Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூன் 2007
முதல் சுதந்திரப் போர்-முரண்படும் பார்வைகள்
கே.நட்வர்சிங் / தமிழில்: நதி ஆச்சரியா

இன்னும் சில நாட்களுக்குள் 1857-ன் 150வது ஆண்டு கொண்டாட்டங்கள் சூடு பிடிக்கத் துவங்கி விடும். நமக்கு இதுதான் முதல் சுதந்திரப் போர். வேறு சிலருக்கு இது ஒரு புரட்சி; எழுச்சி, எதிர்ப்பு அல்லது கலகம். கார்ல் மார்க்ஸ் (1818 -1883) தம்முடைய ஒல்லித் தொகுப்பான ‘இந்திய வரலாற்றுக் குறிப்புகள்’ நூலில் இதனை ‘சிப்பாய் கலகம்’ என்று குறிப்பிட்டுள்ளார். 1857 முதல் 1858 வரையிலான காலகட்டத்துக்கிடையில் நடந்த நிகழ்வுகள் பற்றி 39 குறிப்புகள் வரைந்துள்ளார். அவருக்கு அக்காலத்தில் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் அவருடைய கருத்துகள் அமைந்துள்ளன.

‘குறிப்புகள்’ தொகுப்பின் புதிய பதிப்புக்கு 1986-ல் முன்னுரை எழுதிய தொகுப்பாசியர்கள் பின்வருமாறு கூறுகின்றனர். ‘‘(எண்ணூற்று) ஐம்பதுகளில் இருந்த, ஒரு காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட நாடு என்ற வகையில் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட காலனியாதிக்க வகைமை பற்றியும், சுரண்டல் முறைமை பற்றியும் மார்க்ஸ் கவனமாகப் படித்து வந்துள்ளார். அவர் இந்தியா மீது சிரத்தை காட்ட வேறொரு காரணம், வகுப்புவாத மயமாக்கப்பட்ட ஒரு தேசத்துக்குய தனித்தன்மைகள் இந்தியாவில் நிலவியது என்பதுமாகும்.

‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி’ பற்றி 1853-ல் மார்க்ஸ் எழுதும் போது, ‘‘இந்தியாவின் பழைய அரசியல் அம்சங்கள் எப்படித்தான் மாறினாலும், அதனுடைய சமூகப் பண்புகள் பழம் பெருமையிலிருந்து சிறிதும் மாறாமல் 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நீடித்து வந்துள்ளது’’ என்கிறார்.

நான் கார்ல் மார்க்ஸின் புகழ் பெற்ற மேற்கோளைக் கூறுகிறேன். ‘‘தத்துவரி அறிஞர்கள் உலகத்தைப் பற்றி பல்வேறு கோணங்களில் பொழிப்புரை நிகழ்த்தி உள்ளனர். ஆனால் எல்லோருடைய நோக்கமும் அதனை மாற்றி அமைக்க வேண்டும் என்பதுதான்!’’

1857-க்குப் பிறகு இந்தியா கடுமையான மாற்றங்களுக்கு உள்ளாகி விட்டது. ஆனால் மார்க்ஸ் விரும்பியது போல அல்ல. கார்ல் மார்க்ஸ் பற்றி போதும். நான் தற்போது வெகு மதிப்புடன் வேறு சில பெயர்களைக் கூறுகிறேன். அவர்கள்: ஜவஹர்லால் நேரு, வி.டி. சாவர்க்கர், சர். சையது அகமத், மௌலானா ஆசாத் மற்றும் பேராசிரியர். எஸ். என். ùஸன்.

ஜவஹர்லால் நேரு 1857 ‘உலக வரலாற்றின் கணத் தோற்றங்கள்’ (Gllimpses of World History) நூலிலும், விரிவான முறையில் ‘இந்தியாவின் கண்டுபிடிப்பபு’ நூலிலும் 1857 பற்றி எழுதியுள்ளார். குறிப்பிட்ட இரண்டாவது நூலில் ‘பெரும் கலகம்’ என்று தலைப்புக் கொடுத்துள்ளார். அவர் கலகம், புரட்சி, எதிர்ப்பு ஆகிய சொல்லாடல்களைச் சரளமாகப் பயன்படுத்தி உள்ளார். அவர் எழுதுகையில், ‘‘உட்பொருளில் இது ஒரு நிலப்பிரபுத்துவத்தின் கொந்தளிப்பு. நிலப்பிரபுக்களும், அவர்களைப் பின்பற்றுபவர்களும் தலைமைப் பங்கு வகித்துள்ளனர்... தலைவர்களுக்கிடையே எந்த விதமான ஒருமைப்பாட்டு உணர்வும் கிடையாது. பதிலாக தங்களது நிலப்பிரபுத்துவக் கௌரவங்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டி உருவான அந்நியர் எதிர்ப்பு மட்டுமே நிலை பெற்றுள்ளது’’ என்கிறார்.

