Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
டிசம்பர் 2008
எதிர்வினை
நா. நளினிதேவி

அக்டோபர்த் திங்களிதழின் பதிலுரை கண்டு வியப்படைந்தேன்! சரியான புரிதலிருக்கும் என்ற நம்பிக்கையில், இடம் பெற்ற என் கருத்துக்கள். ஆசிரியரின், வினாவுக்குள்ளான நம்பிக்கையால் புரிதலும், புலப்படலும் இன்றிப்போயுள்ளன? போகட்டும்! நம்பிக்கை குறைந்தால், நேரும் விளைவுகளுக்குத் தக்க எடுத்துக் காட்டு.

பெண்ணியத்தையும் உள்ளடக்கிய பெரியாரி யத்தின் அகராதியிலிருந்து என்றோ நீக்கப்பட்டு விட்ட, மதி, கற்பு முதலானவை பற்றிய சொல்லாடல்களாகப் பெரியார் அருகிலிருந்து அவரின் உணர்வுகளையும், உட்கிடக்கையையும் நன்குணர்ந்தவரும், அன்னாரைப் பற்றிக் கேட்டுப் படித்து அறிந்த பற்றாளரும் பரிமாறிக் கொண்டவை, இனியும் இப்படியும் தேவையா என்ற என் உணர்ச்சிக்குமுறலின் வெளிப்பாட்டின் 'அசுர கதிச் சிதறல்களே என் மடல். 'கற்பு' வழக்குச் சொல்லாகவே கொள்ளப்பட்டு அதன் கயமை நிறைந்த பொலிப் புனைவுகள் குறித்து என் கட்டுரை சற்று விரிவாகவே விளக்கியிருந்தது இருந்தும் வழக்கில் உள்ள கற்பு மர்ந்த அடிப்படையில் என் கருத்துக்கள் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன என்பதில் வருத்தமே. உயர்ந்த கொள்கையாளர், என்றோ ஒதுக்கப்பட்டு விட்ட சிறுமைகளைத் இழிவுகளைப் பற்றிச் சொல்லாடுவதும் நம்மீதும் படிவதாகவே அமையும் என்ற கருத்து புலப்படாமல் போனமைக்கு என் எழுத்தும், கொள்கையும் வேறு வேறானவை என்ற தவறான மதிப்பீடு காரணமோ? பெரியாரியத்தின் பல்கோணப் பதிவுகளாக, பதிவுகளில் இடம் பெற்றுள்ள சொல்லாட்சியும், பொருளாட்சியும் அமையும் எனின் ஆசிரியரின் நம்பிக்கை பற்றிக் கூறுவதற்கு ஒன்று மில்லை. விட்டுவிடுவோம். எங்ஙனமாயினும், இதழ்மீதான என் உள்ளார்ந்த அக்கரையும் ஆர்வமும் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டுத் தெரிவிக்கப் பெற்றுள்ள பாராட்டுக்கும், இதழ் தொடர்பான என் கவலைகளைத் தேவை அற்றவை என ஆசிரியர் மர்பிலான விளக்கத்துக்கும் நன்றி பல.

