அண்ணா சமாதியில் அரங்கேறிய அற்புத சுகமளிக்கும் அதியுன்னத நாடகம்
சேயோன்
மத நிறுவனங்கள் “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப் பாறுதல் தருவேன்” என அழைத்து ஆத்ம சரீர சுகமளிக்கும் அற்புத நற் செய்திக் கூட்டங்கள், ஜெப ஆரா தனைகள், எழுப்புதல் பிரசங்கங்கள் நடத்துவது போல் கடந்த 27-04-09 திங்கள் அன்று சென்னை அண்ணா நினை வாலயத்தில் ஒரு கூட்டம் நடந்தேறியது. ஆனால் இது மதக் கூட்டமல்ல. அரசியல் கூட்டம். ரட்சிப்பு அளித்தவர் மத போதகர் அல்ல. அரசியல் தலை வர். மதக் கூட்டங்களிலா வது பாதிக்கப் பட்டவர் நேரே வரவேண்டும் என்கிற நிர்ப்பந்தமுண்டு. இதில் அப்படியெல்லாம் கூட வர வேண்டு என்கிற அவசியம் இல்லை. இங்கிருந்தே ரட்சிப்பு வழங்கப்படும். இந்த ரட்சிப்பு போரினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, “போரினால் பாதிக்கப் பட்ட வர்களே, நீங்கள் அங்கேயே செத்துக் கொண்டிருங்கள், இங்கிருந்தே நான் உங்க ளுக்கு ரட்சிப்பு வழங்குகிறேன்” என்பதான ஒரு கூட்டம்.
இவ்வாறாக கழகத் தலைவரும் தமிழக முதல்வருமான கருhணநிதி ஈழச் சிக்கல் தொடர்பாக நடத்தி வரும் நாடகங்களின் சில உச்சகட்ட காட்சிகள் அன்று அண்ணா சமாதியில் அரங் கேறின. காட்சி விவரம் வருமாறு.
காட்சி 1 : புலிகள் போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து இலங்கை ராணுவமும் போர் நிறுத்தம் செய்யும் அறிவிப்பு வரும் என்று இரவெல்லாம் கண் விழித்து வானொலி, தொலைக் காட்சி, தொலை நகல் செய்தி, தந்தி என இன்றைய தகவல் ஊடகங்கள் என் னன்ன உண்டோ அவை அனைத்தை யும் தேடிப் பார்த்து ஏமாந்த முதல்வர் இனியும் பொறுப்பதில்லை, ஈழ மக் களுக்காக தன்னையே தியாகம் செய்து கொள்வது என்று முடிவெடுத்து, அன்றாடம் தான் காலையில் சாப்பிடும் மாத்திரைகளைக் கூடச் சாப்பிடாமல், அதையும் ஈழத் தமிழர்களுக்காகத் தியாகம் செய்து அண்ணா சமாதியில் வந்து அமர்ந்து உண்ணா நிலையை மேற்கொள்கிறார்.
காட்சி 2 : செயதி சன் தொலைக்காட்சி வழி காட்டுத்தீ போல பரவ தொண்டர்கள் குவிகின்றனர். இது போல் எப்போது எது எங்கு நடக்கும் என்று ஏக்கத்தோடு காத்திருந்தவர்கள் சால்வையோடு வந்து கருணாநிதி கையில் தந்து ஆதரவளித்து, அவரது உடல் முக்கியம், உயிர் முக்கியம் என்று வேண்டுகோள்களை வைத்து தங்கள் பாசத்தை வெளிப்படுத்துகின்றனர். தொண்டர்களுக்கு சமிக்ஞை கிடைத்து விட அவர்கள் எந்த கோரிக்கைக்காக போராட்டம் தொடங்கப்பட்டதோ அந்த நோக்கத்தை விட்டு, முதல்வர் பட்டினிப் போராட்டத்தைக் கைவிடக் கோரி முழக்கம் எழுப்பு கின்றனர்.
கட்சித் தலைவர்கள் என்ன செய்வது - ஏது செய்வது என்று புரியாமல் குழம்பிவிடப் போகிறார்களே என்ப தற்காக, யாரும் என்னைப் போல உண்ணாவிரதம் மேற்கொள்ளாதீர்கள், யாரும் கடையடைப்பு செய்ய வற் புறுத்தாதீர்கள், பேருந்தை நிறுத்த முயற்சிக்காதீர்கள் என அறிவிக்க இரண் டாவது சமிக்ஞை தரப்படுகிறது. பலரும் பட்டினிப் போராட்டம் தொடங்கி, திறந்திருக்கும் கடைகளை மிரட்டி கடையடைப்பு செய்து, பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி பயணிகளை இறக்கி, பணி மனை அனுப்புகின்றனர்.
