Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூன் 2006

சர்வதேச சாளரம்

கால்பந்து நம்பிக்கைகள்

ஜட்டியைத் திருப்பிப் போட்டு அணிந்தால், துர்தேவதைகள் நெருங்காது என கால்பந்து ஆட்டக்காரர் தவிர்த்த எவரும் நம்பமாட்டார்கள். இதைவிட இன்னமும் அதிகமான மூடநம்பிக்கைகளில் அழுந்திக் கிடக்கிறது கால்பந்தாட்டம். ஆப்பிரிக்காவில் அணிகள் வெற்றி பெறுவதற்காக சூனியக்காரர்களைப் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. ஸ்பெயின் நாட்டின் வீரரொருவர் அதிர்ஷ்டம் இல்லாததாக கருதப்படும் மஞ்சள் டி-சர்ட் அணிந்து வந்ததற்காக கண்டிக்கப்பட்டார். கோச்சின் பெயர் 13 எழுத்து என்பது முதல் போட்டி 13ம் தேதி தொடங்குவது வரை எண் 13ஐச் சுற்றியும் நம்பிக்கைகள்
உள்ளன. கழுத்தில் அணியும் டையிலிருந்து, சாக்ஸ், ஷுவின் நூல் உள்பட வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதாக நம்பிக்கை பரவலாக உள்ளது. குறிப்பிட்ட ஆட்டக்காரரின் பற்பசையை கடன் வாங்கி உபயோகித்தல், ஆலிவ் எண்ணெயை நெஞ்சு, முகம், கைகளில் தடவுதல், முன்பு வெற்றி பெற்றிருந்த போது அணிந்திருந்த அதே சட்டையை அணிதல், பஸ்ஸில் குறிப்பிட்ட சீட்டில் அமர்ந்து போட்டிக்குச் செல்லுதல், குறிப்பிட்ட காரில், குறிப்பிட்ட சீட்டில், குறிப்பிட்ட பாடலைக் கேட்டவாறு போட்டிக்குச் செல்லுதல் என நம்பிக்கைகள் நீள்கின்றன. பல தலைமுறைகளாக நீண்டு நிற்பாதாகக் கூறப்படும் நம்பிக்கைகளில், குறிப்பிட்டராசிக்காரரை விளையாட்டு வீரராகத் தேர்ந்தெடுத்தல்,மதகுருவினால் ஜெபித்து அளிக்கப்பட்ட நீரை பிட்சில் தெளித்தல் ஆகியவையும் சேரும் என பிரத்யோகமமாக குறிப்பிட வேண்டியதில்லை.பிட்சில் மூத்திரம் பெய்தால் வெற்றி உறுதி என்பது தான்
கிளைமாக்ஸ்.

இங்கிலாந்து

கடுமையான வறட்சியில் சிக்கியிருக்கும் இங்கிலாந்து தண்ணீரை சிக்கனமாக உபயோகிக்குமாறு கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. அலங்கார நீரூற்றுகள், தனியார் நீச்சல் குளங்கள், மீன் வளர்ப்புக் குளங்கள், தொழிற்சாலைகள், விமானங்கள், வீடுகளின் வெளிப்புறங்களை சுகாதாரம் தவிர்த்த மற்ற தேவைகளுக்காக கழுவுதல், தோட்டங்கள், பூங்காக்கள், விளையாட்டுத் தளங்களுக்கு ஹோஸ் பைப் மூலம் நீரூற்றுதல், ஏன் வீடுகளின் கண்ணாடி, ஜன்னல்கள், கார்களைக் கழுவுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. 18 மாதமாக நிலவும் வறட்சி இன்னமும் நீடிக்க வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலைத் துறை அறிவித்துள்ளது.

