பேரவையின் வெள்ள நிவாரணப் பணிகள்…
ஆனந்தகிருஷ்ணன்,
நவம்பர் மாதம் ஏற்பட்ட மழைவெள்ள, நிஷா புயல் பாதிப்புக்குள்ளான திருவாரூர் மாவட்டப் பகுதிகளில், திராவிட இயக்கத் தமிழர் பேரவை கிழக்கு மண்டலச் செயலாளர் தோழர் மு.சேக்தாவூது அவர்கள் தலைமையில் சுமார் 5000 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண உதவி வழங்கப்பட்டது.

27.11.08 அழகிரி நகர் மற்றும் சீராத் தெரு ஆகிய தெருக்களில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை திருவாரூர் மாவட்டத் தலைவர் பி.ஆர்.ஆனந்த கிருஷ்ணன், மாவட்ட செயலர் நா.இராசேந்திரன், தோழர்கள் பா.விசயகுமார் மற்றும் பேரவைத் தோழர்கள் இணைந்து சுமார் 400 குடும்பங்களுக்கு அரிசி வழங்கினர்.
28.12.08 தஞ்சை சாலை, திலகர் 1ஆவது, 2ஆவது தெருக்களில் சுமார் 500 குடும்பங்களுக்கு அரிசி வழங்கப்பட்டது. இவை திலகர் 2வது தெரு பேரவைத் தோழர்கள் பாக்கியராசு, லட்சுமணன், நாகசுந்தர், வினோத் சந்தானம், சிலம்பரசன், வேல்முருகன், சுரேஷ் ஆகியோர் மூலம் வழங்கப்பட்டன.
29, 30, 1 ஆகிய தேதிகளில் திலகர் 2வது தெருவில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆதிதிராவிடர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கு சுமார் 400 குடும்பங்களுக்கு மதியம், இரவு இருவேளையும் உணவு வழங்கப்பட்டது. இவற்றை மாவட்டத் தலைவர், செயலர், ஒன்றிய செயலர் கிருஷ்ணமூர்த்தி, புலிவலம் ஒன்றிய செயலர் சந்தோஷ்குமார் மற்றும் பேரவைத் தோழர்கள் இணைந்து வழங்கினர்.
28.11.08 அன்று பெரிய மில் தெருவில் சுமார் 470 குடும்பங்களுக்கு நகரச் செயலர் பிரேம் நசீர், தோழர்கள் கண்ணன், அப்துல்லா, ஹாஜிமுகமது, இப்ராம்ஷா ஹாஜி முகம்மது, ஹாஜா அலாவுதீன், செல்லையா, முத்து கிருஷ்ணன், அன்பழகன், ராஜ்குமார், அப்துல் கரீம், சூரியமூர்த்தி ஆகியோர் மூலம் அரிசி, சர்க்கரை, தேநீர் வழங்கப்பட்டது.
29, 30 ஆகிய நாட்களில் கல்யாண மகாதேவி, ஈழ கொண்டான், அணைகுடி ஆகிய கிராமங்களில் தோழர்கள் ராஜா, ஜீவா, மோகன், மணி மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் சுமார் 400 குடும்பங்களுக்கு அரிசி, ரொட்டிப் பாக்கெட்டுகள், சர்க்கரை ஆகியவைகளை வழங்கினர்.
30, 1 ஆகிய தேதிகளில் காட்டூர் திருக்கண்ண மங்கை பகுதிகளில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கிளைச் செயலாளர் காட்டூர் சுரேசு ஆகியோர் தலைமையில் பேரவைத் தோழர்கள் சுமார் 200 குடும்பங்களுக்கு அரிசி வழங்கினார்கள்.
மதியம் காட்டூரில் மட்டும் தோழர்கள் மதிய உணவு புலவு, தக்காளி சோறு ஆகியவைகளை சுமார் 250 குடும்பங்களுக்கு கொரடாச்சேரி ஒன்றியப் பெருந்தலைவரும், திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தோழர் தாழை அறிவழகன் தலைமையில் வழங்கினர்.
வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்கள் வெளித் தெருக்களில் இருந்து வந்த சுமார் 1500 குடும்பங்களுக்கு திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாவட்ட அலுவலகத்தில், கிழக்கு மண்டல செயலாளர் தோழர் மு.சேக்தாவுது அவர்கள் தலைமையில் மாவட்டப் பொறுப்பாளர்கள், ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள் சுமார் 50 பேர்கள் தினசரி மதியம், இரவு உணவு தயாரித்து வழங்கினர்.
- ஆனந்தகிருஷ்ணன், மாவட்டத் தலைவர், திருவாரூர் மாவட்டம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|