Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஏப்ரல் 2009
ஐரோப்பிய நூலகங்களில் தமிழ் ஆவணங்கள்

ஐரோப்பிய நூலகங்களில் உள்ள தமிழ் நூல்கள் மற்றும் பதிப்பிக்கப்படாத ஆவணங்கள், ஓலைச்சுவடிகள் பற்றிய அறிவு தமிழ் இலக்கிய, வரலாற்று அறிஞர்கள், மாணவர்கள் மத்தியில் தெரியப்படுத்துதல் வேண்டும். தமிழகத்தில் கிடைக்காத அறிய பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ் பதிப்புகளும், பதிப்பிக்கப்படாத ஓலைச்சுவடிகளும் ஐரோப்பிய நாடுகளின் நூலகங்களில் செம்மையாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவ்வளவு அரியதமிழ்ப் பதிப்புகளும், ஓலைச்சுவடிகளும் எவ்வாறு அந்நூலகங்களுக்குச் சென்றன என்பது ஒரு வரலாற்று சம்பந்தமான விடயம். ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பிய வரலாற்றில் ஏற்பட்ட மாற்றம், அதனைத் தொடர்ந்து இந்தியா போன்ற நாடுகளின் மீதான ஐரோப்பிய நாடுகளின் காலனிய ஆதிக்கம் போன்ற வரலாற்று நிகழ்வுகளோடு இத்தகவல்கள் அறியப்படல் வேண்டும். இங்கு நாம் எடுத்துக் கொள்ளும் நூலகங்கள் பிரிட்டிஷ் நூலகம்_ லண்டன், போடிலியன் நூலகம் _ ஆக்ஸ்போர்டு, பிராங்கே நிறுவன நூலகம் _ ஹாலே, ஜெர்மனி மற்றும் பிப்லியோதிக் நேஷ்னல் (பாரிஸ் தேசிய நூலகமான), பாரிஸ், ப்ரான்ஸ்.

லண்டன் மாநகரத்தில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தின் ஆசிய மொழி, வரலாறு, இலக்கியம் சம்பந்தமான நூல்களும், பதிப்பிக்கப்படாத ஆவணங்களும், ஓலைச்சுவடிகளும் ஆசிய, பசிபிக் மற்றும் ஆப்பிரிக்கா (Asia, Pacific and Africa Collections) துறையின் மேற்பார்வையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான நூல்களும், ஆவணங்களும், இந்திய மொழி மற்றும் இலக்கியம் ஆகியவற்றின் வரலாற்றைச் சார்ந்தவை. இவை India Office Library and Records என்ற துணைப் பிரிவில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்திய மொழிகளில் பதிப்பிக்கப்பட்ட நூல்களும், பத்திரிகைகளும் என்னென்ன உள்ளன என்பவை குறித்து ஆங்கிலத்தில் அட்டவணைத் தயாரித்து நூலகத்தார் அச்சிட்டுள்ளனர். இதில் தமிழ் மொழியைப் பொருத்தமட்டில் அச்சில் பதிப்பிக்கப்பட்ட மூன்று அட்டவணைகள் மிக முக்கியமானவை. தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள், அறிஞர்கள் இம்மூன்று அட்டவணைகளைத் தமிழகத்தில் உள்ள சில முக்கியமான நூலகங்களில் சென்று பார்த்து அறிந்து கொள்ளலாம். இவ்வட்டவணைகளின் பெயர் வருமாறு:

1. L.D. Barnet, G.U. Pope, A Catalogue of the Tamil Printed Books in the Library of the British Museum, London, 1909.

2. L.D. Barnet, A Supplementary Catalogue of the Tamil Books in the Library of the British Museum, London, 1931.

3. Albertine Gaur, Second Supplementary Catalogue of Tamil Books in the British Library, London, 1980.

Library பிரிட்டிஷ் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் அச்சில் வெளிவந்த தமிழ் நூல்கள் மற்றும் பத்திரிகைகள், இதழ்களைக் குறித்து அறிந்து கொள்வதற்கு மேலே தரப்பட்டுள்ள மூன்று அட்டவணைகளும் முக்கியமானவை. இவை தவிர, பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தில் பணிபுரிந்த ஆங்கிலேய அதிகாரிகள் (English Administrators), மாவட்ட ஆட்சியர்கள் (Civil Servants) ஆகியோரின் தனிப்பட்ட சொந்த ஆவணங்களிலும் (Private papers) தமிழ் மொழி, இலக்கியம், வரலாறு சம்பந்தமான குறிப்புக்கள் உள்ளன. இவ்வதிகாரிகளுள் குறிப்பிட வேண்டியவர்களில் _ காலின் மெக்கன்ஸி, வால்டர் ஈலியாட், பிரான்சிஸ் எல்லிஸ் ஆகியோர். காலின் மெக்கன்ஸி சேகரித்த தென் இந்திய மொழிகளின் இலக்கியங்களின் ஓலைச் சுவடிகளும், குறிப்பாக தமிழ் இலக்கியம் தொடர்பாக சேகரித்த அட்டவணைகளை மெக்கன்ஸி கலெக்ஷன் (Mackenzie Collection) என்ற பிரிவில் பாதுகாக்கப்பட்டுள்ளது. மெக்கன்ஸி சேகரித்த ஆவணங்கள், ஓலைச்சுவடிகள் குறித்த அட்டவணைப் பதிப்பிக்கப்படாமல், கணினி மூலம் அச்சிட்ட பிரதியன்று மட்டும் ஆசிய_பசிபிக் மற்றும் ஆப்பிரிக்கா துறையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு கீழ்திசை நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் மெக்கன்ஸி கலெக்ஷனை விட பல மடங்கு அதிகமான ஆவணங்கள் பிரிட்டிஷ் நூலகத்தில் மெக்கன்ஸி கலெக்ஷனில் உள்ளன.

