Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
ஆகஸ்ட் 2005
கட்டுரை

கூடல்
கவிஞர் சங்கமம்


சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளில் தமிழில் ஆரம்பித்த புதுக்கவிதை பின்னர் நவீன கவிதை, நவீனம் தாண்டிய கவிதை என நகர்ந்து கொண்டிருக்கிறது. அரை நூற்றாண்டு கால கவிதை வரலாற்றின் கழிந்த இருபது ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் முக்கியமானவை. நம் கவனத்திற்கு ஆட்படாமல் இருந்த வட்டார, புகலிட, விளிம்பு நிலை, பெண்ணியம், சிறுபான்மை, தலித்திய அடையாளங்களும், மொழிகளும் கவிதையில் கவனம் பெற்றிருக்கின்றன. தமிழ் அல்லாத இந்திய மொழிகளிலிருந்தும், உலக மொழிகளிலிருந்தும் கவிதைகளை தமிழில் கொண்டு சேர்க்கும் முயற்சிகள் வேகம் பெற்றிருக்கின்றன.

பின் நவீனத்துவ, பின்னை காலனிய பார்வைகள் பண்பாட்டின் நுண் அடுக்குகளுக்கு உள்ளும் கவிதையை அழைத்துச் சென்றிருக்கின்றன. பிரதி - ஆசிரியன் - வாசகன் இவற்றுக்கிடையான உறவு குறித்தும், கவிதையில் மொழியின் இடம் குறித்தும், கவிதைக் கோட்பாடுகள் குறித்தும் தொடர்கின்றன உரையாடல்கள். தமிழ்க் கவிதை செத்துவிட்டது எனும் கூப்பாடுகளுக்கிடையில் தமிழ்க் கவிதையின் இருப்பு குறித்த கேள்வியும் மேலெழும்புகிறது. இந்த பின்புலத்தில் கவிதை குறித்த இரு நாள் உரையாடலுக்கு கடவு மற்றும் புதிய காற்று இதழும் ஏற்பாடு செய்துள்ளது. செப்டம்பர் 10, 11 சனி - ஞாயிறுகளில் மதுரையில் நடைபெறும் உரையாடலில் அரைநூற்றாண்டு கவிதை குறித்த மதிப்பீடுகள், அனுபவப் பகிர்வுகள், கவிதை வாசிப்புகள் என அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

கவிதையோடு தொடர்புடைய அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறோம். பங்கேற்பாளர்களுக்கு உணவும் தங்குமிடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பங்கேற்க விரும்புகிறவர்கள் ஆகஸ்டு 31க்குள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு

தேவேந்திர பூபதி
13, நாவலர் நகர்
மூன்றாவது தெரு
எஸ். எஸ். காலனி
மதுரை - 10
அலை பேசி - 98659 32023

ஹாமீம் முஸ்தபா
புதிய காற்று
142, வடக்கு வெளி வீதி
யானைக்கல்
மதுரை - 1
அலைபேசி - 98947 80514


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com