Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
ManmozhiManmozhi Logo
நவம்பர் - டிசம்பர் 2008
தமிழகத்திற்கு துரோகம் செய்யும் தமிழக மார்க்சிஸ்டுகள்
பொன்.மாயவன்

இந்தியா ஒரு தேசமல்ல. அது பல்வேறு தேசங்களைக் கொண்ட ஒரு துணைக் கண்டம் என்பது சமூக, வரலாற்று ஆய்வாளர்கள் அனைவ ராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஓர் உண்மை. இந்த வகையில் இந்திய ஆட்சிப் பரப்பில் உள்ள அனைத்து தேசிய இனங்களுக்கும் சமத்துவமான உரி மைகள் வழங்கப்பட்டு, சமத்துவ வாழ்க்கை வாழ உத்திரவாதம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? நாடு விடுதலை அடைந்து 61 ஆண்டுகள் ஆன பின்பும், தேசிய இனங்களின் ஒட்டு மொத்த உரிமைகளையும் நசுக்கி அதிகாரங்கள் அனைத்தையும் தன்கை யிலேயே குவித்து வைத்துக் கொண்டு, மாநில அரசுகளை அதாவது தேசிய இனங்களை வஞ்சித்து வருவதையே தனது கொள்கையாகக் கொண்டுள்ளது தில்லி.

இப்படிப்பட்ட தில்லி ஏகாதிபத் தியத்தை எதிர்த்து மக்களின் உரிமை களைப் பாதுகாக்க போராட வேண்டிய இந்திய பொதுவுடைமை வாதிகள் மேற்கண்ட ஆதிக்க சக்திகளோடு கைகோர்த்து கூட்டணி அரசியல் கண்டு வருகிறார்கள். இதன் விளைவு, இந்திய விடு தலைக்குப் பிறகு, நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர் கட்சியாக இருந்த கம்யூனிஸ்டுகள் நாளடைவில் கழுதைத் தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை யாக சிறுத்துப் போய் மக்களிட மிருந்து தனிமைப்பட்டுப் போனார்கள்.

இதனால் மக்களின் உணர்வு களைப் புரிந்து கொள்ளாமலும், பிரச்சினைகளின் முக்கியத்துவத்தை உணராமலும் தங்களின் இருப்பு களை தக்க வைத்துக் கொள்வதற்காக தேர்தலில் சந்தர்ப்பவாத சகதி அரசி யலில் விழுந்து தள்ளாடிக் கொண்டிருப் பதுடன் தமிழ் நாட்டில் அரசியல் நடத்திக் கொண்டே தமிழகத்துக்கு எதிராகவும் பேசிக் கொண்டிருக் கிறார்கள். ஏற்கெனவே, முல்லைப் பெரி யாறு, பரம்பிக் குளம், ஆழியாறு, பவானி ஆற்று நீர்ப் பிரச்சினையில் தொடர்ந்து தமிழகத்தோடு மோதல் போக்கையே கடைப்பிடித்து வரும் கேரளம் தற்போது நெய்யாறு பிரச்சி னையில் வம்புக்கு வருகிறது.

தமிழகத்தின் கருப்பையாறு கால் வாய் தண்ணீரைத் தங்கள் பகுதியில் உள்ள நெய்யாறு அணையில் பிடித்து வைத்துக் கொண்டு, தமிழகத்தின் விளவங்கோடு பகுதிக்கு பாசனத் திற்கும் குடிநீருக்கும் தண்ணீர் தர மறுக்கும் கேரளா, காசு கொடுங்கள், தண்ணீர் தருகிறோம் என பேரம் பேசி யதை கடந்தாண்டு மண்மொழி வெளி யீடு 17இல் குறிப்பிட்டு இருந்தோம். இப்பிரச்சினை தொடர்பாக அப்போது நாகர்கோவில் இடது சாரி நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லார் மின், “கடந்த நான்கு ஆண்டுகளாகத் தண்ணீர் வர வில்லை. இப்பகுதியை சேர்ந்த முக்கியமானவர்களைக் கொண்டு ஒரு குழுவாகச் சென்று பல முறை கேரளாவிடம் பேசி விட்டோம். ஒன்றும் பலனில்லை” எனக் கூறி இருந்தார்.