சென்னை ராஜ்தானியில் 19ஆம் மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் வெளிவந்த ஆங்கில செய்தித்தாள்கள் பிரிட்டிஷ் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. என்னென்ன செய்தித்தாள்கள் நூலகத்தில் உள்ளன என்ற தகவலை தெரிந்துகொள்ள பின்வரும் இணையதளத்தின் தொடரை கொண்டு அறிந்து கொள்ளலாம்.

http://www.asiamap.ac.uk/ newspapers/index.php



Library ஆக்ஸ்போடு பல்கலைக்கழக நூலகமான போடிலியன் நூலகத்தில் உள்ள பதிப்பிக்கப்பட்ட மற்றும் பதிப்பிக்கப்படாத தமிழ் ஆவணங்கள் / ஓலைச்சுவடிகள் குறித்து அறிந்து கொள்ள ஜி.யு.போப் தயார் செய்த பதிப்பிக்கப்படாத அட்டவணை மிகவும் முக்கியமானது. இவ்வட்டனை போடிலியன் நூலகத்தின் Oriental Reading Room ™ ல் மட்டும் வாங்கி படித்து கொள்ளலாம். அதனுடைய விவரம் வருமாறு,

G.U. Pope, ‘Miscellaneous Tamil Manuscripts in the Bodleian Library’ (GB 310 MSS.Tam)

இவ்வட்டவணை சீர்திருத்தி, பதிப்பிக்கப்படாமல் இருப்பது வருத்தத்திற்குரியது. போடிலியன் நூலகத்தில் உள்ள தமிழ் ஓலைச் சுவடிகள், தாள்களில் தயார் செய்த பிரதிகள், ஒல்லாந்து நாட்டு கிறித்தவ மத போதகர்களின் தமிழ் ஆவணங்கள் இவ்வட்டவணையில் இடம் பெற்றுள்ள குறிப்பிடத்தக்க ஒன்றாகும். எல்லிஸ் அவர்களின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு (“On Virtue”/18D25) மற்றும் அவருடைய பதிப்பிக்கப்படாத தமிழ் மொழி, இலக்கியம் குறித்த கட்டுரைகள் ஆக்ஸ்போர்டு போடிலியன் நூலகத்தில் உள்ளன. இங்கிலாந்தில் உள்ள பிரிட்டிஷ் நூலகம், போடிலியன் நூலகம் போன்று ஜெர்மனியில் தமிழ் மொழி, இலக்கியம் குறித்த அரிய பதிப்புக்களும், ஆவணங்களும் ஹாலே நகரிலுள்ள பிராங்கே நிறுவன நூலகம் பாதுகாத்து வருகிறது. பதினெட்டாம் நூற்றாண்டு தொடக்கத்தில் டானிஷ் _ஹாலே மிஷன் தொடர்பு தரங்கம்பாடிக்கும், ஹாலேவிற்குமான ஒரு மத பண்பாட்டுத் தொடர்பினை உருவாக்கியது. தரங்கம்பாடியில் லூதரன் மிஷனரிமார்கள் பதிப்பித்தும் சேகரித்தும் வைத்த தமிழ்ப் புத்தகங்கள், ஓலைச்சுவடிகள், ஆவணங்கள் அவ்வப்போது ஜெர்மனியின் லீப்சிக், ஹாலே நகரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது ஹாலே நகரிலுள்ள பிராங்கே நிறுவன நூலகத்தில் உள்ள தமிழ் மொழி, வரலாறு, இலக்கியம், தொடர்பான புத்தகங்களின் சேர்ப்பு முன்று நூலகங்களின் இணைப்பாக காணப்படுகிறது. அவை,

