 |
வேரானவள்
சிவ. தீபலட்சுமி
சாதம் படைப்பவன் பெண்ணல்ல - நல்ல
சமுதாயம் படைப்பவள் பெண்!
சார்ந்திருப்பவள் பெண்ணல்ல - மாபெரும்
சாதனைகள் நிகழ்த்துபவள் பெண்!
புல் விளையும் நிலமல்ல பெண்! - நல்ல
புதல்வர்களைத் தருபவள் பெண்!
அடுக்களையை பராமரிப்பவள் பெண்ணல்ல!
அரசாங்கத்தை ஆள்பவள் பெண்!
அன்பானவள் மட்டுமல்ல
அதிகார தோரணையும் அவள்!
குழந்தையை மட்டுல்ல
குடியரசை காப்பவளும் அவள்!
கட்டுப்பாடுகள் விதிப்பவள் அவளே - அன்புக்கு
கட்டுண்டு கிடப்பவள் அவளே!
கனிவான பார்வையும் அவளே!
கல்விக் கண் தருபவளும் அவளே!
பெற்றெடுத்தவள் அவளே!
பேறு பெற வைத்தவள் அவளே!
விழியானவள் அவளே - வாழ்வுக்கு
வழியானவள் அவளே!
மெழுகானவள் அவளே - என்னை
மெருகேற்றியவள் அவளே!
உருவுக்கு ஆதாரம் அவளே - என்
உயர்வுக்கு வேரானவள் அவளே!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|