Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூன் 2007
இஸ்லாமியப் பெண்ணியத்தின் அமெரிக்க முகம்

நவீனத்துவத்துக்கு முந்தைய சிந்தனைகள் விரவியுள்ள மதப்பண்பாட்டுப் பரப்பில் சுழலும் பின்னை- நவீனத்துவப் பெண்மணி என்று தன்னைக் கூறிக் கொள்கிறார் அஸ்ரா. க்யூ. நொமானி.

இரண்டு வருடங்களுக்கு முன்பு அமெக்காவில் உள்ள விர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர். டாக்டர் ஆமினா வாதூத், பெண்களும் ஆண்களும் ஒரு சேரக் கலந்துகொண்ட வெள்ளிக்கிழமைத் தொழுகை ஒன்றை தலைமை தாங்கி நடத்தினார். அதற்குப் பின்புல ஊக்கமாக இருந்தவர் அஸ்ரா க்யூ. நொமானி.

அவன் ‘‘மெக்காவில் தன்னந்தனியே: இஸ்லாமின் இதயத்துக்குள் ஒரு புனிதப் பயணம்’’ (standing alone in Mecca: A Pilgrimage into the heart of Islam) நூல் இஸ்லாமியப் பண்பாட்டின்மேல் ஆர்வம் உள்ளவர்களின் புருவங்களை உயர்த்தி உள்ளது. நூலில், ஒஸôமா பின் லேடன் போன்ற அதிதீவிர வலதுசாகளின் சிந்தனைகள் பல நாடுகளில் பல இஸ்லாமிய இயக்கங்களின் இயந்திரமாக மாறிவிட்டது என்பதில் தொனிக்கும் அமெக்கா வாழ் உயினத்தின் பொதுப் புத்தியும், சௌதி அரேபியாவின் விமானத் தளங்களில் பெப்சி - கோலாவின் விளம்பரச் சின்னங்கள் பற்றிய விமர்சனமும் உள்ளது. சட்டரீதியாக திருமணம் புந்து குடும்ப வாழ்க்கை நடத்தாமலே ஒரு குழந்தையோடு வாழ்ந்துவரும் அஸ்ராவை ஆசியாவின் பண்பாட்டுப் பின்னணியில் புந்துகொள்வது ஒரு புதிர் விளையாட்டு.

அஸ்ரா முஸ்லிம் உலகத்தில் வீசும் காற்றின் விசையும் திசையும் மாறி வருகிறது என்கிறார்.

அவர் ஜியா உல் ஸலாம் என்பவருடன் நிகழ்த்திய கேள்வி - பதில் தி - இந்து பத்திரிக்கையில் வெளியானது. மாறுபட்ட சிந்தனைகளின் தடத்தில் இதைப் பதிவு செய்ய தமிழ்ப்படுத்தி தயாராக்கியது.

- யதி அதிசயா

தாங்கள் 1400 வருடங்களுக்கு முன்பு இறைத்தூதர் பெண்களுக்கு வழங்கிய உமைக்குரலை மீட்டெடுக்க வேண்டும் என்கிறீர்கள். இது குறித்து விளக்கமாகக் கூற முடியுமா?

7- ஆம் நூற்றாண்டின் இஸ்லாமியப் பெண்கள் 21-ஆம் நூற்றாண்டின் இஸ்லாமியப் பெண்களைவிட நன்றாகவே இருந்துள்ளனர். இறைத் தூதர் முகம்மதின் மசூதியில் பெண்கள் தொழுகை நடத்தினார்கள். இன்று இந்தியா நெடுக பெண்கள் மசூதிக்குள் நுழைவதை தடை செய்கிறார்கள். அந்தக் காலத்தில் பெண்கள் முகத்தை மூடி மறைக்கத் தேவை இல்லை. இறைத் தூதன் முதல் மனைவி கதீஜா, அவன் எஜமானராகவும் வேலை பார்க்கும் பெண்ணாகவும் விளங்கி இருக்கிறார்.

இன்றைக்கு திருச்சபை மேடையிலிருந்து ஒலிக்கும் குரல், நல்ல பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்வதில்லை என்று சொல்கிறது. தற்போது நடக்கும் கொடுமைகளைப் பார்த்தால் இறைத் தூதர் அழுதுவிடுவார் என்றே நான் எண்ணுகிறேன். முன்னேற்றம் காண்பதற்குப் பதிலாக நாம் பின்நோக்கிச் சென்றுவிட்டோம். 7-ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியப் பெண்கள் பெற்றிருந்த முற்போக்கான மதிப்பீடுகளை நாம் சென்றடைய வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன்.