(இரண்டே வயது நிரப்பிய இதழ் எனும்) 'இளங்கன்று பயம் அறியாதே' என்ற கன்றின் பால் உழுவலன்பு கொண்ட உற்றாரின் தவிப்பைப் புரிந்து கொண்டால் போதும்!
பெண்ணுரிமைப் போராட்டங்களின் திசைமாறல் இதுவரையிலான முயற்சிகள் சமநிலை என்னும் போராட்டக் குறிக்கோளை எட்ட இயலாத தோல்வி பற்றி எல்லாம் பெண்ணியம் மர்பான இதழின் ஆசிரியர் அறியாது இருக்க இயலாது! பெண்ணிய ஆலிவுகள், சமுதாய நிகழ்வுகளின் பதிவுகளாகிய புனைகதைகள். பெண்ணடிமைக்குக் காரணம், சிலவற்றில் வேறு வேறாக இருப்பினும், சமநிலை என்னும் நோக்கில் வேறுபடாத வகையில். மேலை நாடுகளில் கற்பு விடுலை, பெண்களை மீட்சி நோக்கி செல்ல வைத்திருக்கும் நிலை எனப் பல உள்ளன! மற்றவர் எடுத்துக்காட்டித் திருத்திக் கொள்ளும் முயற்சிகளுக்குத் தேவை உண்டோ இல்லையோ திருத்தும் முயற்சிக்கே தேவையே எழாது! தோழர் ஓவியாவின் நூலின் மதிப்புரையில் கோடியில் ஒரு வார்த்தை என்ற இதழாசிரியர் மதிப்பீடு இங்கு நினைவு கூரத்தக்கதன்றோ!


பெரியாரியலான் கூறுவது போன்று பெண்ணியத்தைப் பெரியாரியத்திலிருந்து பிரிக்க இயலாது; பெண்ணியம் அரசியல், சமுதாயம், சமயக் கூறுகளுடன், (இன்று உலகமயமாதல், நுகர்வியல் போன்றவற்றுடன்) பின்னிப் பிணைந்திருக்கும் சிக்கல்! இந்த வகையில் "அரசியல், கட்சி மர்பற்ற இயக்கம்' என்ற என் வேண்டுகோள் மேலோட்டமாகப் படித்தாலே புரியக்கூடிய, புலப்படக்கூடிய ஒன்று! அரசியல் கட்சிகளில் இருந்து கொண்டு அவற்றின் கொள்கை, தலைமையைமமீறி மகளிர் செயல்பட முடியாது என்ற முறையில் பொதுவாகக் கூறப்பட்டது ஆசிரியர் மர்ந்துள்ள கட்சி எனப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது ஏனோ? (எடுத்துக்காட்டாக அண்மையில் குஷ்புவின் (கற்பு) கருத்துக்களுக்கு எதிரான அக்கட்சி மகளிரின் போராட்டம்) அரசியலிலிருந்து ஒதுங்கி நின்றதால்தான் 'வசந்தசேனை' '50 ஆண்டுகட்கு முன் யார் எப்படி? குடும்பம், குழந்தையென்று இருந்தாத்தானே புரியும்' என்பன போன்ற சொல்லாட்சிகளை மக்களை வழி நடத்துவோர் இன்றும் கையாள்வது குறித்து, அது அரசியல் என விட்டு விட்டோமா? குறிப்பிட்ட இனப் பெண்ணுக்கு மட்டும்தான் அவை எனத் தி.க., தி.மு.க. மகளிர் வாளாதிருக்க நேரிட்டுள்ளதா? ஆட்சிக் குறைபாடுகள், செயல்திறமின்மை, குளறுபடிகள் போன்றவை மட்டும்தானே அரசியல்! இத்தகைய சொல்லாட்சிகளை ஆண்கள் மீது பயன்படுத்த முடியாது!

பயன்படுத்தினாலும், இழிவொன்றும் இல்லை அல்லவா? கட்சி மர்ந்த அரசியல் வேறு, பொதுவான அரசியல் வேறு வேறுதாமே? ஆசிரியரை மட்டும் எவ்வாறு சுட்டும்?
பார்ப்பனனையும், பாம்பையும் ஒரு சேரக் (எதிர்வரக்) கண்டால், பாம்பை விட்டுவிட்டுப் பார்ப்பானை அடித்து விரட்டு என்றார். இதை அப்படியே பின்பற்றியிருப்பின், இன்று நம்முடன் பாம்புகளும், முடமாக்கப்பட்ட பார்ப்பனரும்தானே இருக்க வேண்டும்! தம் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரான சிறிதும் மதிக்காத முழுமையான பார்ப்பனராகிய இராமசியை வாசல்வரை வந்து வரவேற்று வழியனுப்பியது மனிதர் என்று கருதியதால்தானே? இத்தகு அரிய பண்புகளால் பெரியோரான பெரியாரின், காலக்கட்டாயத்தினை சூழலுக்கு ஏற்ப அவ்வப்போது வெளியிட்ட, மேற்கொண்ட கடுமையான அணுகுமுறைகளுக்கு உள்ளே பொதிந்து கிடக்கும். சமுதாயச் சமன்மை நோக்கத்தைப் புரிந்து கொள்வதே பெரியாரைப் பெரியாராகப் பார்க்கும் வழி அன்றி வேறு எதுவாக இருக்க இயலும்!

