Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஜூன் 2006
சர்வதேச சாளரம்

காராஸ் - உலக இடது சாரிகளின் தலைநகரம்
அர்ச்சனா

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் ஏற்பட்டிருக்கும் புரட்சிகரமான மாற்றம் உலகின் கவனத்தினை தன் பக்கம் ஈர்க்க வைத்திருக்கிறது. வெனிசுலாவிற்கு உலகின் பிரபலமான நடிகர் டானி குளோவர் வந்திருக்கிறார். தலா போண்டும் வந்திருக்கிறார். யுத்த எதிர்ப்பு செயல்வீரர் சிண்டி சீகன், பிரபல கறுப்பர் இன எழுத்தாளர் கார்னல் வெஸ்ட், பொலிவியாவின் புதிய ஜனாதிபதி யுவோ மொரைல் ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். வருகை தருபவர்களில் பெரும்பாலானோர் காம்ரோஸ், பன்ஸ் போர்ட்காரர்கள். 24 வயதாகும் இந்த ஆஸ்திரேலியர் காரகாசிலுள்ள, புதிய அரசின் உதவி பெறும் பல்கலைக்கழக மாணவர். ‘சறு மாவோயிஸ்ட்’ போல் தோற்றமளிக்கும் வெனிசுலாவின் ஆட்சியர் ஹியூகோ சாவெஸை சுற்றியுள்ள பிர்பலஸ்தர் வழிபாட்டில் இவருக்கு அதிருப்தி தான். எனினும் ‘வெனிசுலாவின் புரட்சி கவனத்தை ஈர்க்க வேண்டியதே’ என்கிறார்.

மேலும் கூறுகிறார்: ‘புதிய தாராளமயம் லத்தீன் அமெரிக்காவை 20 வருடங்களாக சீரழித்த கொள்கைகளுக்கான மாற்றினை உருவாக்க முயலும் தேசமும் அதன் தலைவருமாக வெனிசுலாவின் ஹியூகோ சாவெசும் இருக்கிறார்கள்; ஆகவேதான் பலரும் இங்கே வருகை தருகிறார்கள். இது வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டம் என்ற உணர்வு மேலோங்குகிறது.

சாவோஸ் தலைமையிலான அரசு பயங்கரவாத அரசு என்றும், தன்னைக் கொல்ல முயல்கிறது என்றும், புஷ்ஷின் மீதான குற்றச்சாட்டும் அமெரிக்கா வின் புஷ் நிர்வாகத் திற்கு பிடிக்காத வராக சாவோஸ் உள்ளார். இந்தப் பகையும், நாட்டின் எண்ணெய் வருவாயை சமூகத் திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் சாவோஸின் அணுகுமுறையும் அவருக்கு உலகெங்கும் ஆதரவாளர்களை உருவாக்குகிறது. காரகாஸை புதிய இடதுசாரி தலைநகரமாக மாற்றுகிறது.

1970 காலகட்டத்தில் புரட்சிகர தலைவர்களால் உருமாற்றம் செய்யப்பட்ட நிகரகுவாவின் மனாகுவா பூமி அதற்கு முந்தைய ஹவானா போன்று காரகாசும் உலகெங்கிலும் இருந்து மாணவர்களையும், பிரபலங்களையும், கல்வியாளர்களையும், ஆர்வலர் களையும், முதியோரையும் ஏன் 1970களின் பிரபலமான ‘சான்டலிஸ்டாக்கள்’ என்று சிலரால் அழைக்கப்படும் ஹிப்பிகளையும் ஈர்த்திருக்கிறது.

பல அமெரிக்கர்கள் உள்ளிட்டோர் வெனிசுலாவில் தங்கி வாழ்வற்காக வந்துள்ளனர். அரசு மற்றும் தனியார் ஏற்பாடு செய்யும் புரட்சி சுற்றுலாவில் பங்கெடுக்க வருகின்றனர்.

நடுத்தர அமெரிக்கர்களின் விடுமுறைப் பயணம் மர்காரீடா தீவின் புகழ்பெற்ற கடற்கரைகளை நோக்கி அல்ல; ஆனால் 1300 டாலர் செலவழிக்க தயாரானவர்களை சான்பிரான்சிஸ்கோவின் குளோபல் எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் சாவோஸின் கோட்டைகளா சிதிலமடைந்த நகரப் பகுதிகளுக்கு இரண்டு வாரப் பயணமாக அழைத்துச் செல்கிறது. சுற்றுலாத் தளங்களில் எழுத்தறிவு வகுப்புகள், மருத்துவ நிறுவனங்கள், அரசு நிதி உதவி பெறும் செய்தி நிறுவனங்கள் போன்றவை அடங்கும். சுற்றுலா வருகையாளர்கள் அமைச்சர்களோடு உரையாடுவதுடன் சாவோஸ்க்கு ஆதரவான ‘புரட்சி ஒளிபரப்பப் படாது’ (The Revoulution will not be Televisied) என்ற குறும்படத்தையும் பார்க்கின்றனர். அரசு எண்ணெய் நிறுவன அதிகாரிகள் உடனான சந்திப்பின் போது, ‘எவ்வாறு எண்ணெய் வளம் சமூகத் திட்டங்களுக்கு பயன்படுகின்றது’ என அறிகின்றனர்.

