 |
தேசிய அவமானம்
தொடர்பு முகவரி:
புதிய தென்றல்
அன்பகம், மூலச்சல்,
மேக்காமண்டபம் அ.எ. 629166
கன்னியாகுமரி மாவட்டம்.
தொலைபேசி: 04651 - 250343
ஆசிரியர்
மூலச்சல் மருத்துவர் த. இராஜேந்திரன் செல்பேசி : 9443165034
இணை ஆசிரியர்
அசுரன் செல்பேசி : 9965398084
ஆலோசனைக் குழு
முனைவர் ஜி. சந்தானக்குமார், முனைவர் என். ஐயப்பன், பேராசிரியர் எஸ். ஜெயக்குமார், பேராசிரியர் பெ. சுயம்பு, மருத்துவர் சிறீ. திருப்பதிஆசான், மருத்துவர் என்.கே. சுரேஷ், மருத்துவர் ஐபின்ராஜ், மருத்துவர் எஸ். ஸ்டேன்லி தாமஸ், மருத்துவர் எல். அருளமுதன், மருத்துவர் எஸ். ராஜேஷ்வரன், இராஜாவூர் கு. ம. இராசேந்திரன், வி. கே. இராமசுவாமி, மருத்துவர் கே. செல்வநாதன், மோ. ஜேம்ஸ்.
சட்ட ஆலோசகர், பி. விஜயகுமார் எம்.ஏ.பி.எல்.
கடந்த இதழ்: ஜூலை 2007
|
நாட்டில் நிலவுகின்ற பல்வேறு பின்னடைவுகளுக்கு கல்வி அறிவின்மையே முக்கிய காரணியாக இருந்து வருவது பல்வேறு அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டு உள்ள உண்மை.
அதனால் தான் இந்தியா சுதந்திரமடைந்த முதல் 10 ஆண்டுகளிலேயே அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று நம் தலைவர்கள் திட்டம் வகுத்தனர்.
ஆனால், ஆண்டுகள் 60 ஆன பின்னரும் அது இன்னமும் கனவு திட்டமாகவே இருக்கிறது. அனைவருக்கும் கல்வி 'சர்வ சிக்ஷ அபியான்' ஆக வேகமெடுத்தும் காரியம் கைகூடியதாகத் தெரியவில்லை.
இன்னமும் சொல்லபோனால், காமராசரால் சனநாயகப்படுத்தப்பட்ட கல்விமுறை இப்போது பணப்பைகளுக்குள் பதுக்கப்பட்டு உள்ளது. கல்வி என்பது செலவு மிக்கதாக ஆகிவிட்டது. ஏழைகள் நிலை?
தற்போது செயல்வழிக்கல்வி போன்ற திட்டங்கள் அதிக நம்பிக்கை தருவதாக உள்ளன. அடுத்த ஆண்டு முதல் கல்வியில் பாடபேதங்கள் களையப்பட்டு சமச்சீர் கல்விமுறை நடைமுறைக்கு வரும் என்ற தமிழக முதல்வர் கலைஞரின் உறுதிமொழி ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்கக் கல்வி முதல் கல்லூரி வரை அரசே கட்டாய, இலவச, தரமான, சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தியாக வேண்டும்.
அதுவரை, கல்லாமை என்ற தேசிய அவமானத்தை துடைக்கவே முடியாது.
அன்புடன்,
ஆசிரியர்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|