இந்தாண்டு அதே பெல்லார் மினும், அவர் சார்ந்த இ.க.க. மார்க் சிஸ்ட் கட்சியினரும், தமிழக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, இப்போது தொடர் உண்ணா விரதப் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். கேரளாவின் அடாவடித்தனத் தால் விளவங்கோடு வட்ட உழவர்கள் பாசனத்திற்கும் குடி நீருக்கும் தண்ணீர் இல்லாமல் தத்தளிக்கும் மக்களின் கோபம், இவர்களை தெருவில் இறங்கிப் போராட வைத்துள்ளது. ஆனால் இவர்கள் இப்பிரச் சினைக்கு மூல காரணமான கேரளா இடதுசாரி அரசைக் கண்டிக்காமல், தமிழக ஆளும் கூட்டணியிலிருந்து வெளியேறிய காரணத்திற்காக, தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்து கிறார்கள். இதுதான் தோழர்களின் நடை முறை தந்திரம் போலும். இப்படி, இரட்டை வேடம் போடும் இந்த மார்க்சிஸ்டுகளின் போலிப் போராட்டத்தை கிண்டல் செய்து தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளி யிட்டார்.

அதில், நெய்யாறு பாசனத் திட்டம், கேரளாவில், நெடு மாங்காடு, நெய்யாற்றின் கரை, மற்றும் விளவங் கோடு வட்டத்தில் உள்ள நிலங்களுக் காக பாசன வசதி செய்யப் பட்டது. மொத்த பாசனப் பரப்பளவு 38 ஆயிரம் ஏக்கர். 1956ஆம் ஆண்டு மாநில மறு சீரமைப்புச் சட்டப்படி விளவங்கோடு பகுதி தமிழகத்துடன் இணைக்கப் பட்டது. மொத்தப் பாசனப் பரப்பில் 9,200 ஏக்கர் பாசன நிலம் தமிழகத்துடன் இணைந்தது. நெய்யாறு அணையிலிருந்து இந்த பாசன நிலத்திற்கு கேரளா அரசு 2004ஆம் ஆண்டுவரை தண்ணீர் அளித்து வந்தது. அதன் பின்பு தடுத்து நிறுத்திவிட்டது. நெய்யாறு பன் மாநில நதி என்பது ஆவணங்களின் அடிப்படையில் உறுதி செய்யப் பட்டது.

எனவே, இரு மாநிலங்களுக்கு இடையே நீர்ப் பங்கீடு மற்றும் பரா மரிப்பு செலவு குறித்து ஒப்பந்தம் செய்ய 1975 ஆம் ஆண்டு தமிழக அரசு வரைவு ஒப்பந்தம் தயார் செய்து கேரளாவுக்கு அனுப்பியது. இதனை ஏற்க கேரளா சுணக்கம் காட்டி வருகிறது. இதில் மத்திய அரசு ஈடுபட பல கடிதங்களை தமிழகம் எழுதியுள்ளது. கேரளா அரசு 2006ஆம் ஆண்டு இயற்றிய சட்டப்படி நெய்யாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தந்தால், அதற்கு கேரளா நிர்ணயிக்கும் விலையைத் தமிழக அரசு தர வேண்டும் என வற்புறுத்தப்படு கிறது. பன்மாநில நதி என்பதால் பணம் தர தேவை இல்லை என பலமுறை தமிழகம் சார்பில் கூறிய விளக்கத்தைக் கேரளா ஏற்கத் தயாராக இல்லை.

முதலில் விளவங்கோடு விவசாயி களுக்குத் தண்ணீர் கொடுங்கள். பிறகு பிரச்சினையை பேசித் தீர்த்துக் கொள் ளலாம் என கேரள முதல்வருக்கு, தமிழக முதல்வர் எழுதிய கடிதங்களுக்கு கேரள அரசு உடன் படவில்லை. இந்த விபரங்களை அனைத்தும் பலமுறை சட்ட மன்றத்திலும், கன்னி யாகுமரி மாவட்ட மார்க்சிஸ்ட் சட்ட மன்ற உறுப்பினர்களிடமும் தெரிவித் துள்ளேன். இரு மாநிலங்களில் ஓடும் நதியின் தண்ணீருக்கு மற்றொரு மாநிலம் பணந்தர வேண்டும் என்பது எங்கும் கேட்டிடாத செய்தி. நிலை இவ்வாறு இருக்க கன்னியாகுமரி மாவட்ட கம்யூனிஸ் டுகள் தமிழக அரசைக் கண்டித்து ஊர்வலம், உண்ணாவிரதம் இருப்பது எப்படி நியாயம் என்று தெரியவில்லை. கேரளா அரசைக் கண்டித்து இப் போராட்டம் நடத்தினால் அது நியா யம். என்ன செய்வது? அங்கே
நடப்பது மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சி ஆயிற்றே என்றிருக்கிறார். இவ்வளவுக்கும் கேரளாவில் 40 ஆறுகளில் ஓடும் 7804 கோடி கனமீட்டர் நீரில் வெறும் 8 விழுக்காடு மட்டுமே அங்கே பயன் படுகிறது. மீதி 92 விழுக் காடு நீர் கடலில் வீணாகப் போய்க் கலக்கிறது. ஆனால் தவிக்கும் தமிழன் வாய்க்குத் தண்ணீர் தர மனமில்லை. இந்த மலையாள மார்க்சிஸ்டுகளுக்கு.

