Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஏப்ரல் 2009
நூல் அறிமுகம்

ஐயர் தி கிரேட்
கிழக்குப் பதிப்பகம், ரூ. 70 பக். 160

வ.வே.சு. ஐயர் வாழ்க்கை வரலாற்றை அழகாகக் கூறும் நூல். பாரிஸ்டர் தேர்வில் வெற்றி பெற்றும்கூட அந்தப் பட்டத்தை வாங்காமல் தூக்கியெறிந்தவர். மிகச் சிறந்த தேசபக்தர். திருக்குறளை மொழியாக்கம் செய்தவர் (1915). சுதந்திரப் போராட்டத்தில் காந்தி, வீர சவார்க்கர், பாரதி போன்றவர்களுடன் பழகியவர். தமிழுக்கு சிறுகதை என்கிற வடிவத்தை அறிமுகப்படுத்தியவர். அவருடைய வாழ்க்கை பலருக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்.


Nepolian இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள்,
அறிஞர் அண்ணா, புலம், சென்னை ரூ. 45, பக்.84

நெப்போலியனின் வாழ்க்கை வரலாறான இந்நூல் அறிஞர் அண்ணாவால் எழுதப்பட்டுள்ளது. நெப்போலியன் பிறப்பு முதல் அவர் பெற்ற வெற்றிகளை மட்டும் கூறாமல் ரஷ்யாவில் எப்படித் தோற்கிறார் என்பதையும் விவரிக்கும் நூல் இது. கார்சிகா தீவில் அஜாசியோ என்னும் சிற்றூரில் 1769ஆம் ஆண்டு பிறந்த நெப்போலியன் எலினாத் தீவில் இறக்கும் வரை அவர் சந்தித்த சவால்களையும், சரித்திரம் படைத்ததையும் இந்நூல் விளக்குகிறது.


உலகமயம் நெருக்கடி இந்தியா எதிர்காலம்
பாரதி புத்தகாலயம், ரூ. 10, பக். 32

உலகமயமாகலால் ஏற்படும் பிரச்சனைகள் அதனால் இந்தியாவுக்கு ஏற்படும் நெருக்கடி தாக்கங்கள் போன்றவற்றையும் எப்படிச் சமாளிக்கலாம், தீர்வுகள் என்ன என்பதையும் அலசும் நூல் இது.


பகத்சிங் : விடுதலைப் போரில் புரட்சி இயக்கம்
பாரதி புத்தகாலயம், ரூ. 70, பக். 160

இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் ஏற்பட்ட புரட்சிகர இயக்கத்தின் தோற்றத்தையும், அதன் வளர்ச்சியையும் இந்நூலில் காணலாம். வரலாற்றுச் சம்பவங்கள் வரிசையாக எளிய நடையில் நூலாசிரியரால் தரப்பட்டுள்ளது. ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி தன்னுயிரை ஈந்த பகத்சிங்கைப் பற்றி வேறொரு கோணத்தில் அறிய உதவும் நூல் இது.


Sinhala Veri சிங்கள வெறிப்படையால் படுகொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்
தமிழக மக்கள் உரிமைக் கழகம், சென்னை. ரூ. 10, பக். 40

இலங்கைப் பிரச்சினையில் ஈழத்தமிழர்கள் மட்டுமா பாதிக்கப்பட்டார்கள். மீனவச் சமுதாயம் கூட சிங்களவெறிப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், பெயர் முகவரி, துப்பாக்கிச் சூடு நடந்த இடம், 1986 முதல் 2006 வரை கொல்லப்பட்டோர், காயம் அடைந்தவர்கள், வழக்கு விவரம் போன்ற புள்ளி விவரங்களோடு ஆண்டு வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.


Sivappu Eadu சிவப்பு ஏடு
வணங்காமுடி, மதுரை. ரூ. 100 பக். 78

ஒடுக்கப்பட்ட மக்கள் எந்தெந்த வகையில் எல்லாம் பாதிக்கப்பட்டு உயிரை இழந்தார்கள் என்பதை உணர்த்தும் வகையில் பாதிக்கப்பட்ட 27 பேரின் புகைப்படங்களோடு அவர்களைப் பற்றிய விவரங்களும் இந்நூலில் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன. மதுரைப் பகுதியில் 1983 முதல் 2007 வரை கொல்லப்பட்டவர்களை பற்றிக் கூறும் நூல்.


ஒற்றை வைக்கோல் புரட்சி இயற்கை
வேளாண்மை,
எதிர் வெளியீடு, பொள்ளாச்சி.
ரூ. 80 பக். 158

இயற்கை வேளாண்மையை பற்றிய நூல் இது. இயற்கை யோடு மோதாமல் அதனோடு ஒட்டி வாழ்ந்தால் ஒத்துழைக்கும். அந்த வழியில்தான் மேம்படுத்த வேண்டுமேயழிய ஆக்கிர மித்து அழித்து அல்ல என்று விளக்குகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com