Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruMedicalGeneral
பொது

வியாதிக் கிருமிகளும் மனித உடலும்

ஜாகிர் உசேன்
(மாவட்ட அமைப்பாளர், தமிழ்நாடு - புதுவை தன்னார்வ இயற்கை மருத்துவர்கள் சங்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.)

பருவங்களுக்கேற்றபடி அந்தந்த காலத்தில் தொற்று நோய்கள் தாக்கும்போது 80 சதவிதம் நோயாளிகள் இந்த நோய்களினால் இறந்தவிடநேரிடுகிறது. இந்த உலகமானது காற்று வெளிச்சம் முதலியவைகளுடன் பல கோடி உயிர் அணுக்களும் நிறைந்ததாகும். நாம் ஒவ்வொரு முறை உட்சுவாசம் இழுக்கும் போதும் பல லட்சக்கணக்கான உயிர் அணுக்கள் நம் உடலில் புகுந்து விடுகின்றன. இதேமாதிரி நாம் மலம் கழியும் போதும் மூச்சு விடும் போதும் உமிழ் நீரை துப்பும்போதும் நாம் எத்தனையோ அணுக்களை வெளியேற்றி விடுகிறோம். ஆனால் எல்லா உயிரணுக்களும் நோய்களை உண்டு பண்ணுபவை என்றும் சொல்ல முடியாது. சில விசேஷமான அணுக்கள் வியாதிகளை உற்பத்தி செய்பவையாம். இப்படியாக அவை மனித உடலில் குடிபுகும்போது அங்கு அவைகளுக்கு வேண்டிய சூழ்நிலை கிடைத்தபின் உடலில் பரவி பெருகி வியாதிகளை உண்டாக்குகின்றன.

மனித உடலில் வெளிப்புறத்திலிருந்து உடலில் புகும் நோய் அணுக்களை எதிர்க்கும் தன்மையுள்ள உயிரணுக்கள் இயற்கையாகவே அமைந்துள்ளன. இவை சக்தி வாய்ந்தவையாக இருந்து நோய் அணுக்களுடன் போராடி அவைகளை விரட்டியடிக்குமாயின் நோய் கிருமிகள் செயலிழந்து விடும். உதாரணத்திற்கு : காலரா அணுக்களை எடுத்துக் கொள்வோம். இவை வாய் மூலம் மனித உடலில் புகுந்து வாந்தி வயிற்றுப்போக்கு சிறுநீர் தடைப்படுதல், தாகம் அதிகரித்தல், கை, கால்களின் தசைகள் சக்தி இழத்தல் உடல் நீலமாகிவிடுதல் போன்ற தீய விளைவுகளை உண்டாக்கும். ஆனால் இப்படி காலரா அணுக்கள் உட்கார்ந்த உணவு, இவை கலந்த பானங்களை 10 பேர்களுக்கும் தந்த போது மேற்சொன்ன தீமைகள் நேர வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒருவருக்கு இதனால் துளிகூட கஷ்டம் ஏற்படாதிருக்கலாம் ஒருவர் மிக கடுமையாக பாதிக்கப்படலாம். பாதிக்கப்பட்டவர்களில் ஓரிருவர் இறந்தும் விடலாம். காலரா கிருமிகளால் அசுத்தமடைந்த கிணற்றுத் தண்ணீரை ஒரு குடும்பத்தினர் சாப்பிட்டால் அக்குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை பேர்களும் காலரா வியாதியினால் பாதிக்கப்படுவார்கள் என்று உறுதியாகவும் திட்டமாகவும் சொல்ல முடியாது.

இது மட்டுமின்றி ஒருவருக்கு இருமலில் உமிழ்நீர் (கபத்தை)ப் பரிசோதித்துப் பார்த்தால் அதில் நிமோனியா போன்ற பயங்கரமான வியாதிக் கிருமிகள் காணப்படலாம். அந்த நோயாளிகளுக்கு சாதாரண சிகிச்சையளித்ததால் கூட அவர் பூரண குணமடைந்து விடுவதும் நேரலாம். இரு நபர்களுக்கு ஒரே மாதிரி சிகிச்சையளிக்கப்பட்டு பிறகு பார்த்தால் அவர்களில் ஒருவருக்கு காயம் குணமடைந்து விட்டிருக்கும். மற்றொருவருக்கு காயம் அதிகரித்துக் காணப்படலாம். இவற்றின் காரணம் ஒவ்வொருவரின் உடலிலும் உள்ள நோய் அணுக்களை எதிர்க்கும் சக்திதானே காரணம்?

