Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
Samooka Neethi Thamizh Thesam
ஆகஸ்டு 2008
பொருளியல் தொடர் - 18
என்ன?
பாடம் ஒன்று சரக்கு
பணச் சரக்கு என்றால் என்ன?

தியாகு


நான்கு மதிப்பு வடிவங்கள் கண்டோம்; அவற்றை உரிய எடுத்துக்காட்டுகளுடன் நினைவுபடுத்திக் கொள்வோம்.
அ) தொடக்க வடிவம்:
1 சட்டை = 2 லிட்டர் நெல்;
ஆ) விரிந்த வடிவம்:
1 சட்டை = 2 லிட்டர் நெல், அல்லது = 500 கிராம் தேயிலை, அல்லது = 50 கிராம் முந்திரி, அல்லது = 200 கிராம் நெய், அல்லது = 3 மீட்டர் துணி, அல்லது = 1 குறுந்தகடு, அல்லது = 1 அகர முதலி, அல்லது...
(இ) பொது வடிவம்:
2 லிட்டர் நெல்
500 கிராம் தேயிலை
50 கிராம் முந்திரி
200 கிராம் நெய்
3 மீட்டர் துணி
1 குறுந்தகடு
1 அகர முதலி
"க' சரக்கு "அ' ...
(ஈ) பண வடிவம்:
1 சட்டை
2 லிட்டர் நெல்
500 கிராம் தேயிலை
50 கிராம் முந்திரி
200 கிராம் நெய்
3 மீட்டர் துணி
1 குறுந்தகடு
1 அகர முதலி
‘க' சரக்கு ‘அ'...

மதிப்பு வடிவங்களின் இந்த வரிசை ஏரண வகைப்பட்டது மட்டுமன்று, வரலாற்று வகைப்பட்டதும் ஆகும் என்பதை மறவாதீர்கள். பண்ட மாற்றுக்குரிய ‘அ' வடிவத்தில் தொடங்கிய மதிப்புறவு ‘ஆ', ‘இ' வடிவங்கள் வழியாக மலர்ந்து இன்றையச் சந்தைப் பொருளியலுக்குரிய ‘ஈ' வடிவத்தை அடையக் கண்டோம். ‘அ' வடிவத்திலிருந்து ‘ஆ' வடிவத்துக்கும், அதிலிருந்து ‘இ' வடிவத்துக்கும் மாறிச் செல்லும் போது அடிப்படை மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆனால் பொது வடிவமாகிய ‘இ' வடிவத்தில் சமனியல் மதிப்பாக இடம் பெறும் சட்டைக்குப் பதிலாக பண வடிவமாகிய ‘ஈ' வடிவத்தில் தங்கம் இடம்பெறுகிறது என்பதைத் தவிர இவ்விரு வடிவங்களுக்கும் இடையே வேறுபாடு ஏதுமில்லை. ‘இ' வடிவத்தில் சட்டை அனைத்துப் பொதுச் சமனியாகப் பயன்படுவது போலவே ‘ஈ' வடிவத்தில் தங்கம் பயன்படுகிறது.

இந்த மாற்றம் கோட்பாட்டு வகையில் எளிதென்றாலும் நடைமுறை வகையில் எளிதன்று. நேரடியான அனைத்துப் பொதுச் சமனியாகும் தகுதி சமுதாய வழக்கின் வாயிலாகத் தங்கம் என்ற ஒரு சரக்கிற்கு வந்து சேர நீண்ட காலமாயிற்று. சட்டையைப் போலவே தங்கமும் எளியதொரு சரக்காகவே இருந்தது; மற்றச் சரக்குகளைப் போலவே அதுவும் சரக்குப் பரிமாற்றங்களில் ஒரு சமனியாக இடம்பெற்றது. தனித்த பரிமாற்றங்களில் ("அ' வடிவம்) எளிய சமனியாகவோ, விரிந்த பரிமாற்றங்களில் (‘ஆ' வடிவம்) குறிப்பான சமனி யாகவோ இடம்பெற்றது. அது படிப்படியாகவே அனைத்துப் பொதுச் சமனியாகப் பயன்படும் நிலையை நோக்கி முன்னேறியது. அது அவ்வாறு பயன்படும் எல்லைகள் படிப்படியாக விரிவடைந்தன.

அனைத்துப் பொதுச் சமனி என்னும் இந்தப் பதவிக்கான போட்டியில் இறுதியாக வெற்றி பெற்றதும் தங்கம் பணச் சரக்காகி விடுகிறது. ‘ஈ' வடிவம் அப்போதுதான் ‘இ' வடிவத்திலிருந்து வேறுபடுகிறது. அதாவது மதிப்பின் பொது வடிவம் பண வடிவமாக மாறி விடுகிறது. பணச் சரக்காகிய தங்கத்தின் வாயிலாகச் சட்டை போன்ற தனியொரு சரக்கின் சார்பியல் மதிப்பைத் தெரிவிக்கும்போது அதுவே அச்சரக்கின் விலை -வடிவம் ஆகும்.

சட்டையின் விலைவடிவம்:
1 சட்டை = 200 மில்லி கிராம் தங்கம்.
அல்லது, 200 மில்லி கிராம் தங்கத்தை நாணயமாக்கும் போது 200 ரூபாய் ஆகுமென் றால்
1 சட்டை = ரூ. 200
1 சட்டையின் விலை ரூ. 200
1 சட்டை = 2 லிட்டர் நெல்
என்ற தொடக்க வடிவத்திலிருந்து விரிந்த வடிவம், பொது வடிவம் ஆகியவற்றின் வழியாக 1 சட்டை = 200 மி.கி. தங்கம் அல்லது ரூ. 200 என்ற விலை வடிவத்தை வந்தடைகிறோம். சரக்கே பணத்தின் வித்து என்பதை இதிலிருந்து அறியலாம்.

இலக்கணம் : சரக்குலகில் எந்தச் சரக்குக்கும் சமனியாகும் தகுதியை ஈட்டும் தனிச் சரக்கே, அதாவது தங்கமே பணச் சரக்கு.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com