Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
ஆகஸ்ட் 2005
கட்டுரை

தகவல் ஊடகங்கள் கட்டமைக்கும் அரசியல்
மு.சி. ராதாகிருஷ்ணன்


படிப்பவர்கள் 10% பார்ப்பவர்கள் 90% மாற்றப்பட்டிருக்கும் தகவல் ஊடகச் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

Media தகவல் ஊடகங்கள் வளர்ச்சி பெறாத விஞ்ஞான வளர்ச்சியற்ற காலங்களில் வதந்திகளே ஊடகமாக மாறி ஆட்சி இருப்புக்கும் கவிழ்ப்புக்கும் காரணமாக இருந்ததை கோயபல்ஸ் பிரச்சாரம் உணர்த்தியது.

கோயபல்ஸின் நவீன அவதாரமான அமெரிக்க உளவுப்படையின் கைவரிசை சிலி நாட்டின் மக்கள் நாயகன் அலெண்டேவுக்கு எதிராக இருந்தது.

2கோடி டாலர்களை வாரியிறைத்து 44 மண்டல ஒலிபரப்பு நிலையங்கள், 26 புதிய வார இதழ்கள், 20 வானொலி நிலையங்கள், நாள்தோறும் 3000 அவதூறு சுவரொட்டிகள் தனது கைப்பாவை பத்திரிகையாளர்களை சி.ஐ.ஏ.வின் வழியாக பொய்களை எழுதச் சொல்லி சிலியை சின்னா பின்னப்படுத்தியது அமெரிக்கா.
சிலியைத் தொடர்ந்து ‘வியட்நாமில் வடக்கிலிருந்து கன்னிமேரி கிளம்பி விட்டாள்’ என்ற மதப் பிரச்சாரமும் சீனர்களைப் பற்றிய மோசமான வதந்திகளும் பரப்பி உள்ளூர் கலகம் செய்யப் பார்த்தது அமெரிக்கா.

Firsr Flood திரைப்படம் வியட்நாமில் அமெரிக்கர் பட்ட துயரத்தைக் கூறுகிறது. Black Hawn down என்ற படம் சோமாலியாவில் அமெரிக்காவுக்கு நேர்ந்த அவலத்தைக் காட்டி அமெரிக்காவின் அட்டூழியத்தை மறைக்க ஊடகத்தை பயன்படுத்தியது. அமெரிக்காவில் தயாரான ஜேம்ஸ்பாண்ட் படங்கள் பலவற்றிலும் சிகப்பை வில்லனாக்கியே கதைக்களம் அமைத்தனர்.

ஆனால் ஒரு போதும் அமெரிக்கா தன்னுடைய ரசாயன குண்டுகளால் இன்றளவும் துடிக்கும் வியட்நாமின் கோரத்தை, ஜப்பானின் ஹிரோஷிமா-நாகாசாகி நகரங்களின் துயரத்தை தனது ஊடகங்களில் ஒளிபரப்பியதில்லை.

இதிலிருந்து மாறுபட்டு அமெரிக்கரான மைக்கேல்மூர் இயக்கிய ‘பாரன் ஹுட் 9/11’ என்ற விவரணப்படம் புஷ்ஷின் முகமூடியை கிழித் தெறிந்தது. புஷ்ஷுக்கும் பின்லேடனுக்கும் இடையிலான உறவையும், செப்டம்பர் 11-ன் பின்னணியையும் கிழித்தெறிந்தது.

காற்றே இல்லாத நிலவில் ஆம்ஸ்ட்ராங் நாட்டிய அமெரிக்க கொடி ஊடகக் காட்சிகள் எப்படி அசைந்தது என்ற விவாதம் இப்பொழுது அமெரிக்காவில் சூடுபறக்கிறது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று அமெரிக்கா தனது ஏகாதிபத்திய தாக்குதல்களுக்கு நியாயம் கற்பிக்க பல்லாயிரக் கணக்கான கோடி டாலர்களை ஊடகப் பிரச்சாரத்திற்கு செலவிட்டது. இந்தப் பின்னணியுடன் தகவல் ஊடகங்கள் கட்டமைக்கும் அரசியலை நாம் மதிப்பிட வேண்டியிருக்கிறது.

1835-ல் அச்சு ஊடகம் தமிழர்களின் பொதுச் சொத்தாகிறது. கிறித்தவ திருச்சபைகளின் தனி உரிமையாயிருந்த அச்சு ஊடகம் பொது சொத்தானது தமிழர் வாழ்வில் பல முக்கியமான பண்பாட்டு விளைவுகளை ஏற்படுத்தியது. தமிழர்களின் கடந்த கால பண்பாட்டு இலக்கியப் பேறுகளை மீட்டெடுக்கவும், எதிர்கால லட்சியப் போராடுதலுக்கு உதவும் கருவியாகவும் அச்சு ஊடகம் அமைந்தது.

