Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூன் 2007
தலையங்கம்


நுகர்வோர் நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பாக முலாயம்சிங் அரசு உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது.

வழக்கின் சாராம்சம் இதுதான்; ‘உத்தரபிரதேசத்தில் தேவையான எண்ணிக்கையில் நுகர்வு நீதிமன்றங்கள் இல்லை’ என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அம்மாநில உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. வழக்கினை விசாத்த நீதிமன்றம் தேவையான அளவு நுகர்வோர் நீதிமன்றங்களை அமைக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டது. உயர்நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்போதைய முலாயம் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இரண்டு நீதிபதிகள் (சின்ஹா, மார்க்கண்ட கட்சு) கொண்ட உச்சநீதி மன்ற பெஞ்ச் இந்த வழக்கை விசாத்தது. இதன் தீர்ப்பு சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இரண்டு நீதிபதிகளும் இருவேறு கோணங்களில் தங்களின் கருத்துகளை தீர்ப்பில் பதிவு செய்திருக்கிறார்கள். உத்தரபிரதேச உயர்நீதி மன்றத் தீர்ப்பை அங்கீகத்து ‘நீதிமன்றத்திற்கு அரசுக்கு உத்தரவிடும் அதிகாரம் உண்டு’ என்று சின்காவும், ‘நீதிமன்றங்கள் அரசை அவ்வாறு கட்டுப்படுத்த முடியாது என்று மார்க்கண்டேய கட்சுவும்’ கூறி இருக்கிறார்கள்.

நம் இந்திய ஜனநாயக மரபில் பாராளுமன்றம் / சட்டமன்றம், நீதிமன்றம் இவற்றிற்கு இடையிலான அதிகார நிலைநாட்டல் குறித்த சர்ச்சை தொடர்ந்து இருந்துகொண்டே வருகிறது. நம் ஜனநாயகத்தின் இரு முக்கிய கூறுகள் நீதிமன்றமும்/ மக்கள் பிரதிநிதிகள் மன்றமும். என்றாலும் அடிப்படையாகவே இரண்டும் வேறு வேறானவை. பாராளுமன்ற / சட்டமன்றப் பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள், மக்களால் தோற்கடிக்கப்படுகிறவர்கள்.


ஆசிரியர் குழு

ஆசிரியர்
ஏ.இ.எஸ். ராஜா ஹஸனபர் அலி
நிர்வாக ஆசிரியர்
ஹாமீம் முஸ்தபா

உதவி ஆசிரியர்கள்
தமிழ்ப்பிரியன்
ம. ராஜசேகரன்

ஷிஃபா காம்ப்ளக்ஸ்,
முதல் மாடி,
142, வடக்கு வெளிவீதி,
யானைக்கல்,
மதுரை - 625 001.
தொலைப்பேசி: 0452- 5371514
[email protected]

தனி இதழ்: ரூ. 10
ஆண்டுச் சந்தா: ரூ.100
ஆயுள் சந்தா: ரூ.1000

ஆகஸ்ட்-05 இதழ்
செப்டம்பர்-05 இதழ்
நவம்பர்-05 இதழ்
ஜனவரி-06 இதழ்
பிப்ரவரி-06 இதழ்
மார்ச்-06 இதழ்
ஏப்ரல்-06 இதழ்
மே-06 இதழ்
ஜூன்-06 இதழ்
ஜூலை-06 இதழ்
ஆகஸ்ட்-06 இதழ்
செப்டம்பர்-06 இதழ்
நவம்பர்-06 இதழ்
டிசம்பர்-06 இதழ்
ஜனவரி-07 இதழ்
பிப்ரவரி-07 இதழ்

மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய நிர்ப்பந்தமும், சூழலும் அவர்களுக்கு இருக்கிறது. நீண்ட நெடுங்காலம் மக்கள் மத்தியில் பணியாற்றி, மக்கள் உணர்வுகளை உணர்ந்து, மக்களும் இவர்களை உணர்ந்து அதனடிப்படையில் மக்கள் பிரதிநிதிகளாக இவர்கள் வருகிறார்கள். இந்த மக்கள் பிரதிநிதிகள் தவறிழைத்தால் அடுத்தத் தேர்தலில் அவர்களைத் திரும்பப் பெறுகின்ற வாக்குமை அதிகாரம் மக்களுக்கு இருக்கிறது.

சமூகத்தில் செயல்படுகின்ற அரசியல் கட்சிகள் பல்வேறு தரப்புகளை, சமூகங்களை, வர்க்கங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனவாக இருக்கின்றன. நிலவில் இருக்கும் பாராளுமன்ற ஜனநாயக அமைப்பின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் மேற்சொன்ன கூறுகள் முக்கியமானவை.

ஆனால் நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளின் நிலை அப்படி அல்ல. அவர்கள் மக்களுக்கு பதில் சொல்லக் கூடியவர்களாகவோ, பல்வேறு தரப்புகளை பிரதிநிதித்துவப் படுத்துகிறவர்களாகவோ இல்லை. மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளின்மீது கேள்விகளையும், விமர்சனங்களையும் எழுப்புவதுபோல் அவ்வளவு எளிதாக நீதிபதிகளின் செயற்பாடுகள்மீதான விமர்சனங்களை எழுப்ப முடியாது. நீதிபதிகள் தவறு செய்தால் திரும்பப் பெற முடியாது.