இதுமட்டுமல்ல. சமிபத்தில் தில்லியில் நடந்த ஒரு சம்பவம், சென்னை அருகே கடல்சார் கல்வி பல் கலைக் கழகம் அமைக்க, மைய அரசு 300 கோடி ரூபாய்க்கு திட்டம் அறி வித்தது. இந்தப் பல்கலைக் கழகம் தமிழ்நாட்டில் அமைப்பதற்கு, மேற்கு வங்க எம்.பி.க்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேற்படி திட் டத்தை எப்படியாவது தங்கள் மாநிலத் திற்கு கொண்டு போய்விட வேண்டும் என்பதில் கட்சி வேறுபாடு இன்றி கங்கணம் கட்டி இருந்தனர். இதனால், இத்திட்டத்தை நிறை வேற்றுவதில் தொடர்ந்து கால தாமதம் ஏற்பட்டு வந்தது. முன்பு ஒருமுறை இந்த கடல் சார் கல்வி பல்கலைக் கழகம் அமைப்பதற்கு வழிவகைச் செய்யும் சட்ட வரைவை அறிமுகம் செய்தபோது, கப்பல் மற்றும் தரை வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலுவை அவையிலேயே சூழ்ந்து கொண்டு மே.வங்கு மார்க்சிஸ் டுகள் தாக்க முயற்சி செய்தனர்.

இந்த நிலையில், அந்த சட்டம் நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப் பப்பட்டது. நிலைக் குழுவும் பரி சீலனை செய்து, அதனை சென்னையில் அமைத்துக் கொள்ளலாம் என பரிந் துரை செய்தது. அதன்படி 21-10-08 அன்று, இந்த சட்ட வரைவு மக்கள வையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அவையில் போதியளவு உறுப்பினர்கள் இல்லை. ஏதாவது காரணம் காட்டி திட்டத் திற்கு முட்டுக் கட்டை போடுவதில் மும்முரமாயிருக்கும் மேற்கு வங்க நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் அமீதா நந்தி என்பவர், தன் பெயரில் நந்தி இருப்பது போல் குறுக்கே நின்று எதிர்ப்பு தெரிவித்தார்.

பொதுவாக சட்டத்தை அறிமுகம் செய்யும்போது எம்.பி.க்களின் எண் ணிக்கை குறைவாக இருப்பது வழக்கம் தான் என்றாலும், நந்தி எதிர்ப்பின் காரணமாக அவை 15 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப் பட்டது. இதையடுத்து தி.மு.க. கொறடா வான கிருஷ்ணசாமி மற்ற நாடாளு மன்ற உறுப்பினர்களை அழைப்பதற் காக வெளியே சென்ற போது இ.க.க. மா. வை சேர்ந்த உறுப்பினர்கள் நாடாளுமன்ற நூலகத்தில் தமிழகத்தின் மதுரை எம்.பி. மோகனும், நாகர் கோயில் எம்.பி. பெல்லார்மினும் இருந் துள்ளனர். அவர்களிடம் சென்று செய் தியைச் சொல்லி அவைக்கு வரும்படி அழைத்தார். அதற்கு இரு மார்க்சிஸ்ட் எம்.பி.க்களும் பல்கலைக் கழகம் அமைக்க ஆதரவு தர மறுத்துவிட்டனர். அது மட்டுமின்றி, இந்தப் பல்கலைக் கழகம் கோல்கத்தாவில் அமைய வேண்டும் என்றும் கருத்து தெரிவித் துள்ளனர்.

இருவரையும் அழைத்துப் பார்த்துவிட்டு, அவர்கள் வராமல் போகவே, வேறு வழியின்றி அவைக்கு திரும்பினார் கிருஷ்ணசாமி கோரம் இல்லை என்பதால் குறைந்த கால அவகாசத்தில் மைய அமைச்சர் பாலு மற்றும் வயலார் ரவி ஆகியோர் ஆங்காங்கே இருந்த உறுப்பினர்களை அழைத்து அவையில் உட்கார வைத்து அதன்பின்பு, அமைச்சர் இந்த மசோதா வை தாக்கல் செய்தார். அவையில் இருந்து 100 அடி தூரத்தில் இருந்து கொண்டு, தமிழகத் திற்கு கிடைக்கும் ஒரு பல்கலைக் கழகத் திற்கு ஆதரவு தெரிவிக்காமல் மறுத்து விட்ட மார்க்சிஸ்ட் எம்.பி.க்களின் செயலை மற்றக் கட்சி எம்.பி.க்கள், இவர்கள் தமிழ் நாட்டின் எம்.பி.க் களா? இல்லை மேற்கு வங்க எம்.பி.க் களா? என கேள்வி கேட்குமளவுக்கு போயிருக்கிறது. இந்த இரு மார்க்சிஸ்டு எம்.பி.க்களும் தமிழ்நாட்டை சேர்ந்த வர்கள். தமிழ் மண்ணில் வாழ்ந்து தமிழ்ச் சோற்றை உண்டு, தமிழ்த் தண்ணீர் குடித்து தமிழ் நாட்டில் நிதி வசூலித்து கட்சி நடத்தி, தமிழக மக் களின் வாக்குகளைப் பெற்று, நாடாளு மன்றத்தில் உறுப்பினர்களாக ஆனவர் கள். ஆனால் தமிழ் நாட்டு மக் களுக்கு துரோகமிழைத்து வருகிறார்கள்.

