Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Neythal
Neythal
ஜனவரி 2009
கரிம வர்த்தகம் - அறிமுகம்
ம. ஜெயப்பிரகாஷ்வேல்

கார்பன் டிரேடிங் (Carban trading) என்ற வார்த்தை எனக்கு 2007 ஜனவரி மாதம் கொச்சியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் அறிமுகமானது. ஜெனித் என்ற மரபுசாரா எரிபொருட்களுக்கான ஒரு நிறுவனத்தின் பிரதிநிதி இந்தத் தலைப்பில்பேசினார். அப்போது எனக்கு மிகவும் புதுமையானதாகவும் ஈர்ப்பூட்டக் கூடியதாகவும் இருந்தது. பிறகு இணையத்திலும் பிற அறிவியல் இதடிநகளிலும் கார்பன் டிரேடிங் பற்றி நிறைய படிக்கக் கிடைத்தன. நக்கீரன் இதழை தொடர்ச்சியாகப் படிப்பவர்கள் கிரீன் இந்தியா கார்பன் மிடிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடட் என்ற அமைப்பின் மரம் வளருங்கள், பணம் பண்ணுங்கள் என்ற விளம்பரத்தையும் நினைவூட்டிக் கொள்ளுங்கள். ஏறத்தாழ ஒன்னரை வருடங்கள் கழித்து இந்தத் தலைப்பில் எழுத வேண்டிய அவசியமோ முக்கியத்துவமோ எனக்குத் தோன்றாவிட்டாலும் எழுதுவதற்காக என்னைத் தூண்டிய சிறு விஷயத்தை சொல்வது நலம் என்று நினைக்கிறேன். கடந்த மாதத்தில் ஒரு உணவக தேடுதல் வேட்டையில் நானும் நண்பன் பால்ராமும், பாண்டிபஜார் ரத்னா பேன் அவுஸ் பக்கம் போய்க் கொண்டிருந்த போது, கிரீன் இந்தியா கார்பன் மிடிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடட் இன் அலுவலகம் கண்ணில் பட்டது.

அதைப்பற்றி நண்பன் பால்ராமுக்கு சிறிய விளக்கம் கொடுத்த போது அவன் காட்டிய சிறு ஆச்சர்யம் இந்த விஷயத்தை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளத் தூண்டியது. எனவே இந்த நெய்தல் இதழில் இதை நான் எழுதியிருக்கிறேன்.

கரிம வர்த்தகம் அப்படியென்றால் என்ன?

கார்பன் என்பதற்கு இணையான தமிடிநச் சொல்லாக கரிமம் என்பது நெடுங்காலமாக உபயோகிக்கப்பட்டு வருவதாலும் அதுவே தகுதியெனத் தோன்றுவதாலும் அதே பதத்தை இந்தக் கட்டுரையில் உபயோகித்திருக் கின்றேன். டிரேடிங் என்பதற்கு வர்த்தகம் என்றும் எழுதியிருக்கிறேன். தனித் தமிழா என்ற ஆராய்ச்சிக்குப் போகாமல் எளிமையாகப் புரிவது என்ற அளவுகோளில் கார்பன் டிரேடிங் என்பதை கரிம வர்த்தகம் என உபயோகித்திருக்கிறேன்.
இனியாவது கட்டுரைக்கு வருவோம்.

