 |
இலக்கிய முற்றம்
சுவடுகள்
- ஜி. மஞ்சுளா
விரித்த வானத்தில்
எந்த
அடிச்சுவடும் இல்லை.
மழை
கொண்டு வந்தது
எந்த மேகம்?
நிலா
பயணித்தது
எந்தப் பாதையில்?
பறவைகள்
பறந்தது
எந்தத் திசையில்?
சூரியன்
பதித்தது
எத்தனை கிரகணங்களை?
பயணித்த
பாதையில் எல்லாம்
பதித்துக் கொண்டே
போகிறான்
மனிதன் மட்டும்
தன் சுவடுகளை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|