விதை மற்றும் தரைக்குள்ள தொடர்பு தான் நோய் அணு மற்றும் உடலுக்கும் உள்ள தொடர்பு ஆகும். காற்று, வெய்யில், மழை, ஈரம், வெப்ப மாற்றும் விதைகளுக்கும் மானிடர் களுக்கும் ஒன்றாகவே இருந்தபோதிலும் வெவ்வேறு நிலங்களில் வெவ்வேறு தானியங்கள் பயிராகின்றனவே இது எப்படி என்று ஊகிக்க முடிகிறதா? இதே மாதிரி வெவ்வேறு மனிதர்களில் நோயை எதிர்க்கும் சக்தியானது அவர்களிடம் வெவ்வேறு விதமாக காணப்படும். நோய் அணுக்களானவை நோய் உண்டான தன்காரணமல்ல, ஆனால் அது நோயின் விளைவு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உதாரணத்திற்கு :- ஏதாவது ஒருபழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மரத்திலிருந்து அது கனிந்துவிடும்போது முதலில் ஈரமாக இருக்கும். பிறகு அழுகி விடும். அது அழுகும்போது வெளிப்புற சூழ்நிலையின் உதவியால் அதில் காளான் உற்பத்தி யாகின்றது.

இதேமாதிரி உடலின் ஏதாவது ஒரு பகுதியில் இரத்த ஓட்டம் குறைந்து விடுமானால் அல்லது இரத்த ஓட்டம் குறைவதாலும் அப்படி பலவீன மடையும் உறுப்பு அல்லது அவயம் பின்பு அங்கு சாக்காடு தோன்றி வெளிப்புற சூழ்நிலைகளில் உதவியால் அப்பகுதிகளில் நோய் அணுக்களின் உற்பத்தி ஏற்படும். இந்த அணுக்களானவை அங்கு பெருகி தம் தீய தன்மைகளை உடலில் பரப்பும் போது அறிகுறிகளுக்கேற்ப நாம் பரிசோதித்து பார்த்தால் எந்த வியாதி? இவை எந்த நோய்க் கிருமிகள்? என்பதை நிச்சயிக்கின்றோம். இதில் நோய்க்கான முக்கிய காரணம் இந்த நோய்க் கிருமிகள் தான் என்று தீர்மானமாக கூறுகிறோம். ஆனால் உண்மை இது இல்லை நம் கணக்கு தவறாகி விடுகிறது.

மனித உடலானது எண்ண முடியாத நோய்களின் கஜானா ஆகும். இவைகளைக் கண்டுகொள்ள விஞ்ஞானிகளால் முடியாது. ஆனால் உடலில் தானாகவே எந்த பகுதியிலும் நோயின் தன்மை ஏற்படாத வரையில் இந்த அணுக்களானவை வாயிற் பகுதியில் தம் வாழ்க்கையை தொடங்கி வளருகின்றன. புலி, சிங்கம் போன்ற வன விலங்குகள் தாமாகவே மனிதர்களிடம் வந்து தொல்லை கொடுப்பதும் இல்லை. ஆனால் அதே மனிதன் இறந்த விடும்போது அந்த சவம் கிடைத்தால் உண்பதற்காக வன விலங்குகள் சூழ்ந்து கொள்ளும். இதே மாதிரி தான் நோய் அணுக்களும் மிக நுண்ணிய ரூபத்தில் பதுங்கி யிருந்து கொண்டு உடலில் உயிரணுக்கள் சீராக இருக்கும் வரை தம் சக்தியைக் காட்டுவதில்லை. ஆனால் ஏதாவது உடலில் உள்ள உயிரணுக்கள் நாசமடைந்துவிட்டால் இந்த நோய் அணுக்கள் அந்த உயிரணுவைச் சூழ்ந்துகொண்டு அதை உட்கொண்டு அங்கு தனி ஆதிக்கத்தை நிலைநாட்டி விடுகின்றன. இப்படியாக இவை நோயை தோற்றுவிக்கின்றன.

