 |
கவிதை
கூட இல்லாத ஒருத்தி கற்பகம்.யசோதர
நான் உன்னை நுழைக்கும் கிடங்குகளாக
உனக்குள் திரையில் தெருப் பலகைகளில்
எழுத்துக்களில்
துவாரங்களாய் விரிந்தபடி.
நீ, உனது நகரில், குடியிருப்பின்
மூலைக் கடையொன்றில்,
நீலப் படங்களை
வார இறுதிக்கு
வேண்டிச் செல்பவனாகலாம்
சுயபோகத்தின் பின் வெறுமையில்
தற்கொலையை நெருங்கி
மீள்பவனாகலாம்
கூட இல்லாத ஒருத்தி
இன்றிரவு உன் போதை!
நீ குடிக்கின்ற மது வகையை மறந்துவிட்டேன்
அதனால் என்ன?
கதைவழக்கில்லாத எம் கண்முன்
இரவு எரிகிறது
நம் தனிமையாலேயே இணைகிறோம் நாம்
- கற்பகம்.யசோதர ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|