1925-ல் இலங்கை வானொலியின் தமிழ் ஒலிபரப்பும் 1927-ல் இந்திய வானொலியின் சென்னை ஒலிபரப்பும் ஆரம்பமாயின. இது வாசிப்புத்திறன் அற்றவருக்கும் அறிவுத் திறன் மேம்பட ஜனரஞ்சக பண்பாட்டு வர்த்தக ஒலிபரப்பு சாத்தியப் பாடுகளை உருவாக்கிக் கொடுத்தது.

1921-ல் தமிழ்நாட்டுக்கு வந்த சினிமா 1931-ல் பேசத் தொடங்கிய போது தமிழகத்தில் காட்சிகள் மாறத் தொடங்கின. நிழலுருவக் கதாநாயகர்கள் நிஜக் கதாநாயகர்கள் ஆனார்கள். இதழியலும் வானொலியும் பெருமளவில் தமிழ் சினிமாவின் ஆளுமைக்கு ஆளாயின.

1975-ல் அறிமுகமான தொலைக்காட்சி ஏற்படுத்திய மாற்றத்தில் பத்திரிகைகளும் சினிமாக்களும் பதற ஆரம்பித்து விட்டன. சர்வதேசத் தளங்களின் செய்திகளை இணையத் தளங்கள் எளிதில் சாத்தியமாக்கித் தந்துள்ளன.

இன்று எம்.எல்.எம் (மல்டி லெவல் மார்க்கெட்டிங்) அமைப்புகள் வாய்வழி ஊடகமாகி நாட்டின் சுய பொருளாதாரச் சந்தைக்கு சவால் விடுகின்றன.

ஏகாதிபத்திய ஊடகங்கள் நிலம், நீர், வான் வழியாக மட்டுமல்லாமல் தொழில் நுட்பம், வேளாண் ஆய்வு, கணிப் பொறி நுட்பம், நுகர்வு கலாச்சாரம், உணவு என பல்வேறு தளங்களில் தனது அதிகார வலையை விரித்திருக்கின்றன.

இன்னொரு தளத்தில் ஆன்மீக வதந்திகள் உளவுத் துறையின் வதந்திகளையும் தந்திரங்களையும் தோற்கடிக்கின்றன. பிள்ளையார் பால் குடிக்கிற வதந்தி எந்த ஊடகங்களிலும் சொல்லப்படவில்லை. ஆனால் அது தீப்போல் பரவியது. பச்சைப் புடவை கட்டினால் உடன் பிறந்தவனுக்கு நல்லது. வீட்டு வாசலில் மெழுகு வர்த்தி ஏற்றினால் தலைமகனுக்கு நல்லது என்பதெல்லாம் வாய்வழி ஊடகங்களின் வழியே நொடியில் பரவியவை.

புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா? என்ற விளம்பரம் பெண்களை வியாபாரப் பொருளாக்கியது. புள்ளிராணிக்கு எய்ட்ஸ் வருவதை எந்த ஊடகமும் கேள்விக்குட்படுத்தவில்லை. அழகிப் போட்டிகள், பேஷன் ஷோக்கள், ‘ஐ டோண்ட் கேர்’ விளம்பரங்கள் பெண்குறித்த நுகர்வு கட்டமைப்பை உருவாக்குவதாகவும், கறுப்பு நிறத்துக்கு எதிரான பிரசாரத்தை வழிமொழிவதுமாக இருக்கின்றன.

இதற்கு மாற்றான முயற்சிகள் இந்தியச் சூழலில் இப்பொழுது செயல்படத் தொடங்கியுள்ளன. 2003-ல் மும்பையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இந்துத்துவ சக்திகளின் குறுக்கீடுகளையும் கடந்து மாற்று விடுதலைக் கான திரைப்படங்கள் திரையிடப்பட்டன. சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் ஆசிய-ஆப்பிரிக்க திரைப் படங்கள் வலுவான ஆதிக்கம் செலுத்தின. இதே வேளையில் தெஹல்கா போன்றவைகள் ஆட்சியாளர்களின், அரசு அமைப்புகளின் ஊழலை வெளிக் கொண்டுவரும் முயற்சிகளை மேற்கொள்கின்றன. ராஜேஷ் சர்மாவின் ‘பைனல் சொலியூசன்’ குறும்படம் குஜராத் படுகொலைகளை அதன் பின்னணியிலிருந்த சதிகளை விவரணப் படுத்தியது. இந்த ஊடக அரசியலில் நாம் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியதிருக்கிறது.

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com