நோய் அணுக்கள் உடலில் பிரவேசிக்கும் போது தான் தொற்று வியாதிகள் ஏற்படுகின்றன. இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இதில் கூட பெரிய வேறுபாடு இருக்கின்றது. உதாரணத் திற்கு குடல் மீது தாக்குதல் செய்யும் நோய் அணுக்கள் அங்கு சாக்காட்டை ஏற்படுத்து வதுடன் சில சமயம் மூத்திர பையில் ஊடுருவி கெடுதலை உண்டு பண்ணி விடுகின்றன. ஆனால் இந்த அணுக்கள் இதர உறுப்புகளுக்கு கெடுதலை ஏற்படுத்துவதில்லை. இப்படிப்பட்ட எத்தனையோ அணுக்கள் மிருகங்களுக்கு கெடுதலை உண்டாக்கி மனித உடலில் உயிர் வாழ முடியாதவையாக இருக்கின்றன.

இறந்த மிருகங்களின் மாமிசத்தில் கூட சில நோய் அணுக்கள் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் அந்த மிருகம் உயிருடன் இருந்தபோது ஏதாவது உடல் உறுப்பு அழுகி இருந்தால் அது இறந்தபின் அதன் மாமிசத்தில் நோய் அணுக்கள் இருப்பது சம்பவிக்க முடியும். இத்துடன் சில நோயை உண்டாக்கும் அணுக்கள் சமயம் கிடைத்தால் அழுகிவிடும் தன்மையுள்ள புழு அல்லது பூச்சிகளாகவும் மாறிவிடுவது உண்டு. இந்த நிலையில் இந்த அணுக்கள் இதர அணுக்களை சேர்ப்பவை என்னும் பெயரில் அழைக்கப்படும்.

இதற்கு சிறந்த உதாரணம் : டிப்தீரியா டைபாய்டு வியாதிக் கிருமிகள் மற்றும் மூளைச் சவ்வு வியாதி உண்டாக்கும் அணுக்கள் இவைகளில் கூறப்பட்ட டிஃப்தீரியா, டைபாயிடு அணுக்கள் எப்பொழுதும் இல்லாவிட்டாலும் அனேகமாக தொற்று ஏற்பட்ட பிறகு அல்லது தொற்று காணப்பட்ட பிறகு காணப்படுகின்றன. மூன்றாவதான அணுக்கள் அனேகமாக வியாதி உற்பத்தியான பிறகு இவை இல்லாமல் அழுகிய நிலையில் காணப்படும். தொற்றுகளை உண்டாக்கும் அணுக்கள் பிராண வாயு மீது ஆதாரப்பட்டு தான் உயிர் வாழும் உண்மையில் பிராணவாயு மீது வாழும் அணுக்களானவை பரவி வந்து தாக்கும் சக்தியை குறைவாகவே பெற்றிருக்கும்.

இவை அநேகமாக பிராணவாயு இல்லாமல் வாழும் கிருமிகளின் உதவியால்தான் தாக்குதல் செய்யும் பிராணவாயு அளவுடன் இருக்கும் பாகத்தில் தான் தாக்குதல் செய்து நோயை உண்டாக்கும். இப்படி அல்லது பிராண வாயு உள்ள பகுதியில் ஆக்கிரமித்து உடலின் உஷ்ணத்தின் உதவியால் அந்த அணுக்கள் தம் குடும்பத்தை பெருக்கு கின்றன. பயங்கரமான தொற்றுகளை உண்டாக்கும் பல உள்ளன. அவைகள் தொற்றுவதும் பயங்கரமாகவே அதன் முடிவும் இருக்கும்.

மேலே முதலில் குறிப்பிட்ட தொற்று எந்த கிருமியானாலும் சம்பவிக்கலாம். தொற்றின் அடிப்படையான காரணம் வெளியிலிருந்து ஏற்படும் தாக்குதல் தான். ஆகையால் இந்த அடிப்படையில் தொற்றை உண்டாக்குவதற்கு மிகப்பெரிய அல்லது மிகச்சிறிய அணுக்கள் காரணமாக உள்ளன என்பது புரிகிறது. மிகப்பெரிய பிராணிகளில் பாம்பு, தேனீ, எலிகள், கருவண்டு ஆகியவைகளைக் குறிப்பிடலாம் இவைகள் கடித்தால் கூட உடலில் விஷம் பரவி விடுகிறது. ஆனால் இவைகளினால் நோய்கள் பரவுவதில்லை. இவைகளினால் தாக்குண்டநபர் தான் விஷத்தன்மையினால் பீடிக்கப்படுவார்கள். மிகக் கடுமையாக விஷம் பரவி விட்டிருந்தால் நோயாளி இறந்தும் விடுவதும் உண்டு. ஆனால் இதனால் மற்றவாகள் பாதிக்கப்படமாட்டார்கள். இந்த பிராணிகளில் சிலவற்றால் கடியால் நோயாளிக்கு சுரம் கடிக்கப்பட்ட இடம் வீங்குதல் முதலியவை தோன்றும்.