ஜப்பான்

ஜப்பானில் நீண்ட காலத்திற்கு பின் விலைவாசி உயரத் தொடங்கியுள்ளது. சென்ற ஆண்டைவிட 0.5ரூ உயர்ந்துள்ளது. விலை உயர்வுக்கு எரிபொருள் மற்றும் மூலப் பொருட்களின் விலையேற்றம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதையொட்டி ஜப்பான் வங்கி வட்டி விகிதத்தை 0ரூத்திலிருந்து உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. ஜப்பான் பங்குச் சந்தையும் இதனால் உற்சாகமடைந்துள்ளது. நிக்கி என அறியப்படும் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணின் உயர்வு காரணமாக இந்தியா உள்ளிட்ட பங்குச் சந்தைகள் பாதிக்கப்படலாம் என கருதப்படுகிறது.

எய்ட்ஸ்

சிமியன் இம்யூனோடிபிசியன்சி வைரஸ் (SIVCPZ) என்ற சிம்பன்சி குரங்குகளில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள வைரஸ்தான் HIVயின் மூலம் என நாட்டிங்காம், மோன்டபெல்லியர், மற்றும் அலபாமா பல்கலைக் கழகங்களைச் சார்ந்த ஆராய்ச்சியாளர் குழு ஒன்று கண்டறிந்துள்ளது. 1930ம் ஆண்டில், காங்கோ நாட்டில் வைத்து இது மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது. எய்ட்ஸ் வெவ்வேறு நபர்களிடம் ஏற்படுத்தும் வெவ்வேறு மாற்றங்களால் இதன் கண்டறிதல் தாமதப் பட்டிருக்கலாம் எனவும், தென்கிழக்கு கேமரூனில் உலகம் முழுவதும் பரவிய HIVயை ஒத்த வைரஸ் சிம்பன்சியிடமிருந்து மனிதனுக்கு தாவியிருக்கக் கூடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. மனித உடலுக்குத் தாவிய SIV உருமாற்றமடைந்து HIVஆக மாறியிருக்கலாம் என்கிறது சயின்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள இக்கட்டுரை.

யூகோஸ்லாவியா

பண்டைய யூகோஸ்லாவியாவின் கடைசி எச்சத்தையும் உடைத்து தனிநாடாக மாற்றுவதற்கு மான்ட் நீக்ரோ தீர்மானித்துள்ளது. இது பொருளாதார, குடும்ப, அரசியல் தொடர்புகளை முறிக்கும் என்ற எதிர்ப்புக் குரலையும் மீறி மான்ட் நீக்ரோ மக்கள் செர்டியாவிலிருந்து பிரிந்து செல்ல 0.3ரூ வித்தியாசத்தில் தீர்மானித்துள்ளனர். 85ரூக்கும் அதிகமானோர் பங்கெடுத்த வாக்கெடுப்பில் வாக்களிக்க பெரும் பான்மையான வெளிநாடுகளில் வசிப்பவர்கள் வந்திருந்தனர்.

தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்க தொழிற்சங்க காங்கிரஸ் நடத்திய வேலை நிறுத்தம் அமைதியாக முடிவடைந்துள்ளது. சுரங்கங்கள், தொழிற்சாலைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் கடுமையாக பாதிக்கப்பட்ட போதும், மருத்துவ மனைகள், மின் நிறுவனங்கள் தடைபடவில்லை. தற்காலிகப் பணியாளர்கள் முறையை நீக்கவும், வெளிப் பணியாக்கத்தைக் குறைக்கவும், இறக்குமதியைக் குறைத்து உள்ளூர் உற்பத்தியைப் பெருக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தும் இந்த வேலை நிறுத்தம் நடந்தது. தென்ஆப்பிரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் அரசு கணக்குப் படி 25ரூ என்றாலும், உண்மையில் 40ரூ என கணக்குகள் தெரிவிக்கின்றன. 5ரூபொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ள நாட்டில் 50ரூ வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர்.