நம்மவர் என்பது இப்போது பெரியார் காலத்தவர், பெரியாருக்குப் பின்னவர் என்ற இரு நிலைகளில் இருப்பதும், ஆசிரியர் அறியாத ஒன்றாக இருக்க இயலுமோ? முன்னவருக்குத் தேவையானவை, அவர்களிடமே இருக்கும். கடையில் வாங்க வேண்டியதில்லை. பின்னவருக்குத்தான் விழிப்புணர்வும், எழுச்சியும் தேவைப்படுகின்றன. உரிய காலத்தில் அவர்கட்குக் கிடைக்க வேண்டும் என்பதே ஆசிரியர் கவலைப்படாத எனது கவலையைப் போக்கியமைக்கு மீண்டும் நன்றி.கருத்தடை, குழந்தைப் பேறு ஒழிப்பு, கற்பு இரு பாலருக்கும் தேவையில்லை என்ற சேலம் மாநாட்டுத் தீர்மானம் உட்படப் பிற கூற்றுக்கள், 'இவ்வாறு சொல்லியே ஆக வேண்டும்' என்ற கட்டாயச் சூழலையும், நெருக்கடித் தேவையையும், இவற்றுக்கு முன், பின் கருத்துக்கள், இப்படித்தான் சொல்லி ஆக வேண்டி இருந்தமைக்கான காரணங்களையும் உள்ளடக்கியவையே. (தமிழ் காட்டுமிராண்டி மொழி, ஆகஸ்டு 15 துக்க நாள் போன்றவையும் இவ் வகையினவே) இவ்வடிப்படையில், சமுதாயத்தின் சமன்மை, நலம், வளம், வலிமை நோக்கில், அனைத்து உயிர்களுக்கும் பொதுவான பாலியல் உணர்வு, மனிதர்கட்கு நெறிப்படுத்த வேண்டிய ஒன்று. இதில் ஒழுக்கமோ, வாழ்க்கையோ, தூலிமையோ, உயர்வோ, இழிவோ, என்ற எந்த ஒரு மண்ணும் இல்லை. இதுவே, சமுதாய, அறிவு இயல் மர்ந்த, பெரியாரிய மார்க்கியச் செழுமை வாலிந்த பெண்ணியச் சிந்தனை என்ற வழி, பெரியாரியப் பெண்ணியத்துக்கு மாறான கருத்துக்களுக்கு இடம் ஏது?

பாரதியைப் போற்றிய தமிழ்க்கவிஞர் பாரதிதாசனாரின் குடும்ப விளக்கைப் பெண் விடுதலைக்குப் எடுத்துக்காட்டாக்க முடியாதது போன்றே, பெண் விடுதலைக் கவிஞர் பாரதியின் பாமாலைக் கடவுள் மற்றும் சமயம் மர்ந்த, பெண் அடிமைக்கு வலுவான அடிப்படைக் காரணமான மடமையைக் கொளுத்த, கீதையைக் கிழிக்கப் பயன்படுத்த முடியாது. கீதையையும், கிருஷ்ணனையும், கண்ணனையும் போற்றி வழிப்படுபவன்.