ஆனால் இரண்டாவதான மிக நுண்ணிய அணுக்களால் தொற்றுகள் உண்டாகும் இவைகளை பார்ப்பதற்கு சக்தி வாய்ந்த பூதக் கண்ணாடி சூட்சும தரிசினி தேவைப்படும். இவை பல உருவங்களில் இருக்கும். இத்தோடு மட்டும் இல்லை இந்த அணுக்களானவை மேலே சொல்லப்பட்ட பாம்பு, தேள் போன்று தம் உண்மையான விஷத்தை மனித உடலில் செலுத்துவது இல்லை உண்மையில் இவைகளின் உடலில் அப்படி விஷப்பைகள் அல்லது விஷநாளங்கள் ஏதும் இருக்கா? ஆனால் இவை உடலில் புகுந்து இரத்த நாளங்கள் நரம்புகள் நிண நீர்க் குழாய்கள் அல்லது நிணநீர் சுரப்பிகள் மற்றம் குடல்களில் ஒட்டிக் கொண்டு விடும் அந்த இடங்களில் தான் தம் இனத்தை விருத்தி செய்யும்.

இப்படிதான் அந்தப் பகுதியின் வேக்காடு அல்லது கட்டியை உண்டாக்கும் அல்லது உள்ளே பரவி விடுகின்றன. அவயங்களில் சாக்காடு உண்டாக்கும் அல்லது அதிலிருந்து விஷம் பரவும். ஆதலால் நோயாளியின் மலம் மூத்திரம் கபம் உமிழ்நீர் ஆகியவற்றின் வழியாக மீண்டும் வெளிப்பட்டு மேல் சொன்ன விதியில் நாளங்கள் வழியாக மீண்டும் பிறரின் உடலில் புகுந்து தீமைகளை உண்டாக்கும். இப்படியாக நுண்ணிய அணுக்கள் பலர் உடலில் தொற்றிபல தொற்றுவியாதிகளை உண்டாக்குகின்றன. இவைகளுக்கு ஏற்ற சூழ்நிலை அமைத்து விட்டால் பெருவாரியாக இவை நோய்களை பரப்புகின்றன.

இந்த மாதிரி உயிரணுக்கள் ஒற்றை அணுவால் உருவாக்கப்பட்டவை ஆதலால் நாம் இவைகளை பாக்டிரியா என்கிறோம். மற்றொரு வகை நோய் கிருமிகளை பாசிலஸ் என்பர். இவையும் ஒற்றை அணுவால் ஏற்ப்பட்டதாகவே கருதப்படுவதால் இவைகளையும் உயிரணுக்கள் என்றே குறிப்பிட வேண்டும். இவைகளை பார்க்க முடியாது. மைக்ராஸ் கோப் கருவியில் பார்த்தால் இவைகளின் உருவத்தை தெளிவாக பார்க்க முடியும். இவை தவிர தடி போல் சற்று நீளமாக இருப்பதால் இவைகளை பாசிலஸ் என்கிறோம். ப.ஆ. போன்ற பயங்கர தொற்றுகள் விளைவிப்பது இந்த பாசிலஸ் மூலம் தான் இந்த நோய்க்கான கிருமிகளை பாசிலஸ் டியுபர்குலோசிஸ் என்பார்கள்.

காலரா விப்ரியோ எனப்படும் பாசிலஸ் கூட இதே வடிவில்தான் இருக்கும். இவைகளை நாம் தடி (கம்பு) போல் இருப்பதாக கருதுகிறோம். அவைகளின் உருவம், (கமா) வடிவில் இருக்கும் மூன்றாவது வகை நோய் அணுக்கள்-காக்கஸ் வகையை சேர்ந்தவை. இவை புள்ளி (.) வடிவில் இருப்பவை இந்த காக்கஸ் வர்க்கத்தில் கூட பல வகைகள் உள்ளன. இவைகளின் பெயர்களும் விளக்கமும் வருமாறு ஸ்டாபிலோ கோக்கஸ் இவை புள்ளி வடிவில் தான் இருக்கும். ஆனால் பல கொக்கிகள் ஒன்று சேர்ந்து கூட்டமாக இருக்கும்.

