 |
கவிதை
பரிணாமம் ஜி. மஞ்சுளா
மரபு ஏணி ஏறி
பரணில் உட்கார்ந்து
தன் உயரம்
பார்க்கும் கவிதை
காற்றில்லாமல்
மூச்சுத் திணறி பின்
இறங்கி வந்தது.
மொட்டை மாடிக்கு
வந்த பிறகு தான் தெரிந்தது
பரண் தவிர்த்த கவிதைகளில்
வார்த்தைகளே சிறகுகள் என்று.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|