ஆனால் அவர் தாந்தியா தோப்பே பற்றியும், ஜான்ஸி மாகாணத்தின் லட்சுமிபாய் பற்றியும் புகழ்ந்துரைத்து உள்ளார். லட்சுமிபாய் போர்க்களத்தில் பலியாகும் போது வயது இருபது. அவர் (நேரு) பிரிட்டிஷ்காரர்கள் பற்றியும், 1857க்குப் பிறகு நடந்த கொடுஞ்செயல்கள் பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சர். ûஸயத் அகமத் கான் (1817 - 1898) பற்றியும் நேருவுக்கு விமர்சனம் உண்டு. எனக்கும் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தை தோற்றுவித்தவர் (அகமத் கான்) பற்றிச் சிறிது சொல்ல உண்டு.

அவருடைய வாழ்க்கை முழுவதையும் கூர்ந்து ஆராய்ந்தால், அவருடைய தொலைநோக்குப் பார்வை குறுகலானதாகவும், இந்தியாவின் கதி மோட்சம் பிரிட்டிஷ் அருள்பாலித்தால் மட்டுமே நடக்கும் என்று நினைத்தவராகவும் இருப்பதைக் காண முடியும். ‘இந்துக்களும் முஸ்லீம்களும் இந்தியாவின் இரு கண்கள்’ என்ற அவருடைய புகழ் பெற்ற வருணனையைக் கணக்கிலெடுத்துக் கொண்டுதான் இதைச் சொல்ல வேண்டி இருக்கிறது.

அம்ரீஷ் மிஸ்ரா தாம் மிகச் சிறப்பாக எழுதி உள்ள லக்னோ பற்றிய நூலில் சர். சையதின் வாழ்வியல் நெறிகளை மிர்ஸô காலிப்பின் நெறிகளோடு ஒப்புமைப்படுத்திக் கூறியுள்ளார். அவருக்கு காலிப் மீது தான் அதிகப் பவு உள்ளது.

விநாயக் தாமோதர் சாவர்க்கர் (1883 - 1966) ‘இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்’ என்று 1857-யை வருணனை செய்தார். அதே பெயரில் உள்ள அவரது நூல் 1909-ல் வெளியானது. அது உடனே தடை செய்யப்பட்டது. அவர் இந்த முக்கியமான நூலை எழுதியபோது வயது 24 என்பது குறிப்பிடத்தக்கது. சாவர்க்கரின் நூலின் சிறப்பம்சம், இந்நூல் மதச்சார்பற்ற தொனியில் எழுதப்பட்டிருக்கிறது என்பதுதான். பல இடங்களை மேற்கோள் காட்ட முடியும்.

பக்கம் 285-ல் சாவர்க்கர் எழுதுகிறார் : ‘‘உண்மையில் சொல்லப் போனால், பகதூர்ஷா இந்தியாவின் அரியணையைக் கைப்பற்ற எழும்பியது இழந்த பதவியை மீட்டு நிறுவரி அல்ல. மாறாக, இந்நிகழ்வு இந்துக்களுக்கும் முகம்மதியர்களுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் பூசல் முடிவுக்கு வந்து விட்டது என்பதையே பிரகடனம் செய்கிறது... பகதூர்ஷா, இந்துக்களும் முஸ்லிம்களும் குடிமக்களும் பட்டாளமும் அடங்கிய பொதுமக்களின் ஒட்டு மொத்த சுதந்திரக் குரலால், அவர்களின் பேரரசர் என்றும், சுதந்திரப் போரின் தலைவர் என்றும் உயர்த்திக் காட்டப்பட்டுள்ளார்... எனவே தான் 1857 மே 11 ஆம் தேதி, தங்கள் தாய்மண்ணின் பேரரசராக ஏற்றுக் கொள்ளப்பட்டவருக்கு, இந்துக்களும் முகம்மதியர்களும் தங்கள் இதயம் கலங்கிய, விசுவாசம் மிக்க கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்கி உள்ளனர்’’.