சச்சார் ஆணைய அறிக்கை பல அம்சங்களில் முஸ்லீம்களின் நிலைமை தலித்துகளின் நிலையை விடப் பின்தங்கியிருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறது. முற்போக்கான மதிப்பீடுகள் சமுதாயம் முழுவதிலும் தென்பட வேண்டும் என்று உமையோடு நாம் எதிர்பார்ப்பது போல, நாமும் இஸ்லாத்தின் முற்போக்கான மதிப்பீடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். என்றால் தான் கொடுஞ்சிறையிலிருந்து நாம் விடுதலை பெற முடியும்.

இஸ்லாம் ஆண்களும் பெண்களும் கலந்து பழகுவதை தவிர்க்கிறது. அப்படியிருக்க ஆண்களும் பெண்களும் சேர்ந்து பங்கேற்கும் தொழுகையை அமெக்காவில் பெண்களே தலைமையேற்று நடத்தும் உமையைப்பெற எப்படி முடிந்தது?

இஸ்லாம் ஆண்களும் பெண்களும் சகஜமாகப் பழகுவதைத் தடை செய்யவில்லை. பழமைவாதப் புரட்டல் மூலம் இஸ்லாமைப் புந்து கொள்பவர்கள்தான் தடை விதிக்கிறார்கள். இஸ்லாம் அல்லது வேறொரு மதத்தை ஒரு வறண்ட பழமைவாதி வரையறுத்துக் கூறுவதை நிறுத்தும் நாளில் ஏற்படும் பெரிய மாற்றத்தை முஸ்லீம்களும், முஸ்லீம் அல்லாதவர்களும் (ஓர் அற்புதம்போல) அடையாளம் கண்டு கொள்ளலாம். உம் வராகா என்ற பெண்மணி 7-ஆம் நூற்றாண்டில் பெண்களையும் ஆண்களையும் ஒரு சேரத் தொழுகை நடத்த அழைத்துச் சென்றார் என்பதை அறிந்தபோது நான் யோசித்தேன். ஏன் இப்போது முடியாதா?

என்னுடைய இளம் பருவத்திலிருந்தே எனக்கு ஒரு தொழுகைக்குத் தலைமை தாங்கவோ, சமூகத்தின் முன் ஒரு தலைவராக நிற்பதற்கோ அதிகாரம் கிடைத்ததில்லை. இது முஸ்லிம் சமூகத்தின் நேர்பாதி (பெண்களுக்கு) மனித வளத்துக்கு நேர்ந்த பேழப்பு என்றே நினைக்கிறேன்.

நான் ஒருங்கிணைத்த தொழுகையில் பெண்களையும் ஆண்களையும் ஒருசேர பங்கு பெறத் தலைமை வகித்தவர் டாக்டர் அமீனா வாதூத். இது பெண்கள் மசூதியின் பின்புற வாசலில் இருந்து (சில இடங்களில் அப்படித்தான் அனுமதி அளிக்கிறார்கள்) முன்வாசலுக்கு முன்னேறுகிற நிகழ்வு மட்டுமல்ல; (வழிபாட்டு) வடிவரி அமைப்பில் மட்டுமல்ல; (வழிபாட்டின்) உள்ளடக்கத்திலும் (பெண்களுக்கு) நேர்ந்துள்ள மாற்றம்!

இந்தத் தொழுகை ‘ஒரு முறை’ நிகழ்வு அல்ல. வட அமெக்கா நெடுக, பாஸ்டனில் இருந்து டொரான்டோ வரை இப்படி ஆண்களும் பெண்களும் சேர்ந்து நடத்தும் தொழுகைகள் நடந்தவண்ணம் உள்ளன. பெண்கள் என்ற முறையில் நாம் சிறந்தவர்கள் அல்ல என்று நமக்குள் வரையப்பட்டிருக்கிறது. போதாமையின் தள்ளாட்டங்களை மீறி, என் சொந்த ஊரில் ஒரு சிறிய தொழுகையின் முன் ‘இமாமா’வாக நிற்பதில் மனபயங்களை எல்லாம் வெற்றி கண்டுவிட்டேன்.