1. Library of the East Indian Mission Institute

2. Library of Tranquebar in the Lutheran Mission work in Leipzig

3. Library of the Luthern Mission work in Leipzig

ஹாலேவில் பாதுகாக்கப்பட்டு வரும் தமிழ்ப் புத்தகங்கள் குறித்த அட்டவணை சென்னை தரமணியிலுள்ள ரோஜா முத்தையா நூலகத்திலும், புரசைவாக்கத்திலுள்ள குருக்கூல் தூதரன் கல்லூரி நூலகத்திலும் கிடைக்கின்றன. ஆனால் இந்நூலகங்களில் கிடைக்கும் அட்டவணை ஒரு முழுமையான அட்டவணை என்று கூற முடியாது. ப்ராங்கே நிறுவன நூலகத்தில் உள்ள தமிழ்ப் புத்தகங்கள் குறித்த முழுமையான அட்டவணை ஒன்றை ஸிமீஸ்.யி. செல்லப்பா பாக்யராஜ் அவர்கள் கணினி பிரதிசெய்து தயாரித்துள்ளார். இவ்வட்டவணை பதிப்பிக்கப்படாமல் ப்ராங்கே நிறுவன நூலகத்தில் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. ஸிமீஸ். யி. செல்லப்பா அவர்கள் சென்னையிலுள்ள குருக்கூல் லூதரன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணிபுரிந்து தற்போது பெங்களூரில் லூதரன் திருச்சபையில் பணியாற்றி வருகிறார். இவர் தயார் செய்த பதிப்பிக்கப்படாத அட்டவணையில் ஒரு சிறப்பு அம்சம் உண்டு. அரிய பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய, இலக்கணப் பதிப்புக்களின் முகப்புப் பக்கத்தினை நகலாக்கம் செய்து அட்டவணையோடு சேர்த்துள்ளார். இவ்வட்டவணையின் பிரதியன்று தமிழகத்திற்கும் தேவைப்படுகிறது. இவ்வட்டவணையை ஸிமீஸ். யி. செல்லப்பா அவர்கள் தயார் செய்த பிறகும் பதிப்பிக்கப்படாமல் இருப்பது வருத்தத்திற்குரியது. ஹாலே நூலகத்தின் இணையதள அட்டவணையைக் கொண்டு ஓரளவிற்கு என்னென்ன தமிழ் நூல்கள் உள்ளன என்பவை குறித்து அறிந்து கொள்ளலாம். அவ்விணைய தளத்தின் தொடர் வருமாறு,

1. http://opac.bibliothek.uni-halle.de/DB=5/LNG=DU/SID=d5d9a7af-1/CMD?ACT=SRCHA&IKT=54& SRT=YOP&TRM=s+miss%3Ac% 3F

East Indian Mission Institute ™ ல் சேகரிக்கப்பட்ட 196 நூல்களின் பட்டியலை இத்தளத்தின் மூலம் அறியலாம்.

2. Library of Tranquebar in the Luthern Mission Work ™ ல் உள்ள நூல் சேகரிப்பினை அறிந்து கொள்ள பின்வரும் இணையத்தள தொடர்பினை அணுகவும்.

http://opac.bibliothek.uni-halle.de/DB=5/SET=1/TTL=1/CMD? ACT=SRCHA&IKT=54&SRT=YOP& TRM=s+lmw-t%3Am% 3F

3. Library of Luthern Mission work in Leipzig ™ ல் உள்ள நூல் சேகரிப்பினை அறிந்து கொள்ள பின்வரும் இணையத்தள தொடர்பினை அணுகவும்.

http://opac.bibliothek.uni-halle.de/DB=5/SET=1/TTL=1/CMD? ACT=SRCHA&IKT=54&SRT=YOP& TRM=s+lmw-i%3Ae% 3F

பாரீஸ் நகரத்தில் உள்ள பாரீஸ் தேசிய (பிப்லியோதீக் நேஷ்னல்) நூலகத்தில் உள்ள தமிழ் ஓலைச்சுவடிகளைக் குறித்த அட்டவணை ஒன்று பதிப்பிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு,

A Cabaton, Sommaire des Manuscrits Indiens, Indo-Chinois at Malayo-Polynesiens, Paris, 1912.

1912ஆம் ஆண்டு வெளிவந்த A Cabaton அட்டவணை தமிழகத்தில் உள்ள நூலகங்களில் கிடைப்பதாகத் தெரியவில்லை. புதுச்சேரியிலுள்ள பிரெஞ்சு_இந்திய ஆய்வு நிறுவனத்தை அணுகி பாரீஸ் தேசிய நூலகத்தில் உள்ள அரிய தமிழ் பதிப்புக்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

(இக்கட்டுரையின் ஆசிரியர் மூன்று மாதம் ஐரோப்பிய நூலகங்களில் ஆய்வு மேற்கொண்ட அடிப்படையின் அனுபவத்தை ஒட்டி எழுதிய கட்டுரை இது.) மேலும் தொடர்புக்கு [email protected]



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com