Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஏப்ரல் 2009
பெரியவர்களுக்காக சிறியவர்கள்

கு. ராஜராஜன்
பத்தாம் வகுப்பு, திருப்பூர்
சர்க்கஸ் டாட் காம், இரா. நடராசன்
பாரதி புத்தகாலயம், சென்னை, பக்: 112 ரூ. 40

என் பெயர் கு. ராஜராஜன் திருப்பூர் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். புத்தகக் கண்காட்சியில் எனக்கு பரிசாக வழங்கப்பட்ட (கட்டுரை போட்டி: இரண்டாம் பரிசு நான் வாங்கினேன்) சர்க்கஸ்.காம் புத்தகம் படித்தேன். ரொம்ப பயனுள்ள பரிசு.

நீங்கள், மேடையில் அப்பாவி மாதிரி உட்கார்ந்து அறிவாளி மாதிரி பேசினீர்கள். சர்க்கஸ் . காம் புத்தகத்திற்கு முன் நாகா நான் படித்தேன். அதுவும் ரொம்ப நல்லா இருந்தது.

சர்க்கஸ் . காம் உங்கள் புத்தகங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது. அது கம்ப்யூட்டர் சம்பந்தமானது. சர்க்கஸ் சம்பந்தமானது உலகப் பொதுமறை திருக்குறள் சம்பந்தமானது. இன்னும் பல விஷயங்கள் சம்பந்தமானது. அட்டை ரொம்ப அழகாக இருக்கிறது. நான் ரசித்த மேலும் பல விஷயங்கள் உங்களுக்கு எழுத விரும்புகிறேன். தொந்தரவுக்கு மன்னிக்கவும்.

புத்தகத்தில் செல்வி கம்ப்யூட்டரோடு உரையாடுவது புது விஷயமாக _ அதுவும் திருக்குறள் பற்றி உரையாடுவது ரொம்ப நல்லா இருக்கிறது. ஆச்சரியமான கண்டுபிடிப்பு இது. சர்க்கஸ் சகோதரர்கள். லாலிபாய் மிட்டாய், பஞ்சு மிட்டாய் சார்லிசாப்ளின் என பெயர் வைத்தது வேடிக்கை. கடலை மிட்டாய், ஜவ்வு மிட்டாயை ஏன் விட்டு விட்டீர்கள்.

திருக்குறள் ஓலைச் சுவடியை எரித்து விடுவதற்கும் உலகில் திருக்குறளே இல்லாமல் அழித்து விடுவதற்கும் ஒரு சித்தர் சாமியார் வில்லன் வேலை பார்ப்பது ரொம்ப ஆத்திரமாக வந்தது. அறிவியல் வென்றுவிடும் என்று தெரியும் என்றாலும் செல்வி செத்துவிடுமோ என அச்சம் இருந்தது. ஆயிஷாவை கொன்றுவிட்டீர்கள், நாகாவிலும் அதே மாதிரிதான். ஆனால் செல்வி சாகவில்லை. அதுவே எங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது.

நினோ அறிவியல் தொழில்நுட்பம் என்று நிறைய அறிவியல் செய்திகளை இந்தப் புத்தகம் மூலம் அறிந்து கொண்டேன். நான் படித்த முதல் சயன்ஸ் _ நாவல் இதுதான் எனக்கு அறிவியல்தான் பிடித்தபாடம்.

நான் நண்பர்களுக்கு சர்க்கஸ் . காம் வாங்கி தருவேன். அடுத்த புத்தகக் கண்காட்சி போட்டியில் முதல் பரிசு நான் பெறுவேன் அப்போது சந்திக்கலாம்.

நன்றி!


ஜி. ஜனனி
6ஆம் வகுப்பு, மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இராமகிருஷ்ணபுரம், கோவை
Rose ரோஸ், இரா. நடராசன்
பாரதி புத்தகாலயம், சென்னை18
பக்: 64 ரூ. 15

1. தற்கால இயற்கையான நடைமுறை வாழ்க்கையைப் பற்றி மிகவும் அழகாகவும் இயல்பாகவும், எளிதில் புரிந்து கொள்ளும் படியும் எழுதியுள்ளார்.

2. இன்றைய பள்ளிக் குழந்தைகளும், பெற்றோர்களும் படும் வேதனையையும், செயல்படும் செயல்களையும் மிகவும் உருக்கத்துடன் எழுதியுள்ளார். இந்த ரோஸ் கதையில் கூறியுள்ளார்.

3. இன்றைய கல்வி முறையையும், வாழ்க்கைச் சுழலையும் அவற்றின் வளர்ச்சியையும் பற்றி தெள்ளத் தெளிவாக ரோஸ் கதையின் மூலம் விளக்கிக் கூறியிருக்கிறார்.

4. இந்தச் சமூகத்தின் சமூக மதிப்பீடுகளும் எப்படி கேள்விகளையே விரும்பாமலும் தேடலை முன் வைக்காததுமாக இயங்கி வருகிறது என்பதை பற்றியும் எடுத்துரைத்துள்ளார்.

5. அறிவுள்ள தேடல் உள்ள ஒரு குழந்தை எப்படி இன்றைய கல்விமுறையால் சிரமப்பட்டுக் கொண்டிருகின்றனர் என்பதைப் பற்றியும் ஆசிரியர் இரா. நடராசன் தனது ரோஸ் கதையின் மூலம் எடுத்துக் கூறியுள்ளார்.

