ஈழத்தமிழர் சிக்கலில் ஆன்மீகத் தமிழர்கள் சிந்தனை மையம்
மு.வேதரத்தினம்
இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்தியில் ஆளும் காங்கிரசின் துரோகத்தினைத் தமிழர்களே புரிந்து கொள்வீர்!! சிந்திப்பீர்!! இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பேராய காங்கிரஸ் கட்சிக்கு தமிழர்களே பாடம் புகட்டுவீர்!! நம் இந்திய நாட்டை சுதந்திரம் பெற்ற பின் 60 ஆண்டுகளில் சுமார் 53 ஆண்டுகள் ஆட்சி செய்து வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், அறி யாமையில் ஆழ்த்தி உள்ளது காங்கிரஸ் கட்சி ஆட்சியே!
பொதுமக்கள், தொண்டர்கள் என அரசியல் பக்குவத்தோடு உள்கட்சி ஜனநாயகத்தோடு கட்சியை வளர்க் காமல் நேரு - இந்திரா - ராஜீவ் - சோனியா - ராகுல் என பரம்பரை கட்சி ஆட்சி, என நடத்தி மக்களை மடமை யில் வைத்து இருப்பது காங்கிரஸ் கட்சி ஆட்சியே!! மன்மோகன்சிங் - சோனியா - ராஜ்பக்சே -யின் அரசியல் - இராணுவ கூட்டணி சர்வதேச ஆயுத உற்பத்தி யாளர்கள், விற்பனையாளர்களோடு வர்த்தகத் தொடர்புடையது. இதனால் இலங்கையில் ராஜ்பக்சே குடும்பமும், இத்தாலியில் சோனியா குடும்பமும் செல்வச் செழிப்பில் கொழிக்கின்றனர். இலங்கை தமிழர்கள்மீது குண்டு போடுகின்றனர்.
2004 ஆம் ஆண்டு இந்திய நாடளு மன்றத் தேர்தலில் சோனியா அந்நிய நாட்டினர் என்ற பிரச்சாரத்தை பாரதிய ஜனதா, முலயாம்சிங், காங்கிரசைச் சேர்ந்த சரத்பவார் பி.எ. சங்மா, ஜெய லலிதா போன்றோர்கள் செய்தனர். ஆனால் அதை மறுத்து தமிழகத்தில் தான் முதன்முதலில் சோனியாவுக்கு ஆதரவு குரல் எழுந்தது. அத்தேர்தலில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் 40-க்கு 40 இடங்களை தமிழகத்தில் வென்றது காங்கிரஸ் கூட்டணி, அந்த வெற்றியை அளித்த தமிழினத்தின் தொப்புள்கொடி உறவு களான ஈழத் தமிழ் இனத்தை அழிக்க இலங்கை சிங்கள ராஜ்பக்சே இன வெறி அரசுக்கு உதவுகிறது காங்கிரஸ் கட்சி ஆட்சி.
2004ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைந்தபின் 4 ஆண்டுகள் அமைதியாக இருந்து விட்டு 2009 இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு சற்றுமுன் இலங்கைக்கு அதன் இன அழிப்பு - ஒழிப்பு வேலைக்கு இராணுவ தொழில்நுட்ப நிதி உதவிகளை அளித்து வருகிறது ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சி. நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொத்தம் 58 பேர்கள் டில்லியில் உள்ளனர். (மக்களவை 40, மாநிலங் களவை 18) இலங்கைக்கு இந்திய அரசு செய்த இராணுவ தொழில்நுட்ப உதவிகள் 2000 கோடிக்குமேல் இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர். ஆனால் நம் நாட்டு நாடாளுமன்றத்தில் இதுபற்றி ஒரு உண்மை வெள்ளை அறிக்கை கூடத் தாக்கல் செய்யாமல் மக்களாட்சி தத்துவத்தை படுகுழியில் தள்ளி யிருப்பது காங்கிரஸ் கட்சி ஆட்சி.
இந்திh இலங்கைக்கு இராணுவ தொழில்நுட்ப - பண உதவிகள் செய் வதால் அமெரிக்கா ஐரோப்பா ஆயுத உற்பத்தியாளர்களின் வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது. இலங்கையில் ராஜ பக்சே குடும்பமும், இத்தாலியில் சோனியா குடும்பமும் இந்த ஆயுத வியாபாரத்தால் செல்வ செழிப்பில் கொழிக்கிறது. காங்கிரஸ் தலைமை யின் சுயரூபத்தை தமிழர்களேப் புரிந்து கொள்வீர்கள்.
