Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூலை 2009

‘இந்து’ பார்ப்பானின் அடங்காத் திமிர்

ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது இலங்கை அரசு. அவர்களை நிரந்தரமாகவே அடைத்து வைக்க முடிவெடுத்து விட்டதாகவே தெரிகிறது. இந்தக் கட்டுமானப் பணிகளில் தமிழ் அகதிகளையே ஊதியமில்லாத வேலைக்காரர்களாக அரசு வேலை வாங்குகிறது. ‘மெனிக்பாம்’ பகுதியில் இத்தகைய நிரந்தர கட்டுமான வேலைகள் தொடங்கியுள்ளன.

- இது மனிதாபிமானப் பணியாளர்களின் அறிக்கை

விடுதலைப் புலிகளை வீழ்த்தி விட்டதாக வெற்றி விழாக்களை நடத்தி வரும் இலங்கை அரசு, போர் முடிந்து 6 வாரங்களுக்குப் பிறகும், அகதிகள் முகாமைப் பார்வையிட, அய்.நா.வின் உதவிப் பணியாளர்களையோ, அனைத்துலக நிறுவனப் பிரதிநிதிகளையோ, தொண்டு நிறுவனங்களையோ இன்னும் அனுமதிக்கவில்லை.

- ‘லண்டன் டைம்ஸ்’ ஏடு இப்படி எழுதுகிறது.

வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பகுதியில் உள்ள முகாமில் நோய் பரவி, சிறுவர்கள் இறந்து விடுகிறார்கள். நோயாளிகளுக்கு சிகிச்சை இல்லை; தேவையான அளவு மருத்துவர்களும் இல்லை; நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களை ஒவ்வொருவராக அழைத்து மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தும்போது, இராணுவ புலனாய்வுத் துறையைச் சேர்ந்த ஒருவரும் உடனிருந்து கவனிப்பது, நோயாளிகளுக்கு அச்சத்தை உருவாக்குகிறது.

மேல் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டுமானால், மருத்துவ அதிகாரிகளாக உள்ள சிங்களர்கள் அனுமதிப்பதில்லை. அப்படி அனுமதிக்கப்பட வேண்டுமானால் ரூ.500 முதல் 1000 வரை அவர்களுக்கு லஞ்சம் தர வேண்டியிருக்கிறது. வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் நோயாளிகள் பிணங்கள் ஏற்றும் வண்டியிலோ அல்லது அரசு பேருந்திலோ தான் கொண்டு செல்லப்படுகிறார்கள். இவ்வளவுக்குப் பிறகும் போகும் வழியில் உள்ள இராணுவச் சாவடியில் நோயாளிகள் இராணுவ சோதனைக்கு உள்ளாக வேண்டும்.

நிமோனியாவால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் இப்படி இராணுவ பரிசோதனைக்கு உள்ளானபோது இராணுவ மருத்துவர்கள் அவர்களை மருத்துவமனை போகத் தேவையில்லை என்று கூறி மீண்டும் முகாமுக்குத் திருப்பி அனுப்பினர். அந்த சிறுவர்கள் முகாமில் பிணமானார்கள்.

- இணையதளங்களில் வெளிவந்த செய்தி.

அகதி முகாம்களை பார்வையிட்டபோது அதிர்ச்சியடைந்தேன். காலைக்கடன்களை கழிப்பதற்குக்கூட மக்கள் மணிக்கணக்கில் கியூவில் நிற்கிறார்கள். 5 பேர் மட்டும் இருக்கக்கூடிய கூடாரத்தில் 30க்கும் அதிகம் பேர் உள்ளனர். கூடாரத்தில் எழுந்து நின்றால், இடுப்பு எலும்பே முறிந்துவிடும்.

- இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

இப்படி அகதிகள் முகாமில் நடக்கும் அவலங்கள் உள்ளத்தையே உறையச் செய்யும்போது, பார்ப்பன ‘இந்து’ நாளேடு மட்டும் அகதி முகாம்கள் சிறப்பாக நடப்பதாக பொய்ச் செய்தி போடுகிறது. ராஜபக்சேயின் சிறப்பு பேட்டியை முதல் பக்கத்தில் வெளியிட்டு அந்த இனப்படுகொலைக்காரனை மக்கள் தலைவன் போல் சித்தரிக்கிறது.

இந்தியாவின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்கூட இலங்கை அரசின் நிவாரணப் பணிகள் சரியாக நடக்கவில்லை என்கிறார். ஆனால், ‘இந்து’வுக்கோ, தமிழன் அவதியும், அகதிகளாக உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் மரணத்தின் விளிம்புக்குச் சென்று மீண்டு வருவதும் மகிழ்ச்சி கும்மாளமாக இருக்கிறது. அதனால் தான் கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்ததை ‘இந்து’ நியாயப்படுத்துகிறது.

சிங்களக் கடல்பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை அனுமதிக்க முடியுமா என்று ராஜபக்சே வழக்கறிஞராகவே மாறி தமிழ்நாட்டு மீனவர்களை குற்றம் சாட்டுகிறது.

யார் இந்த ‘இந்து’?

தமிழர்கள் சாட்சிகள் இல்லாமலே ஒரே நாளில் 20000 பேர் படுகொலை செய்யப்பட்டபோது, அங்கே சாட்சியாக இருந்தது ‘இந்து’ செய்தியாளர்தான். அந்த செய்தியை உலகுக்கே தெரியாமல் ‘இந்து’ பார்ப்பான் மறைத்தான்.

புலிகளின் அரசியல் பொறுப்பாளர்கள் புலித்தேவனும், நடேசனும் வெள்ளைக் கொடியுடன் சிங்கள ராணுவ தளபதியை சந்திக்கப் போனபோது ராணுவம் அவர்களை சர்வதேச நெறிகளுக்கு எதிராக சுட்டுக் கொன்றது; அதைத் தட்டிக் கேட்ட அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் மனைவியையும் சுட்டுக் கொன்றது. அப்போது அங்கே ராணுவக் கட்டுப்பாட்டு அறையில் இருந்தது - ‘இந்து’ நிருபர் தான். அந்த செய்தியையும் உலகின் முன் ‘இந்து’ பார்ப்பான் மறைத்தான். எங்கோ லண்டனில் இருந்த ‘டைம்ஸ்’ பத்திரிகை தான் வெளிக் கொண்டு வந்தது.

‘இந்து’ பார்ப்பானின் பார்ப்பனத் திமிர், தமிழன் அவமதிப்பு இன்னும் அடங்கவில்லை.

ஈழத் தமிழன் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் ‘இந்து’ பார்ப்பனக் கூட்டமே! நீ பதில் சொல்லும் காலம் வந்தே தீரும்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com