Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஏப்ரல் 2009
‘லால் சலாம்’ (லெனின் வாழ்க்கை வரலாறு)

‘லால் சலாம்’ (லெனின் வாழ்க்கை வரலாறு), சாலையோரன்,
வெளியீடு : பாரதி புத்தகாலயம், பக். 32, ரூ. 10

இன்னும் உயிரோடு இருப்பதாக நினைத்துக் கொண்டு உலகளவில் குழந்தைகள் இன்னமும் கூட இரண்டு பேருக்கு கடிதங்கள் ஆத்மார்த்தமாக எழுதி வருவதாக சமீபத்தில் ஓர் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தார்கள். சார்லி சாப்ளினுக்கு இப்போதும் நாளன்றிற்கு நூறு கடிதங்களாவது வருகிறதாம்! இரண்டாம் நபர் யார் தெரியுமா? அவர் தான் லெனின்! ரஷ்யாவிலிருந்து சைபீரியா வரை பல லட்சம் குழந்தைகள் இன்னமும் கூட அவர் தங்களை கவனிப்பதாக உணர்கிறார்கள். ‘இன்னும் கொஞ்சம் நாட்கள் இருங்கள்’ என எழுதுகிறார்கள். அவரது பதனிடப்பட்ட உடலை சாட்சியாக வைத்து திருமணம் செய்து... தங்களது கல்லூரி, பல்கலைக்கழக பட்டங்களை அவரது காலடியில் வைத்து நன்றி சொல்கிறார்கள் உலகின் மூலை முடுக்கிலெல்லாம்... இன்னும் போகாத மொழிகளில் அவர் போய்க் கொண்டே இருக்கிறார்.

லால்சலாம் _ காம்ரேட் லெனின் என்று முடியும் இந்தக் குட்டிப் புத்தகம் ஒரு கண்ணீர் காவியமாக நம் முன் விரிந்து உடலில் ஒரு பரவசத்தையும் கண்களில் ஈரத்தையும் விதைக்கிறது... தோழர் லெனின் வாழ்வை பற்றி _ அவர் வாழ்வின் செய்தியைப் பற்றி அவரிடமே பேசும் இந்த முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மே தினத்தை ஷ்னென்கோயே சிறையில் அவர் கொண்டாடியதும் இஸ்க்ரா செய்தித்தாள் தொடங்கிய முறையும், போரினால் லாபம் யாருக்கு என அவர் கேட்ட தருணமும் பதிவாகும் போது நாம் நெகிழ்ந்து போகிறோம். போல்ஷிவிக் அரசியலின் அடிப்படைகளை குறித்து சிறு அளவே ஆனாலும் இந்தப் புத்தகம் மிகநேர்த்தியாக முன்வைக்கிறது.

தோழர் லெனின் இறந்துபோன அந்த நாளை இந்த நூல் முன்வைக்கும் பக்கங்களை கண்கள் ஈரமாகாமல் படிப்பது ரொம்ப கஷ்டம். இந்த வரலாறு முழுதும் இனி தோழர் லெனினின் சிவப்பு நிழல் படர்ந்து பரவி இருக்கும் என்பதை அழமாக மனதில் பதிக்கும் ஓர் அற்புதமான புத்தகம் இது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com