Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
டிசம்பர் 2008
பிரகடனம்
ச.சு.ஜுலியட் ஜெனிஃபர்

புதைபட்டு புதைபட்டு
புதையலான நிலக்கரி
வைரமாலிப் பரிணமிக்கும்
அறிவியல் அறியாயோ?
அழுத்தப்பட்ட ஊற்று
நிலத்தைப் பிய்த்துக்கொண்டு
பீறிட்டு விட்டது!
அணுக்களைப் பிளந்தால்
அடங்குமோ ஆற்றல்!
இதுவரை புதுக்கவிதையின்
கருப்பொருளான நாங்களே
எங்கள் பாதிப்புகளை
கருப்பொருளாக்கி
புது ரத்தமாகி
பத்துவிரல்களில் பாதைகாட்டுவோம்
கலங்கரை விளக்கமாய்!
நெஞ்சின் செந்நீர்த்தேக்கம்
தீரத்துடன் மடைதிறக்க
ஒத்திகை பார்க்கிறது!
தென்றல் புயலாகும்
பிரபஞ்ச உண்மை இலங்க
வாழ்க்கை வரலாறு
படைப்போம் மனிதத்தின் பாதியாய்!
உரிமைகள்
மண்டியிட்டுப் பெறுவன அல்ல
வாலி வார்த்தைகளும் அல்ல
உணர்வின் உயிர்ப்பு அது!
சுதந்திரம் என்பது
ஆண் பெண்ணையோ
பெண் ஆணையோ
அடக்கியாளுதல் அல்ல
உண்மைச் சுதந்திரம்
வார்த்தைகளில் இல்லை
வாழும் முறையில் உள்ளது
குடும்பம் எனும் கட்டுகள் இனி
காட்டாற்று வெள்ளத்திற்கு
கால்கோள் அமைக்கட்டும்!
பெண்ணின் ஒட்டு மொத்த உழைப்பு
சதுப்பு நிலத்துள் சாகடிக்கப்படாமல்
சமுதாயமயமாக்கப்பட்டு
பொருளாதார மதிப்பீடு பெறும்போது
சுய கவுரவம் நிறுவப்படும் என்பதைப்
பறை மற்றுவோம்!
நிலை நிறுத்துவோம்!!



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com