 |
கவிதை
சிறு குழந்தைகளின் கண்ணீர் துளிகள் மாரி கேந்திரன்
காலத்தின் நீள் இருக்கைகளில்
வெறுமையுற்றிருக்கும்
பொழுதுகள்
சாம்பல் மேடாகும் வாழ்வின்
ஆதாரங்கள்
மீட்சி பெற முடியாத
ஒரு கால தருணத்தில்
நீயும் சுடப்பட்டு இறந்து
போனாய். .
கொடூரமான
வன்முறைகளுடன்
வாழநேர்ந்த நிர்பந்தங்கள்
உன்னத இலட்சியத்திற்காக
வாழ்ந்து உயர்ந்த
மனிதர்களை சாவு
அழித்து விடுவதில்லை.. .
தமிழ்ச் சமூகத்தின் மிகச் சிறந்த ஊடகவியலாளராகக் கருதப்பட்ட சிவராம் அண்மையில் இலங்கையில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இராணுவ புலனாய்வு ஆய்வாளர் என்ற நிபுணத்துவ மதிப்பீடு செய்யப்பட்டவர் சிவராம்.
|
தராக்கி
போன்ற மாமனிதர்களின்
சாவு
மரணத்தின் சுவடுகளை
அழித்து எழுந்து நிற்கிறது.
ஏமாற்றமும்
வஞ்சகங்களும்
தந்திரங்களும்
துரோகங்களும்
தமிழ் இனத்தின் வேர்களை
அழித்து விட போவதில்லை. .
நம்
ஈழத்தின் பெறுமதியான
அழகிய கனவுகள்
சுக்கு நூறாக்கப்படுகின்றன.
ஒரு தாராக்கியின்
உயிருக்கு முன்
ஆயிரம் தராக்கிகள்
பிறப்பார்கள். . .
ஆக. . .
நடக்கும் எல்லா
அதிகாரங்களிலும்
வன்முறை கைகொண்டு
எதிர்ப்புணர்வின் கால்களுக்கு
பின்
சிறு குழந்தைகளின்
கண்ணீர் துளிகளின்
அலறல் கேட்டபடி
இருக்கின்றனது. . .!
ஆற்றாமையின்
கணங்களின் உள் தள்ளும்
மனித படுகொலையின்
பட்டியலை நியாயப்பாடுகளின்
பழி நாளைய
போரின் துயரத்தின் முன்
முடிவடையலாம். .
தலையில்
உட்புறத்தில்
சரிந்த துப்பாக்கி குண்டின்
இரத்தம் தோய்ந்த
இறுதி நினைவின்
மரணத்தின் போது
இருளினூடாக
நீ மறுபடியும் ஒளியாய்
பிறப்பாய் தராக்கி. . .
நீ
ஒரு யுகத்தின்
விடியலுக்காக
விதைக்கப் பட்டிருக்கிறாய். .
மறுபடி
மறுபடியும்
நீ
எங்கள் முன்
தோன்றுவாய். . .
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|