ஜிம்பாப்வே

ஜிம்பாப்வே தொழிற்சங்க காங்கிரஸ் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. வருடாந்திர பண வீக்க விகிதம் 1000ரூத்தைத் தாண்டிய நிலையில் ஊதிய உயர்வு குறித்த 5மாத கால பேச்சுவார்த்தை முறிந்தது. ரொட்டி விலை ஒரு வாரத்தில் மட்டும் 30ரூ உயர்ந்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் 80ரூஐ எட்டிய நிலையில் அடிப்படைத் தேவைகளுக்கும், எரிபொருளுக்கும் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. ஒரு காலத்தில் ஆப்பிரிக்காவின் வளம் கொழிக்கும் நாடாக இருந்த ஜிம்பாப்வேயின் இன்றைய நிலைக்கு அதிபர் ராபர்ட் முகாபேயின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் தான் காரணம் என்கிறது ஜனநாயக மாற்றத்திற்கான இயக்கம் என்ற எதிர்க்கட்சி அமைப்பு. குடிசைப் பகுதிகளை காலிசெய்வது என்ற பெயரில் 7லட்சம் பேர் தங்கள் வீட்டையோ, வேலையையோ இழந்துள்ளனர் என்கிறது ஐ.நா. பிரச்சினைக்கு காரணம் மேற்கத்திய நாடுகளின் சதி என்கிறார் அதிபர் முகாபே.

கத்தோலிக்கம்

போப் 16ம் பெனடிக்ட்ன் முதல் அறிக்கை வெளிவந்துள்ளது. என்சைக்ளிக்கல் என அறியப்படும் இவ்வறிக்கைகள் திருச்சபையின் திசைழியை சுட்டுவனவாக அமையும். 16ம் பெனடிக்ட் போப்பாண்டவராக பதவியேற்றபின் வெளியிட்டிருக்கும் முதல் அறிக்கை உடல்சார்ந்த காதல் மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்றும் ‘கடைச் சரக்காகும்’ செக்ஸ் பற்றியும் கூறுகிறது. கடவுள் பெயரால் வெறுப்பும் வன்முறையும் உமிழப்படும் இக்கால கட்டத்தில் கிறிஸ்தவ அன்பு குறிப்பிடத்தக்கதும் காலத்தின் தேவையுமாகும் என்கிறார் போப்.

உடல் சார்ந்த அன்பு செக்ஸ் என்று குறுகிப்போய் விட்டதால் அது ‘கடைச்சரக்காகி விட்டதாகவும், மனிதனே ‘கடைச்சரக்காகவும்’ மாறிப்போகின்ற சூழ்நிலை குறித்தும் கூறும் இவ்வறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னதாக போப்பாண்டவர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான அன்பு காலப்போக்கில் கட்டற்ற, தன்னலமற்ற இயேசு நாதர் கூறிய அன்பாக மாறும் என்று தெரிவித்திருந்தார். உடல்சார்ந்த காதலையும், கடவுளின் மனித குலம் மீதான அன்பையும் வேறுபடுத்தி அறிக்கை விரிவாகப் பேசுகிறது.அறச் செயல்களுக்கும் (chanty) அறிக்கை முக்கியத்துவம் அளிக்கிறது. தேவைப்படுவோருக்குக் கொடுத்தல், குறிப்பாக வளரும் நாட்டைச் சார்ந்தவர்களுக்கு என்பது வலியுறுத்தப்படுகிறது.

வெனிசுலா அதிபர் சாவெசுடன் நடந்த 35 நிமிட சந்திப்பில் போப் அந்நாட்டில் பிஷப்புகளை நியமிக்கும் அதிகாரம் தனக்குண்டு எனவும், மதம் சார்ந்த கல்வியை பள்ளிகளில் நிறுத்துவது குறித்த கவலையும் தெரிவித்தார்.
தான் ஒரு ரோமன் கத்தோலிக்கனாகவே இருப்பதாக கூறிய வாசகம் பொறித்த சைமன் பொலிவாரின் படம் ஒன்றை போப்பாண்டவருக்குப் பரிசளித்த சாவெஸ், திருச்சபையுடனான தற்போதைய வேறுபாடுகளைக் களைய தான் ஆர்வமுடன் உள்ளதாகக் தெரிவித்தார். முன்னதாக வெனிசுவேலா திருச்சபையை ‘புற்றுநோய்’ என சாவெஸ் வருணித்திருந்தார்.

