Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
ManmozhiManmozhi Logo
ஜனவரி - பிப்ரவரி 2009
நீதிமன்ற வளாகங்களின் பாதுகாப்புக்கு தனி நீதித்துறைக் காவல்படை அமைக்கவேண்டும்
கணியன்


சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த பிப்ரவரி 19 வியாழன் அன்று அரங்கேற்றப்பட்டுள்ள வழக்கறிஞர் மீதான குரூரத் தாக்குதல் சம்பவம் நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது. சமூகத்தின் கண்ணியமான பிரி வினர், சட்டம் தெரிந்தவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக தங்கள் வாதத் திறமையால் நீதிமன்றத்தில் வழக்காடும் ஆற்றல் பெற்ற வர்கள் என்றெல்லாம் மக்களால் மதிக்கப் பட்டு வரும் வழக்கறிஞர்கள் மீது காவல்துறை, அதுவும் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே புகுந்து காட்டு மிராண்டித்தனமாக நடத்தி யுள்ள கொடூரத் தாக்குதல் மக்களிடையே வழக்கறிஞர் களுக்கே இந்தக் கதி என்றால் பிறகு சாதாரண மனிதனின் கதி என்ன என்கிற கேள்வி களை எழுப்பி யுள்ளது.

சட்டம் ஒழுங்கைக் காப் பது என்கிற நிலையைக் கடந்து ஏதோ தனிப்பட்ட விரோதம் போல் காவல் துறை வழக்கறிஞர்களை, ஓட ஓட விரட்டியும், கும்பலாகச் சூழ்ந்து கொண்டும் சகட்டுமேனிக்கு நடத்திய தாக்குதல் காட்சிகளும், ரத்தம் சொட்டச் சொட்ட வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிகளின் கோரங் களும், நாள், வார ஏடுகளில் புகைப் படத்துடன் விலாவாரியான செய்தி களாக வெளி வந்துள்ளன. நடந்த சம்பவத்தை உச்ச நீதி மன்றம் ஒரு சீரிய பிரச்சினையாக எடுத்துக் கொண்டு, நீதிமன்ற வளாகத் துக்குள் காவல் துறையை ,சிறப்புக் காவல் மற்றும் அதிரடிப் படையை நுழையவும் வழக்கறிஞர்கள் மீது தாக் குதல் தொடுக்கவும் உத்தர விட்டது யார் என தமிழக அரசை விளக்கம் கேட்க இது பற்றி தமிழக அரசிடமிருந்து இதுவரை தெளிவான எந்தவித பதிலும் இல்லை.

இதற்கிடையில் நடந்த தாக்குதல் மீது மத்திய புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு ஆணையிடப்பட்டுள் ளது. இத்துடன் உண்மையில் நடந்தது என்ன என்பதுபற்றி ஆராய ஒய்வு பெற்ற உச்ச நீதி மன்ற நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா நியமிக்கப் பட்டு அவரும் வந்து சம் பவம் நடந்த இடங்களைப் பார்வை யிட்டு தாக்குதலுக்குள்ளான வழக்கறி ஞர்களையும் நேரில் சந்தித்து தகவல் களைத் திரட்டி தனது ஆய் வறிக்கையை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய் துள்ளார். இந்த அறிக்கை நியாயமானதாய் இல்லை, பல உண்மைகளை மூடி மறைப்பதாய் உள்ளது என வழக்கறி ஞர்கள் தரப்பு இதன்மீது குற்றம் சாற்றியுள்ளது.