கார்பன் வர்த்தகம் என்பது பசுமையக வளிகளை (Green house gases) அதிகம் வெளியிட்டு பூகோள வெம்மைக்கு காரணமாகும் அமைப்புகள், தொழிலகங்கள் இன்னபிற அங்கங்கள் யாவும் தாம் வெளியிடும் பசுமையக வளிகளை (மிகக் குறிப்பாக கார்பன் டை ஆக்ஸைடு) குறைத்துக் கொள்வது அல்லது அதற்கு ஈடாக அவற்றை பூமியின் மட்டத்திலேயே உறிஞ்சிக் கொள்கிற / குறைக்கிற செயல் திட்டங்களுக்கு பணம் செலவிடுதல் ஆகும். மிகவும் குழப்பி விட்டேன் போல. எளிமையாக்க முயல்கிறேன். இதற்கு நாம் கொஞ்சம் முன்னே போக வேண்டும். மனித சமூகத்தின் முன்னேற்றம் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளினால் பசுமையக வளிகளின் அளவு வளிமண்டலத்தில் கூடிக் கொண்டே போகிறது. இந்த வளிகளின் அளவு கூடும்போது அவை மேலிருந்து வருகிற சூரியனின் ஒளி மற்றும் வெப்பம் மீண்டும் திருப்பி அனுப்பப்படுகிற அளவைக் குறைக்கின்றன. இதனால் வளிமண்டலத்தின் வெப்ப அளவு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது. இதுவே Golobal Warming எனப்படுகிறது. வரும் 2100க்குள் நமது பூமியின் வளிமண்டல வெப்பம் 1.4 - 5.8டிஉ அதிகரித்து விடும் என்பது கணிப்பு. நூறாண்டுக்குள் இத்தனை பெரிய உயர்வு மிகவும் கடுமையான சூழலியல், காலநிலை விளைவுகளை உண்டு பண்ணக் கூடியது. ஊடகங்களின் தீராத பிரச்சாரத்தால் இதன் விளைவுகள் எப்படியிருக்குமென எல்லோருக்கும் தெரியும். நிலப்பகுதிகள் கடலாகும். மழை மாறிப்பொழியும்; வனங்கள் பாலையாகும். மெதுவாக; ஆனால் உறுதியாக.

எனவே இந்த பூகோள வெம்மையடைதல் நிகடிநவை கட்டுக்குள் வைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றுள் முக்கியமானது கியோட்டோ வழிமுறைகள்(Kyoto protocol). பன்னாட்டு காலநிலை மாற்றத்திற்கான செயல்பாட்டு கூட்டமைப்பு (Internatoinal Frame Work Convention of Climate Change) என்ற அமைப்பு 1997ம் ஆண்டு டிசம்பர் 11ல் கியோட்டோ நகரில் அவர்களது மூன்றாவது கருத்தரங்கிற்காக கூடியது. அக்கருத்தரங்கின் இறுதியில் காலநிலை மாற்றங்களை கட்டுப்படுத்தும் விதமாக பசுமையக வளிகளை குறைப்பதற்காக சில வழிமுறைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அந்த வழிமுறைகளே கியோட்டோ வழிமுறைகள் என வழங்கப்படுகிறது. 1997ல் ஏற்படுத்தப்பட்டாலும் இந்த வழிமுறைகள் 2005இல் இருந்துதான் நடைமுறைக்கு வந்தன. நவம்பர் 2007 கணக்கின்படி மொத்தம் 178 நாடுகள் இந்த விதிமுறைகளை ஏற்றுக் கொண்டுள்ளன. கியோட்டோ வழிமுறைகளின் சாராம்சம் பூகோள வெம்மைக்கு முக்கிய காரணமாக கருதப்படும் பசுமையக வளிகளின் அளவைக் கட்டுப்படுத்துவதே கியோட்டோ வழிமுறைகளின் ஆகப்பெரும் நோக்கம். கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன் குளோரோ ஃப்ளோரோ கார்பன் உள்ளிட்ட ஆறு பசுமையக வளிகள் பல்வேறு நடவடிக்கைகளால் பூமியில் அதிகரிக்கின்றன. அனல் மின்சாரத் தயாரிப்பு, பல்வேறு தொழிற்சாலைகளின் செயல்பாடுகள், வாகனப் போக்குவரத்து, குளிர்சாதனங்கள் மற்றும் நெல் வயல்கள் என இந்தப் பசுமையக வளிகளை அதிகப்படுத்தும் காரணிகள் பல உள்ளன. இவற்றில் எந்தெந்த காரணிகளின் பயன்பாட்டைக் குறைத்தால் (அது மனிதகுலஉபயோகத் தளத்தையும் பாதிக்காத வண்ணம்) இந்த வளிகளின் அளவைக் கட்டுப்படுத்தலாம் என்பது குறித்த தெளிவான வழிகாட்டுதல்களை அந்த மாநாட்டில் அலசினார்கள். அதன்படி வளர்ந்த நாடுகள் எனக் கருதப்படும் 31 நாடுகள் தங்களது பசுமைய வளிகளை அதிகப்படுத்தும் செயல் பாடுகளை 2005இல் இருந்து குறைத்து கொள்வது எனவும் மீதமுள்ள 130க்கும் அதிகமான வளரும் மற்றும் பின் தங்கிய நாடுகள் இந்தச் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பணியில் உதவலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டு கியோட்டோ வழிமுறைகள் உருவாக்கப்பட்டன.