ஸ்ட்ரெப்டோ காக்கஸ்

இவையும் புள்ளி வடிவில் தான் இருக்கும், ஒரே வரிசையில் பல கோடுகளாக காணப்படும் அதாவது நாம் ஏதாவது எழுதும் போது ஒரு விஷயம் விட்டுப்போய் இருந்தால் அதன் இடத்தில் ... என்று குறிப்பு போடுவது போல் அவை அமைந்து காணப்படும்.

டிப்லோகாக்கஸ்

இது இரண்டு புள்ளிகள் ஒன்றாக சேர்ந்திருப்பது போல் காட்சியளிக்கும் மேலே வர்ணிக் கப்பட்ட பாக்டிரியாக்கள் மனிதர்களுக்கு கெடுதலை மட்டுமே உண்டாக்கும் என்று நினைக்காதீர்கள் அப்படி இல்லை ஆதலால் இவைகளும் இரு வகைப்படும் ஒன்று நாம் விளக்கியது போல் நோயை உண்டாக்கும் பாக்டிரியாக்கள் இரண்டாவது மனித உடலுக்கு கெடுதல் செய்வதற்கு பதிலாக நன்மையளித்திட அவசியப்படுபவை இந்த இரண்டாம் வகை. தயிர் (இட்ங்ங்ள்ங்) இந்தப் பொருட்கள் மனிதனின் உடல் நலத்திற்கும் மிகவும் அவசியமானவை இந்த வகை பாக்டிரியாக்கள் நம் உடலிலும் உள்ளன. நாம் பாலில் ஒரு துளி மோரை விட்டு அது தயிராகி விடுவதை பார்க்கிறோம் லாக்டிக் ஆசிட் ரூபத்தில் தயிராக மாற்றுவது அந்த பாக்டிரியாக்கள் தான்.

நோய்க்கிருமிகள் தம் விஷத்தன்மை மூலம் மனித உடலுக்கு கேடு விளைவிக்கின்றன. சில கிருமிகளில் அவை உயிருடன் இருக்கும் போது விஷத்தன்மையுடையைவை. அவை இறந்தபிறகு அந்த விஷத்தன்மைகள் வெளியாகி விடுவதும் உண்டு இவைகளை என்கிறோம். இவைகளினுள் அடங்கியுள்ள விஷத்தை என்றும் சொல்கிறோம். மற்றொரு வகைப்படும் அணுக்கள் உயிருடன் இருந்து கொண்டே விஷத்தை பரப்பும் தன்மை வாய்ந்தவை. இவைகளை கிருமிகள் என்றும் இவைகள் பரப்பும் விஷத்தை என்றும் கூறுகிறோம்.

பாக்டிரியா, பாசிலஸ், காக்கஸ் முதலிய அணுக்கள் தாவர சம்பந்தப்பட்டவை ஆனால் பிராணிகள் சம்பந்த பட்டவற்றில் பாம்பு, ஆகியவை மட்டும் இல்லை இந்த வகையில் கூட பல கிருமிகள் உள்ளன. அவைகளை பூதக்கண்ணாடி மூலம் தான் காண முடியும். உதாரணத்திற்கு சில பெயர்கள் இங்கு தரப்பட்டுள்ளன

1) ப்ளாஸ்மோடியம் மலேரியா சுரத்தை உண்டாக்கும்.

2) லிஷ்மோனியா காலரா காரண கிருமிகள்.

3) ட்ரைபானோசோமி

4) அமீபா

5) பாலான்டிடியம் கோலி

6) ஜபார் டியாலாம்ப்லியா

7) ஸ்டிபைரோகேடா

இவைகளில் சிபிலிஸ் மற்றும் எலிக்கடிச் சுரம் ஆகியவை ஏற்படும். அல்லது உயிருடன் இருந்த விஷத்தை வெளியேற்றும் நோய்க்கிருமிகள் விஷம் கரையும் தன்மையுடையனவாகும். உதாரணத்திற்கு டெடனேஸ் வியாதி அணுக்கள் இந்த விஷத்தை உற்பத்தி செய்யும் பின் இந்த விஷமானது தேவையான அளவை விட குறைந்து உஷ்ணத்தில் தானாகவே நசித்து விடும். அதைவிட குறைந்து உஷ்ணம் அந்த விஷத் தன்மை செயலிழக்கச் செய்யும் மிருகங்களின் உடலில் இதை உபயோகிக்கும், இது மிருகத்தின் உடலில் போய் சேர்ந்து அறிகுறிகளை வெளிப்படுத்தும் முன் இதன் சக்தி இருப்பிடமே தெரிவதில்லை என்று தெரிகிறது.