உரிய விசாரணைக்குப் பிறகு தவறு செய்தவர்கள் மீது தக்க நட வடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆகவே வழக்கறிஞர்கள் அனைவரும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்தது. ஆனால் நடந்த சம்பவத்தின் மீது சென்னை உயர் நீதிமன்றம் இதுவரை எந்தப் புகாரும் தராமல், காவல்துறை யில் யார் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள், மாநரகக் காவல் ஆணை யர் மற்றும் தமிழக காவல் துறைத் தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் வழக்கறி ஞர்கள் யாரும் பணிக்குத் திரும்புவதாக இல்லை என, வழக்கறிஞர்கள் சங்கப் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நாம் கோருவது, விசாரணை அதன் முடிவில் நடவடிக்கை என்பதெல்லாம் ஒரு புறம் இருந் தாலும், அதன் முடிவு வரும் வரை,

1) சம்பந்தப்பட்ட காவல் உயர் அதிகாரிகளை பணியிலிருந்து இடை நீக்கம் செய்து வைக்க வேண்டும்.

2) வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களின் மீது கொலை நோக்கம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.

அதோடு மிகமிக முக்கியமான ஒன்று, எந்த ஒரு புதிய யோசனையும் மாற்றுத் திட்டமும் ஏதாவது ஒரு பாதிப்புக்குப் பிறகே பிறக்கிறது என்கிற வகையில் தற்போது நடந்த சம்பவம் குறித்து யோசிக்க நீதிமன்றங்களின் , நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் பாதுகாப்பு கருதி ஒரு யோசனை தோன்றுகிறது.

ஒரு சனநாயகக் கட் டமைப்பின் அடிப்படைத் தூண்களாக நிலவும் அமைப் புகள் மூன்று. 1) நாடாளு மன்றம் 2) நீதித் துறை (3) நிர்வாகம். இதற்கு அப்பால் பத்திரிகைத் துறையை நான்காவது தூணாகக் குறிப் பிடுவார்கள். அது தனி. ஆகவே, அதுபோக, தற் போதைய நமது பரிசீலனைக்கு உரியதும் மிக முக்கியமானதும் அடிப் படையானதும் மேலே குறிப்பிட்ட இம்மூன்றும்தான்.

இதில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதல்வர்கள், பிரதமர் அனைவரும் முதல் பிரிவில் வருவர். நீதிமன்ற நடுவர்கள், நீதிபதிகள், நீதித்துறை ஊழியர்கள், நீதிமன்ற பதிவாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் இரண்டாம் பிரிவில் வருவர். அலுவலக ஊழியர்கள், அதிகாரிகள், துறைச் செயலாளர்கள், தலைமைச் செயலாளர்கள், ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோர் நிர்வாகத் துறையில் வருவர். காவல் துறையும் இந்த நிர்வாகத் துறையின் கீழ்தான் வரும். இந்த அனைத்து நிர்வாகங்களின் தலைவர் தான் குடியரசுத் தலைவர். நாட்டின் நிர்வாக நடவடிக்கைகள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றங் களால் நிறை வேற்றப்பட்டாலும் அவை அனைத்தும் ஆளுநர், குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று அவர் பெயராலேயே செயல்படுத்தப்படு கிறது.

இப்படி ஒன்றையொன்று சார்ந் துள்ள இந்த மூன்று துறைகளும், சுயேச் சையான, அதிகாரம் பெற்றதாக வும், ஒன்றின் செயல்பாட்டில் ஒன்று தலை யிடா வகையிலும் ஒன்றின் நடவடிக் கையில் ஒன்று குறுக்கிடாமலும் சமமான தகுநிலை பெற்றதாக அதனடிப் படையில் இயங்கப் பார்த்துக் கொள்ளப்படவேண்டுவது மிகவும் முக்கியம். சமயத்தில் இந்த மூன்றுக்கும் ஒன்றோடொன்று மோதல், உரசல் ஏற்படுவதும், பிறகு ஏதாவதொரு ஏற்பாட்டின் அடிப்படையில் அது தீர்க்கப் படுவதும் இதையொட்டி புதிய சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டு புதிய நடைமுறைகள் உருவாக்கப் படுவதும் அவ்வப்போது நிகழ்பவை. அப்படிப் பல முறை நடந்துள்ளன என்றாலும் தற்போதைய நமது அக்கறை அவை யனைத்தும் பற்றியதல்ல. குறிப்பாக நீதிமன்றங்களின் பாதுகாப்பு பற்றியதே என்பதால் அது பற்றி மட்டும் சில கருத்துகள்.

