 |
சனநாயகம் மலரட்டும்!
தொடர்பு முகவரி:
புதிய தென்றல்
அன்பகம், மூலச்சல்,
மேக்காமண்டபம் அ.எ. 629166
கன்னியாகுமரி மாவட்டம்.
தொலைபேசி: 04651 - 250343
ஆசிரியர்
மூலச்சல் மருத்துவர் த. இராஜேந்திரன் செல்பேசி : 9443165034
இணை ஆசிரியர்
அசுரன் செல்பேசி : 9965398084
விநியோகம் மற்றும் விளம்பர மேலாளர்
கே. எஸ். ராமு செல்பேசி : 9942326436
விநியோக உதவி
த. சசி, சி. விஜயகுமார்
ஆலோசனைக் குழு
முனைவர் ஜி. சந்தானக்குமார், முனைவர் என். ஐயப்பன், பேராசிரியர் எஸ். ஜெயக்குமார், பேராசிரியர் பெ. சுயம்பு, மருத்துவர் சிறீ. திருப்பதிஆசான், மருத்துவர் என்.கே. சுரேஷ், மருத்துவர் ஐபின்ராஜ், மருத்துவர் எஸ். ஸ்டேன்லி தாமஸ், மருத்துவர் எல். அருளமுதன், மருத்துவர் எஸ். ராஜேஷ்வரன், இராஜாவூர் கு. ம. இராசேந்திரன், வி. கே. இராமசுவாமி, மருத்துவர் கே. செல்வநாதன், மோ. ஜேம்ஸ்.
சட்ட ஆலோசகர், பி. விஜயகுமார் எம்.ஏ.பி.எல்.
|
சனநாயகம் மலரட்டும் என்றதுமே ‘எங்கோ சர்வாதிகார ஆட்சியிலுள்ள நாட்டில் என்றுதான் நினைக்கத் தோன்றும். அண்டைவீடு, எதிர்வீட்டை எல்லாம் பின்னர் பார்த்துக்கொள்ளலாம். முதலில் நம்மை கவனிப்போம்.
நமது நாடு சனநாயக நாடு என்று சொல்லப்பட்டாலும் அது முழுமையான சனநாயகமாக இல்லை என்பதை நாம் அறிவோம். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும். மத்தியில் குவிக்கப்படக் கூடாது என்று பலராலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் அதற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநிலங்களின் அமைதியை பாதுகாக்க நேரடியாக மத்திய படையை அனுப்புவது தொடர்பாக தற்போது சிந்திக்கப்பட்டு வருகிறது. பொதுவாக ஒரு மாநிலத்தில் என்ன பிரச்சினை, அதை எப்படி கையாளுவது என்று அந்த மாநில அரசுக்கே நன்கு தெரியும். 2000கி.மீ தொலைவில் இருந்து இம்முடிவு எடுக்கப்படுவதால் பல தவறுகள் நேர வாய்ப்பு உள்ளது.
நமது கடந்தகால வரலாறும் இதனையே மெய்ப்பிக்கிறது. சீனாவுடனான போரை காரணம் காட்டி 1962ல் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலை 1977ல் இந்திரா தோற்கும்வரை நீடித்ததை, மறக்க முடியுமா. பஞ்சாப்பை காரணமாக்கி வந்த ‘தடா’ குமரி முதல் காஷ்மீர் வரை அத்துமீறியதை ‘பொடா’ சட்டம் காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டதை மறக்க முடியுமா?
3 மாதம் தான் நடைமுறையில் இருக்கும், முன்னதாக மாநிலத்திற்கு 256வது பிரிவின் கீழ் அறிவிக்கப்படும் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் மத்திய அரசின் விருப்பு வெறுப்புகள், கூட்டணி நிலையை பொறுத்து அது மாறும் என்பதே உண்மை.
அய்யா! காலச் சக்கரத்தை பின்னோக்கி திருப்பி விடாதீர்கள். சனநாயகத் தென்றலை சுதந்திரமாக வீச அனுமதியுங்கள் என்பதே நமது கோரிக்கை.
அன்புடன்,
ஆசிரியர்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|