளும் காங்கிரசுக் கட்சி இருக்கிறது, பாசக இருக்கிறது. இங்கே இருக்கிற அனைத்துக் கட்சிகளும் இலங்கையில் தமிழர்கள் சிக்கலிலே ஒரு சமாதானத் தீர்வை கொண்டுவர ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதுதான் இலங்கைத் தமிழர்கள் சார்பில் நான் உங்கள் பத்திகை மூலம் வைக்கும் வேண்டுகோள்.

சந்திப்பு: சிவகா, வேல்முருகன்

பாடம் ஒன்று - சரக்கு
என்ன?
பொருளியல் கல்வித் தொடர் -21
ராபின்சன் குருசோவின்
பட்டறிவு தரும் பாடம் என்ன?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com