இதன்படி வளர்ந்த நாடுகள் தமது பசுமையக வாயுக்களை அதிகமாக்கும் செயல்களைக் கட்டுப்படுத்தலாம் அல்லது பூமியின் வேறெந்த இடத்திலும் இத்தகைய பசுமையக வாயுக்களை குறைக்கக் கூடிய நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்வதன் மூலம் அவர்களின் கணக்கில் இருந்து கழித்துக் கொள்ளலாம் எனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த கடைசி வழிமுறைதான் கார்பன் வர்த்தகத்திற்கு அடிகோலியது. வளர்ந்த நாடுகளின் தொழில் நிலையங்கள் பசுமையக வளிகளைக் குறைக்கும் நடவடிக்கைகளுக்குப் பதிலாக உலகின் பிற பகுதிகளில் பசுமையக வளிகளைக் குறைக்கும் செயல்பாடுகளை நிதியுதவி செய்தன. இது உண்மையில் வியாபாரம். நிதியுதவி என்ற வார்த்தை இங்கே சரியாகப் பொருந்தாது. இது எப்படி வியாபாரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று பார்ப்போம். உதாரணத்திற்கு ஒரு வளர்ந்த நாட்டின் அனல்மின் நிலையம் கார்பன்டை ஆக்ஸைடு வெளியிடும் அளவைக் குறைப்பதற்கு பெரும் செலவாகுமென்று அறிந்து கொண்டால் பூமியின் மற்ற இடங்களில் குறிப்பாக வளரும் நாடுகளில் காற்றாலை மின்சாரமோ புனல் மின்சாரமோ தயாரிக்கும் நிறுவனத்திடம் இருந்து கார்பன் டை ஆக்ஸைடு குறைத்த அளவை பணத்தை வாங்கிக் கொள்ளலாம். இந்த புனல் மின்சார நிறுவனம் தன் செயல்பாட்டால் எவ்வளவு கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தைக் குறைத்ததோ அது கார்பன் கிரெடிட் எனப்படும். இந்தக் கார்பன் கிரெடிட்- ஐ வளர்ந்த நாடுகளில் உள்ள அனல் மின் நிலையங்களோ வேறெந்த தொழில் நிறுவனங்களோ விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.

இப்படிச் செய்வதன் மூலம் அடுத்தவர் குறைத்த கார்பன் டை ஆக்ஸைடை தன்னுடைய குறைப்புக் கணக்காக காட்டிக்கொள்ளலாம். நமது பூமிக்கு இருப்பது ஒரே வளிமண்டலம். ஓரிடத்தில் கார்பன் டை ஆக்ஸைடை அதிகப்படுத்துபவர்கள் வேறொரு இடத்தில் குறைத்து தன் பாவத்திற்குப் பிராயச்சித்தம் தேடிக்கொள்வது போல என்றும் இதை நாம் எண்ணிக் கொள்ளலாம். ஆனால் இடையே பணம் இருக்கிறது என்பதை மறக்கலாகாது. இந்தியா போன்ற வளரும் நாடுகள் தங்கள் நாட்டிலேயே Clean Development Mechanisam என்ற செயல்முறையை அங்கீகரிக்கும் அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த அமைப்புகள் கியோட்டோ வழிமுறைகளை நடைமுறைப்படுத்தும் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்தியாவில் இதுவரை 154 CDM கள் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றை நம் உள்நாட்டுக் குழு பரிசீலித்து ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பின் அங்கீகாரத்திற்கு அனுப்பும். அதன்பின் இந்த CDMகளை விண்ணப்பித்த நமது நாட்டு நிறுவனங்கள் தங்களது கார்பன் கிரெடிட்களை வேறு நிறுவனங்களுக்கு விற்றுப் பணம் பார்க்கலாம்.