வருகையாளர்களுடன் பேசுபவர்களில் நியூயார்க் நகரில் வழக்கறிஞராக பணிபுரியும் யுவா கோலிங்கரும் ஒருவர். அவர் வெனிசுலா நாட்டு அரசுக்கு எதிரான குழுக்களுக்கு அமெரிக்க அரசு செய்து வரும் உதவிகள் பற்றிய தகவல்களை தோண்டி எடுப்பதற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஆனால் ‘அம்மாதிரி உதவிகள் எதுவும் செய்யவில்லை’ என புஷ் நிர்வாகம் மறுத்து வருகிறது.

மசாட்சு சேட் மாகாணத்தைச் சேர்ந்த அமெரிக்கரான 62 வயதாகும் பாட் மோரீசுக்கு ஏற்கனவே புஷ் நிர்வாகத்தைப் பற்றி நல்ல எண்ணம் இல்லை. இவர் போன்றவர்கள் இத்தகவல் களைக் கேட்டு வாய்பிளந்து விடுகிறார்கள்.
கோலிங்கரின் பேச்சைக் கேட்டபின், ‘நமது அரசு பேராசைக்கார, பொய்யுரைக்கும் அரசு என்று மட்டும் தான் நினைத்திருந்தேன். ஆனால் வெனிசுலாவை சீரழிக்கும் அமெரிக்காவின் நோக்குடைய நீண்டகால முதலீடு பற்றி அறிந்திருக்கவில்லை’ என கண்ணீரோடு கூறுகிறார்.

27 வயதாகும் பட்டதாரி மாணவர் ரேவா பாட்டர்மோன் வெனிசுலாவிற்கு வந்தது, அதன் குடிமக்களுக்கு ‘அமெரிக்கர்கள் அனைவரும் புஷ் ஆதரவாளர்களோ, ஏகாதிபத்தியவாதிகளோ அல்ல’ என காட்டுவதற்காகும். ‘அமெரிக்கர்கள் சாவோஸை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்’ என்கிறார் இவர்.

சாவோஸ்க்கு விமர்சகர்களும் இல்லாமல் இல்லை. ‘ஏழைகளுக்கு உதவிகள் ஏராளமாக வழங்கினாலும், சாவோஸ் எதிர்ப்பவர்களை ஒடுக்கக்கூடியவர்’ என்கிறார் எதிர்க்கட்சி அரசியல்வாதி ஜுலியோ போர்ஜஸ். ‘சாவோஸைப் போற்றுவதைவிட வருகையாளர்கள் அரசின் திறமையின்மை குறித்தும், பத்திரிகைகள் மீதான தாக்குதல் போன்ற அதிகரிக்கும் அடக்குமுறைகள் பற்றியும் அறிந்திருக்க வேண்டும்’ என்கிறார்.

‘சாவோஸ் தன்னை லத்தீன் அமெரிக்காவின் புஷ் எதிர்ப்புத் தலைவராக நிலைநிறுத்திக் கொண்டதால் மட்டுமே இடதுசாரிகள் சாவோஸை ஆதரிக்கின்றனர்’ என்கிறார் செஸாபவுஸின். 25 வயதான நியூயார்க் நகரைச் சேர்ந்த இவர் வெனிசுலாவில் தன்னார்வத் தொண்டராக பணியாற்றுகிறார். எனினும், ‘உலகமயத்தின் அசுர வளர்ச்சியைக் கண்டு கவலையுறும் பலர் வெனிசுலாவில் ஒரு நல்ல உலகத்திற்கான வாய்ப்பினைக் காண்கின்றனர்’ என்கிறார் வெனிசுலா அரசுக்கு ஆதரவான “வெனிசுலா புரட்சி:100 கேள்விகள் - 100 பதில்கள்” என்ற புத்தகத்தை எழுதியவர்களில் ஒருவரான இவர்.

பெரும்பாலும் ஏழைகள் படிக்கின்ற இலவசக் கல்வி வழங்கும், மூன்று வயதாகும் பொலிவியாப் பல்கலைக் கழகம், சாவோஸின் ஏழைகளுக்கு சேவையாற்றுவது குறித்த பேச்சுக்கும், அரசின் கொள்கைகளுக்குமான பின்னிப் பிணைவுக்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு.

23 வயதாகும் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த ஜெரோம் லீ இனியோ ஒரு வருடம் முன்பு வந்து தற்பொழுது இப்பல்கலைக் கழகத்தில் பணியாற்றுகிறார். தனது வெனிசுலா காதலியுடன் சாவோஸின் கோட்டையாகிய கடயா என்னும் ஏழைகள் நிரம்பிய, குற்றங்கள் மலிந்த பகுதியில் குடியேறியிருக்கும் இவர் கூறுகிறார்: “ ஒரு மாற்றினை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே நோக்கம். அது வெனிசுலாவில் இல்லை என்றால் வேறெங்கும் இல்லை”
ஆதாரம் - தி இந்து

வெனிசுலா லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்று. உலகமயத்திற்கு எதிரான போராட்டத்தின் குவி மய்யமாக லத்தீன் அமெரிக்க நாடுகள் உருவாகி வருகிறது. உலக இடதுசாரிகள் தலைநகராக உருவாகி இருக்கும் வெனிசுலா பற்றியும் அதன் ஆட்சியாளராக மக்கள் தேர்வு செய்திருக்கும் ஹியூகோ சாவோஸ் பற்றியும் நியூயார்க் டைம்ஸில் வெளியான கட்டுரையின் சுருக்கம் இது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com