‘மெக்காவில் தன்னந்தனியே’ என்ற நூலிலிருந்து தங்களுடைய இந்திய அனுபவங்களை முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை. தங்களது சிறுவயதுப் பருவத்தையும் பின்னர் ஒரு முஸ்லீம் பெண் என்ற வகையில் ஏற்பட்ட அனுபவங்களையும் கொஞ்சம் தெளிவாகக் கூற முடியுமா?

நான் 1965-ல் மும்பையில் பிறந்தேன். நான் பிறந்தபோது என் தந்தையின் குடும்பம் ஹைதராபாத்தில் குடியமர்ந்து இருந்தது. எனவே என்னுடைய வாழ்வின் முதல் நான்கு வருடங்கள் அங்கேயே கழிந்துவிட்டன. ஓஸ்மானியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணிபுந்த எனது தந்தை பி.ஹெச்.டி படிப்புக்காக அமெக்காவுக்குப் போனபோது எனது அம்மாவும் கூடவே சென்று விட்டார்கள். என்னையும் என் அண்ணனையும் தாத்தா-பாட்டி கவனிப்பில் விட்டு விட்டுச் சென்றார்கள். எனக்கு நான்கு வயதாகும்போது நாங்கள் தனியாக அமெக்கா சென்று நியூயார்க்கின் கென்னடி விமானத்தளத்தில் இறங்கினோம். நானும் அண்ணனும் தவறிப் போகாமல் இருக்க எங்கள் இருவருக்கும் ஒரே மாதியான வகள் போட்ட துணியிலிருந்து உடை தைத்து அணிவித்து இருந்தார்கள்.

அந்த முதல் அட்லாண்டிக் கடந்த பயணத்துக்குப் பிறகு ஒருவித பனியுறக்க வாழ்க்கைதான் மற்ற புலம்பெயர்ந்த இந்திய - அமெக்கர்களைப் போல எனக்கும் வாய்த்தது. என்னுடைய மரபார்ந்த முஸ்லீம் குடும்பத்திலிருந்து ‘அமைதி பொன் போன்றது’ ‘நல்ல பெண்கள் இல்லத்துக்கு வெளிச் செல்ல மாட்டார்கள்’ போன்ற தகவல்கள் தபால் வழி வந்து கொண்டே இருக்கும். ஆனால் என்னுடைய கிளை படர்த்திய குடும்பத்தின் அன்பும் அரவணைப்பும் சுகமாகவே இருந்தது. பல்லாண்டுகளுக்குப் பிறகு, எனக்கென நான் வளர்த்தெடுத்துள்ள முஸ்லீம் தனித்துவம் எப்படி என் முஸ்லீம் குடும்பத்தின் உள்ளோடிக் கொண்டிருக்கும் நேர்மை, அறம், அன்பு மற்றும் கடின உழைப்பிலிருந்து உறிஞ்சியெடுத்ததுதான் என்பதை உணர்ந்து கொண்டுள்ளேன்.

தங்களுடைய நூலில் நீங்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அமெக்காவில் உள்ள முஸ்லீம் பெண்களைப் பற்றி பேசுகிறீர்கள். அவர்கள் உலகம் எங்கணும் ஆண்வழித் தோன்றல் அமைப்பின் கொடுமைகளை அனுபவிக்கிறார்களா? அல்லது மதகுருமார்கள்தான் தலையிட்டு திருமறைகள் பற்றிய விவாதத்துக்கு தடையிடுகிறார்களா?

பாலியம் பற்றிப் பேசும் முழு அதிகாரமும் இஸ்லாமுக்கு இருப்பதாகச் சொல்ல முடியாது. அது எல்லா சமூகங்களின் தனிஅடையாளமாக உள்ளது. ஆண் மன்றங்களின் நிலைபாட்டை தேசத்தின் சமயம் சார்ந்த சட்டம் என்று வியாக்கியானம் செய்பவர்கள் முஸ்லீம் மதகுருக்கள் மட்டுமல்லாது எல்லா மதங்களிலும் உள்ளனர். முஸ்லீம் பெண்களுக்கு அடுத்தபடியாக, அமைப்பு முறையில் திரட்டப்பட்ட மதத்தின் தலையீடும் தடைகளும் பற்றி கத்தோலிக்கப் பெண்களிடமிருந்து நிறைய கடிதங்கள் வருகின்றன. இந்தியாவில் உள்ள சில இந்துக் கோவில்களின் உள்ளே நுழைகையில் பால் பேதமற்ற அனுபவத்தை உணர முடிந்தது என்றாலும் ஒரு கோயிலில் கூட ஒரு பெண் அர்ச்சகரைப் பார்க்க முடியவில்லை. நான் சொல்லுவதை நம்புங்கள் : பெண்கள் அடிபணியாட்களாக நடத்தப்படுவது எல்லா சமூகங்களின் சாபமாகவே உள்ளது. இதனை நாம் மாற்றியே ஆக வேண்டும்.

