 |
இங்கே யாருமில்லை
திருச்செந்தாழை
திறக்கப்பட்ட கதவின் வழியே
தப்பித்தோடுகிறது இருள்
புதிய நபர்களை
நுகர்நது பார்க்கிறது காற்று
விரவிக் கிடந்த
மெல்லிய தூசியின் மேல்
எலியின் கால்தடம்
வருகைப் பதிவாய்
தெறித்து கிடந்தன
பறவையின் எச்சங்கள்
ஜன்னலை திறந்தபடி
நண்பர் கூறுகிறார்
“ரொம்ப நாளாய்
இங்கே யாருமில்லை”யென.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|