குஜராத் மாநில நீதிமன்றம் ஒன்றில் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் சென்றது. வழக்கை விசாத்த உச்சநீதிமன்றம், அப்துல்கலாம் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கும் உத்தரவில் கையெழுத்திட்ட நேரத்தில் அந்த மாஜிஸ்ட்ரேட் வேலை அழுத்தத்தில் இருந்தார். எனவே கவனிக்காமல் கையெழுத்து போட்டார்’ என்று சொன்னது. உச்சநீதி மன்றம் இத்துடன் நிற்காமல் கைது வாரண்ட் உத்தரவை மக்கள் மத்தியில் கொண்டு சென்ற தொலைக்காட்சி ஊடகம் மீது நீதி மன்ற அவமதிப்பு நோட்டீஸ் ஒன்றும் அனுப்பியது.

நீதிமன்றங்கள் குறித்த உண்மைகளை பதிவு செய்தாலே ‘நீதிமன்ற அவமதிப்பு வழக்கு’ தொடர்கின்ற நிலையில்தான் நீதிமன்ற சட்டங்கள் அமைந்திருக்கின்றன.

மாஜிஸ்ட்ரேட் தவறான முறையில் கையெழுத்திட்டு பிரச்சினையில் வந்தவர் இந்தியாவின் மூத்த குடிமகன் என்பதால் செய்தியானது. நீதிமன்றத் தவறுகள் வெளியே தெரிந்தது. இதே நிலையில் சாதாரண பொதுஜனம் என்றால்?

சாதிப்படி நிலைகளையும், வைதீக மரபுகளையும் இறுக்கமாக வைத்துக் கொண்டிருக்கிற இந்திய சமூகத்தின் மேலடுக்கில் இருப்பவர்களே பெரும்பாலும் நீதிபதிகளாக வருகிறார்கள். கோடிக்கணக்கான மக்களும் சாதியின் பெயரால் ஆண்டாண்டு காலமாக சமூக நீதி நிராகரிக்கப்பட்ட தேசத்தில் நீதி பபாலனம் செய்கிறோம் என்கிற சமூகப்புரிதல் நீதிமன்ற அமைப்பில் இல்லை.

சமூகத்தின் உள்ளடுக்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் உணர்வோட்டங்கள் என்னவென்று இவர்கள் அறிந்ததே இல்லை. அதனால்தான் உயர்கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீடு குறித்த வழக்கில் ‘இன்னும் ஓராண்டு காத்திருப்பதால் ஒன்றும் குறைந்து விடப் போவதில்லை’ என்று அவர்களால் விட்டேத்தியாக கருத்துச் சொல்ல முடிகிறது. கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கேட்டபோது முதலில் கல்வியில் கொடுப்போம் என்று சொன்ன நீதிமன்றம் இப்பொழுது காத்திருக்கச் சொல்கிறது.

இடஒதுக்கீடு வரம்புகுறித்த வழக்கில், அதை நிர்ணயம் செய்கிற விசயத்தில் மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரத்தில் அந்தந்த மாநிலங்களின் பிரத்யேகமான சூழல்களை நீதிமன்றம் கணக்கில் எடுக்கவே இல்லை. தமிழக முதல்வர் கூறுவதுபோல, ‘நூறு கோடி மக்களின் வாழ்க்கையை இரண்டு மூன்று பேர் தீர்மானிக்க முடியும் என்பது நம் ஜனநாயகத்திற்கு கேடு’

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தனது தீர்ப்புகளை தவணைமுறையில் நீதிமன்றம் வழங்கி வருகிறது. மும்பை வெடிகுண்டு வழக்கு தனித்த ஒரு நிகழ்வல்ல. அதற்கு முன்பு நடைபெற்ற மும்பைக் கலவரம், அதற்கு முந்தைய பாப் மசூதி தகர்ப்பு, அதற்கான தயாப்பு என தொடர் விளைவின் கண்ணி அது. ஆனால் நீதிமன்றம் தனது விசாரணையில் கணக்கில் எடுத்ததாகவே தெரியவில்லை.

அதுபோல் வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் நீதிமன்றம் பொது சிவில் சட்டம் பற்றி திருவாய் மலர்கிறது. ஆண்/பெண் சமத்துவம் என்ற அடிப்படையில் இருந்து பொது சிவில் சட்டம் பற்றிய நீதிமன்ற கருத்துகள் வருவதில்லை. மாறாக முஸ்லிம்கள்மீது அச்சுறுத்தலாகவே இது அமைந்திருப்பதை நம்மால் அவதானிக்க முடியும்.

இந்திய சமூகத்தில் சாதிகளுக்கென்றும், சமயங்களுக்கென்றும் தனித்தனி சட்டங்களும், மரபுகளும் இருக்கின்றன. வைதீக இந்து மதத்தில் பெண்களுக்கு சொத்துமை குறித்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. விதவை மறுமணம், பெண்கள் வேலைக்குச் செல்வது, இவை குறித்தும் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அடித்தட்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களிடமும், சிறுபான்மை சமயங்களிலும் இவைகள் சட்டரீதியாகவும், மரபுரீதியாகவும் நடைமுறைக்கு வந்து நெடுநாள்கள் ஆகிவிட்டன.

பொது சிவில் சட்டம், நுகர்வு நீதிமன்றம், இடஒதுக்கீடு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவது இவற்றிற்கான உத்தரவுகளும், தேவைகளும் மக்கள் திரளின் இயக்கங்களிலிருந்து வரவேண்டும். அவ்வாறில்லாமல் நீதிமன்றங்களின் ஆணைகளிலிருந்து வருவது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல.


- நிறுவனர் எஸ். ராஜா ஹாசன்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com