இந்த ஊனுஆகள் நிறைய வகைப்படுகின்றன. தரிசு நிலையங்களில் மரம் வளர்த்தல், சாண எரிவாயு, குப்பையிலிருந்து மின்சாரம், கடலலைகளில் இருந்து மின் உற்பத்தி, நீர் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி என இந்த பட்டியல் நீள்கிறது. மொத்தத்தின் பாசில் ஃபியூல் எனப்படுகிற நிலக்கரி, பெட்ரோலியம் மற்றும் எரிவாயுக்கள் இவற்றை எரிக்கும் செயல் முறைகளைத் தவிர்த்து மாற்றான வழிகளில் சக்தியை உற்பத்தி செய்யும் வழிமுறைகள் CDMயில் அடங்கும். மேலோட்டமாகப் பார்த்தால் வியாபார ரீதியில் நல்ல நடைமுறையாகவும் சூழலியல் ரீதியில் பெரிதும் வரவேற்கத்தக்கதுமான இந்த கியோட்டோ வழிமுறைகளின்பால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் சீனா போன்ற நாடுகள் ஆர்வம் காட்டவில்லை.மேலாக அமெரிக்கா இந்த விதிமுறைகளை ஏற்று நடைமுறைப்படுத்த இன்னும் கையெழுத்து போடவில்லை. கியோட்டோ, வழிமுறைகள் அறிவியல் பூர்வமாக உருவாக்கப்படவில்லை என்று ஜார்ஜ் புஷ் அறிவுப்பூர்வமாக(!) மறுத்து விட்டார். மேலும் தனது நாடு இது குறித்த ஆடீநுவில் தொடர்ந்து ஈடுபட்டு உண்மை நிலையினை வெளிப்படுத்த 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது அவர் முன்பான அதிபர் தேர்தலில் செலவழித்த தொகையில் நான்கில் ஒரு பங்கு. தனக்காக நான்கு பங்கு. உலக நன்மைக்கு கால் பங்கு. இதை நான் சொல்லவில்லை. டேவிட் கார்ன் என்கிற மேலைநாட்டு பத்திரிகையாளர் எழுதியிருக்கிறார். இதற்கு மேலும் ஒரு படி போடீநு இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள் இந்த வழிமுறைகளின்படி விலக்கு அளிக்கப் பட்டிருப்பதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கிறது அமெரிக்கா. உலகின் மொத்த கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தில் 20 சதவீதம் அமெரிக்கா மட்டுமே பங்கு வகுக்கிறது. 1990 கணக்கின்படி பசுமையக வளிகளை குறைத்துக் கொள்ள வேண்டிய பட்டியலில் இருந்த ரஷ்யா பின்னர் 50 சதவீதம் தமது கார்பன்டை ஆக்ஸைடு வெளியேற்றத்தைக் குறைத்ததும் கரிம வர்த்தகத்தில் இப்போது பணம் பார்ப்பதும் வரவேற்கத்தக்கதாக உள்ளது.

வளரும் நாடாக உள்ள இந்தியா இப்போது தன் கார்பன் கிரெடிட்களை விற்று வருவதால் வளர்ந்த நாடாகிய பின் யாரிடம் போடீநு கார்பன் கிரெடிட் வாங்கும் என்ற கேள்வியும் இன்று எழுகிறது. மொத்ததில் பூமி சூடாவதைத் தடுக்கிற வகையில், வளரும் நாடுகளை கட்டுப்படுத்தாலும் இருக்கிற இந்த கியோட்டோ வழிமுறைகள் வரவேற்கத்தக்கன. கரிம வர்த்தகம் என்பது தற்சமயம் நலம் தருவதாக இருந்தாலும் அதன் எதிர்கால விளைவுகள் பரவலாக விவாதிக்கப்பட வேண்டியவை. இதுபோக பூகோள வெம்மையைத் தடுக்க சாதாரண மக்கள் கூட தம்மாலான நடவடிக்கைகளில் ஈடுபடலாம். தேவையற்ற நேரத்தில் எரிகிற மின்விளக்கை நீங்கள் அணைத்தால் எங்கோ ஒரு காட்டில் வெட்டப்படுகிற மரத்தைத் காப்பாற்றுகிறீர்கள். சாதாரண தொலைவுப் பயணத்திற்கு தனிப்பட்ட உங்களின் வாகனப் போக்குவரத்தை நீங்கள் குறைத்தால் ஒரு மரம் நட்டு வளர்க்கிறீர்கள் என்று அர்த்தம். உபயோகிக்கும் உரிமையும் எதிர்கால சந்ததிக்கு காத்து வைக்கிற கடமையும் எல்லோருக்கும் உண்டு.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com