நிறையப் பிரதிகளின் பழைய பத்திகளிலிருந்து இரண்டு சமூகங்களின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிச்சமிட்டுக் காட்ட முடியும். மீரட் படைவீரர்கள் 1857 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி புரட்சி செய்தார்கள். மறுநாளே பிரகடனம் வெளியிட்டார்கள். அதில், ‘‘எல்லா இந்துக்களுக்கும் முகம்மதியர்களுக்கும் நாங்கள் எம் மதத்தின் கடமைப்படி மக்களோடு இணைத்திருக்கிறோம். இந்த நேரத்தில் யாராவது கோழைத்தனம் காட்டினாலோ, ஆங்கிலேய ஆதிக்கவாதிகளின் பேச்சைக் கேட்டு நம்பிச் செயல்பட்டாலோ அவர்கள் வெட்கப்பட வேண்டி வரும்.

இங்கிலாந்தின் மேல் விசுவாசம் காட்டுபவர்களுக்கு லக்னோவின் ஆட்சியாளர்களுக்கு கிடைத்தப் ‘பரிசு’ தான் கிடைக்கும். சில நன்மதிப்பு மிக்கத் தலைவர்களின் வழிகாட்டுதல்தான் இந்துக்களும் முகம்மதியர்களும் இப்போராட்டத்தில் இணைந்து போராட வழி வகுத்துள்ளது. இதனால் நல்ல ஆட்சியை நிலை நிறுத்த வேண்டும் என்பதும், ஏழை எளிய மக்கள் திருப்திப்பட வேண்டும் என்பதும், அவர்கள் இன்றைக்கு இருக்கும் நிலைமையிலிருந்து உயர்வுபெற வேண்டும் என்பதும் தேவைப்படுகிறது’’.

1857-ன் நூற்றாண்டு விழாவின் (1957-ல்) மௌலானா அபுல் கலாம் ஆசாத், இந்தப் போராட்டத்தைப் பற்றி எழுதும்படி பேராசிரியர். சுரேந்திர நாத் ùஸன்னிடம் உத்தரவு பிறப்பித்தார். அந்நூலுக்கு அவர் எழுதிய முன்னுரையில், மௌலானா ஆசாத் நீதிமன்றச் சொல்லாடலின் தொனியில் பின்வருமாறு கூறி உள்ளார் :

‘‘நான் 1857-ன் நிகழ்வுகளைப் பற்றி வாசிக்கும் போது இந்திய தேசியத்தின் பண்பு தாழ்ந்த நிலையை எட்டி விட்டதை எண்ணி வருத்தம் கொள்கிறேன். இக்கிளர்ச்சியின் தலைவர்கள் ஒருபோதும் ஒத்து போகவில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் பொறாமை பூண்டவர்களாகவும், காலை வாரி விடுபவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். ஒரு பொதுநலம் சார்ந்த விஷயத்தில் எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்புரிய முடியாது என்பது குறித்த அறிவு அவர்களுக்குக் குறைவாகவே இருந்துள்ளது. இந்த வகையிலான தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் தான் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணம்...’’

மௌலானா ஆசாத், பகதூர் ஷாவை ‘‘ஒரு குறியீடாகக் கூட குறிப்பிட இலாயக்கற்றவர்’’ என்றே கருத்து கூறி உள்ளார். பேராசிரியர் ùஸன்னின் நூல் சுறுசுறுப்பூட்டுவதாக இல்லை என்றாலும் ஆதாரங்களின் அடிப்படையில் புறந்தள்ள முடியாத நூலாகவே விளங்குகிறது.

1957-ம் ஆண்டு நடந்த முதல் சுதந்திரப் போரின் நூற்றாண்டு விழா, தற்போது கொண்டாடப்படும் 150-வது ஆண்டு விழாவின் துவக்கம்போல கோலாகலமாக அமையவில்லை. அடுத்த 12 மாதங்களில் இந்தத் துவக்க விழாக் குதூகலம் எப்படி ஏறி இறங்குகிறது எனப் பார்க்கலாம். அதிகப்படியான கொண்டாட்டத்துக்கான அவசியம் இல்லை. நாம் கவனமாக இருக்கவில்லை என்றால், பேரளவிலான கொண்டாட்டங்கள் குறைகளாலான பின்விளைவுகளை ஏற்படுத்தலாம்.

நாம் சிரத்தையோடு சிரம்மேலேற்றிக் கொண்டாட வேண்டியது முதல் சுதந்திரப் போரின் மதசார்பற்றத் தன்மையைத்தான். அதுதான் மிக இன்றியமையாதது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com