பொதுவாகவே, காவல் துறை, நிர்வாகத் துறையின் கீழ் இயங்குவதால் காவலர்கள், மற்றும் காவல் துறை இடை மற்றும் உயர் அதிகாரிகள் அனைவரும் - இவர்களுக்கு ஆணை யிட நீதிமன்றத் துக்கு அதிகாரம் இருந்த போதிலும், இவ்வதிகாரத்தின் அடிப்படையில் நீதிமன்றங்கள் இவர் களுக்கு ஆணையிட்டாலும் இவர்கள் அதைப் பொருட்படுத்தாமல், தங்களது உடனடி அதிகாரிகளின், ஆட்சியாளர் களின் கருத்தறிந்து அவர்களது கட்டளைப்படிதான் செயல்படுவார்கள், செயல்படுகிறார்களேயொழிய, நீதி மன்றத்தின் ஆணைக்கு நேரே கீழ்ப் படிந்து அதை நிறைவேற்றமாட் டார்கள். அதை இரண்டாம் பட்சமாகத் தான் பார்ப்பார்கள். காரணம் அவர் களது உடனடி நலன்களைப் பாது காப்பது உயரதிகாரிகளும் ஆட்சியாளர் களும்தானே யொழிய நீதிமன்றங்கள் அல்ல. எனவே இவர்கள் நீதிமன்றங் களுக்கு மிகுந்த மரியாதை காட்டுவது போல் பாவ்லா காட்டிக் கொண்டே அதை நிறைவேற் றாமல் இருப்பார்கள். அல்லது மெத் தனம் காட்டுவார்கள், கால தாமதம் செய்வார்கள். இதற்கு கடந்த காலங் களில் நேர்ந்த பல எடுத்துக் காட்டுகளைச் சொல்லலாம்.

ஆக சுருக்கமாக நிர்வாகத் துறையின் கீழ் உள்ள காவல் துறை, அது தன் உடனடி நிர்வாக அதிகாரிகளுக்கு கட்டுப் பட்டதாய்த்தான் செயல்படுமே யல்லாது, நேரடியாக நீதித்துறைக்கு கட்டுப்பட்டதாய்ச் செயல்படாது. நீதி மன்ற ஆணைகளை முழு வீச்சில் உரிய அக்கறையோடு செயல்படுத்தாது. என் றாலும் நீதித்துறை இடும் கட்டளை களை நீதிமன்றத்துக்கு வெளியே நிறை வேற் றும் பொறுப்பு தற்போது காவல் துறையிடம்தான் இருக்கிறது. அது அப்படியே இருந்து விட்டுப் போகட் டும். அதில் யாரும் குறுக்கிட மாற்று ஏற்பாடு செய்திடக் கோரவில்லை.

ஆனால் நீதி மன்ற வளாகத்துக்குள் நீதிமன்றங்களின் பாது காப்பிற்கும் இதே காவல் துறையைத் தான் நம்பி யிருக்க வேண்டுமா என்றால் வேண்டாம் என்றே சொல்ல வேண்டியிருக் கிறது. ஆகவே நீதிமன்றங்களின் பாதுகாப்புக்கென்று தனியாகக் காவல் படையை அமைக்க வேண்டும். இப்படிச் சொல்வது சிலருக்கு குதர்க்கமாகத் தோன்றலாம். ஆனால் இதற்கு தார்மீக மற்றும் கோட்பாட்டு ரீதியாக சில நியாயங்கள் உண்டு. காட்டாக, சட்டமன்றம், நாடாளு மன்றம் இருக்கிறது. இதற்கு தனி பாதுகாவ லர்கள் உண்டு. அவையில் அமைதியை நிலைநாட்டவோ, அவைத் தலைவரின் ஆணைக்கு உட்படாத அவை உறுப்பினர் களைக் கட்டுப்படுத்தவோ, அவையை விதி முறைகளின்படி நடத்தவோ மீறும் உறுப்பினர்களை வெளியேற்றவோ, அப்புறப்படுத்தவோ முதலான நட வடிக்கைகளுக்கு அவைத் தலைவரின் ஆலோசனைப்படியும், அவரது ஆணைக்குக் உட்ப்பட்டும் இப்பாது காவலர்கள் செயல்படுகி றார்கள்.

