Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruMedicalSex
பால்வினை நோய்கள்

விலை மாதர் உடல் உறவால் பிறப்புறப்பில் வரும் நோய்களுக்கு- பால்வினை வியாதிகள் என்று பெயர். 20க்கும் மேற்பட்ட பாலியல் நோய்கள் மனிதனை நாசம் செய்ய காத்து இருக்கின்றன. ஒருவனுக்கு ஒரு விலைமாதர் உடல் உறவால் ஒரு பால்வினை நோய்தான் வரும் என்பது சரி அல்ல. ஒன்றுக்கும் மேற்பட்ட பால்வினை நோய்கள், ஒரு விலைமாதர் பிறப்புறப்பில் குடி இருக்கலாம். அதன் மூலம் அவளுடன் உடல் உறவு கொள்ளும் போதும், அவனுக்கும் பிறப்புறுப்பில் பல பால்வினை நோய்கள் தொற்றி தொல்லை கொடுக்கலாம். அத்துடன் எச்.ஐ.வி. நுண்கிருமியும் தொற்றி மறைந்து வாழலாம். இப்படி 3 இன் 1 என்றும் சொல்லும்படியாக ஒருவன் பிறப்புறுப்பில் மூன்றுக்கும் மேற்பட்ட பால்வினை நோய்கள் தொற்றி, அல்லல்பட்டு வைத்தியம் பார்க்க வந்தவன் கதை இது.

கோபால் என்பது அவது பெயராக இருக்கட்டும். கோயம்புத்தூர் அருகில் இருக்கும் சூலூர் என்பது அவனது சொந்த ஊர். அவன் ஒரு லாரி டிரைவர். கோயம்புத்தூருக்கும், மும்பைக்கும் பம்பு செட் சாமன்களை ஏற்றி இறக்கி விட்டு, வருபவன். மூன்று மாதத்திற்கு முன்பு ஒரு தடவை அப்படி மும்பைக்கு சரக்கு ஏற்றிப்போனான். இரண்டு நாட்கள் அங்கு தங்கி இருக்க வேண்டியதாகி விட்டது. அவனது நண்பன் ஒருவன் மும்பை விலை மாதர்கள் இருக்கும் இடத்திற்கு கூட்டிப் போய்விட்டான். அந்த “சிவப்பு விளக்கு” ஆந்திரா அழகி கோவிந்தம்மாளுடன் உடல் உறவு கொண்டு விட்டான். அவளோ பல ஆடவர்களுடன் உறவு கொண்டு, பலவித பால்வினை நோய்களைத் தன் பிறப்புறுப்பில் குடிவைத்து வாழ்பவள். அவளுடன் உடல் உறவு கொண்ட கோபால் மகிழ்ச்சியில் ஊர் திரும்பினான். சில நாட்களில் அவனது மகிழ்ச்சி மறைந்து துன்பம் தலைதூக்க ஆரம்பித்து விட்டது. ஒரு வாரத்திற்குள் சிறுநீர் கடுக்க ஆரம்பித்தது. சிறுநீருடன் மோர் மாதிரி திரவமும் வடியத் தோன்றியது. சில நாட்டு, காட்டு பொலி மருத்துவர்களை நாடி லேகியம், சூரணம், மாத்திரை எனச் சாப்பிட்டு, சில நாட்களில் சிறுநீர்க கடுப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்தான். 3-4 மாதம் ஆகிவிட்டது.

இப்போது கோபாலின் ஆண்குறியின் முன்பகுதியில் சிறு கட்டி போன்று தோன்றி “சீழ்” வைத்து “விண்... விண்...” என்று தெரித்து தொல்லை கொடுத்தது. சிறுநீர்க்கடுப்பும், மறுபடியும் தோன்றத் துவங்கியது. இந்த நிலையில் நல்ல வைத்தியம் பார்த்து குணம் பெற மருத்துவமனைக்கு வந்தான். பாலியல் சிறப்பு டாக்டர் முறையாக அவனைச் சோதித்துப் பார்த்தபோது, கீழே விவரித்துள்ள பல பால்வினை நோய்கள் தாக்கியிருப்பதை அறிந்தார்.