இந்த நூல் அறிமுகத்தை எழுதிய ஜனனி உடல் ஊனமுற்றவர். இவருடைய தாயார் தினமும் இவரை தூக்கிக் கொண்டுதான் பள்ளிக்கூடத்திற்கு வருவார். இவர் உடலின் நிலை நிலைத்த நிலையால் இருக்காது. இந்தச் சூழலில் இந்த நூல் அறிமுகத்தை எழுதிக் கொடுத்த ஜனனிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
(- ஆசிரியர் குழு)


வி. மலர்விழி
6ஆம் வகுப்பு,
மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இராமகிருஷ்ணாபுரம், கோவை
மலராத அரும்புகள்,
பேரா. ஆர்.சந்திரா
பாரதி புத்தகாலயம், சென்னை18, பக்: 24 விலை: ரூ. 5

இந்தியா முழுவதிலும் குழந்தைகள் கொத்தடிமைகளாக வேலை செய்கின்றனர். தமிழகத்து சிறுவர்கள் வட மாநிலங்களில் மாட்டிக் கொண்டு, பின்னர் மீட்கப்பட்டு வருவது பற்றி அடிக்கடி செய்திகள் வருகின்றன.

அவர்கள் காற்றில்லாத அறைகளில் வேலை செய்யும் குழந்தைகள் ஏராளமான பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். பகுதி நேர உழைப்பு பகுதி நேரக் கல்வி என்ற சூழலில் வேலை பார்க்கும் குழந்தைகள் மனநிலை பரவாயில்லை. அவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமெனற் பிடிப்பு உள்ளவர்களாக இருக்கின்றனர்.

உலகிலேயே மிக அதிகமான குழந்தைத் தொழிலாளர் உள்ள இந்த பகுதியில், முக்கல்வாசிக் குழந்தைகள் சிறுமிகள் ஆகும்.

பெற்றோர், உறவினருடன் நெருக்கம் இணக்கம் இருப்பதில்லை.

“தரித்திரத்தால் மழலைகளின்
தளிர் கரத்தை விலை பேசும்
சரித்திரத்தின் ஆணிவேரை
சாய்த்திடவே வாருங்கள்’’


சத்தியப்பிரியா
6ஆம் வகுப்பு,
மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இராமகிருஷ்ணாபுரம், கோவை
1806 வேலூர்ப் புரட்சி,
ச. தமிழ்ச்செல்வன்
பாரதி புத்தகாலயம், சென்னை18, பக்: 16 விலை: ரூ. 5

1806ஆம் ஆண்டு தமிழகத்தின் வடஎல்லையில் வேலூரில் நடந்த சிப்பாய்களின் கிளர்ச்சி சில மணி நேரங்களில் பல அம்சங்களில் 1857 எழுச்சியை ஒத்திருந்த வேலூர்க்கோட்டைக் குள்ளிருந்து வெளியே தேசத்தின் தெருக்களில் தெறித்து விழுந்தது. 1947ஐ நோக்கி இந்திய தேசத்தை அழைத்துச் செல்ல முதல் தப்படியை

எடுத்து வைத்தவர்களாக கொல்லப்பட்ட அந்த மகத்தான வீரர்களை சரித்திரம் குறித்து சொல்கிறது.

பொதுவாக இந்தியாவுக்கு எப்படி சுதந்திரம் கிடைத்தது என்று கேட்டால் காங்கிரஸ் கட்சி காந்திஜி தலைமையில் போராடி அதுவும் அஹிம்சாவழியில் போராடி வாங்கிக் கொடுத்ததாக ஒரு கதையை பல்லாண்டு காலமாக நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.


பி. சோபியா
6ஆம் வகுப்பு,
மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இராமகிருஷ்ணாபுரம், கோவை
நாமும் நமது கலைகளும்,
பாரதி புத்தகாலயம், சென்னை, பக்:32 விலை: ரூ.5

வேட்டையில் பெரிய மிருகமோ, அதிக எண்ணிக்கையில் மிருகங்களே கிடைத்தால் இனகுழுவினர்கள் எல்லோரும் வயிறு நிறைய உண்டு களிக்கலாம் என்ற மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். வேட்டையில் கிடைத்த மிருகங்களைத் தரையில் போட்டு தீயிலே வேக வைத்து மிருகங்கள் வேகும் போது இனக்குழு உறுப்பினர்கள் எல்லோரும் வட்டமாக சுற்றி நின்று ஆ_ஊ_ஆ_ஊ என்று ஓசை எழுப்பினார்கள்.

ஆ_ஊ_ஆ_ஊ என்று ஓசையெழுப்பும் போதே அவர்கள் தங்கள் கைகளையும், கால்களையும் அசைத்தார்கள். எழுப்பப்பட்ட சத்தத்தின் தாளத்துக்கு தோதாய் விழுந்த காலடி வைப்புகளும் அசைவுகளும்தான் முதலில் உருவான அடவுகள் அல்லது நடனங்கள்.

இப்போதெல்லாம் டி.வியில் கிராமிய நடனங்களையும் ஆட்டங்களையும் அவ்வப்போது பார்க்க முடிகிறது. வானொலியில் நாட்டுப்புறக் கலைக்கென குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி, பாடல்களை ஒலிப்பரப்புகிறார்கள்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com