 |
தொலைபேசி சினேகம்
பாரதி கிருஷ்ணன்
ஆயிரம் விஷயங்ளோடு
பேசுவதற்கு
எண்களை அழுத்துகிறேன்
நீ
அழைப்பில் வந்ததும்
பேச ஒன்றுமற்றவனாய்
மௌனத்தைச்
சூடிக் கொள்கிறேன்.
உனது
பேச்சினைக் கேட்க
தயாரான நிலையில்
எங்கிருந்தோ
எதுவோ
உன்னை
என்னிடமிருந்து
வலுக்கட்டாயமாக
பிணைத்துப் போகிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|