அவன் வாயால் அவன் வழிபடும் கீதையைக் கிழிக்க முனைவது எங்ஙனம்? (பாஞ்மய் தன்னைச் சூதாட்டப் பிணைப் பொருளாக வைத்தது தவறு என்று வாதாடுவதாகப் பாடியது போலவே, ஐவருக்கு மனைவியாக்கியது தவறு எனப் பாட முடியவில்லை) கடவுள் நம்பிக்கை உட்பட மரபு கலந்த பெண் விடுதலையே பாரதியார் நோக்கம். 'பார்ப்பனக் கவிஞர்' என்று பார்ப்பதும், 'இதழியல் உரிமை' எனப் பதிலுரைப்பதுமானவற்றுக்கு இடையே உள்ள உண்மை இது! ஆரியர் உயர்வு, அவர் புராணங்களையும், மத்திரங்கள் உயர்வு என்ற அவர் உணர்வைப் பல பாடல்களில் காண்கிறோம். இது பெரியாரியத்தின் செழுமைப் படுத்தப்பட்ட ஒன்று என்று மறுப்போருமில்லை! புதுமைப் பெண் என்ற சொல்லாட்சி மட்டுமே, (யாராக இருப்பினும்), பெண்ணியம் பேமது கருத்துக்களில் கருத்தூன்ற வேண்டிய ஒன்று என்பதே என் கருத்து.

இனி, பெரியார் கூறும் பொதுவாழ்வு முதல் இயக்க இதழ்கள் உட்படப் பிற பணிகள் திறம்படத் தொடர்வது பற்றிய கருத்துக்கள் ஆசிரியரின் நம்பிக்கையாக இருக்கலாம்! இருக்கட்டும் 'சமூக நீதிகாத்த வீராங்கனை' பெரியார் விருது போன்ற பட்டமளிப்பு விழாக்களை விடுத்தும், மணியம்மையால்தான் இயக்கம் நலிவடைந்தது என்று இன்றும் வருந்துவதை விடுத்தும். எதை, எவ்வளவு இழந்தேனும், பெரியாரியக்கத்தை ஒன்றிணைக்கும் முயற்சிக்குக் கொள்கைப்பற்றுத் தவிர வேறு என்ன வேண்டும்?

முயற்சியின்மைக்குத் தன்முனைப்பு மட்டும் காரணமாக இருக்க இயலாது, இருமரருக்குள்ளும் உள்ள பிற காரணங்கள் சமுதாய நலத்துக்கு அப்பாற்பட்டவைதானே? தமக்குள் உள்ள தடையை உடைத்தெறிந்து ஒன்றுபட முயலாதவர்கள். சமுதாய விடுதலைத் தடைகளை எங்ஙனம் நீக்க இயலும்? பிறவிப் பகைவரே ஒன்று சேரும்போது, அரும் பெரும் கொள்கைகளுக்காகத் தம் வேற்றுமை மறந்தால் என்ன? இதில் எத்தரப்பின் மீது கருத்தைக் குவித்து என்ன பயன்? அறியாதவருக்குத் 'தனித்தனியே' கூறலாமே. அறிந்த வருக்கும் 'பொத்தாம் பொதுவான' அணுகு முறையே சரியாகும். போகிற போக்கில் எதையும் கூறிச் செல்வதற்கும் என் போன்றோர் நுனிப்புல் மேலிபவர் இல்லை என்பதை ஆசிரியர் தம் மேலான கருத்தில் கொள்ளுதலே நலம் தரும். ('இல்லை' என்பதால் உண்டு என மற்றவரை' இங்குச் சுட்டவில்லை!

மடல் தவிர்க்க இயலாத வகையில் நீண்டு விட்டது. தளிர் நடை பயிலும் இதழ் தரம் எனும் உரம் பெற்றுப் பயிர் எனும் பயன் தரும் வகையில் பண்பட்டுச் செழித்திடும் நம்பிக்கையுடன் வாழ்த்துக்கள்.

நா.நளினிதேவிTamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com