ஒரு குளத்தில் கிணற்றில் பல்விதமான விஷப்பூச்சிகள் இருப்பது போல் கோவிந்தம்மாள் பிறப்புறுப்பு கிணற்றிலும் பலவித பால்வினை நோய்கள் வாழ்ந்து கோபாலுக்கு தொற்றிவிட்டது. அவைகள்

1. டைசன் சுரப்பி அழற்சியால் தோன்றிய கட்டி (Tyson gland abscess)

2. சிறுநீர்த்தாரை அடைப்பு (urethral stricture)

3. பிறப்புறுப்பு “மருப்பு” (genital warts)

4. அக்கிக் கொப்பளங்கள் (genital herpes)

5. விதைப்பையில் சிறு கட்டி (sebaceous cyst)


1. டைசன் சுரப்பி அழற்சி

பொதுவாக வெட்டை நோய் (gonococcal infection) ஒருவனுக்கு சிறுநீர்த்தாரை, சிறுநீர்ப்பை போன்றவற்றைத் தாக்கி சிறுநீர்க்கடுப்பை உண்டாக்கும். ஆண்குறியின் “மலர்” பகுதியில், உடல் உறவுக்கு “பிசு பிசு” என எண்ணெய் மாதிரி திரவம் சுர்ந்து, உதவி புரியும் சுரப்பி ஒன்று உள்ளது. இதற்கு ‘டைசன் சுரப்பி’ என்று பெயர். இந்த டைசன் சுரப்பியை வெட்டை நோய்க் கிருமிகள் தாக்கி உள்ளே புகுந்து, சுழற்சியாக்கி, சீழ் வைத்து கட்டியாகி வேதனை கொடுக்க ஆரம்பித்து விட்டது. இந்தக் கட்டி ஆண்குறியின் முன்புறத் தோலிலும் முன்புறத்தோலை மடக்கி முகைப் பகுதியை பார்த்த போது, இழுமடி என்ற ஃபிரினம் பகுதியில் இருந்த கட்டி சீழ் வைத்து , வலி கொடுத்து, பின் அதுவாகவே உடைந்து சீழ் வெளியேறியது. இழுமடியில் இருந்த “சீழ் கட்டி” மறையவில்லை. வலி கொடுத்தது.

2. சிறுநீர்த்தாரை அடைப்பு

வெட்டை நோய் கோனக்கால் கிருமிகள், சிறுநீர்த் தாரையில் உள்ள “ம்யூக்கஸ்” என்ற ‘சவ்வுப் பகுதியை’ தாக்கி அழற்சி ஏற்படுத்தி, அதைத் தடித்த கனமான இறுகிய குழயாக மாற்றி சிறுநீர்த்தாரையில் அடைப்பு உண்டாக்கிவிட்டது. இதனால் சிறுநீர் வரத்தடை ஏற்பட்டது. சிறுநீரும் கடுத்து, தீயாக எரிந்து வரும்.

3. பிறப்புறுப்பு மரு

இந்த நோயைக் கொடுக்கும் நுண்கிருமியின் பெயர் “ஹ்யூமன் பாப்பில்லோமா வைரஸ்” என்பதாகும். இந்த “விஷ மருக்கள்” நோயும், பம்பாய் அழகி மூலமாகத்தான் கோபால் பெற்று இருக்கிறான். இந்த மருக்கள் அவனது பிறப்புறுப்பில் ஆண்குறியின் மலரின் அடிப்பாகத்தில் இழுமடிக்கு இடது புறத்தில் சிறுசிறு தடித்த பருப்புகள் போல் வளர்ந்து இருந்தன.

4. அக்கிப்புண்கள்

இந்த விஷ அக்கிப் புண்கள் ஹ்யூமன் சிம்ப்ளெக்ஸ் வைரஸ் என்ற நுண்கிருமியால் வருவதாகும். இந்த விஷக்கிருமிப் புண்களும், அவனது மலரின் அடிப்பாகத்தில் உயர்தளத்தின் வலது புறத்தில் கொத்துக் கொத்தாக கும்பலாக சிவந்த நிறத்துடன், அடித்தளம் இல்லாத புண்களாகத் தோன்றி சிரித்தன. இந்த மூன்று வியாதிகளும் அவனது பிறப்புறுப்பில் தோன்றி தொல்லை கொடுத்தன. அரை இடுக்குகளில் வலிக்காத, உறுதியான நகர்த்தக் கூடிய இரண்டு நெறிக்கட்டிகள், அரைப்பகுதி நிணக்கணுக்கள் வலது புறமும் இடது புறமும் இருந்தன.

அத்துடன் விரைப்பையில் இடது புறத்தோலில் உறுதியான, சிறுதடித்த கட்டி அளவு தோன்றி இருந்தது. அதை ஊசி மூலம் துவாரம் செய்த போது அந்த சிறுகட்டியில் இருந்து வெண்ணெய் மாதிரியான திரவம் வடிந்தது. அதைச் சோதித்துப் பார்த்தபோது அது செபேசிய்ஸ்சிஸ்ட் எனப்தும் அதில் உள்ள நுண்கிருமிகள் ஸ்டியட்டோசைட் டோமா சிம்ப்ளெக்ஸ் என்பதும் தெரிந்தது.