அவையில் எழும் சட்டம், ஒழுங்கு பிரச்சினையை, வேறு ஏதாவது அமளி கள், வாக்கு வாதங்கள், சண்டை சச்சரவுகளை வெளியிலுள்ள காவல் துறை போய் கட்டுப் படுத்துவதில்லை. அதில் போய் தலையிடுவதுமில்லை. அசாதா ரண நிலை ஏதும் உருவானால், அவைத் தலைவர் வேண்டி அழைத்தால் காவல் துறை செல்லலாம், செல்லுமே தவிர, வெளியே நடைபெறும் நிகழ் வுகளில் காவல் துறை சாதாரணமாய்த் தலையிடுவது போல சட்டமன்ற, நாடாளு மன்ற நிகழ்வுகளில் காவல் தலையிட உரிமை இல்லை. ஏனென் றால் இது நாடாளுமன்ற கட் டமைப்பின் சுயேச்சைத் தன்மையைப் பாதிக்கும். அதன் அதிகாரத்தில் தலை யிடுவதும் குறுக்கீடு செய்வதுமாகி விடும் என்கிற அடிப்படையில் இந்த ஏற்பாடு செயல் படுத்தப்பட்டு வருகிறது

சட்டமன்ற, நாடாளுமன்றங் களின் சுயேச்சைத் தன்மை பாதிக்கப் படும் என்பதால் இப்படி ஒரு நடை முறை பின்பற்றப்படும்போது இதே நடை முறை நீதிமன்றங்களுக்குப் பொருந்தாதா. எனவே தான் சொல் கிறோம் இந்த அடிப்படையில் நீதிமன் றங்களுக்கு அவற்றின் சுயேச்சைத் தன்மையைப் பாதுகாக்க, அது தன் பாதுகாப்புக்கு நிர்வாகத் துறை சாராமல் தனித்து இயங்க அதற்கென்று தனிக் காவல் படையை பெற்றிருக்க வேண்டும் என்று கோருகிறோம். அதாவது சட்டமன்ற நாடாளு மன்றங்களுக்கு தனிப் பாதுகாவலர்கள் இருப்பது போல், தொடர் வண்டித் துறைக்கு தனிக் காவல் படை இருப் பதுபோல்,தொழில் நிறுவனங் களுக்கு தனிப் பாதுகாப்புப் படை இருப்பது போல் நீதித் துறைக்கும் தனிக் காவல் படை, நீதித்துறை காவல்படை என்று இருக்கவேண்டும் என்கிறோம்

இது வட்டத் தலைநகர்களின் இருக்கும் குற்றவியல் நடுவர் நீதி மன்றம், குடிமை நீதிமன்றம் முதல் மாவட்ட நீதிமன்றங்கள், அமர்வு நீதிமன்றங்கள், உயர் நீதி மன்றங்கள், ஊடாக உச்ச நீதிமன்றம் வரை எல்லா இடங்களிலும்அமைக்கப்படவேண்டும். நீதிமன்ற வளாகத்திற்குள் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது, அமைதியை நிலைநாட்டுவது, அந்த வளாக நீதிமன்ற நடுவர், மற்றும் நீதிபதிகளின் ஆணை களை நீதிமன்ற வளாகத்துக்குள் நிறைவேற்றுவது ஆகிய பணிகளை இது செய்யும். இதற்கென அந்தந்த நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே காவல் சாவடி கள் அமைக்கப்பட்டு நீதி மன்றத்தின் தகுதிப்பாடு, வரும் வழக்குகள், திரளும் கூட்டம் இவற்றின் தன்மைக்கேற்ப காவலர்களின் எண்ணிக்கையையும் அதிகாரிகளையும் அமைத்துக் கொள்ள லாம். இதற்கான தேர்வு நியமனம், நிர்வாகம் அனைத்துமே நீதித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