கேரளாவுக்கு பொது வினியோக திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படு வதாகக் கூறி, இடதுசாரி நா.ம. உறுப்பினர்கள் லோக் சபாவிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அவர்களோடு இரண்டு காங்கிரஸ் எம்.பி.க்களும் சேர்ந்து வெளி நடப்பு செய்தனர். தான் சார்ந்த கட்சி மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியாக இருந் தாலும், மலையாள தேசத்தின் நலன், பிரச்சினை என வரும்போது, தன் கட்சி நிலைப்பாட்டை மீறி தன் இனத்திற் காக அவர்கள் குரல் கொடுக்கிறார்கள். மும்பையில் ராஜ் தாக்கரே மண் ணின் மைந்தர்களுக்கு வேலை, மற்றவர் களுக்கு இங்கென்ன வேலை? என முழங்கி வட மாநிலத்தை சேர்ந்தவர் களை அடித்து விரட்டு கின்றார். இதற்கு உ.பி., பீகார் போன்ற வட மாநிலத்தை சேர்ந்தவர்கள், எதிர்ப்பு தெரிவிக்கின் றனர். இதற்கு பதிலளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் “மராத்தியர்களுக்குத் தான் வேலை வாய்ப்பில் முன்னுரிமை” என பால் தாக் கரே, ராஜ் தாக்கரே கோரிக்கையை முன் மொழிகிறார். மராட்டிய நலனை வலியுறுத்து கிறார். ஆனால், தமிழ் நாட்டு மார்க்சிஸ்டுகள் மட்டும் இதற்கு நேர் மாறாக நடந்து கொள்கிறார்கள்.

இந்தக் கட்சியின் வெகுஜன அமைப்பில் தொழிலாளர் தமிழன், விவசாயி சங்கத்தில் உழவன் தமிழன், வாலிபர் சங்கத்தில் இளைஞன் தமிழன், மாணவர் அமைப்பில் தமிழக மாண வன், மாதர் சங்கத்தில் தமிழச்சி, ஆயிரக் கணக்கான தொண்டர்கள் வியர்வை சிந்தி கட்சி வளர்ச்சிக்குப் பாடுபடு கிறார்கள். நூற்றுக்கணக்கான தோழர் கள் போராட்டங்களில் ஈடுபட்டு இன் னுயிரையும் இழந்தும், இரத்தம் சிந்தி யும் கட்சி வளர்ச்சிக்கு உரமாகிறார்கள்.
ஆனால் இவர்களோ இந்திய தேசியம் பேசிக் கொண்டு தமிழன் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள். தமிழ் நாட்டு உரிமையை வங்காளிக் கும், மலையாளிகளிக்கும் விட்டுக் கொடுத்து வருகிறார்கள். இதுதான் தமிழ்நாட்டு இ.க.க. மார்க்சிஸ்டுகளின் நடை முறையாக உள்ளது. இவர்களால் இந்த மண்ணுக்கு பயனில்லை. மார்க் சிய தத்துவத்திற்கு பயனில்லை.

காலுக்கு பொருந்தாத செருப்பை யும், காலை கடிக்கும் செருப்பை யும் மனிதன் தூக்கி குப்பையில் வீசி விடு வான். இது இயல்பு. இதேபோல தமிழ் நாட்டுக்கும் தமிழனுக்கும் பயனில்லாத இந்த கட்சியை தமிழக மக்களும் தூக்கி எறிய வேண்டும். இவர்கள் மேற்கு வங்கத்திற்கோ, கேரளாவுக்கோ போய் அங்கே கட்சி நடத்தட்டும். இது அவர் களின் ஜனநாயக உரிமை. நாம் தடுக்க வில்லை. ஆனால் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு, தமிழனுக்கு துரோ கம் செய்ய விடக்கூடாது. இவர் கள் கூடாரத்தைக் காலி செய்ய வேண்டும் அல்லது செய்ய வைக்க வேண்டும் இந்த நோக்கில் தமிழக மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com