காட்சி 3 : உலக நாடுகளெல் லாம் போர் நிறுத்தம் கோரியும், மதிக்காத ராஜபக்ஷே, சிங்கள ராணுவம், தமிழக முதல்வர், டாக்டர் கலைஞர், தமிழக மக்களின் தானைத் தலைவர், உலக மக்களின் ஒப்பற்றத் தவைர், காவிரி கொண்டான், செம் மொழி கண்டான் கருணாநிதி அவர்கள் போர் நிறுத்தம் கோரி பட்டினிப் போராட்டம் நடத்துகிறார் என்ற செய்தி கேள்விப் பட்ட உடனேயே நடுநடுங்கி, வேர்த்து வெல வெலத்துப் போக சிங்கள சிப்பாய்களின் கைகளில் இருந்த துப்பாக்கிகளும் தானே நழுவி தரையில் விழுகின்றன. இந்த இனிப்பான செய்தி ப. சிதம்பரம் மூலம் பட்டினிப் போராட்ட மேடைக்கு வர, அது பத் திரிகையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, போராட்டம் இத்துடன் முடிந்தது என அறிவிக்கப் படுகிறது. ஆக பட்டினிப் போராட்டம் வெற்றி சுபம். ஜெயம். சுபோஜெயம். திருச்சிற்றம்பலம் என மேடையை ஏறக் கட்டு கிறார்கள்.
தமிழகம் மட்டுமல்ல, உலகமே மூக்கின்மேல் விரல் வைத்து வியக்க, உலக நாடுகளின் தலைவர்களெல்லாம் ஐ.நாவுக்கு ஒரு கருத்தை தெரிவிக்கிறார்கள்.
இனிமேல் உலகின் எந்த மூலை யில் எங்கு போர் நடந்தாலும் ஐ.நா. சபையைக் கூட்டுவது, தீர்மானம் போடுவது, சம்மந்தப்பட்ட நாடுகளுக் கெல்லாம் அறிவிப்புக் கொடுப்பது, வேண்டுகோள் விடுப்பது, அமைதிப் படையை அனுப்புவது என்றெல்லாம் நேரத்தை, நாள்களை செலவிட்டுக் கொண்டிராமல், நேரே விமானம் பிடித்து சென்னை வந்திறங்கி கோபால புரம் சென்று கலைஞரை ஒரு வார்த்தை கேட்டுக் கொண்டால் போதும். அவ் வளவு ஏன், கலைஞரைப் போய் உண்ணாநிலை மேற்கொள்ளக் கேட்டுக் கொள்ளப் போகிறோம் என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், எல்லோரும் துப்பாக்கிகளைக் கீழேப் போட்டு தலைதெறிக்க ஓடி விடு வார்கள் என்று. ஆகவே இந்த அடிப் படையில் கழகத் தலைவர் தமிழக முதல்வருக்கு சர்வதேச விருது வழங்கு வது பற்றியும் ஆலோசித்து வருகிறார் களாம்.
இந்த நாடகம் முடிந்ததும், நேரிலும் தொலைக்காட்சிகளிலும் இதைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள், உணர்வாளர்கள் மத்தியில் எழுந்த கேள்விகள்.
1. பிரச்சினை இவ்வளவு சுளுவில் முடியும் என்றால் கடந்த ஆறுமாத காலமாக முதல்வர் ஏன் இதைச் செய்யவில்லை? எதற்கு சும்மா கடிதம், தந்தி, சட்டமன்றத் தீர்மானம் என்றெல் லாம் நாளை வீணடித்து இடையில் எண்ணற்ற தமிழர்களை சாக விட்டுக் கொண்டிருந்தார். இதை முன்பே செய்திருந்தால் எண்ணற்ற தமிழர் களைக் காப்பாற்றியிருக்கலாமே. ஒரு வேளை தமிழ்ச் சொந்தங்கள் சாகட்டும் என்று நினைத்துக் கொண்டி ருந்தாரா தமிழினத் தலைவர்?