அமெக்காவின் முஸ்லீம் சமூகம் தங்கள் வாழ்வு குறித்தும், தங்களது நூல் குறித்தும் என்ன எதிர்வினை காட்டி உள்ளார்கள்?

நான் திருமணம் மூலமாக இல்லாமல் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளேன் என்பதையும், ஒரு மசூதியின் மூலையில் ஒதுங்கி இருந்து பாவவிமோசனத் தொழுகை நடத்தாமல் அதுகுறித்து பகிரங்கமாகப் பேசுகிறேன் என்பதையும் கண்டு நிறைய முஸ்லீம்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு பெண்ணை இழிவாகச் சொல்ல பயன்படுத்தப்படும் அத்தனை வசவுச் சொற்களாலும் என்னைக் கேவலப்படுத்த முயற்சி செய்துள்ளனர். அதெல்லாம் ஒகே! என்னைப் பற்றி நான் நினைத்துப் பார்க்காத எதையும் நான் புதிதாக கேட்கவில்லை. என் சினைக் காலத்தின் ஒன்பது மாதங்களையும் ஒருவித சட்டத்துக்குப் புறம்பான உணர்வுடன்தான் கடத்தி விட்டேன். ஆனால் நான் விழுங்கிய கண்ணீர்த்துளிகள் கனம் பட்டு காயம்படாத முகத்துடன் என் மகன் பூரணமாகப் பிறந்தபோது நான் புளகாங்கிதம் கொண்டேன். அன்றிலிருந்து வெட்கத்திலிருந்து விடுதலைப் பெற்ற வாழ்க்கை வாழ உறுதி பூண்டேன்.

அப்படி விடுதலை உணர்வுடன் கூடிய வாழ்க்கையைத் தேர்வு செய்தது என்னை உறுதியாகவும் தெளிவாகவும் சொந்தக் கால்களில் ஊன்றி நிற்க வைத்து விட்டது. நாம் முஸ்லீம் சமூகத்தின் கருணை, அன்பு, சகிப்புத் தன்மை, சமூக நீதி, பெண்ணியம் போன்றவற்றை மீட்டெடுக்க வேண்டும் என்று கருதுகிறேன். உலகளாவிய விதத்திலும், தனி மனித வாழ்விலும் எங்களால் ஒரு மாற்றத்தை உருவாக்க முடிந்திருக்கிறது என்பதை அறியும் போது புல்லரிக்கிறது. அமெக்காவில் இருக்கும் பெரிய முஸ்லிம் அமைப்புகள் தம்முடைய 2005 கோடை கால அறிக்கையில், மசூதிகள் மகளிரை சிநேக பாவத்துடன் வரவேற்கும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளன.

வட அமெக்காவின் பெரிய அமைப்பான ‘இஸ்லாமிய சொசைட்டி’ தங்களது தலைவராக ஒரு முஸ்லீம் பெண்ணைத் தேர்ந்தெடுத்து உள்ளனர். சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு மசூதியில் பெண்கள் அமரும் இடத்தை மறைத்துக் கட்டப்பட்டிருந்த சுவர் இடிக்கப்பட்டுள்ளது. சிகாகோவில் மசூதி ஒன்றில் ஆட்சி மன்றக் குழுவில் ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வாஷிங்டனில் உள்ள சியாட்டிலில் ஒரு தெற்காசியப் பாட்டி புதிதாய் பிறந்த குழந்தையின் காதில் இஸ்லாமியத் தொழுகை அழைப்பை (பாங்கு) ஓதி உள்ளார். இது மரபாக ஆண்கள் செய்து வரும் கடமை. இசுலாமியச் சமூகத்தின் புதிய குருத்து ஒன்று கேட்கும் முதல் ஒலி ஒரு பெண்ணின் வாய்மொழி என்பது அபூர்வமான ஒன்று. இதுதான் மாற்றம் என்பது!



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com