Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Neythal
Neythal
ஜனவரி 2009
அவனால் மட்டுமே முடியும்
பன்னீர்

􀁀 அவன் நிலங்களை
மாரி வந்து
மறுபரிசீலனை செய்யவில்லை
ஆனால் -
வரியை மட்டும்
வசூலிக்கத் தவறவில்லை

􀁀 உலகின் பசி போக்கவே
உயிரையும் சேர்த்து விதைக்கிறான்
ஆனால் -
அவனால் கணக்கிட முடியவில்லை;

எத்தனை இரவுகள்
பசி உண்போம் என்று

􀁀 ஒருவேளை அவன்
இடையில் சுற்றியிருக்கும்
ஈரத்துணிகளுக்குத் தெரிந்திருக்கலாம்

􀁀 ஆற்றில் துவைத்து
ஆதவனால் உலர்த்தப்படுவன அல்ல
அவனின் கச்சைகள்;
வியர்வையில் நனைந்து
பசித்த வயிற்றின் உஷ்ணத்தால் உலர்த்தப்படுகின்றன

􀁀 நிலவுக்குப் போய்வர
நீளமாய் ஒடந் செய்து
நீந்துகிற விஞ்ஞானிகளே
விவசாயத்தைக் காப்பாற்றுங்கள்;

􀁀 அது உங்களால் முடியாது .
நீங்கள்
விவசாயிகளைக் காப்பாற்றுங்கள்;
அது அவனால் மட்டுமே முடியும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com