இப்படி எல்லா நீதிமன்ற வளாகத்திற்குள்ளும் நீதித் துறைக் கட்டுப் பாட்டில் தனிக் காவல் சாவடிகள் அமைந்தால், எவ்வளவோ பிரச்சினை களைத் தவிர்க்கலாம். இப்படி யோசித்துப் பாருங்கள். குற்றம் சாட்டப்பட்ட பலர் நீதிமன்ற வளாகங்கள் தான் பாதுகாப்பான இடம் என்று காவல் துறை கைதில் சிக்காமல் நேரடியாக நீதி மன்றத்தின் முன் நேர் தோன்றி சரணடைகிறார்கள். இப்படி வந்து சரணடைகிறவர்களை காவல் துறை பெரும்பாலும் தானாக கைது செய்வது இல்லை.செய்தது போல் காட்டிக் கொள்ளவும் முனைவதில்லை.

ஆனால் இப்படி பாதுகாப்பான இடம் என்று கருதப்படும் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயேதான் பிணையில் வந்தவர் வெட்டிக் கொலை, சாட்சி சொல்ல வந்தவர் வெட்டிக் கொலை நீதி மன்ற வளாகத்துக்குள்ளேயே கைகலப்பு மோதல்கள், ரகளைகள், எல்லாம் நிகழ்கின்றன. நீதிமன்ற வளாகத்துக்குள் ளேயே நடைபெறும் இந்த கொலை பாதகச் செயல்களை தடுப்பது யார், நீதிமன்றத்துக்கு என்று தனிக்காவல் படை இருந்தால் இவற்றைக் கண்காணிக்கலாம். பெருமளவு தவிர்க் கலாம் இல்லையா.

இவையெல்லாம் வெளியில் நடக்காதா என்று சிலர் கேட்கலாம். நியாயம். நடக்கலாம். நடக்காமலும் போகலாம். ஆனால் அது வெளியில் நடந்தால் வெளிக் காவல் பொறுப்பு. உள்ளே நடந்தால் நீதித்துறைக் காவல் பொறுப்பு. சரி, அப்படியானால் வெளிக் காவல் துறைக்கு நீதிமன்றத்தில் என்ன தான் பொறுப்பு, பங்கு என்று கேட்டால் ஒரு நடை முறை வைத்துக்கொள்ளலாம்.அதாவது, குற்றவாளிகளை நீதி மன்றத்துக்கு அழைத்து வரும் வெளிக் காவலர்கள், நீதிமன்ற வளாக நுழை வாயிலில் நீதிக் காவல் வைத்திருக்கும் பதிவேட்டில் கையொப்பமிட்டு பதிவு செய்து கொண்டுதான் உள்ளே செல்ல வேண்டும். இப்படி அன்றாட இயல் பான காவல் பணி அல்லாமல் சிறப் பாகவே, குறிப்பாகவோ வேறு எந்தப் பணியாக வெளிக்காவல் உள்ளே செல்ல நேர்ந்தாலும் சம்மந்தப்பட்ட நீதிமன்ற நீதிபதியின் அனுமதி பெற்று அவர் ஆணையின் பெயரிலேயே செல்ல வேண்டும்.