பாலஸ்தீன விடுதலை போராட் டத்தை இந்தியா ஆதரிக்கின்றது. ஈழ விடுதலைக்கு முற்றிலும் எதிராக உள்ளது. ஏன் இந்த முரண்பாடு? தமிழர்களே சிந்திப்பீர்கள். சரித்திரத்தை பின்நோக்கி நகர்த்தினால் 1974-ம் ஆண்டு இராமநாதபுரம் நம் தமிழ் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான “கச்சத்தீவை” இலங்கை பண்டார நாயக அரசிடம் தாரை வார்த்துக் கொடுத்தார், அன்றைய பிரதமர் இந்திரா. இலங்கை அரசுக்கு தமிழர் களை கொல்ல இராணுவ நிதி உதவி களை இன்று அளிக்கிறார் அவரது மருமகள் சோனியாகாந்தி.
அன்று கச்சத்தீவு இன்று தமிழகத்துக்கு கர்நாடகம் தரவேண்டிய காவிரிநீர், ஆந்திரா தரவேண்டிய பாலாறு நீர், கேரளா தரவேண்டிய பெரியாறு நீர், இதில் எல்லாம் ஒரு நியாயமான தெளிவான முடிவு எடுக்காமல் மத்திய அரசை நடத்திக் கொண்டு தமிழகத்துக்கு தொடர்ந்து வஞ்சனை செய்வது காங்கிரஸ் கட்சி ஆட்சியே. மனித நேயம் உள்ள, சுய சிந்தனை உள்ள தமிழர்களே சிந்திப்பீர்கள்! காங்கிரஸ் கட்சி ஆட்சியின் சரித்திரம் முழுவதும் இழைத்து வரும் எண்ணற்ற துரோகங்களைப் புரிந்து கொள்வீர். தெரிந்து கொள்வீர்.
வருகின்ற 2009 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடுகின்ற எல்லா தொகுதி களிலும் அக்கட்சியை தோற்கடிப் போம். சாதி, மதம், கட்சி கடந்து தமிழர்கள் எல்லோரும் ஒரே சிந்தனை யாக காங்கிரசுக்கு எதிராக வாக்களிப் போம். காங்கிரஸை தமிழகத்தை விட்டே விரட்டியடிப்போம். காங்கிரஸின் துரோக வரலாற் றுக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைத்து அதன் ஆதிக்கத்தைத் தகர்ப்போம். தமிழர் ஒற்றுமை வளர்க.
நமது கடமைகள்
1. இலங்கையில் “ஈழத் தமிழ் ஜனநாயக குடியரசு” மலருவதை ஆதரிப்போம். அதேபோல் சிங்களதேசிய குடியரசு பகுதியில் மலையகத் தமிழர்களுக்கு சுயாட்சி பிராந்தியம் அமைய குரல்கொடுப்போம்.
2. சிங்கள இராணுவ குண்டு வீச்சினால் பாதிக்கப்பட்டு பெரும் உயிர், உடமை சேதத்துக்கு ஆளாகி உள்ள நம் ஈழத் தமிழ் சகோதரர்களுக்கு மருந்து, உணவு, உதவிகள் தன்னலமற்று செய்வோம்.
3. தமிழ்நாட்டு தமிழர்களாகிய நாம் சாதி, மதம், கட்சி கடந்து சிங்கள இராணுவத்துக்கு இந்திய அரசு செய்து வரும் உதவிகளை நிறுத்த போராடுவோம். சிங்கள இராணுவம் ஈழத் தமிழ் பகுதியில் செய்துவரும் ஆக்கிரமிப்பு இராணுவப் போரை நிறுத்த ஐ.நா.சபை மூலம் பாடுபடுவோம்.
இந்திய சூழலில் : நம் இந்தியாவில் ஏகாதிபத்திய, தாராளமய, உலகமய, முதலாளித்துவ பொருளாதார கொள்கைகள் அகற்றப்பட்டு சோஷலிச இந்தியா உருவாகவும், தற்போது உள்ளதுபோல் டில்லி மத்திய ஆட்சியில் அதிகாரம் குவிந்து கிடக்கும் ஒற்றையாட்சிக்கு (ருniடிn ளுலளவநஅ) பதிலாக சோஷலிச மொழிவழி தேசிய இன குடியரசுகள் மலரவும், மத்தியில் கூட்டாட்சி மலரவும் (குநனயசயட ளுலளவநஅ) சிந்திப்போம், உழைப்போம்.
இப்படிக்கு,
ஆன்மிக தமிழர்கள் சிந்தனை மையம்
தமிழ்நாடு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|