உடல் கட்டுப்பாடு
என் கணவருக்கு வயது 36. இரண்டு வருடங்களுக்கு முன் அவருக்கு உடல் பரிசோதனை செய்தபோது கொழுப்பு அதிகமாக இருப்பது தெரியவந்தது. அதன் பிறகும் உணவில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? கொழுப்பு இல்லாத என்ணெய் என்று சொல்லப்படுவதை பயமின்றி உபயோகிக்கலாமா? என்ன உடற் பயிற்சி செய்யலாம்? என்ன சாப்பிடலாம்..?
கொழுப்பு கூடுதலாக இருப்பது சிலருக்குப் பரம்பரையாக இருக்கலாம். அளவுக்கு மீறிய சாப்பாடு, கொழுப்பு அதிகம் உள்ள உணவை அதிகம் சாப்பிடுவது இவையும் ரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்கும். அளவாகச் சாப்பிட்டு உடல்பயிற்சி செய்யாவிட்டாலும் கொழுப்பு கூடும். நார்ச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டியது அவசியம்.
தயிர், நெய் மற்றும் இனிப்பு வகைகளைக் கண்டிப்பாக சாப்பிடக் கூடாது. மட்டன், முட்டைக்குத் தடைபோட வேண்டும். குறிப்பாக முட்டையின் மஞ்சள் கரு கூடவே கூடாது. வாரம் ஒரு முறை சிக்கன், அடிக்கடி மீன் சாப்பிடலாம். எண்ணெயை அறவே தவிர்ப்பது நல்லது. முடியவில்லையெனில், மிகக் குறைவாக சேர்க்கலாம். கொழுப்பைக் குறைக்க மருந்துண்டு. அவருடைய கொழுப்பின் அளவைப் பொறுத்து மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை எடுக்க வேண்டும்.
பொதுவான உடற்பயிற்சி, யோகா செய்யலாம். வாக் போகலாம். ஏனோதானோ என்றல்ல. 45 நிமிடங்களில் நடக்க வேண்டும். அப்போது தான் பலன் இருக்கும். எல்லாவற்றையும் விட மிக முக்கியம், புகை பிடிப்பதோ மது அருந்துவதோ கண்டிப்பாகக் கூடாது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|