 |
கவிதை
அடுத்த பௌர்ணமி! ரா விமலன்
என்ன வாழ்க்கை! என்ன வாழ்க்கை!
எப்படி யானது இன்ப வாழ்க்கை!
அன்னை மடியின் ஆறுதல் விட்டு
அப்பா நினைத்த ஆசை விலக்கி
கட்டில் சுகத்தைக் கனவுக ளாக்கி
கடலைத் தாண்டிக் காசு பார்த்தோம்!
வட்டியும் முதலுமே வாழ்க்கை யாகி
வாலிப மெல்லாம் விரக்தியில் தொலைத்தோம்!
வார இறுதியின் வருகை மட்டுமே
வசந்தம் இருப்பதை வந்து சொல்லும்!
தொலைபேசி வழியே உதிரும் வார்த்தைகள்
தொலைவின் எல்லையைச் சுருக்கிப் போடும்!
அப்பா அம்மா அண்ணன் தம்பி
அத்தனை உறவும் அருகே இருக்க
அரைகுறை வார்த்தையில் சுருங்கிக் கொள்ளும்
அன்பு மனைவியின் ஆசைக் கனவுகள்!
காசு போகிறதாய்த் தாயும் சொல்ல
தேயும் கனவு! அடுத்த பௌர்ணமிக்காய்!
- ரா விமலன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|