நோயை எதிர்க்கும் சக்தி மனித உடலில் நோய் அணுக்களின் தாக்குதல் ஏற்படும்போது உடலில் உள்ள திசுக்கள் இந்த நோய் அணுக்களை எதிர்த்து போராடி நோயிலிருந்து உடலை காப்பாற்றும் தன்மைதான் ஆகும். மனிதன் தகுந்த ஜாக்கிரதையுடன் இருந்து சுத்தமான காற்று உணவுகள் போதுமான போதிய வெளிச்சம் முதலிய சுகாதார விதிகளுடன் இருந்து வந்தால் உடலில் உயிரணுக்கள் சக்தியுடனிருந்து நோய் அணுக்களை விரட்டியடிக்கும் தன்மையை முற்றிலும் பெற்றிருக்கும். இப்படி இல்லாமல் சுற்றுபுறங்கள் நோய் கிருமிகளுக்கு இருப்பிடமாக இருந்து வசிக்கும் இடங்கள் நோய் அணுக்களின் வளர்ச்சிக்கு ஏதுவாகி விட்டால் மனித உடலில் படிப்படியாக பலவீனம் தோன்றி அணுக்களின் ஆதிக்கம் ஓங்கி விடுகிறது.

இந்த எதிர்ப்பு சக்தி போராட்டமானது கடைசி வரையிலும் நடந்துகொண்டே இருக்கும் நோயை எதிர்க்கும் சக்தி இரண்டு வகைப்படும். ஒன்று இயற்கையாக ஏற்பட்ட எதிர்ப்புசக்தி இரண்டு செயற்கையாக அல்லது உண்டாக்கப்பட்ட எதிர்ப்பு சக்தி என்பவை. இதில் செயற்கை அல்லது உண்டாக்கப்பட்ட முறையிலான சக்தி செயலுடன் கூடியது மற்றும் செயலில்லாதது என்று இருவகைப்படும். ஒவ்வொரு நாட்டில் அல்லது பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஒவ்வொரு வியாதியும் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே அமைக்கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு நீக்ரோ ஜாதியினருக்கும் மஞ்சள் சுரம் மிக பயங்கரமாக பரவும் அது

இதர பகுதிகளில் இதன் உக்கிரமம் அத்தனை அதிகமாக இருக்காது. அதாவது இதர பகுதிகளில் வசிப்பவர்களில் இந்த நோயிடம் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. இதில் தனி ஒருவரின் விசேஷ தன்மை கூட அடங்கியுள்ளது. பிளேக் காலரா பெரியம்மை போன்ற வியாதிகள் பெருவாரியாக பரவி இருந்து அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு அல்லது ஒரு வீட்டில் 5 பேர்களில் 4 பேர்களுக்கு இந்த நோய்களில் ஏதாவது விலகி இருந்து ஒருவருக்கு மட்டும் இதன் விளைவு சிறிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அந்த ஒருவருக்கு இந்த நோயிடம் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே அமைந்து இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடிகிறது.

காஷ்மீரம், நேபாளம் முதலிய மலைப் பகுதிகளிலிருந்து மக்கள் இதர உஷ்ண நாடுகளுக்கு வந்தால் அவர்களை ப.ஆ. வியாதி வாட்டி எடுக்கும். மலைப்பகுதிகள் வறண்டு சுத்தமான காற்று நோய் அணுக்களை நசிக்க செய்வதாக இருக்கும். இதர பகுதிகளில் வசிப்பவர் கூட ப.ஆ. நோய் ஏற்பட்ட போது மலை பகுதிகள் மீது போய் தங்கி இருந்தால் ப.ஆ. வியாதி குணமடைந்து விடுவதை நாம் பார்க்கிறோம். ஆனால் மலை இறங்கி வழக்கமாக தம் இருப்புக்கு திரும்பி வந்தால் மீண்டும் நோய் பிடித்து தாக்கும்.