2. தமிழீழ மக்கள்பால் உண்மை யிலேயே இவருக்கு அக்கறை என்றால் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான், நாஞ்சில் சம்பத் இவர்களை தே.பா.ச. வில் கைது செய்து ஏன் வழக்கு தொடுக்க வேண்டும்? அதோடு மட்டு மல்ல, ஈழ மக்கள் துயரம் பற்றி குறுந் தகடு தயாரித்த வல்லுநர்கள், ஈழ மக்களுக்கு ஆதரவாகப் பேசிய மாண வர்கள், இளைஞர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவ் வளவையும் செய்து விட்டு இவர் மட்டும் எப்படி உண்ணாவிரதம் இருக் கலாம். ஈழச் சிக்கல் என்ன இவருக்கு மட்டுமேயான மொத்தக் குத்தகையா? இவர் வேண்டும் போது எடுக்க, வேண்டாம் என்றால் ஒதுக்கி வைக்க?
3. போர் நிறுத்தம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்றும், வான் வழித் தாக்குதல், கனரக எந்திரங்கள் வழித் தாக்குதலைத்தான் தாற்காலிக மாக நிறுத்தி வைத்துள்ளோம். மற்ற படி புலிகள் மீதான நடவடிக்கை தொட ரும் என்றும் ராஜபக்ஷே அறிவித் திருக்கும் போது போர் நிறுத்தம் என்கிற அப்பட்டமான முழுப் பொய்பை அவிழ்த்து விடுவதேன்? இதுவரை தமிழக மக்களை ஏமாற்றியது, வஞ் சித்தது போதாது என்று இது புது ஏமாற் றலா தேர்தலுக்கான தில்லு முல்லா?
4. இப்படி இல்லாத ஒன்றை இவர்கள் போர் நிறுத்தம் என்று புளுகிய பிறகு, இவர்கள் தங்கள் வசமுள்ள செய்தி மற்றும் காட்சி ஊடகங்களில் போர் பற்றிய செய்திகளையே வெளி யிடாது இருட்டடிப்பு செய்யலாம், மூடி மறைக்கலாம். மற்ற செய்தி காட்சி ஊடகங்கள் போர் பற்றிய தமிழர்கள் மீதான தாக்குதல் பற்றியச் செய்திகளை வெளியிட்டால் அவை எதிர்க் கட்சி யினர் வீணாக சுமத்தும் பழி என அபாண்டமான அடுத்த பொய்யை அவிழ்த்து விடலாம். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் இல்லையா அப்படி ஏதும் திட்டம் இருக்கிறதா?
5. ஆக தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களே, இப்படியெல்லாம் திட்டமிட்டுக் கொண்டு தானே நீங்கள் உண்ணாநிலைப் போராட்டம் தொடங் கினீர்கள். தொடங்கிய வேகத்திலேயே அதை முடித்தும் வைத்தீர். இப்போது எதிர்வரும் தேர்தலை ஈழப்பிரச்சினை துளிகூட பாதிக்காது என்று அறிக்கை விடுகிறீர்கள். எந்தத் தெம்பில் எந்த ஏற்பாட்டில் இப்படி சொல்கிறீர்கள். மாற்றுத் திட்டம் வேறு ஏதாவது வைத்திருக்கிறீர்களா.
இறுதியாக ஒன்று, தில்லியில் உங்களுக்கு செல்வாக்கு அதிகம். சோனியா உங்களைக் கேட்காமல் தமிழக அரசியலில் எந்த முடிவும் மேற்கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலைக் கூட உங்களைக் கேட்டுத்தான் இறுதி செய் தார் என்றெல்லாம் சொல் கிறார்களே. ஆனால் உங்கள் பட்டினிப் போராட் டத்தை மன்மோகன் சிங்கோ, சோனி யாவோ யாருமே சீந்த வில்லையே. யாருமே போர் நிறுத்தம் பற்றி உங் களுக்குத் தெரிவிக்க வில்லையே. உள்துறை அமைச்சர் சிதம்பரம்தானே உங்களுக்குத் தகவல் தந்து நீங்களாகவே தானே உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டீர்கள். இதுதான் தில்லியில் உங்களுக்கு இருக்கும் செல்வாக்கா? இப்படிப்பட்ட தில்லியின் செல்வாக்கு இன்னமும் உங்களுக்கு வேண்டுமா யோசியுங்கள்.
சரி, எல்லாவற்றுக்கும் காலம் பதில்சொல்லும். தேர்தலும் பதில் சொல்லும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|