போதைப்பொருள்

உலகின் மிக அதிகம் தேடப்படும் போதைப் பொருள் கடத்தல் குற்றவாளி பாப்லோ ஏலோ மோன்டானோ, 10 வருட தேடுதல் வேட்டைக்குப் பின் பிரேசில் நாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார். 37 நாடுகளுக்கு போதை சப்ளை செய்யும் கொலம்பியா நாட்டவரான இவருக்கு ஒரு சிறிய கடற்படையும் ஏராளமான நிறுவனங்களும் உள்ளன. அமெரிக்கா, அர்ஜென்டினா, கொலம்பியா, பனாமா, மெக்சிகோ, பிரேசில் நாடுகளின் கூட்டு முயற்சியால் இவரும், இவரது மனைவி உட்பட 30 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட சொத்துக்களில், பனாமா நாட்டை ஒட்டிய மூன்று தீவுகள், பல கப்பல்கள், கலைப் பொருட்கள், பெரும் பணம் அடங்கும். இக்கைதி மூலம் போதை வியாபாரம் மட்டுப்படுத்தப்படுமா அல்லது வேறுசில குழுக்கள் பலவும், இவ்வெற்றிடத்தை நிரப்புமா என்பது குறித்து நிலைமை ஆராயப்படுகிறது.

ஆப்பிரிக்கா

ஆப்பிரிக்கா நாடுகள் முனைந்து ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் மாநாடு நைஜீரியத் தலைநகர் அபுஜாவில் நடந்தது. வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்நாட்டு பொருளாதாரத்தை பாதிக்காமல் செய்வது எப்படி என்பது குறித்து விவாதித்து இம்மாநாட்டில் இங்கிலாந்து நிதியமைச்சர் கார்டன் பிரௌன் மற்றும் அயர்லாந்து ராக் பாடகர் டோனோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆப்பிரிக்க நாடுகளின் நிதியமைச்சர்களும் சர்வதேச நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இம்மாநாடு வறுமை ஒழிப்பு, சுகாதாரத்தை மேம்படுத்துவது, கல்வி முதலியவை உள்ளிட்ட மில்லினியம் வளர்ச்சிக் குறிக்கோள்களை சாத்தியப்படுத்துவது குறித்த திட்டங்களை விவாதித்தது. ழு8 நாடுகள் 2010க்கு முன் உதவியை இரட்டிப்பாக்க ஒத்துக் கொண்டன. நைஜீரிய நிதியமைச்சர் உத்திரவாதங்கள் இனி செயல்படுத்தப்பட வேண்டும் என்றார்.

சுற்றுச்சூழல்

அரசுகளின் பராமரிப்பில் உள்ள மழைக்காடுகளில் 5ரூ மட்டுமே சரியான முறையில் பாராமரிக்கப் படுவதாக சர்வதேச அமைப்பொன்றின் சர்வே தெரிவிக்கிறது. விவசாயம் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தவிர பல லட்சக் கணக்கான ஹெக்டேர் காடுகள் திருட்டுத் தனமாக மரம் வெட்டுவதால் அழிகின்றன. நைஜீரிய, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் கிட்டத்தட்ட காடுகள் முழுவதும் அழிந்து விட்டன. சைபீரியா, காங்கே போன்ற நாடுகளில் உள்நாட்டு கலகங்கள் காடுகளை பாதுகாக்கும் பணிக்கு குந்தகமாக உள்ளன. உலகின் பல நாடுகளில் திட்டங்கள் தீட்டினாலும், செயல்படுத்தப் படுவதில் சுணக்கம் உள்ளது. பொலிவியா, பிரேசில், கானா போன்ற நாடுகள் காடுகளைப் பாதுகாப்பதில் சிறப்பாக செயலாற்றுகின்றன என்கிறது அந்த அறிக்கை.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com