குடும்ப சம்பந்தப்பட்ட காரணங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் கபம் இருக்கும் வியாதி ஒருவருக்கு இருக்குமானால் அவரது பரம்பரையினர் எல்லோருக்கும் கப வியாதி ஏற்படுவது சகஜமாக காணப்படுகிறது. கீல்வாதம் சிபிலிஸ் போன்ற நோய்கள் ஒரு முறை ஒருவருக்கு ஏற்பட்டதென்றால் அது பரம்பரை தொடர்பாக வந்து கொண்டே இருக்கும். இதிலிருந்த வீரியமும் உதிரமும் பரம்பரையாக ஓடிக் கொண்டு இருக்கும் போது நோயும் தொடர்ந்து வரும். ஆனால் இந்தமாதிரி ஒவ்வொரு குடும்பத்திலும் ஏற்படும் என்று திடமாகவும் சொல்ல முடியாது. நோய் அணுக்கள் மூலம் எதிர்ப்பு சக்தி மனிதருக்கு ஏற்பட்டால் அதை ஆக்டிவ் என்பர். இதே வியாதி வேறு யாருக்காவது ஏற்பட்டிருந் தது அந்த நோயாளியின் சீரத்தை எடுத்து பிறரின் உடலில் செலுத்தி இந்த விரியத்தில் ஏற்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியினால் உடலில் எதிர்ப்பு சக்தி செயல்படாது.

காலரா, பெரியம்மை, சின்னம்மை, டைபாயிடு, முதலியவற்றை ஏற்படுத்தும் சில அணுக்கள் உடலில் புகுந்தால் ஒரு முறை நோய் ஏற்படுகிறது. ஆனால் புகுந்து அந்த வியாதி சில காலம் வரை அந்த நபருக்கு ஏற்படுவதில்லை. இதன் விஷத்தன்மை அதிக அளவில் இருப்பதால் உடலில் வியாதி உண்டாகிறது. இது தான் காரணம் இப்படி எதிர்ப்பு சக்தி 2-3 வருடம் வரை தான் அவர் உடலில் நீடித்திருக்கும்.

இதற்கு உதாரணமாக பெரியம்மை எடுத்து கொள்ளலாம் இந்த நோயை உடலிலும் இவ்வியாதியை உண்டாக்குகின்றன. அனேகமாக பசுவின் ஸ்தனங்களில் பெரியம்மை முத்துக்கள் ஏற்படும். அவைகளை எடுத்து அதன் சீழை பத்திரப்படுத்தி வைத்து முறைப்படி செய்து அதை சருமத்தில் கீறி விட்டு உடலில் உள் செலுத்தப்படுகிறது. இது குழந்தைகளுக்கும் போடப்படும். இதை என்கிறோம். இதன் விளைவாக அந்த இடத்தில் விசேஷமான கொப்புளம் உண்டாகி அதன் மிக குறைந்த அளவிலான விஷத்தன்மை உடலில் இரத்தத்தில் கலந்து நிரந்தரமாக தங்கி விடுகிறது.

இந்த ஊசி போடப்பட்டவர்களுக்கு ஆயுள் முழுவதும் பெரியம்மை கிருமிகளினாலும் தீங்கு ஏற்படுவதில்லை. இதே மாதிரி ஒருவருக்கு ஒரு முறை டைஃபாய்டு, கக்குவான் இருமல் போன்றவை ஏற்பட்டால் அவருக்கு மீண்டும் அந்த வியாதி தோன்றுவதில்லை. உடலில் உயிரணுக்கள் சக்தி பெற்ற பிறகு இது உண்டாகிறது. வியாதி அல்லது தடுப்பு ஊசிக்கு தகுந்தபடி இது சில மாதங்கள் வருடங்கள் அல்லது ஆயுள் முழுவதும் நீடித்திருக்கும்.

விளைவுகள் : மேலே நோய் அணுக்களின் வகைகள் மற்றும் தொற்று நோய்களின் காரணங்களை விளக்கியுள்ளோம். இப்பொழுது இப்படி தொற்றை விளைவிக்கும் நோய் அணுக்களானவை நாம் அஜாக்கிரதையாக இருக்கையில் நம் உடலில் சென்று விடுவதால் விளையும் பலன்கள் நன்மையா? தீமையா?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com