 |
கவிதை
புதுமைக் காதல்! ரா விமலன்
நீயும் நானும் யாரோ யாரோ
நிஜத்தில் கலந்தோம் பாலுடன் நீராய்!
உனக்கும் எனக்கும் உறவு சொல்ல
உறவோ பகையோ ஒன்றும் இல்லை!
பெற்ற தாய்களும் உறவுகள் அல்லர்;
பிறந்த நாமோ உயிரில் கலக்க!
எநதன் தந்தையும் உந்தன் தந்தையும்
எங்கோ பிறந்தனர்; இடமாறி வாழ்ந்தனர்!
இப்படி இருந்தும் எப்படிச் சேர்ந்தோம்?
ஈருடல் ஓருயிராய் இணையும் வணணம்!
செம்மண் நிலத்தில் மழையைப் போல
சேர்ந்து கலக்கும் காலம் போச்சு!
இணையம் வழியாய் இதயம் நுழையும்
இக்காலக் காதல் புதுமையே ஆச்சு!
- ரா விமலன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|