இன்னும் இதுபோன்ற பல விதிமுறைகளைநடைமுறைத் தேவைக்கேற்ப நாம் உருவாக்கிக் கொள்ளலாம். ஆக இதன் சாரம், சம்மந்தப்பட்ட நீதிமன்ற நீதிபதியின் கவனத்துக்குச் செல்லாமல், அவர் ஆணையில்லாமல், அனுமதி பெறாமல் வெளிக் காவல் துறையின் எந்த விதமான நடவடிக்கையும் தலையீடும் நீதிமன்ற வளாகத்திற்குள் இருக்க முடியாது இருக்கக் கூடாது என்பதே இதன் சாரம். இந்த அடிப்படையில் இப்படி ஒரு ஏற்பாடு இருந்திருந்தால் தற்போது நடைபெற்ற உயர்நீதிமன்ற சம்பவம் நடந்திருக்குமா என்று யோசித்துப் பாருங்கள். பிரச்சினை எதனால் வந்தது? காவல்துறை நீதிமன்ற வளாகத் திற்குள் நுழைந்து கைது செய்ய முயன்றதால் வந்தது.

எத்தனையோ வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை, தனக்கு எதற்கு வம்பு என்று காணவில்லை என்றோ, தலைமறைவு என்றோ ஆவணத்தில் குறிப்பிட்டு வழக்கை நேரே நீதிமன்றம் அனுப்பி ஆறு மாதம், ஒரு வருடம் பொறுத்தெல்லாம் நீதி மன்றத்திலிருந்து பிடியாணை வர குற்றம் சாட்டப்பட்டவர் அதன் பிறகு போய் நீதிமன்றத்தில் சரணடைந்து பிணையில் வெளி வந்து குற்றச் சாட்டுகளை சந்தித்து வழக்குகள் நடத்தவில்லையா. இப்படியெல்லாம் இருக்க வழக் கறிஞர்களை உடனே கைது செய்தே ஆகவேண்டும் என்கிற அவசியமென்ன. குற்றச் சாட்டுகளை நீதிமன்றம் அனுப்பினால் நீதிமன்றம் பிடியாணை அனுப்ப வழக்கறிஞர்கள் பிணை பெற்று வழக்கைச் சந்தித்துக் கொள்ள மாட்டார்களா. சுப்பிரமணிய சுவாமி என்கிற தனி நபர் அசிங்கப் படுத்தப் பட்டார் என்பதற்காக பழி வாங்கும் நடவடிக்கையின் குரூர வெளிப்பாடு தானே இது. ஆட்சியாளர்கள் தங்கள் ஆதிக்க நலனை, ஆட்சியைக் காப் பாற்றிக் கொள்ள பார்ப்பனியச் சக்தி களுக்கு படியாள் சேவகம் பார்க்கும் முயற்சியின் விளைவுகள்தானே இவை.

ஏன் இந்திந்த வழக்கறிஞர்கள் மேல் குற்றச்சாட்டு இருக்கிறது. கைது செய்யப் போகிறோம் என்று உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதிக்கு தகவல் தெரிவித்தால் என்ன, அவர் வழக்கறி ஞர்களை கைதுக்கு உட்படச் செய்திருக்க மாட்டாரா, ஏன் அதுவுமில்லை என் றால் நடத்தை விதி முறைகளோடு கூடிய ‘பார் கவுன்சில்’ வழக்கறிஞர்கள் நலம் காக்கும் “வழக்கறிஞர்கள் சங்கம்” அதன் பொறுப்பாளர்கள் எல்லாம் இல்லையா, ஏன் இவர்களுக்கெல்லாம் தெரிவித்து இவர்கள் மூலம் நட வடிக்கை எடுத்திருக்க முடியாதா. எல்லாவற்றையும் விட்டு விட்டு இவ்வளவு அவசரம், ஆத்திரம் ஏன். எல்லாவற்றுக்கும் நோக்கம் பழி வாங்கு வதுதானே. யாருக்காக, யாரை பலி கொடுக்க இந்த நடவடிக்கை. இது எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும். பாடம் புகட்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com