Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
ஜூன் 2009
பெரியார் ஈ.வெ.இராமசாமி-நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை (பதிவு-1993)
அறக்கட்டளைக் கொள்கை விளக்கம்

1. மதம், சாதி, வகுப்பு அடிப்படையில் எத்தகைய (வேற்றுமையும்) பாகுபாடும் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவதல். ஒடுக்கப்பட்ட பிரிவு மக்கள், இன்னலில் துன்புறுவோர், ஏழைகள் ஆகியோர்க்குத் துயர்துடைப்பு உதவிகள் செய்தல்.

2. பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்களால் வகுத்தளிக்கப் பெற்ற சுயமரியாதைக் கொள்கைகளை மக்களிடையே பரப்புதல்.

3. பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்களின் சமதர்ம-சுய மரியாதைக் கொள்கைகளைப் பரப்புரை செய்வதற்கும், வளர்த்தெடுப்பதற்கும் தம்மை ஒப்படைத்துக்கொள்ள முன் வருவோர்க்கு ஆழ்ந்தகன்ற அறிவை ஊட்டவும், பயிற்றுவிக்கவும் உரிய நிறுவனங்களை நிறுவுதல்.

4. மார்க்சியம், காந்தியம், பெரியாரியம், டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் கொள்கைகள், இவர்கள் காலத்திய மற்ற கொள்கைகள், மற்றும் இக்கொள்கைகளுடன் தொடர் புடைய கொள்கைகள் ஆகியவை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான நிறுவனங்களை அமைத்தல், இவ்வாராய்ச்சியின் முடிவுகளை சிறு வெளியீடுகள், இதழ்கள், நூல்கள்மூலம் வெளியிடல்.

5. மருத்துவ முறைகளான, சித்த மருத்துவம், ஆயுர்வேதம் முதலானவைகளைப் பாதுகாத்தல், பரவச் செய்தல், அவற்றில் ஆய்வுகள் மேற்கொள்ளல், அவற்றை மக்களிடையே நடைமுறைக்குக் கொண்டுவர முயற்சிகளை மேற்கொள்ளுதல். இதற்காகப் பரந்த அளவில் நிலம் கொண்ட நடுவங்களை அமைத்தல். ஒவ்வொரு நடுவத்திலும் இன்றியமையாத தாவரங்களை வளர்க்க நாற்றங்கால், மூலிகைத் தோட்டம், அந்தந்த வட்டாரத் தில் தெரிவுசெய்யப்படும் மூலிகைச் செடிகளுக்கான மரபியல் பூங்கா அமைத்தல். உள்ளூர் பகுதியில் கிடைக்கும் மூலிகைச் செடிகளைப் பயன்படுத்தி மக்கள் தம் அடிப்படையான மருத்துவ நலத் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கான விழிப்புணர்வையும் ஊக்கத்தையும் மக்களிடையே உண்டாக்கும் பொறுப்பை இந் நடுவங்கள் ஏற்றல். தேவைப்படும் மூலிகைச் செடிகளைப் பயிரிட உழவர்களை ஊக்குவித்தல்.

6. நல்லதோர் சமூகத்திற்குரிய அடிப்படைக் கருத்தியல் களான சமத்துவம், சகோதரத்துவம், தோழமைப் பண்பு, ஆகியவற்றை சமூகத்தில் எல்லா மக்கள் பிரிவினரிடையேயும் உருவாக்குதல், வளர்த்தெடுத்தல், மேன்மையுறச் செய்தல். இத்தகைய சிந்தனைத் தளத்தில் மக்களை ஒருங்கிணைத்தல், சமுதாயக் கேடுகளைக் களைந்தெறிந்திட முழுஈடுபாட்டுடன் மக்கள் முனைந்திடும் தன்மையில் மக்களைப் பயிற்றுவித்தல்.

7. சமூக, பண்பாட்டு, பொருளாதார விடுதலையின் முதன்மை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டி, அவற்றை அடைவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளுதல்.

8. மேல்நிலைக் கல்வியில் எல்லா நிலைகளிலும், துறைகளிலும் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட பிரிவினர் உயர்கல்வியைப் பெற்றிட உதவுதல்.

9. ஏழைகள், உடல் ஊனமுற்றோர், மனவளர்ச்சி குன்றியோர் ஆகியோரின் மேம்பாட்டிற்காகக் கல்வி நிலையங்கள் மற்றும் நிறுவனங்களை அமைத்தல்.

10. பெண்களின் வளர்ச்சி, மேம்பாடு, விடுதலைக்கான திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தல்.

11. முன்பு வெளியிடப்பட்டு, தற்போது விற்பனையில் இல்லாத அரிய நூல்களையும், திரட்டுகளையும் மறுபதிப்புச் செய்தல். கையயழுத்துப்படி நிலையில் உள்ள அரியவற்றை அச்சிடுதல்.

12. நுண்கலைகளான இசை, நாட்டியம், நாடகம், நாட்டுப் புறப் பாடல்கள், பிற மக்கள்கலை வடிவங்கள் ஆகிய வற்றை மேம்படுத்தல். இக்கலைகள் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகள்; நூல்களைத் தமிழிலும் பிற மொழிகளிலும் வெளியிடல். தமிழில் உள்ள நூல்களைப் பிறமொழிகளிலும், பிறமொழிகளில் உள்ள நூல்களைத் தமிழிலும் வெளியிடல்.

13. தற்கால இலக்கிய நூல்களையும், பருவ ஏடுகளையும், இதழ்களையும், அறிக்கைகளையும் இந்திய மொழிகளிலும், அயல் மொழிகளிலும் வெளியிடல்.

14. வகுப்புகள், சொற்பொழிவுகள், கூட்டங்கள், மாநாடுகள், ஆய்வரங்குகள், பொருள்காட்சிகள் நடத்தல்.

15. அறிவைப் பரப்புவதற்காக, நூலகங்கள், தகவல் நடுவங்கள், செய்தி பரிமாற்றப் பணிமனை, போன்ற வற்றை நிறுவி நடத்துதல்.

16. இவ்வறக்கட்டளையின் குறிக்கோள்களுக்கு இசைந்த தன்மையில் செயல்படும் பிற கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைகள், செயல்திட்டங்கள் ஆகியவற்றிற்கு நிதி உதவி அளித்தல்.

17. அறக்கட்டளையின் நோக்கங்களை அடைவதற்கு, உந்துவிசையாக, ஒத்திசைவாக அமையக்கூடிய பிற நடவடிக்கைகளில் சட்ட வரம்புக்குட்பட்டுச் செயல்படுதல்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com