 |
வன்முறை ஒழியட்டும்!
தொடர்பு முகவரி:
புதிய தென்றல்
அன்பகம், மூலச்சல்,
மேக்காமண்டபம் அ.எ. 629166
கன்னியாகுமரி மாவட்டம்.
தொலைபேசி: 04651 - 250343
ஆசிரியர்
மூலச்சல் மருத்துவர் த. இராஜேந்திரன் செல்பேசி : 9443165034
இணை ஆசிரியர்
அசுரன் செல்பேசி : 9965398084
ஆலோசனைக் குழு
முனைவர் ஜி. சந்தானக்குமார், முனைவர் என். ஐயப்பன், பேராசிரியர் எஸ். ஜெயக்குமார், பேராசிரியர் பெ. சுயம்பு, மருத்துவர் சிறீ. திருப்பதிஆசான், மருத்துவர் என்.கே. சுரேஷ், மருத்துவர் ஐபின்ராஜ், மருத்துவர் எஸ். ஸ்டேன்லி தாமஸ், மருத்துவர் எல். அருளமுதன், மருத்துவர் எஸ். ராஜேஷ்வரன், இராஜாவூர் கு. ம. இராசேந்திரன், வி. கே. இராமசுவாமி, மருத்துவர் கே. செல்வநாதன், மோ. ஜேம்ஸ்.
சட்ட ஆலோசகர், பி. விஜயகுமார் எம்.ஏ.பி.எல்.
கடந்த இதழ்: ஜூலை 2007
|
அண்மையில் காசி நகரில் உடல் ஊனமுற்ற நடைபாதை சிறு வியாபாரிகள், தம்மை அகற்றிய மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விசமருந்தி 'தற்கொலை' போராட்டம் நடத்தியுள்ளனர். இதனை இரு தொலைக்காட்சி அலைவரிசைகள் நேரடியாக ஒளிப்பதிவு செய்துள்ளன. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இப்போது தற்கொலைக்கு தூண்டியதாக வியாபாரிகள் சங்க தலைவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. "மனித உயிரைவிட செய்தி அவசியமா?" என்று ஊடகங்கள் மீதும் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. தர்மபுரியில் மாணவிகள் உயிரோடு கொளுத்தப்பட்டபோதும் அவர்களை காப்பாற்றாமல் படப்பதிவு செய்த சன் தொலைக்காட்சி காமிராவை இது நினைவுபடுத்துகிறது.
மற்றொரு செய்தி, 1998 கோவை குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார் மக்கள் சனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி. அவர் கடந்த 9 ஆண்டுகளாக பிணைகூட வழங்கப்படாமல் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்.
இறுதியாக, ஒரு நாள் சிறையில் வைக்குமளவு கூட குற்றம் ஏதும் செய்யவில்லை என்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசுகளும் காவல்துறையும் இணைந்து மேற்கொண்ட இந்த வன்முறைக்கு எதிராக ஒருசில சிற்றிதழ்கள், மனித உரிமை ஆர்வலர்கள் தவிர யாரும் குரல் கொடுக்கவில்லை.
அநீதியை செய்வதும் அநீதிக்கு துணை போவதும் மட்டுமல்ல, அநீதியை கண்டுகொள்ளாமல் போவதும் கூட வன்முறைதான்.
வன்முறை ஒழியட்டும்!
அன்புடன்,
ஆசிரியர்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|