பரிசோதனைகள்:

1. கிராம் ஸ்டெயினிங் பரிசோதனை செய்தல். வெட்டை நோய்க் கிருமிகள் கண்டறிய.

2. ஆண்டிஜன் டிடெக்ஷன் சோதனை. கிளாமிடியா கிருமிகள் கண்டறிய.

3. சானக் ஸ்மியர் அக்கிப் புண்களின் திரவத்தில் தயாரித்து ஸ்டெயின் கலந்து பரிசோதனை. பல உட்கருக்கள் கொண்ட பெரிய செல்கள் இருப்பது அறிய.

4. ஐஜீஜி. ( IgG). ஐஜீஎம் பரிசோதனை. ஹெர்பிஸ் கிருமிகளுக்கு எதிரான ஆன்டிபாடீஸ் இருப்பதை அறிய.

5. வி.டி.ஆர்.எல். (VDRL) பரிசோதனை. சிபிலிஸ் கிருமிகள் இருப்பது உறுதிப் பட அறிய

6. டி.பி.எச்.ஏ. (TPHA) சோதனை. சிபிலிஸ் கிருமிகள் இருப்பது உறுதிப்பட அறிய

7. எலிசா சோதனை. எச்.ஐ.வி எய்ட்ஸ் நோய் அறிய.

இப்படி மேலே குறிப்பிட்ட பரிசோதனைகள் அனைத்தும் செய்து கீழே கண்ட நோய்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

1. கோனக்காக்கல் கிருமிகள் மூலம்.

a) வெட்டை நோய் ( நீர்க்கடுப்பு)

b) டைசன் சுரப்பு சீழ் கட்டி

c) நீர்த்திரை அடைப்பு

2. ஹெர்பிஸ் கிருமிகள் மூலம். அக்கிப்புண்கள்

3. ஹ்யூமன் பாப்பில்லோமா கிருமிகள் மூலம் விஷ மருக்கள்

வைத்திய முறைகள்:

இந்த மூன்று வியாதிகளும், கோவிந்தம்மாள் மூலம் கோபால் பம்பாயில் இருந்து வாங்கி வந்தவைகள் என்பது உறுதிபடத் தெரிந்தது.

1. டைசன் சுரப்பி கட்டிக்கும், நீர்க்கடுப்புக்கும்- மிக உயர்ந்த ஆண்டிபயாடிக் உதாரணம்: அசித்ரோமைசின் தினம் என ஒருவாரம் கொடுக்கப்பட்டது. குணம் தெரிந்தது.

2. அக்கிப்புண்களுக்கு...: ஆன்ட்டீ வைரஸ் மருந்துகள் கொடுக்கப்பட்டது. உதாரணம்: ஏசைக்லோவிரி தினம் 3 தடவை, 5 நாட்கள். குணம் தெரிந்தது.

விஷ மருக்கள்: 25% போடோபைலின் பிசின் திரவம் விஷ மருக்கள் மீது வாரம் ஒரு முறை என மூன்று முறை தடவிப் பூசப்பட்டது. குணம் ஆகிவிட்டது. சிறுநீர்த்தாரை அடைப்புக்கு “யூராலாஜி” பிரிவுக்கு அனுப்பப்பட்டு “எக்ஸ்ரே” யூரித்ரோகிராம் எடுக்கப்பட்டு அடைப்பின் சரியான இடம் கண்டுபிடிக்கப்பட்டு சிறப்பு மருத்துவரால் குணம் ஆக்கப்பட்டது. அடைப்பு நீங்கி, சிறுநீர் நன்கு வெளிப்படத் தொடங்கியது. இப்படியாக ஒருவனுக்கு ஒரு விலை மாதர் உடல் உறவால், மூன்று வெவ்வேறு பால்வினை நோய்கள் அவளது பிறப்புறுப்பிலிருந்து, இவனது பிறப்புறுப்புகளுக்கு குடியேறி தொல்லை கொடுத்ததை கண்டு அறிந்து, சிகிச்சை அறிந்து குணம் ஆக்கப்பட்டது.

இப்படி பலவித பால்வினை நோய்கள் மூலம் எச்.ஐ.வி. கிருமியும் உள்ளே நுழைந்து எய்ட்ஸ் நோயை கொடுத்து மனிதனின் உயிரை குடித்து விடுகின்றது.

“மனித வாழ்க்கை” இனிமையானது. உயிர் மதிப்புமிக்கது என்பதை உணர்ந்து வாழ்ந்தால் இல்லறம் நல்லறமாக சிறந்து விளங்கும்.நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com