Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
நவம்பர் 2006
தலையங்கம்

நன்றி சொல்ல வார்த்தை இல்லை என்ற நிலையினை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறது பெண்ணியம் இதழ்.

புதிய பெண்ணியம்


ஆசிரியர்
லலிதா

பொறுப்பாசிரியர்
இளையராஜா

இணை ஆசிரியர்
நிர்மலா

ஆண்டுக் கட்டணம்: ரூ.120
வாழ்நாள் கட்டணம்: ரூ.1000
வெளிநாடு: $20

தொடர்பு முகவரி
பாலாஜி டவர், முதல் மாடி,
4, பாரதி தெரு,
காவேரி நகர்,
சைதாப்பேட்டை,
சென்னை - 600 015,
தொலைப்பேசி: 044-24323096
Email: [email protected]

அக்டோபர் 2006 இதழ்
குன்றென வந்து குவிந்த கடிதங்களும், ஏராளமான எண்ணிக்கையில் வந்து சேர்ந்த பல்வேறு தரப்பட்ட சீர்மிகு சிற்றிதழ்களும், அருமைத் தோழர்களின் உள்ளார்ந்த ஆர்வத்தைத் தாங்கி வந்த ஆண்டுக் கட்டணங்களும் என அனைத்துமே எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. கூடவே சில மாவட்டங்களிலிருந்து புத்தக விற்பன்னர்கள் சிலரும் கடிதம் எழுதி ஆதரவு தந்தது களிப்பைக் கூடுதலாக்கியது.

பெண்ணியம் இதழ் புதிய பெண்ணியம் என்ற பெயரைப் பெறுவதற்கான சட்ட நடைமுறைகள் காரணமாக இவ்விதழ் சற்றே தாமதத்தோடு வெளி வந்திருக்கிறது. விதை விதைத்து, வேர் பிடித்து, முளை விட்டு, தளிராக உருமாறி வந்திருக்கிறது "புதிய பெண்ணியம்'' இதழ். இதை உணர்ந்ததாலேயே அட்டைப்படமும் தளிரைத் தாங்கி நிற்கிறது.

சென்ற இதழில் அறிவித்திருந்தபடி அறிமுகத்திற்கென இதழை அனுப்புவது இவ்விதழிலிருந்து நிறுத்தப்பட்டிருக்கிறது. அமைப்பு ரீதியான பின்னணியோ அல்லது நிறுவனங்களின் விளம்பரங்கள் எதுவுமின்றியோ ஒரு சிற்றிதழைக் கொண்டு வருவது எத்தகைய சிரமத்திற்குரியது என்பது தோழர்கள் அறியாததல்ல. உறுப்பினர் கட்டணம் அனுப்பத் தாமதம் நிகழ்ந்திருக்கக்கூடும் நிலையில் அதனை நினைவுகூர்ந்து அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். வெளியூர்க்காரர்கள் காசேலையைத் தவிர்த்து வரைவோலை (D.D) அனுப்புவதே நன்று.

சில அமைப்பு சார்ந்து நிகழ்ந்த - நிகழ்கின்ற- நிகழப் போகின்ற நிகழ்வுகளைப் பற்றி இதழில் வெளியிடக் கேட்டு ஏராளமான கோரிக்கை மடல்கள் வந்த வண்ணம் உள்ளன. அவர்களிடம் எங்களது கோரிக்கை ஒன்று. முக்கிய நிகழ்வுகளின் மையக் கருவினை கட்டுரை, கவிதை அல்லது கதையாகக் கூடத் தக்கவர்களைக் கொண்டு எழுதி அனுப்புங்கள். அவை "புதிய பெண்ணியம்'' இதழில் வெளியாகும்.

அல்லாமல் அமைப்பு சார்ந்த நிகழ்வுகள் பற்றிய அறிவிப்பினை வெளியிடுவது, வருங்காலத்தில் இதே போன்ற கோரிக்கைகள் மிகுதிப்படும் போது இதழை நிர்வகிப்பதில் சிக்கலை ஏற்படுத்தி விடக்கூடும். கூடவே இதழ் தொடங்கியதன் நோக்கத்திலும் இப்போக்கு பின்னடைவை உண்டு பண்ணி விடவும் வாய்ப்பிருக்கிறது. எனவே இதனைத் தவிர்க்குமாறு அமைப்பு சார்ந்த தோழர்களிடம் மிகுந்த அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அந்திமழை இணைய இதழ் சிற்றிதழ் அறிமுகம் பகுதியில் 53-வது இதழாக பெண்ணியம் இதழையும் அறிமுகம் செய்து சிறப்புச் செய்திருக்கிறது. ‘அந்தி மழை'க்கும் தில்லியிலிருந்து வெளி வரும் ‘வடக்கு வாசல்' இதழுக்கும் எங்களது அன்பான நன்றி!
தரமான படைப்புகளை எப்போதும் போல் ‘புதிய பெண்ணியம்' எதிர்பார்க்கிறது. எதிர்பார்ப்பை தோழர்கள் நிறைவு செய்வார்கள் என்றும் நம்பிக்கை கொள்கிறது.

அடுத்த இதழில் சந்திப்போம்!
நன்றி!




Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com